Tuesday, 26 June 2012

மகாபாரதம்

துரோணரை துருபதன் அவமான படுத்த , துரோணர் அர்ச்சுனனை விட்டு துருபதனை தேர் காலில் கட்டி இழுத்து வரச்செய்து தண்டிக்கிறார்.அதோடு முடிந்திருக்க வேண்டும் .ஆனால் மறுபடியும் துருபதன் யாகம் செய்து திட்டதுய்மனை உருவாக்கி துரோணரை கொல்வது மூலம் , Revenge is a continuous process என்கிறது மகாபாரதம்.

பீமன் துரியோதனனை கொன்று , பின் தன் அண்ணன்களோடு திருதிராஸ்டிரனை பார்க்க வரும் போது , திருதிராஸ்டிரன் பாண்டவர் ஒவ்வொருவராக கட்டி அணைக்கிறார். பீமன் முறை வரும் போது , கிருஸ்ணன் பீமனுக்கு பதில் சிலையை வைக்கிறார். சிலையை பீமன் என்று நினைத்து அணைத்த கண்ணில்லாத திருதிராஸ்டிரன் அந்த அணைக்கும் கனத்தில் ”நம் மகனை கொன்றது இவந்தானே “ என்று பேய்தனமாக இறுக்க சிலை பொடிப்பொடியாகிறது மூலம் Blood is thicker than water என்கிறது மகாபாரதம்.

இந்திரபிரஸ்த்த பளிங்கு மாளிகையில் துரியோதனன் தண்ணீர் என்று நினைத்து , பளிங்கை மிதித்து கீழே விழ அதை பார்த்து சிரிக்கும் திரவுபதியை பார்த்து கோபப்படும் , பழிவாங்கத்துடிக்கும் எண்ணம் அதிகமாகும் துரியோதனன் சம்பவம் மூலமாக “காரணமே இல்லாமல் எதிரிகளை சம்பாதித்தல்” பற்றி சொல்கிறது மகாபாரதம்.

அர்ச்சுனன் சொந்தங்களை பார்த்து திகைத்து , நான் அவர்களை கொல்லவா? வேண்டாமா? என்று பார்த்தசாரதியை நோக்கி கேட்பது மூலமாக எந்த முடிவு எடுக்கும்முன்பும்“Discuss” செய்வதின் அவசியத்தை சொல்கிறது மகாபாரதம்.

இறந்து கிடக்கும் நான்கு சகோதரர்களில் யாராவது ஒருவனை உயிர்ப்பிக்கிறேன் என்று யட்சி சொல்லும்போது, என் தாய் குந்திக்கு நான் இருக்கிறேன், இன்னொரு தாய் மாதுரிக்கு அவள் பெற்ற நகுலனை உயிர்பித்து தா என்று கேட்பது மூலம் ”தர்மம் பற்றி சிலிர்ப்பை” உண்டாக்குகிறது மகாபாரதம்.

1 comment:

  1. hats off to yr observation and communication!!! gr8 job

    ReplyDelete