Thursday 21 June 2012

கதை போல ஒன்று-10

கிட்டதட்ட மூன்று மாதங்கள் குவைத்தில் இருந்து , வேலை முடித்து சென்னை திரும்பும் 
நேரம்.

குவைத்தியிருந்து துபாய் வரை.பின்னர் அங்கிருந்து சென்னை வரை என்று இரண்டு விமானங்கள்.

பக்கத்து சீட்டுக்காரர், இரண்டு வருடங்கள் கழித்து குடும்பத்தை பார்க்கும் மகிழ்ச்சியில் 
இருந்தார்.

அவர் பிளம்பர்(சீனு) வேலை பார்பதால் இரண்டு வருடம் ஒருமுறைதான் லீவு கிடைக்கும் என்றார்.
ஊர் கரூராம். சென்னையிலிருந்து பஸ்ஸில் போவாராம்.

குவைத் டூ துபாய் விமானம் காலியாய் இருந்தது.
துபாய் ஏர்போர்ட்டில் சீனு அண்ணனோடு, மீராவுக்கு பொம்மைகள் வாங்கினேன். சீனு மாமனாருக்கு உயர்ரக
பானம் வாங்கினார்.

துபாய் டூ சென்னை விமானம் நிரம்பி இருந்தது.சீனு அண்ணன் வேறு சீட்டுக்கு போய்விட
பக்கத்தில் அம்பது வயதுள்ளவர் நண்பரானார்.

இரண்டு நாள் முன் தான் மங்களூரில் “டேபிள் டாப் ரன் வே” விமான விபத்தில் 168 பேர் பலியாகி இருந்தனர்.

”பயப்படுத்தும் சார்” அது பற்றியே பேசினார்.

”போக வேண்டிய சமயம் சாமிக்கு தெரியும்”
”எல்லாம் முடினும்னு இருந்தா சாவுதான்” என்றார்.

விமானம் பறந்தது. அன்று கொஞ்சம் “டர்புலன்ஸ்” அதிர்வு அதிகமாய்த்தான் இருந்தது.

விமானம் அடிக்கடி ஆடியது.”பயப்படுத்தும் சார்” என் கைகளை பற்றி கொண்டார்.

தன் சட்டை பையினுள் ஒரு மோதிரம் வைத்திருக்கிறார். அதை எடுத்து உள்ளங்களையில் வைத்து கடவுள் பிரார்த்தனை வேறு.

இப்போது எனக்கு பயம் வர ஆரம்பித்திருந்தது.

அப்போது பணிபெண்ணில் ஒருவர் அழுது கொண்டிருந்தார். யாராவது திட்டி இருக்கலாம். ஆனால் ’அதை வேறு’ எனக்கு சுட்டி காட்டினார் ”பயபடுத்தும் சார்”.

“பாருங்க தம்பி ! ஏர் ஹோஸ்டஸ் அழுறாங்க ! ஏதோ விசயமிருக்கு தம்பி “ மறுபடியும் உள்ளங்கை மோதிர பிரார்தனை.

அழுகை வந்தது எனக்கு. பட பட வென்று அடித்து கொண்டது ஹார்ட்டு. மிராவை பார்க்க முடியாதோ, வைஃப்ப பார்க்க முடியாதோ ன்னு பயம்.

ஆனால் சட்டென்று சுதாரித்து “ சார் செத்தா சாவுறோம் சார் ! பயப்பட வைக்காதீங்க.கொஞ்ச நேரம் அமைதியா இருங்க” கத்தினேன்.

அமைதியானார். அப்புறம் பெரிய மனுசன இப்படி மரியாதை இல்லாம பேசிட்டோமங்கிற கவலை வந்தது.பல முறை மன்னிப்பு கேட்டேன். அவர் மன்னித்தார்.(மெச்சூரிட்டி).

ஆனால் மறுபடியும் மனித வாழ்வின் நிலையற்ற தன்மை பற்றி பேச ஆரம்பித்தார்.

“ எனக்கு தெரியும் சார், இது தேர்ட் டிகிரி டர்புலண்ஸ்” என்றார். எமெர்ஜென்சி எக்சிட் எல்லாம் பத்தி உங்களுக்கு தெரியுமா” என்றார்.

சென்னை விமான நிலைத்தின் மேலே ஒரு இருபது நிமிடம் விமானம் ரவுண்டு அடிக்க , “ சம்திங் ராங்” என்றார்.

அவர் கைகளை பற்றும் போது அதில் தெரியும் நடுக்கம் எனக்கும் பரவியது. நாஸ்திகமாவது ! மண்ணாவது. எல்லா சாமியையும் வேண்டினேன்.

முடிவாக விமானம் சென்னையில் சேஃப்பாக இறங்கியது.

எத்தனை முறை விமான பயணம் செய்த கொம்பனாலும் ஒவ்வொரு Safe landing க்கும் குழந்தை மாதிரி பூரிக்கவே செய்கிறான்.

ஆச்சரியம் பாருங்கள்.

”பயப்படுத்தும் சார்” அதற்கப்புறம் என் முகத்தை பார்க்கவே இல்லை.பேசவும் இல்லை.போய்விட்டார்.

என் வேலை பைப்பிங் டிசைன் இன்சினியர். அதுல பாருங்க அழுத்தம் அதிகம் இருக்கும் பைப்புகளில் “Pressure safety valve" என்பதை உப்யோகிப்பார்கள்.

எப்போதெல்லாம் Pressure அதிகமாகுதோ அப்போத்ல்லாம் அது திறந்து, அழுத்தத்தை குறைக்கும்.

நானும் அந்த “Pressure safety valve" வும் ஒண்ணா பாஸ் ?

No comments:

Post a Comment