Tuesday, 26 June 2012

பத்து வினாடி துணிவு

ஒரு பெண் பயிற்சியாளரை, பெரிய நிறுவனத்தின் மேலாளர் தன் நிறுவன ஊழியர்கள் 200 பேருக்கு , மன வள மற்றும் பேசும் கலை பயிற்சியளிக்க கேட்கிறார்.

அந்த பெண்ணோ 200 பேருக்கு பயிற்சி அளிக்கும் அளவுக்கு தான் தயாராகவில்லை. ஆகையால் “தன்னால் முடியாது” என்று ஒதுங்கிவிடுகிறார். 

ஆனால் ஒரு வருடம் கழித்து அவருக்கு 200 பேருக்கு பயிற்சி கொடுக்கும் தன்னம்பிக்கையும் அறிவும் வந்து விட்டதாக உணர்கிறார்

இப்போது அந்த பெரிய நிறுவன மேலாளருக்கு போன் பண்ணுவதா வேண்டாமா ? அவர் தன்னை நினைவு வைத்திருப்பாரா? அவரிடம் எப்படி பேசுவது என்று தயங்கியே ஒரு மணி நேரம் போகிறது பயிற்சியாளருக்கு.

சட்டென்று போனை எடுத்து ”கேட்டுதான் விடுவோமே” என்று கேட்க, அந்த மேலாளர் இந்த பயிற்சியாளரை நினைவு வைத்து, வாய்ப்பும் கொடுக்கிறார்.

அந்த <சட்டென்று போனை எடுத்து கேட்டுதான் விடுவோமே > என்ற ஃபிளாக்ஷ் முடிவைத்தான் “பத்து வினாடி துணிவு” என்கிறார்கள்.

ஒருநாளைக்கு இரண்டுதடவை “பத்து வினாடி துணிவு” இருந்தால் நிறைய சாதிக்கலாமாம்.

நாம் எல்லோரும் ஒரு விதமான Comfort zone யில் இருக்கத்தான் ஆசைப்படுவோம். நாளைக்கு இரண்டு தடவை “பத்து வினாடி துணிவு” கொண்டு அந்த Comfort zone யை மீறினால் , எளிதாக முன்னேறி விடுவோமாம்.

பஸ்ஸில் .பக்கத்தில் உள்ளவரிடம் விசாரிக்க கூச்சப்பட்டு ,எத்தனை முறை தேவைஇல்லாமல் , நம் ஸ்டாப்பை விட்டு அடுத்த ஸ்டாப்பில் இறங்கி நடந்து வந்திருப்போம்.

இதயம் படத்தில் முரளி “பத்து வினாடி துணிவு” கொண்டு ஹீராவ்விடம் காதலை சொல்லியிருந்தால் அவர் வாழ்க்கை எவ்வளவு எளிதாய் இருந்திருக்கும்.

யோசிங்க... “பத்து வினாடி துணிவு” :)

52 Ways to Live Success - Jeanne sharbuno எழுதினதாம். Readers digest புத்தகத்துக்கு சப்ளிமண்டா கொடுத்ததில் இருந்ததில் படித்தது :)

No comments:

Post a Comment