Saturday 30 June 2012

கதை போல ஒன்று - 22

இரவு பத்து மணிக்கு அந்த போன்கால் வந்ததும் ஜெய்சிங், பிரபு அவர்கள் நண்பர்கள் எல்லோரும் 
ஆர்வமாய் ஒண்ணுகூடி இருக்க பிரபு அதை ஸ்பீக்கரில் போட்டு பேச ஆரம்பித்தான்.

“ஹலோ”

”ஜெய்சிங் அண்ணந்தான் உங்க நம்பர் கொடுத்தாரு. உங்க பேரு பிரபுவா ?

“ஆமா. ஒஹ் நீதான் அந்த பூர்ணாவா”

“ஆமான்னா நாந்தான் “

“இந்த அண்ணாவெல்லாம் சொன்னா நான் போன வெச்சுருவேன்”

”ஐயோ ! வெச்சுராதீங்க ஃப்ளீஸ்”

”பிரபுன்னு சொல்லு”

“ம்ம்ம் உங்களுக்கு சிம்புவ தெரியுமா”

“இல்லையே யாரு சொன்னா ? “

“ஏய்! நீங்க சிம்பு ஃபிரண்டுன்னு ஜெய்சிங் அண்ணந்தான் சொன்னார்”

“ சொல்லிட்டானா. அந்த ராஸ்கல யாருகிட்டயும் சொல்லாதன்னு சொல்லியிருந்தேன் ?

“ம்ம்ம். ஆமா. நான் அவரு கடைக்கு, நிறைய சிம்பு போஸ்டர் கிரீட்டிங்ஸ் வாங்க போவேனா ! அப்ப சொன்னாரு பிரபுன்னு என் ஃபிரண்டு இருக்காரு அவரும் சிம்புவும் சின்ன வயசுல இருந்தே தோஸ்த். அவர் நினைச்சா உன்னால சிம்புவ பாக்க முடியும்ன்னாரு”

“அதையும் சொல்லிட்டானா. நீ இப்ப பிளஸ் டூவா படிக்கிற”

“இல்ல நான் பிளஸ் ஒன்”

” பிளஸ் ஒன்னா ! இப்ப ஸ்கூல் யூனிஃபார்ம்ல இருக்கியா இல்ல வேற டிரஸ்லயா”

“இப்ப நைட்டி போட்டிருக்கேன். வீட்ல ரூம்ல இருக்கேன். சிம்பு எப்படி பேசுவார் ? ஜாலியான டைப்பா எப்படி? எனக்கு சிம்புன்னா ரொம்ப பிடிக்கும். விடிவி மட்டும் பதினைஞ்சு வாட்டி பாத்திருக்கிறேன். பிரபு ஃப்ளீஸ்.
ஒருவாட்டியாவது சிம்பு கூட அட்லீஸ்ட பேசவாது செய்யனும். முடியுமா ? "

"பாக்கலாம் பூர்ணா. சிம்பு ரொம்ப நல்ல டைப். ஒப்பனா பேசுவார். விடிவி சூட்டிங் சமயத்துல மூணு நாள் அவர் பக்கதுலேயே இருந்து பாத்துருக்கிறேன். அவர ஏமாத்துனா கோவம் வரும். அப்புறம் நீ நைட்டின்னா பேண்ட் சர்ட் மாதிரி போடுவியா இல்ல எப்படி”

“இல்ல நான் உடுப்பு மாதிரி நீளமாத்தான் போடுவேன்”

“எப்படி இருப்ப நீ. ஒல்லியா இல்ல குண்டா . கலரா “

“............. “

”பூர்ணா பேசலன்னா போன வெச்சுருவேன் “

“சிம்பு கிட்ட எப்ப பேச முடியும்பா “

”அடுத்த வாரம் பேசலாம். நானே உன்ன பத்தி சொல்லி , உன் நம்பருக்கு கால் பண்ண சொல்றேன். “

“தேங்ஸ் பிரபு ரொம்ப தேங்ஸ். உண்மையிலே ஹெல்ப் பண்ணுவததானே”

“கண்டிப்பா ! நீ ஜீன்ஸ் போடுவியா “

“ம்ம்ம்”

“உன் பேண்ட் சைஸ் என்ன ?

அதெல்லாம் எதுக்கு கேக்குறீங்க.

“பாய் பிரண்ட்ஸோடல்லாம் வெளிய போகமாட்டியா. சினிமா போவியா. யாரையாவது கிஸ் அடிச்சிருக்கியா”

“...................”

“அட எதுக்கு அழற. அடச்சீ அழாத.”

“எனக்கு இப்படி பேசுனா பிடிக்காது பிரபு. நான் இப்படியில்லாம் நினைக்க கூட மாட்டேன்னு சத்தியம் பண்ணியிருக்கேன் அம்மாவுக்கு. அம்மாவுக்கு என்ன ரொம்ப பிடிக்கும் தெரியுமா ? போன வருசம் பேர்த்டேக்கு இரண்டு கோல்டம் ஃபிக்ஷ் வாங்கித்தந்தாங்க. அப்புறம் எனக்கு சிம்பு பிடிக்க்... “

“சரி சரி எவ்வளவு நேரம் இப்படியே பேசுவ பூர்ணா. இண்டிரஸ்டிங்காவே பேசமாட்டேங்கிறியே “

“..................”

“சரி ஒரு பாட்டு பாடு ‘

“எதுக்கு பிரபு “

“சிம்புவுக்கு பாட்டுன்னா பிடிக்கும். அதுவும் பொண்ணுங்க பாடுனா ரொம்ப பிடிக்கும். நீ எனக்கு பாடி காட்டு .நல்லாயிருந்தா நான் அவரு கிட்ட சொல்றேன்”

“ சிம்பு பாட்டு எல்லாமே எனக்கு இஸ்டம் . இருந்தாலும் கூச்சமா இருக்கு”

“ அட பாடுப்பா. சும்மா பாடு “

”சரி பாடுறேன்.
சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய்
உன் மதியால்
என் மனதை நீதான் வசியம் செய்தாய்
அடம் பிடித்தேன் நீ எந்தன் நெஞ்சில் இடம் பிடித்தாய் ஐ லவ் யூ டா ...

Friday 29 June 2012

கதை போல ஒன்று - 21

பத்தாம் வகுப்பு ஒழுங்காய் படித்திருந்தால் 
வீட்டு வேலை செய்ய அம்மா அனுப்பியிருக்க மாட்டாள் என்று சித்தி காலையில் திட்டினாள்.

மல்லேஸ்வரிக்கு என்னவோ அப்பா முதலிலேயே சம்பளத்தை கணக்கு பண்ணித்தான், அம்மாவுடன் கூடி தன்னை பெற்றது போலிருந்த்து.

ஜார்ஜ் சார் வீட்டுக்கு காலை ஆறு மணிக்குள்ளாக போய் வாசல் பெருக்கி தொளிக்க வேண்டும்.

