Tuesday, 26 June 2012

பாப்கார்ன் வாங்கி கொடுத்தவர்

சென்னையில் படம் பார்க்க போனேன்.

ஒல்லியாக, டிப்டாப்பாக என்னருகில் ஒரு பெரியவர் தன் மனைவியோடு அமர்ந்திருந்தார்.

பேச்சு கொடுத்தேன்.

அவர் பிரபல வார பத்திரிக்கையில் 43 வருடம் ( யப்பா சாமி) பிரிண்டிங் சூப்பர்வைஸராக வேலை பார்த்திருக்கிறார்.

நிறைய சொன்னார். இந்த ஒரு பக்க கதை, ஜோக்குகள், தன்னம்பிக்கை கட்டுரைகள், “கதவை திற” டைப் ஆன்மிகங்கள் எல்லாம் ஒரு வாரம் முன்னரே தயாராகி விடுமாம்.

தலையங்கத்திற்க்கும் “ஹாட் கரண்ட் மேட்டர்” கட்டுரைக்கும் இரண்டு பக்கம் காத்திருக்குமாம் காலியாக.

பிரிண்டிங் அட்வான்ஸ் டெக்னாலஜி பற்றியும் நிறைய சொன்னார்.நிறைவாக பேசினார்.

அப்போது ஒரு அம்மா தன் வயது பெண்களோடு சீட்டில் அமர்ந்து முடிக்கும் முன்னரே ஏ.ஸி இல்லை என்று சத்தம் போட ஆரம்பித்தார்.

தியேட்டர் ஊழியர்களுகும் அவருக்கும் சரியான் சண்டை.அந்தம்மா பெரிய லெவல் போல. கடைசியில் அவர் புண்ணியத்தால் நல்ல குளிர் கிடைத்தது.

நானும் பெரியவரும் இதை பார்த்து கொண்டிருந்தோம்.

நான் சொன்னேன் ,” இவ்வளவு ஆவேசமாக அடிவயிற்றில் இருந்து கத்தினால், எப்படி அந்தம்மாவினால் நிம்மதியாக படம் பார்க்க முடியும் “.

பெரியவர் சொன்னார் “ நானும் அதைத்தான் நினைத்தேன் தம்பி”.

பின்னர் படத்தின் இடைவேளையில் பெரியவர் ,எனக்கும் சேர்த்தே “பாப் கார்ன்” வாங்கி கொடுத்தார்.

பேருக்கு கூட அதை மறுக்க தோண்றவில்லை.

என் நெடுநாள் நண்பர் அல்லது அப்பா , அல்லது சித்தி “பாப் கார்ன் “ வாங்கி கொடுத்தால் எப்படி வாங்கி கொறிப்பேனோ அப்படி கொறித்தேன்... :)

No comments:

Post a Comment