Saturday 30 June 2012

கதை போல ஒன்று - 22

இரவு பத்து மணிக்கு அந்த போன்கால் வந்ததும் ஜெய்சிங், பிரபு அவர்கள் நண்பர்கள் எல்லோரும் 
ஆர்வமாய் ஒண்ணுகூடி இருக்க பிரபு அதை ஸ்பீக்கரில் போட்டு பேச ஆரம்பித்தான்.

“ஹலோ”

”ஜெய்சிங் அண்ணந்தான் உங்க நம்பர் கொடுத்தாரு. உங்க பேரு பிரபுவா ?

“ஆமா. ஒஹ் நீதான் அந்த பூர்ணாவா”

“ஆமான்னா நாந்தான் “

“இந்த அண்ணாவெல்லாம் சொன்னா நான் போன வெச்சுருவேன்”

”ஐயோ ! வெச்சுராதீங்க ஃப்ளீஸ்”

”பிரபுன்னு சொல்லு”

“ம்ம்ம் உங்களுக்கு சிம்புவ தெரியுமா”

“இல்லையே யாரு சொன்னா ? “

“ஏய்! நீங்க சிம்பு ஃபிரண்டுன்னு ஜெய்சிங் அண்ணந்தான் சொன்னார்”

“ சொல்லிட்டானா. அந்த ராஸ்கல யாருகிட்டயும் சொல்லாதன்னு சொல்லியிருந்தேன் ?

“ம்ம்ம். ஆமா. நான் அவரு கடைக்கு, நிறைய சிம்பு போஸ்டர் கிரீட்டிங்ஸ் வாங்க போவேனா ! அப்ப சொன்னாரு பிரபுன்னு என் ஃபிரண்டு இருக்காரு அவரும் சிம்புவும் சின்ன வயசுல இருந்தே தோஸ்த். அவர் நினைச்சா உன்னால சிம்புவ பாக்க முடியும்ன்னாரு”

“அதையும் சொல்லிட்டானா. நீ இப்ப பிளஸ் டூவா படிக்கிற”

“இல்ல நான் பிளஸ் ஒன்”

” பிளஸ் ஒன்னா ! இப்ப ஸ்கூல் யூனிஃபார்ம்ல இருக்கியா இல்ல வேற டிரஸ்லயா”

“இப்ப நைட்டி போட்டிருக்கேன். வீட்ல ரூம்ல இருக்கேன். சிம்பு எப்படி பேசுவார் ? ஜாலியான டைப்பா எப்படி? எனக்கு சிம்புன்னா ரொம்ப பிடிக்கும். விடிவி மட்டும் பதினைஞ்சு வாட்டி பாத்திருக்கிறேன். பிரபு ஃப்ளீஸ்.
ஒருவாட்டியாவது சிம்பு கூட அட்லீஸ்ட பேசவாது செய்யனும். முடியுமா ? "

"பாக்கலாம் பூர்ணா. சிம்பு ரொம்ப நல்ல டைப். ஒப்பனா பேசுவார். விடிவி சூட்டிங் சமயத்துல மூணு நாள் அவர் பக்கதுலேயே இருந்து பாத்துருக்கிறேன். அவர ஏமாத்துனா கோவம் வரும். அப்புறம் நீ நைட்டின்னா பேண்ட் சர்ட் மாதிரி போடுவியா இல்ல எப்படி”

“இல்ல நான் உடுப்பு மாதிரி நீளமாத்தான் போடுவேன்”

“எப்படி இருப்ப நீ. ஒல்லியா இல்ல குண்டா . கலரா “

“............. “

”பூர்ணா பேசலன்னா போன வெச்சுருவேன் “

“சிம்பு கிட்ட எப்ப பேச முடியும்பா “

”அடுத்த வாரம் பேசலாம். நானே உன்ன பத்தி சொல்லி , உன் நம்பருக்கு கால் பண்ண சொல்றேன். “

“தேங்ஸ் பிரபு ரொம்ப தேங்ஸ். உண்மையிலே ஹெல்ப் பண்ணுவததானே”

“கண்டிப்பா ! நீ ஜீன்ஸ் போடுவியா “

“ம்ம்ம்”

“உன் பேண்ட் சைஸ் என்ன ?

அதெல்லாம் எதுக்கு கேக்குறீங்க.

“பாய் பிரண்ட்ஸோடல்லாம் வெளிய போகமாட்டியா. சினிமா போவியா. யாரையாவது கிஸ் அடிச்சிருக்கியா”

“...................”

“அட எதுக்கு அழற. அடச்சீ அழாத.”

“எனக்கு இப்படி பேசுனா பிடிக்காது பிரபு. நான் இப்படியில்லாம் நினைக்க கூட மாட்டேன்னு சத்தியம் பண்ணியிருக்கேன் அம்மாவுக்கு. அம்மாவுக்கு என்ன ரொம்ப பிடிக்கும் தெரியுமா ? போன வருசம் பேர்த்டேக்கு இரண்டு கோல்டம் ஃபிக்ஷ் வாங்கித்தந்தாங்க. அப்புறம் எனக்கு சிம்பு பிடிக்க்... “

“சரி சரி எவ்வளவு நேரம் இப்படியே பேசுவ பூர்ணா. இண்டிரஸ்டிங்காவே பேசமாட்டேங்கிறியே “

“..................”

“சரி ஒரு பாட்டு பாடு ‘

“எதுக்கு பிரபு “

“சிம்புவுக்கு பாட்டுன்னா பிடிக்கும். அதுவும் பொண்ணுங்க பாடுனா ரொம்ப பிடிக்கும். நீ எனக்கு பாடி காட்டு .நல்லாயிருந்தா நான் அவரு கிட்ட சொல்றேன்”

“ சிம்பு பாட்டு எல்லாமே எனக்கு இஸ்டம் . இருந்தாலும் கூச்சமா இருக்கு”

“ அட பாடுப்பா. சும்மா பாடு “

”சரி பாடுறேன்.
சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய்
உன் மதியால்
என் மனதை நீதான் வசியம் செய்தாய்
அடம் பிடித்தேன் நீ எந்தன் நெஞ்சில் இடம் பிடித்தாய் ஐ லவ் யூ டா ...

No comments:

Post a Comment