அப்புறம் மோகன் சார் வீட்டில் பாத்திரம் தேய்த்து , வீடு பெருக்கி துடைக்க வேண்டும். எட்டு மணிக்குள்ளாக செய்ய வேண்டும். மோகன் சார், வசுந்துரா அம்மா ரெண்டு பேரும் வேலைக்கு போவதால் அந்த பாடு.

ஒன்பது மணிக்கு ஜனப்பிரியா அக்காவும் தோழிகளும் இருக்கும் அறையை பெருக்கி துடைத்து , துணி துவைக்க வேண்டும்.

பத்தரை மணிகெல்லாம் சுதா மாமி தேடிக்கொண்டிருப்பாள்.

குழந்தை அசிங்கம் பண்ணிய எல்லா துணிகளையும் கசக்க வேண்டும்.கடைக்கு போக வேண்டும். மத்தியானம் சாப்பிட்டு. மறுபடி எல்லார் வீட்டு வாசலையும் பெருக்கி தொளித்து இரவு ஏழு மணியாகும் போவதற்கு.

இன்று காலையில் ”ஜார்ஜ் சார்” இளநீர் குடித்து கொண்டிருக்க, மல்லேஸ்வரியை பார்த்ததும், இரக்கபட்டதற்கு, முந்தின நாள் ஞாயிற்றுகிழமை கூட்டத்தில் பாதிரியார், ”அன்பின் மகத்துவத்தை” போதித்ததும் காரணம்.

வேலை செய்யும் பெண்ணிடத்தும் கூட தனக்கு இரக்கமிருக்கிறது, மனதார நம்பிய அவர் ,மல்லேஸ்வரியை பெரிய இளநீர் ஒன்றை குடிக்க வைத்து விட்டார்.

மல்லேஸ்வரிக்கு கொஞ்சம் இருந்தாலும் உடனே சிறுநீர் போய்விட வேண்டும்.

அது மாதிரியே பழகிவிட்டாள்.வீட்டில் அக்கா மட்டும் என்பதால், பின் பக்க பப்பாளி மரத்தடியிலேயே போய்விடுவது சிறு வயதில் இருந்தே பழகிய பழக்கமாய் இருந்தது.

காலையில் வீட்டில் ”போய்விட்டு” வந்தால் ஆறு மணிக்கு ஒரு காப்பி கிடைக்கும். எட்டு மணிக்கு ஒரு காப்பியும், டிபனும் கிடைக்கும். நடுவில் வேலை பளு தாங்காமல் தண்ணி வேறு குடிப்பாள்.

ஆனால் யார் வீட்டிலும் பாத்ரூம் போக முடியாது. போகக்கூடாதென்றல்லாம் மல்லேஸ்வரியிடம் யாரும் சொல்லவில்லை.

ஆனால் அது அவர்கள் பார்வை, நடை உடையிலேயே தெரிந்து விடும். மல்லேஸ்வரிக்கும் பயம். பாத்ரூம் எல்லாம் பளிங்கு மாதிரி இருக்கிறது இதை எப்படி ”அவளால்” அசிங்கபடுத்த முடியும் என்று சொல்லிகொள்வாள்.

பத்தரை மணிக்கு சுதா மாமி வீட்டின் பின்பக்கத்தில் உள்ள பழைய கக்கூஸில் போய் கொள்வதற்கு , தான் கொடுத்த உரிமையையே சுதா மாமி பெரிய புரட்சி என்று நினைத்து கொண்டிருக்கிறார்.

ரொம்ப முட்டினால் எட்டு மணி வேலை முடிந்த்தது வீட்டிற்கு வந்து போவாள். அரை மணி நேரம் அடுத்த வேலைக்கு லேட் ஆகம். திட்டு விழும்.

மல்லேஸ்வரிக்கு அடிவயிறு கனத்தது. சிறுநீர் கழிக்கும் உந்துதல் அதிகாமாய் இருந்தது.
உணர்வின் வீரியம் முள்ளாய் குத்தியது.தலைசுத்தியது.வேறு எதாவது நினைத்தோ வேலை செய்தோ சிறுநீர் உணர்வை அடக்க பார்க்கிறாள். முடியவில்லை.

அழுகை வருகிறது. எஜமானி அம்மாக்களிடம் கேட்கலாம் என்றாலும் பயம்.

சுதா மாமி வீட்டின் பழைய கக்கூஸிற்க்கும் போகமுடியாது. ஜார்ஜ் சார் வீட்டில் திட்டுவார்கள்.

வீட்டின் வலது பக்கம் நெல்லி மரத்தை பார்க்கிறாள்.

போய்விடலாமா இங்கேயே யோசிக்கிறாள். யாராவது பார்த்துவிட்டால் ?. சுத்தி முத்தி பார்க்கிறாள்.

யாருமில்லை.

ஜார்ஜ் சார் குளிக்கும் சத்தம் கேட்கிறது. அம்மா உள்ளே சமையல் செய்கிறார்.மறுபடியும் சுத்தி பார்க்கிறாள்.

அடிவயிறு குத்தி ,தலை சுத்த , சட்டென்று நெல்லி மரத்தின் அடியில் ஆசுவாசபடுத்த, ”மனதின் சிந்தனை” நிகழ்காலம், இறந்தகாலம், எதிர்காலம் என்று எல்லாமுமே அந்த நிம்மதியில் அடங்க, மேலிருந்த்து தன்னை, ஜார்ஜ் சார் மகன் மொபைலில் படம் பிடித்து கொண்டிருக்கிறான் என்று தெரியாமலும், ஐந்து நிமிடத்தில் அது “My house maid hot- 100 % real" என்ற பெயரில் நெட்டில் வருமென்பதை அறியாமலும் போய்கொண்டிருந்தாள் மல்லேஸ்வரி.

Wednesday 27 June 2012

கதை போல ஒன்று - 20


கதை போல ஒன்று - 20

லைட்டை ஆஃப் பண்ணி , போர்வையை போர்த்தினாள்.

இருட்டுக்கும் அந்தரங்கத்துக்கும் ,அப்படி ஒரு ராசி.

அவளுக்கு , சதுரங்க நகர்த்துதலாய் அவன் பேசியது எல்லாமே நினைவுக்கு வந்து தொலைக்கின்றது.

எப்படி பேசுகிறான்.

அவன் பேசும்போது எவ்வளவுதான்
ரசிக்கவில்லை  போன்று முகபாவனை வைத்திருந்தாலும், மீறி ஒரு ரசிப்பு கண்சுருக்கலோ, புன்சிரிப்போ செய்து விடுகிறாள்.

-என் தங்கச்சிய பிளஸ் டுல கம்பியூட்டர் சயின்ஸ் சேர்க்கலாமா ? இல்ல ஃபர்ஸ்ட் குரூப் சேர்க்கலாமா

-நேத்து உங்கள் பத்தி என் டைரில எழுதி வைச்சேன்.

