Tuesday, 26 June 2012

கணிதமும் வல்லரசாவதும்

மேத்ஸில் Analytical geometry என்று ஒரு பாடம்.

வடிவத்தை( வட்டம், நீள் வட்டம் ,உருண்டை) கணித சூத்திரங்களாக வெளிப்படுத்தும் கணிதமுறை.

உதாரணமாக வட்டத்தின் பொது வாய்ப்பாடு
x^2 + y^2 = r^2 .

இதில்' r' என்பதை 5 என்று வைத்துக்கொள்ளுங்கள். 

அப்படியானால் x^2 + y^2 = 25.

இப்போது x க்கு 0,1,2 என்று value கொடுத்து அதற்கு வரும் y விடையை எழுதிக்கொள்ளுங்கள். x^2 + y^2 = 25 என்ற சூத்திரத்திற்கு அது (0,5) (1,4.89)(2,4.58)... போன்ற புள்ளிகளை கொடுக்கும்.

இப்போது ஒரு Graph sheet எடுத்து அந்த புள்ளிகளை மார்க் பண்ணுங்கள்.அந்த புள்ளிகளை இணைத்தால் ஒரு அழகான வட்டம் வரும்.

ஸோ! உலகத்துல உள்ள எந்த வடிவத்தையும் ஃபார்முலாவ எழுத முடியும். அந்த ஃபார்முலாவ மார்க் பண்ணினா அந்த வடிவமும் வரும்.

<<திபெத்தியர்களின் பல கலைவடிவங்களுக்கு சூப்பர் கம்பியூட்டராலத்தான் ஃபார்முலா கொடுக்க முடியுமாம் என்று பெருமை பேசுபவர்களும் உண்டு :)) >>

”இப்படித்தான பாஸ்! அனாலிடிக்கள் ஜியோமெட்ரி சொல்லிதரணும். ”

ஆனா என் ஸ்கூல் லைஃப்ல, ஒரு வாத்தியார் கூட இத சொல்லி தந்தது கிடையாது.

காலேஜ் லைப்ல , இத நானே கண்டுபிடிச்சி, நிறைய Graph sheet வாங்கி பிராக்டிக்கலா செய்து பரவசபட்டிருக்கிறேன்.

அறிவிலோ, கணிதமோ,அத நம்ம வாத்தியார் ஃபீல் பண்ண வைச்சுட்டாருன்னாலே நம்ம நாடு வல்லரசாயிடும்.

அதுவரைக்கும் நாம “ The rate of change of velocity is acceralation " ன்னு மனப்பாடமா சொல்லி மார்க்க லட்டு மாதிரி தட்டி ஸ்டேட் ஃபர்ஸ்ட் எடுத்துகிட்டே இருப்போம்.

அப்துல் கலாம் சிரித்த முகத்துடன் குழந்தைகள் கிட்ட உரையாடிகிட்டே இருப்பார். :)

2 comments:

  1. :| எனக்கே இப்போ தான்ங்க இந்த அனலைடிகள் ஜியாமெட்ரி புரியுது. இதனால் தான் பலருக்கு கணக்கு பிணக்காக இருக்கு. எதையும் புரிஞ்சுக்கிட்டு படிச்சா அதோட மதிப்பே வேற..

    ReplyDelete
  2. மெய் சிலிர்த்தேன் இந்த விளக்கத்தை கண்டு. அனலிடிகல் ஜோமேட்ரி யை ஓமிட் செய்து தன் 12 கிளாஸ் பாஸ் செய்தேன். உங்களை போல் ஒரு கிளாஸ் மேட் ஆவது கிடைத்திருக்கலாம் விஜய் எனக்கு.

    ReplyDelete