Thursday, 21 June 2012

கதை போல ஒன்று - 5

இது என் முன்னாள் ஹவுஸ் ஓனர் சொன்ன கதை.

அப்போம் எனக்கு வசதியே கிடையாது.தொழிலும் கிடையாது.கையில துட்டும் கிடையாது.

வீட்டுல நா உருப்பட மாட்டேன்னே தீர்மானம் பண்ணிட்டாவ.

ஒரு நாள் நான் மட்டும் வீட்டுல இருக்கேன். சாப்பிடுறதுக்கு எதுவும் கிடையாது. பசின்னா செம பசி.

பக்கத்துல, ஊருக்குல்ல யார்கிட்டயும் கேக்கவும் வெக்கம். ஏன்னா நா ரொம்ப மானம் ரோசம் பார்ப்பேன் பார்த்துக்க. இருந்தாலும் என்ன பண்றது, பசிய ஒண்ணும் பண்ண முடியாதே!

எனக்கு தெரிஞ்ச மொதலாளி வடக்கன்குளத்துல இருக்காறு.

சரி சாப்பிடுற சமயத்துல அவரு வீட்டுக்கு போனா சோறு கிடைக்கும்ன்னு கணக்கு போட்டு நடந்தே போனேன்
.
என் ஊருக்கும் வடக்கன்குளத்துக்கும் இடையே பத்து பதினைஞ்சி கிலோமீட்டர் இருக்கும் பாத்துக்க தம்பி!. நடந்தேன்.

கண்ணெல்லாம் இருட்டுத்து கால் நடுங்குது. இழுத்து இழுத்து நடக்குறேன்.ஒரு வழியா மொதலாளி வீட்டுக்குப்போய்ட்டேன்.

”வா!சண்முகம். எப்படில இருக்க. அப்பா இன்னும் கருப்பட்டி யாவாரம்தான் பண்றான்னு”நல்லாத்தான் பேசினாரு.சொம்பு தண்ணி குடிச்சேன்.

சாப்பிடுற நேரம்.

எனக்கு பசி கொல்லுது .

சட்டுன்னு மொதலாளி கேட்டாரு.

”சண்முகம் சாப்பிடுறியால” !

நான் டக்குன்னு அனிச்சையா “ சாப்பிட்டேன் அண்ணாச்சி”ன்னேன்.

“ நெசமாத்தான் சொல்றியா சண்முகம்”.மொதலாளி மறுபடியும் கேட்டார்.

நான் தான் ரோசக்காரனாச்சே சொன்ன வாக்க காப்பாத்துறதுக்கு கடைசி வரைக்கும் சாப்பிட்டேன்னு சாதிச்சிட்டேன்.

பசியோட, ஒருத்தன் குடுத்த வாழைபழத்தையும் சொக்கலால் பீடியையும் குடுச்சிட்டு மறுபடியும் வீடு போனேன்.

என்னைக்குமேடே , யாரு வீட்டுக்கு வந்தாலும் , சாப்பிடுறீங்களான்னு கேக்காத ! சாப்பிடுங்கன்னு தட்டுல சோத்த போட்டு நீட்டு ! புரியுதாடே...

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. இது இது இதத்தான் நான் சொன்னேன்! இருந்தாலும் அந்த அறிமுகம் இல்லாம நீங்க எழுதி இருக்கலாம்.

    ReplyDelete
  3. //யாரு வீட்டுக்கு வந்தாலும் , சாப்பிடுறீங்களான்னு கேக்காத ! சாப்பிடுங்கன்னு தட்டுல சோத்த போட்டு நீட்டு !// ரொம்ப ரொம்ப சரியான வரிகள். நன்றாகப் பழகியவர்கள் பேசும்போதுதான் நாம் அவர்கள் சொல்வது உண்மையா அல்லது பொய்யா என்று கண்டுபிடிக்க முடியும். ஆனால், அவ்வாறில்லாதபோது மேற்கண்ட மந்திரம்தான்(ஆம்.மந்திரம் என்றுதான் கொள்ளவேண்டும்) சரியானதாக இருக்க முடியும். கதையே என்றாலும் நல்ல அறிவுரை!!
    --ரோமிங் ராமன்.

    ReplyDelete