-உங்க டிரஸ் ரொம்ப அழகு. காஸ்ட்லியா ?
 ஏன் கேக்குறேன்னா இவ்வளவு அழகா நான் ’ஒயிட் கலர் சுடி’ பாத்ததே இல்லை

-டெய்லி கேரட் சாப்பிடுங்கப்பா. இப்போ ’ஐ புரோ’ டிரிம்   பண்ணிருக்கீங்க, சூப்பரா இருக்கு. ”வேகஸிங்” கிளாமரா  இருக்கு.
ஆனா ஸ்கின் ஆரோக்கியாமான இருக்கனுமில்ல

-நேத்து உங்கள் பத்தி என் அக்காகிட்ட சொன்னேன். “என்னடா எப்பவும் அவங்க பெருமையே பேசுறியேன்னு திட்டுனாங்க.
 நானும் பதிலுக்கு அவ கிட்ட சண்ட போட்டேன்.
அக்காவுக்கு, வர்ற சண்டே பர்த்டே. புடவ எடுக்கனும் ஷாப்பிங் வர்றீங்களா ?

-இந்த சாட்டர்டே சண்டே ஏங்க வருது, ஸ்கெட்சால வரைஞ்சா மாதிரி இருக்கிற ,’உங்க முகத்தெ’ ரெண்டு நாள் பாக்க முடியாதே.

-ஹலோ சும்மாதான் போட்டேன். ஏன் ஆபீஸுக்கு வரல. அய்யோ உடம்பு சரியில்லையா. நான் வேணுன்னா வரட்டா ? வேணாமா.
டாக்டர பாத்து டேப்லட்ஸ எடுத்துக்கோங்க.

- இதென்ன நெயில் பாலீக்ஷ் மாத்திட்டீங்களா? ஸ்டட் கூட புதுசு போல இருக்கே. அழகாயிருக்குப்பா ?

-நேத்து “Magladene sister's ன்னு ஒரு படம் பார்த்தேங்க. ஒரு பொண்ண ஒருத்தன் பலாத்காரம் செய்றான். அதுக்காக அந்த பொண்ண
 சேரிட்டி ஹோம் மாதிரி ஒரு இடத்துல வைச்சி காலம் பூரா அடிமை வேலை செய்ய வைக்கிறாங்க. பாவங்க பொண்ணுங்க. அதுல ஒரு கேரக்டர். அழகுன்னா அழகு உங்களே மாதிரி, அவ மூக்க பாத்தீங்கன்ன உங்க மூக்கு மாதிரியே எடுப்பா , க்ஷார்ப்பா ...

-என்ன கழுத்த ஒரு மாதிரி சாய்ச்சு வெச்சிருக்கீங்க. கழுத்து வலியா ? கழுத்த அசைச்சு அசைச்சு வலிக்குதா இல்லையான்னு செக் பண்ணி பண்ணி பாக்காதீங்க. இதோ நான் போய் ’மூவ்’ ம் டேப்லட்ஸும் வாங்கி வரேன்.

-போன வாரம்ன்னு நினைக்கிறேன், ஒரு யெல்லோ கலர் காட்டன் சாரியில வந்தீங்களே. தேவதை மாதிரி இருந்தீங்க.

- வீட்டு பக்கத்துல ஒரு சின்ன பையன்ங்க . கஸ்டபட்டவன். மூணு வருசமா ஃபீஸ் கட்டுறேன். அவன் புக்ஸ் செலவ நீங்க ஏத்துகிறீங்களா ? உங்கள பத்தி அவன்கிட்ட சொல்லி இருக்கேன். உஙகளக்கு என்ன பேரு சொல்லி இருக்கேன் தெரியுமா “தேவதை அக்கா” ன்னு
  ஹா ஹா ஹா! என்ன எதுவும் சொல்ல மாட்டேங்கிறீங்க. அப்படி கூப்பிடுறது பிடிக்கலையா ? சரி இனி கூப்பிடல. ஆனா அதுதாங்க உங்களுக்கு பொருத்தமான பேரு.

- நாளைக்கு வரும் போது எனக்கு பிடிச்ச ”லெமன் ரைஸும் பொட்டட்டோ ஃபிரையும்” எடுத்துட்டு வர்றீங்க.

-அடுத்த வாரம் மும்பை போயிட்டு டு டேஸ்ல வந்துருவேன். உங்களுக்கு என்ன கிஃப்ட்டு வேணும். வேணாம்ன்னு சொன்னா நான் மும்பைக்கே போகல.

- என் கனவுல நீங்க வந்தீங்க. அன்பா என் தலைய கோதி விட்டீங்க. அதுல விகற்பமே இல்ல. மெரூன் கலர் சுடி போட்டு , ஸாப்டா ...


என்னதான் அவள் தத்துவம் படிக்கிறவளானாலும். தன்னம்பிக்கை உடையவளானாலும் அவன மாதிரி “கன்னிங் பெல்லோ”  பையன் நல்லவனா ? கெட்டவனா ? என்று எப்படி கண்டுபிடிப்பாள்.

அட இதப்பார்டா! இந்த பொண்ண !
மறுபடியும் போர்வை கிட்டு அவன் பேச்சை ரசிக்குது...

Tuesday 26 June 2012

மங்கேக்ஷ்கர் சகோதிரிகள்

இந்தி நடிகர் கிஸோர்குமாருக்கு மங்கேக்ஷ்கர்(லதா, ஆக்ஷா போன்ஸ்லே) சகோதிரிகளை பிடிக்காதாம் .

ஏன் பிடிக்காதாம்?

ஏன்னா! எங்கயாவது ஒரு விழாவுக்கு கிசோர்குமார் போய், அங்க மங்கேக்ஷ்கர் சகோதிரிகளும் வந்தால், யாரும் கிசோர்குமாரை சட்டை செய்வதில்லையாம்.

எல்லா புகழும் மங்கேக்ஷ்கர் சகோதிரிகளுக்கே போகுதாம்.

ஆனா, பாருங்க கிசோர் குமாரின் கடைசிகாலத்துல மத்தியபிரதேச அரசு ஒரு அவார்ட்டு கொடுத்துச்சு அவருக்கு. 

அந்த அவார்ட்டு ” மங்கேக்ஷ்கர் சகோதிரிகள்” பேர்லதான் கொடுத்தாங்களாம். ( அடப்பாவமே)

அந்த செய்திய கிசோர்குமார், ”பிரிட்டீக்ஷ் நாண்டி” யிடம் போன்ல சொல்லும் போது கிட்டதட்ட ’அலறி அழுதபடி’ சொன்னாராம். :))

சொன்னத செய்யேம்ல

ஆங்கிலத்தில் முதலில் படிக்க ஆரம்பிப்பவர்களுக்கு, படித்தவர்கள் ,பொதுவாக பரிந்துரைப்பது ஆர்.கே.நாராயனை.

