Tuesday, 26 June 2012

சொன்னத செய்யேம்ல

ஆங்கிலத்தில் முதலில் படிக்க ஆரம்பிப்பவர்களுக்கு, படித்தவர்கள் ,பொதுவாக பரிந்துரைப்பது ஆர்.கே.நாராயனை.

ஆங்கில ஆசிரியராக வேலை பார்க்கும் ’என் சித்தி’க்கு ஆர்.கே நாராயன் எழுத்துகள் பிடிக்காது. முதல்ல சிட்னி செல்டன், ஜெஃப்ரி ஆர்ச்சரிலிருந்து தொடங்க வேண்டும் என்பார்.

என்னளவில் ஆர்.கே நாராயண் அற்புதம்.

அவருடைய சுயசரிதையில் இருந்து
ஒரு சம்பவம்.

ஆர்.கே கல்லூரி முடித்து வேலை தேடுகிறார்.

அப்பாவின் நண்பர் சென்னபட்டினத்தில் ( சென்னை இல்லை சென்னபட்டினம்) ஹெட்மாஸ்டராக இருப்பதால், அதே பள்ளியிலே ஆசியராக செல்கிறார்.

முதல் இரண்டு நாட்கள் பிரச்சனையில்லை.

ஒருநாள் ஹெட்மாஸ்டர் ஆர்.கே வை ஏழாம் வகுப்பு பிஸிக்ஸ் எடுக்க சொல்கிறார். ஆர்.கே அவர் படித்த படிப்புக்கும் பிஸிக்சுக்கு சம்பந்தேமே இல்லையென்று வாதாட, வார்த்தை தடித்து ரிசைன் செய்து மைசூர் வந்து விடுகிறார்.

ஆர்.கே வின் அப்பாவுக்கு. மகனின் இந்த நடவடிக்கையால் கோபம்.

தன் ஹெட்மாஸ்டர் நண்பருக்கு கடிதம் எழுதி மன்னிப்பு கேட்கிறார்.

ஹெட்மாஸ்டரோ ,அதை தான் தப்பாய் எடுக்கவில்லை என்றும் , மறுபடியும் ஆர்.கே வை வேலைக்கு அனுப்பும் படியும் சொல்கிறார்.

ஆர்.கே வுக்கு பிடித்த வேலையை கொடுப்பதாகவும் உத்திரவாதம் கொடுக்க, ஆர்.கே மறுநாளே வேலைக்கு சேர்கிறார்.

வேலைக்கு சேர்ந்தவுடன் ஹெட்மாஸ்டர் ஆர்.கே வை கூப்பிட்டு முதலில் Physical education training ( அதாங்க நம்ம கேம்ஸ் பீரியடு) கிளாஸ் எடுக்க சொல்கிறார்.

ஆனால் இச்சமயம் பி.ஏ ஹிஸ்டரி படித்த ஆர்.கே நாராயணன் அமைதியாக அதை அமோதித்து ,P.E.T கிளாஸ் எடுக்க கிரவுண்டுக்கு சென்று விடுகிறார். :))

No comments:

Post a Comment