ஆங்கில ஆசிரியராக வேலை பார்க்கும் ’என் சித்தி’க்கு ஆர்.கே நாராயன் எழுத்துகள் பிடிக்காது. முதல்ல சிட்னி செல்டன், ஜெஃப்ரி ஆர்ச்சரிலிருந்து தொடங்க வேண்டும் என்பார்.

என்னளவில் ஆர்.கே நாராயண் அற்புதம்.

அவருடைய சுயசரிதையில் இருந்து
ஒரு சம்பவம்.

ஆர்.கே கல்லூரி முடித்து வேலை தேடுகிறார்.

அப்பாவின் நண்பர் சென்னபட்டினத்தில் ( சென்னை இல்லை சென்னபட்டினம்) ஹெட்மாஸ்டராக இருப்பதால், அதே பள்ளியிலே ஆசியராக செல்கிறார்.

முதல் இரண்டு நாட்கள் பிரச்சனையில்லை.

ஒருநாள் ஹெட்மாஸ்டர் ஆர்.கே வை ஏழாம் வகுப்பு பிஸிக்ஸ் எடுக்க சொல்கிறார். ஆர்.கே அவர் படித்த படிப்புக்கும் பிஸிக்சுக்கு சம்பந்தேமே இல்லையென்று வாதாட, வார்த்தை தடித்து ரிசைன் செய்து மைசூர் வந்து விடுகிறார்.

ஆர்.கே வின் அப்பாவுக்கு. மகனின் இந்த நடவடிக்கையால் கோபம்.

தன் ஹெட்மாஸ்டர் நண்பருக்கு கடிதம் எழுதி மன்னிப்பு கேட்கிறார்.

ஹெட்மாஸ்டரோ ,அதை தான் தப்பாய் எடுக்கவில்லை என்றும் , மறுபடியும் ஆர்.கே வை வேலைக்கு அனுப்பும் படியும் சொல்கிறார்.

ஆர்.கே வுக்கு பிடித்த வேலையை கொடுப்பதாகவும் உத்திரவாதம் கொடுக்க, ஆர்.கே மறுநாளே வேலைக்கு சேர்கிறார்.

வேலைக்கு சேர்ந்தவுடன் ஹெட்மாஸ்டர் ஆர்.கே வை கூப்பிட்டு முதலில் Physical education training ( அதாங்க நம்ம கேம்ஸ் பீரியடு) கிளாஸ் எடுக்க சொல்கிறார்.

ஆனால் இச்சமயம் பி.ஏ ஹிஸ்டரி படித்த ஆர்.கே நாராயணன் அமைதியாக அதை அமோதித்து ,P.E.T கிளாஸ் எடுக்க கிரவுண்டுக்கு சென்று விடுகிறார். :))

மகாபாரதம்

துரோணரை துருபதன் அவமான படுத்த , துரோணர் அர்ச்சுனனை விட்டு துருபதனை தேர் காலில் கட்டி இழுத்து வரச்செய்து தண்டிக்கிறார்.அதோடு முடிந்திருக்க வேண்டும் .ஆனால் மறுபடியும் துருபதன் யாகம் செய்து திட்டதுய்மனை உருவாக்கி துரோணரை கொல்வது மூலம் , Revenge is a continuous process என்கிறது மகாபாரதம்.

பீமன் துரியோதனனை கொன்று , பின் தன் அண்ணன்களோடு திருதிராஸ்டிரனை பார்க்க வரும் போது , திருதிராஸ்டிரன் பாண்டவர் ஒவ்வொருவராக கட்டி அணைக்கிறார். பீமன் முறை வரும் போது , கிருஸ்ணன் பீமனுக்கு பதில் சிலையை வைக்கிறார். சிலையை பீமன் என்று நினைத்து அணைத்த கண்ணில்லாத திருதிராஸ்டிரன் அந்த அணைக்கும் கனத்தில் ”நம் மகனை கொன்றது இவந்தானே “ என்று பேய்தனமாக இறுக்க சிலை பொடிப்பொடியாகிறது மூலம் Blood is thicker than water என்கிறது மகாபாரதம்.

இந்திரபிரஸ்த்த பளிங்கு மாளிகையில் துரியோதனன் தண்ணீர் என்று நினைத்து , பளிங்கை மிதித்து கீழே விழ அதை பார்த்து சிரிக்கும் திரவுபதியை பார்த்து கோபப்படும் , பழிவாங்கத்துடிக்கும் எண்ணம் அதிகமாகும் துரியோதனன் சம்பவம் மூலமாக “காரணமே இல்லாமல் எதிரிகளை சம்பாதித்தல்” பற்றி சொல்கிறது மகாபாரதம்.

அர்ச்சுனன் சொந்தங்களை பார்த்து திகைத்து , நான் அவர்களை கொல்லவா? வேண்டாமா? என்று பார்த்தசாரதியை நோக்கி கேட்பது மூலமாக எந்த முடிவு எடுக்கும்முன்பும்“Discuss” செய்வதின் அவசியத்தை சொல்கிறது மகாபாரதம்.

இறந்து கிடக்கும் நான்கு சகோதரர்களில் யாராவது ஒருவனை உயிர்ப்பிக்கிறேன் என்று யட்சி சொல்லும்போது, என் தாய் குந்திக்கு நான் இருக்கிறேன், இன்னொரு தாய் மாதுரிக்கு அவள் பெற்ற நகுலனை உயிர்பித்து தா என்று கேட்பது மூலம் ”தர்மம் பற்றி சிலிர்ப்பை” உண்டாக்குகிறது மகாபாரதம்.

பலசரக்கு கடை

+2 வரை பலசரக்கு கடையில் இருந்த அனுபவம் எனக்குண்டு.( அட! எங்க கடைதாங்க.) அங்கு உள்ள சில சட்டதிட்டங்களை வரிசைப்ப்டுத்துறேன்.

- காலையில் ஆறு டு ஆறரை மணிக்கெக்ல்லாம் கடைதிறந்திருக்கனும். அந்த ஆறு டு எட்டு என்ன விற்கும் என்று பார்த்தால். அரைகிலோ கருப்பட்டியும், அரைக்கிலோ சீனியும், கொஞ்சம் காபித்தூளும்தான். ஆனாலும் ஆறு மணிக்கு கடை திறக்க வேண்டும்.

- வியாபாரம் இல்லாத போது கல்லாவில் இருப்பவர் சும்மா இருக்கலாம். ஆனால் பேப்பர்,புத்தகம் படிக்க கூடாது

- யாரிடமும் இல்லை என்று சொல்லகூடாது, நாளைக்குத்தான் வரும் என்று சொல்ல வேண்டும். (அண்ணே ! நாளைக்கு வாங்க நல்ல நயம் கடலை பருப்பு குடுக்கிறேன்)

- First come first serve கண்டிப்பாக ஃபாலோ செய்ய வேண்டும். முதலில் ஒருவர் அம்பது பைசாவுக்கு கொட்டை பாக்கு கேட்டிருப்பார். இரண்டாவது ஒருவர் 500 ருபாய்க்கு பொருள் கேட்டாலும் முதலில் உள்ளவரை அனுப்பிய பின்பே இரண்டாமவர். ( போலீஸ்காரர்கள் போலீஸ் உடையில் வந்தால் மட்டும் விதி விலக்கு )

-கல்லாவில் இருந்து சண்டை போடக்கூடாது. எனக்கும் என் அண்ணனுக்கும் கல்லா அருகே ஒருதடவை கடுமையான விவாதம் வர, இரண்டு பேருமே அடித்து துரத்தப்பட்டோம், அப்பாவால்.

-எடை சரியாக இருக்க வேண்டும். ஒருவர் பொருளின் தரம் சரியில்லை என்று சொன்னால் ரிட்டர்ன் வாங்கப்படும். ஆனால் எடை சரியில்லை என்றால் ரிட்டர்ன் வாங்கப்படாது. ஆகையால் எடை மிக மிக சரியாக இருக்க வேண்டும்.

-நண்பர்கள் கடைக்கு வந்தால், கல்லாவில் இருந்து பணம் எடுத்து செலவலிக்கலாம். ஆனால் கடையில் உள்ள கடலை, முறுக்கு பாக்கெட்களை அங்கேயே உடைத்து கொடுக்க கூடாது.

-யாருக்கு பசித்தாலும் கல்லாவில் பத்து ரூபாய் எடுத்து கொண்டு டீ வடை சாப்பிடலாம்.ஆனால் கஸ்டமரிடம் எந்நேரமும் எரிந்து விழக்கூடாது.

-கஸ்டமர் நூறு ரூபாய் , ஐநூறு ரூபாய் கொடுத்தால் வியாபாரம் முடியும் வரையில் அதை டேபிளில் பேப்பர் வெயிட்டின் அடியில் வைத்திருக்க வேண்டும்.

-உருளைகிழங்கு, பல்லாரி(பெரிய வெங்காயம்) விற்க விற்க அதில் உள்ள அழுகியவற்றை தனியே அப்புறப்படுத்தி, நல்லவற்றை பார்வையாக வைத்திருக்க வேண்டும்.

மற்ற கடைகளில் எப்படியோ எங்கள் கடையில் இதெல்லாம் ரூல்ஸ்.

வீட்டில் அன்பை பொழியும் அப்பா கடையில் படு வித்தியாசமாக இருப்பார்கள்.

வீட்டில் பொன்னியின் செல்வன், மகாபாரதம்,கும்மிபாட்டு, இளையராஜா, பாலகுமாரன்,கிரிக்கெட் என்று தூள் பறத்தும் அப்பா கடையில் அதை பேசுவதே கிடையாது.

ஒரு ஒழுங்குதான்.... :))

சுக சப்தாதி

 “ சுக சப்தாதி” என்று சமஸ்கிருத ‘கதா இலக்கியத்தில் ‘ வரும் 70 கதைகளின் தொகுப்பு. சமீபத்தில்தான் படித்து முடித்தேன்.
அருமையான புத்தகம். ஆங்கிலத்தில் கிடைக்கிறது. 

'Shuka Saptati' Seventy tales of the Parrot - Translated from Sanskrit by A.N.D Haksar

மதனுக்கும் பிரபாவதிக்கும் கல்யாணம்.
திருமணம் முடிந்த கையோடு, சூதாட்டம், பெண்கள் என்று வெட்டியாய் இருக்கிறான் மதன்.

பிரபாவதி வளர்க்கும் கிளி ஒன்று, கடமை செய்வதை பற்றிய கதையை மதனுக்கு சொல்ல
மதன், திருந்தி வேலை தேடி வேறு ஊருக்கு செல்கிறான்.

முதலில் கட்டுபாடாய் இருந்த பிரபாவதியை
தோழிகள் மனசை மாத்துகின்றனர். கணவன் இல்லாத சமயம் இன்னொரு காதலனை காதல் செய் என்று சொல்லி அதில் வெற்றியும் பெற்று விடுகின்றனர்.

பிரபாவதி ஊர் அடங்கும் நேரம், தோழிகளோடு காதலன் வீட்டுக்கு போக எத்தனிக்கும் போது, கிளி தடுக்கிறது.

தான் ஒரு கதை சொல்லுவதாகவும் அதை கேட்டு விட்டு காதலன் வீட்டுக்கு போக சொல்லி கேட்கிறது.

பிரபாவதியும் சரியென்று கதையை கேட்கிறாள்.

இப்போ கதை.

<<தலைவி கணவன் இல்லாத சமயத்தில்,வேலைக்காரியை விட்டு காதலனை கூட்டி வரச்சொல்கிறாள்.

காதலன் அன்று ஊரில் இல்லை என்று வேலைக்காரி சொல்லி , வேறு எதாவது ஆணை கூட்டி வருகிறேன் என்று வேலைக்காரி வற்புறுத்த, அரைகுறையாக தலையசைத்து வைக்கிறாள் இவள்.

அந்த முட்டாள் வேலைக்காரி ஊருக்கு போகாத தலைவியின் கணவனையே அழைத்து வர , கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அதிர்ச்சியாகின்றனர்.

இப்போது கிளி பிரபாவதியை பார்த்து சொல்கிறது, “நீ இன்று உன் காதலனை சந்திக்க வில்லை என்றால், அந்த மனைவி எப்படி சமாளித்தாள் என்று சொல்வேன்” என்றது.

பிரபாவதி காதலனை மறந்தாள். விடை கேட்டாள்.

கிளி தொடர்ந்தது. “ கணவனை பார்த்த மனைவி, சுதாரித்து கொண்டு, அவனை சோதனை செய்ய தானும் வேலைக்காரியும் போட்ட நாடகம் என்று ‘ஓ’ வென்று அழுகிறாள். விநாடியில் கணவனை முழு குற்றவாளியாக்கி தப்பித்தாள் .

மறுநாள் இரவு பிரபாவதி , மறுபடியும் காதலனை பார்க்க கிளம்ப கிளி இன்னொரு கதை சொல்கிறது.

இது மாதிரி எழுபது நாட்கள் சொல்கிறது.

பிராபாவதியை தடுக்கிறது.

எழுபதாவது நாள் பிரபாவதியின் கணவன் மதன் வேலையை முடித்து வர, பிரபாவதி தனக்கு புத்திமதி சொன்ன கிளியை பாராட்டி கணவனைடம் மன்னிப்பு கேட்க, மதனும் பிரபாவதியும் மகிழ்கிறார்கள் இல்லறத்தில்.

தீர்க்கதரிசனம்

குறுகிய நிஜாம் பேட்டை எக்ஸ் ரோட்டில், நேர் வகிடு எடுத்த, ஒல்லியான சார்ட் சர்ட் போட்ட, பின்னால் ”இரண்டு வாள் படம் போட்ட எம்பிராய்டரி” உடைய ஜீன்ஸ் அணிந்த இளைஞன் பல்ஸரை முறுக்கி கொண்டு , ரோட்டில் 'S' போட்டு கொண்டே போகிறான். 

அவனக்கு, அவன் அம்மா , ஒரு பழைய கூடையில் சோத்து சட்டியும், குழம்பு சட்டியும் எடுத்து, ஜெனரல் ஹாஸ்பிட்டலில் ஊட்டி விடும் காட்சியையும், 

‘பெருமாளே! என் பையனுக்கு சிதைந்து போன கால் மறுபடியும் கிடைச்சா திருப்பதிக்கு நடந்தே வரேன் ’ !என்று அவன் அப்பா கதறும் காட்சியையும் யூகிக்க “ஐயர் த கிரேட்’ ப்டத்தில் வரும் மம்முட்டி போல தீர்க்கதரிசனவாதியாக இருக்க தேவையில்லை :)

பத்து வினாடி துணிவு

ஒரு பெண் பயிற்சியாளரை, பெரிய நிறுவனத்தின் மேலாளர் தன் நிறுவன ஊழியர்கள் 200 பேருக்கு , மன வள மற்றும் பேசும் கலை பயிற்சியளிக்க கேட்கிறார்.

அந்த பெண்ணோ 200 பேருக்கு பயிற்சி அளிக்கும் அளவுக்கு தான் தயாராகவில்லை. ஆகையால் “தன்னால் முடியாது” என்று ஒதுங்கிவிடுகிறார். 

ஆனால் ஒரு வருடம் கழித்து அவருக்கு 200 பேருக்கு பயிற்சி கொடுக்கும் தன்னம்பிக்கையும் அறிவும் வந்து விட்டதாக உணர்கிறார்

இப்போது அந்த பெரிய நிறுவன மேலாளருக்கு போன் பண்ணுவதா வேண்டாமா ? அவர் தன்னை நினைவு வைத்திருப்பாரா? அவரிடம் எப்படி பேசுவது என்று தயங்கியே ஒரு மணி நேரம் போகிறது பயிற்சியாளருக்கு.

சட்டென்று போனை எடுத்து ”கேட்டுதான் விடுவோமே” என்று கேட்க, அந்த மேலாளர் இந்த பயிற்சியாளரை நினைவு வைத்து, வாய்ப்பும் கொடுக்கிறார்.

அந்த <சட்டென்று போனை எடுத்து கேட்டுதான் விடுவோமே > என்ற ஃபிளாக்ஷ் முடிவைத்தான் “பத்து வினாடி துணிவு” என்கிறார்கள்.

ஒருநாளைக்கு இரண்டுதடவை “பத்து வினாடி துணிவு” இருந்தால் நிறைய சாதிக்கலாமாம்.

நாம் எல்லோரும் ஒரு விதமான Comfort zone யில் இருக்கத்தான் ஆசைப்படுவோம். நாளைக்கு இரண்டு தடவை “பத்து வினாடி துணிவு” கொண்டு அந்த Comfort zone யை மீறினால் , எளிதாக முன்னேறி விடுவோமாம்.

பஸ்ஸில் .பக்கத்தில் உள்ளவரிடம் விசாரிக்க கூச்சப்பட்டு ,எத்தனை முறை தேவைஇல்லாமல் , நம் ஸ்டாப்பை விட்டு அடுத்த ஸ்டாப்பில் இறங்கி நடந்து வந்திருப்போம்.

இதயம் படத்தில் முரளி “பத்து வினாடி துணிவு” கொண்டு ஹீராவ்விடம் காதலை சொல்லியிருந்தால் அவர் வாழ்க்கை எவ்வளவு எளிதாய் இருந்திருக்கும்.

யோசிங்க... “பத்து வினாடி துணிவு” :)

52 Ways to Live Success - Jeanne sharbuno எழுதினதாம். Readers digest புத்தகத்துக்கு சப்ளிமண்டா கொடுத்ததில் இருந்ததில் படித்தது :)

சப்பாத்தியும் பசியும்

இரண்டு வருடம் முன்னர், இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு கிளம்பி, குவைத் நேரத்திற்கு அதிகாலை இரண்டு மணிக்கு போய் சேர்ந்தேன்.

கூப்பிட கம்பெனி சார்பில் “யூசுப் பாய்” வந்திருந்தார்.பசின்னா பசி செம பசி.என் செல் போனில் அப்பாவுக்கு குவைத் வந்ததை சொன்னேன். 160 ரூபாய் வந்தது. கழுதை போனா போகட்டும். பசிக்குதே. 

முழித்தேன். யூசுஃப் பாய் இலங்கை தமிழர் என்பதால், இலங்கை பற்றி கேட்டு கொண்டே வந்தேன். பசியை பற்றி சொல்லவே இல்லை.

ரூம் வந்தது. அது ஒரு வீடு மாதிரி இருந்தது. இன்னொருவர் கட்டிலில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.நான் வந்ததும் ஒன்று பேசாமல் கட்டிலை காட்டினார்.

யூசுஃப் பாய் , Knpc plant உள்ளே போவதுக்கு கேட் பாஸோடு காலை பத்து மணிக்கு வருகிறேன் என்று என் “பாஸ்போர்ட்டையும்” வாங்கி போய்விட்டார்.

பசியோடு உருண்டு கொண்டே இருந்தேன். என் அறையை பகிர்ந்தவர் தன் பெயரை அறிமுக படுத்தி கொண்டு, குளித்து ஆபீஸ் செல்கிறேன் என்று போய் விட்டார்.

நான் ஜன்னல் வழியே வெளியே வெயில் தகிக்கும் குவைத்தை பார்த்து கொண்டிருக்கிறேன். பசி கொல்கிறது. என் பிள்ளை “மீரா வர்சினி” ஞாபகம் வருகிறது. கிட்டத்தட்ட அழுது விடுவேன் என்ற் நிலையில் இருந்தேன்.

கதவு தட்டபட்டது, திறந்தேன். அறை பகிர்ந்த நண்பர் நின்று கொண்டிருந்தார். கையில் ஒரு பார்சலை நீட்டினார் . “ பாஸு சாப்பிட்டிருக்க மாட்டீங்கல்ல. நான் மறந்தே போயிட்டேன். கொஞ்ச தூரம் போனப்புறம்தான் ஞாபகம் வருது. நல்லவேளை வண்டியில ஏறுர முன்னாடி ஞாபகம் வந்தது.இனிமே பத்து மணிக்கு ஒரு வேன் கிளம்பும் அதுலதான் போகனும்” என்றார்.

என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நன்றியில் மனம் விம்மிற்று.

பார்ஸ்லை பிரித்தேன். நான்கு சப்பாத்திகள்.

நம்பிக்கை வந்தது.

பரஞ்சோதியும் நாகநந்தி அடிகளும்

பரஞ்சோதி, காஞ்சியில் ஒரு சிறுகுற்றத்திற்காக் சிறையில் அடைபட்டிருக்கிறார்.

இரவில் சிறை அறையின் விட்டத்தை பார்த்து கவலையுற்று படுத்திருக்கிறார்.

திடீரென்று மேற்சுவரில் மெல்லிய ஒளி புள்ளி தோண்றுகிறது.

பரஞ்சோதி கூர்மையாக பார்க்கிறார்.

ஒளி புள்ளி இப்போது வட்டமாகிறுது.

நேரம் செல்ல செல்ல வட்டத்தின் விட்டம் பெரிதாகிறது.

அப்புறம் தான் தெரிகிறது யாரோ சிறை அறையின் மேல்சுவரை பிரித்து உள்ளே இறங்குகிறார் என்று.அது நாகநந்தி அடிகள்தான்.(புலிக்கேசியின் சகோதரன்)

கல்கியின் சிவகாமியின் சபதத்தில் வரும் காட்சி இது (என் பாணியில் சுருங்க சொல்லி இருக்கிறேன்).

திரைப்படத்தில் வருவது போல எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார் பாருங்கள் கல்கி.

அதனால்தான் கல்கி இன்னுமும் வாழ்கிறார். சீரியஸ் இலக்கியவாதிகள் அவரை கிண்டலடித்தாலும் :)

படித்த நாட்டுபுறக்கதை

எப்போதோ படித்த நாட்டுப்புற கதை ....

புருசன் பெண்ஜாதிக்கு பலவருசம் குழந்தேயே இல்லையாம்.கவலைன்னா கவலை அப்படி ஒரு கவலையாம் அவியளுக்கு.

அப்போ அந்த பொண்ணு அம்மி அரைக்கும் போது ஒரு “குறுமிளகு” மட்டும் “என்னைய உன் பிள்ளையா வளத்து போடுன்னு கெஞ்சிச்சாம்” புருசன் பொண்டாட்டிக்கு சந்தோசம்.

மிளகு பிள்ளைய பாலும் பழமுப் ஊட்டி வளத்தாவாளாம்.மிளகுக்கு கல்யாண வயசு வந்ததும் “கருத்தாயின்னு ஒரு பொண்ண கட்டி வைச்சாவாளாம்.
மிளகும் கருத்தாயியும் நிதம் முத்தமா கொடுத்து கொஞ்சிகிட்டாவாளாம்.

ஒரு நாளு கருத்தாயி சந்தைக்கு போயி காய்கறி வாங்கி வெட்டி கிட்டே இருக்கும் போது ஒரு “செவத்த தக்காளி” உருண்டு ஒடிச்சாம். கருத்தாயிக்கு ஆச்சர்யம்ன்னா ஆச்சர்யம். எடுத்து வெட்ட போகும் போது ““செவத்த தக்காளி” பேசிச்சாம். அக்கா அக்கா வெட்டாத!ஏத்துக்க ஏத்துக்க தங்கச்சியா ! என்று கெஞ்சி கதறிச்சாம்.

கருத்தாயிக்கு பாசம் வந்து “செவத்த தக்காளிய” தங்கச்சியா பாசமா வைச்சுகிட்டாம்.
நம்ம மிளகு பயலுக்கு இப்படி ஒரு செவத்த கொழுந்தியா கிடைச்சதுக்கு ஒரே கொண்டாட்டம்.

ஒருநாள் “செவத்த தக்காளி” சொல்லிச்சாம் ”அக்கா இன்னைக்கு அத்தானுக்கு நான் கஞ்சி எடுத்து போவுதேன்னு”ச்சாம்”.

மிளகுக்கு “செவத்த தக்காளி” கொழுந்தியா வயலுக்கு தனியா கஞ்சி கொண்டு வந்ததுல சந்தோசம். சுத்தி யாருமில்ல. காதல் பொங்குது கொழுந்தியா மேல.

கையா பிடிச்சி அணைச்சுக்க போக “செவத்த தக்காளி” பயந்து “மிளகு” அத்தானிடமிருந்து ஒடி வீட்டுக்கு வந்து “கருத்தாயி” மார்ல் சாய்ஞ்சி ”ஒ” ன்னு ஒரே அழுகை. கருத்தாயி காரணம் கேட்க சொல்லாம அழுவுறா.

கருத்தாயிக்கு பாவமா இருக்கு. “செவத்த தக்காளி” தங்கச்சிய கொஞ்சம் அழுத்தி பிடிச்சாளா , “செவத்த தக்காளி” நசுங்கி வெடிச்சிட்டா.தோலு மெல்லிசுதான.

இதோ சாகப்போறா ! கருத்தாயி அழுவுறா. நானே உன்ன கொன்னட்டனே பாவிங்கிறா !

அதுக்கு “செவத்த தக்காளி”

இல்லக்கா! உன் அன்பால சாகலன்னா !
அத்தான் வம்பால செத்திருப்பேன் !

அப்படி சொல்லி செத்துட்டா....

வயதானவரை திட்டலாமா ?

சென்னையில் திருமங்கலம் சிக்னலில் நிற்கிறேன்.நான் நடராஜா சர்வீஸ்தான் எப்பவும்.

எனக்கு கியர் பைக் ஒட்டத்தெரியாது.கிளச்ச புடிக்கனுமாம்,கியர மாத்தனுமாம்,ஹேண்டில பேலண்ஸ் பண்ணனுமாம், பிரேக் பிடிக்கனுமாம்.அதுவும் ஒரே சமயத்துல. அதுக்கு வேற ஆள பாருல.

ஒ.கே.

சிக்னல்ல நின்னனா,என் கூட இரண்டு பெரியவர்களும், ஒரு விடலைபையனும்.ஒரு பெண்ணும் நின்றிருந்தார்கள்.

காரு பஸ்ஸுன்னு சர் சர்ன்னு போய்கினே இருந்தது.

அப்போ ஒரு பெரியவர் முட்டாள்தனமாக சட்டென்று கிராஸ் செய்து விட்டார்.

ஒரு காரிலிருந்து அடிபடாமல் மயிரிழையில் தப்பினார்.

என்னை அறியாமல் பய ஓலமிட்டு விட்டேன்.

என் பக்கம் நின்ற விடலை பையன் கத்தினான்.
“போறான் பாரு ! நாய் நாயி நாயி !

சிக்னலை கடந்து விட்டோம்.

இப்போ மற்றொரு பெரியவர் என்னருகே வந்து.

“ பாத்தீங்களா தம்பி ! ஒரு சின்ன பையன் பெரியவர் அவர பார்த்து நாயின்னு சொல்றான்” என்றார்.

அதற்கு நான் “ ஆமா அவரு நாயிதான சார். ஏழு கழுதை வயசாகுது இன்னும் ரோடு கிராஸ் பண்ணத்தெரியல.மண்டையில அவருக்கு மயிரு மட்டும்தான் நரைச்சிருக்கு , ஆனா அறிவில்ல பன்னி பயலுக்கு!
லூசுப்பய.மண்டைக்கு வழியில்லாம இருக்கான் சார் அவன். அவர் நாயிதான சார். அதில என்ன சந்தேகம் என்றேன்.

பெரியவர் அசந்து என்னை பார்த்து ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார்.

எனக்கு கோபம் அடங்க வில்லை. வீடு வரும் வரை மனதில் தெரிந்த கெட்ட வார்த்தை அனைத்தும் சொல்லி திட்டி வந்தேன் :)

நான் டீசண்டு . ஆனா புக் விசயத்துல வீக்...

ஒருவர் வீட்டிற்கு முதன் முதலில் போகும் போது 

- காபி, டீ கொடுத்தால் ஒரிரு மறுப்புக்கு பிறகே சாப்பிடுகிறேன்

-அவர் மனைவியோ,அம்மாவோ, தங்கையோ கேள்வி கேட்டால் பதிலை பெண்களிடம் சொல்வது மாதிரி தொடங்கி குடும்ப்த்தலைவர் ஆண்களிடம் முடிக்கிறேன்.ஆணை பார்த்தே பதில் சொல்கிறேன்.

-டி.வி ரிமோட்டை தொடுவதே இல்லை.அவர்கள் பார்க்கும் டிவி நிகழ்ச்சி எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றே சொல்கிறேன்.

-குழந்தைகள் இருந்தால் சிறிய பேச்சு கொடுத்து நிறுத்தி விடுவேன்.அவர்களாக தங்கள் குழந்தைகளை பாராட்டினால், நல்லா ஆமோதிப்பேன்.

-சோபாவில் ஜெண்டிலாகவே உட்காருகிறேன்.எதாவது திமிர் பாடி லாங்குவேஜ் தெரிகிறதா என்று திரும்ப திரும்ப செக் செய்து, அதை சரி செய்கிறேன்.

-அவர்கள் வீட்டு நாயோ பூனையோ என் மடியிலே உருண்டு புரண்டாலும், ரொம்ப சாஃப்ட் மாதிரி நடித்து மகிழ்விக்கவே செய்கிறேன்.

சரி கஸ்ட்டபட்டு ஆறு பாயிண்ட் தேத்திட்டேன்.

இரண்டு விசயத்த மட்டும்தான் என்னால கட்டுபடுத்த முடியாதுங்க.

ஒன்று- யார், வீட்டுக்கு போனாலும்,போன உடன பாத்ரூம் எங்கன்னு கேட்டு உள்ள நுழைஞ்சிருவேன்.யூரின் அப்செசன் பிரச்சனைதான் காரணம்.

இரண்டு- புக்ஸ் என்ன இருந்தாலும், அந்த செல்ஃப்ய குடைய ஆரம்பிச்சிருவேன். அது என்ன புக்கா இருந்தாலும்.சில பேர் பெட் ரூமுக்குள்ள புக இருக்குன்னு தெரிஞ்சா, அவங்கிட்ட பேருக்கு சொல்லிட்டு உள்ள நுழைஞ்சி அது என்ன புக்குன்னு பாத்திருவேங்க... வீக்னஸ்தான்... :)

சபரிதாஸூம் ஜியார்ஜ் ஆர்வெல்லும்...

முதலில் நண்பர் Sabari Dass இந்த கட்டுரையை அறிமுகம் செய்ததற்காக அவருக்கு நன்றி சொல்லி கொள்கிறேன்.அவரிடம் இருந்து share செய்ய முடியாததால் காப்பி பேஸ்ட் செய்திருக்கிறேன்.

இது ஜார்ஜ் ஆர்வெல் (”விலங்கு பண்ணை” புகழ் ஆர்வெல்தான்) எழுதிய அனுபவம்.

பர்மாவில் போலீஸ் உயரதிகாரியாய் இருக்கும் போது, மதம் கொண்ட யானை அந்த ஏரியாவை தொந்தரவு செய்கிறது.

ஒரு மாட்டை கொல்கிறது,பஜாரை துவம்சம் செய்கிறது ,என்று மக்கள் புகார் கொடுக்கிறார்கள்.

ஆர்வெல் அந்த யானையை தேடி அலைகிறார்.அதன் மாவுத்தனையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

முடிவில் யானையை பார்த்து விட்டார்.

துப்பாக்கியை எடுத்து கம்பீரமாக போக, அவர் பின்னால் சுமார் 2000 பேர் கொண்ட பர்மியர்கள், பின் தொடர்கிறார்கள்.

ஆனால் ஆர்வெல் அந்த யானையை பார்க்கும் போது
அது சாதுவாய்தான் உள்ளது.மாவுத்தன் வரும் வரை அதை சுட வேண்டாம் என்றுதான் நினைக்கிறார். ஆனால் 2000 பேர் கும்பலை கண்டு பயப்படுகிறார். வேறு வழியில்லாமல் சுட்டு கொள்கிறார்.

ஹலோ! இது ரொம்ப ரொம்ப சின்ன கதை சுருக்கம். உங்கள படிக்க தூண்டுறதுக்காக :) .

ஆனால் இதில் எவ்வளவு மேட்டர் இருக்கு தெரியுமா ?

-When a nimble Burman tripped me up on the football field and the referee (another Burman) looked the other way, the crowd yelled with hideous laughter.

-It is a serious matter to shoot a working elephant — it is comparable to destroying a huge and costly piece of machinery — and obviously one ought not to do it if it can possibly be avoided.

-I looked at the sea of yellow faces above the garish clothes-faces all happy and excited over this bit of fun, all certain that the elephant was going to be shot. They were watching me as they would watch a conjurer about to perform a trick. They did not like me, but with the magical rifle in my hands I was momentarily worth watching

-The crowd would laugh at me. And my whole life, every white man's life in the East, was one long struggle not to be laughed at.

-as a toad under a steam-roller

-A white man mustn't be frightened in front of ‘natives’; and so, in general, he isn't frightened. The sole thought in my mind was that if anything went wrong those two thousand Burmans would see me pursued, caught, trampled on and reduced to a grinning corpse like that Indian up the hill. And if that happened it was quite probable that some of them would laugh. That would never do.

-Among the Europeans opinion was divided. The older men said I was right, the younger men said it was a damn shame to shoot an elephant for killing a coolie, because an elephant was worth more than any damn Coringhee coolie. And afterwards I was very glad that the coolie had been killed; it put me legally in the right and it gave me a sufficient pretext for shooting the elephant

இதெல்லாம் எனக்கு பிடித்த இடங்கள். மனது கனக்கிறது.

Sabari Dass u r great man

Sabari Dass u gifted me a exceptional gift today

Sabari Dass i am impressed of this article .

Sabari Dass there is no words to hail u dear :)

தண்ணில உள்ள கரண்ட ...

ஒரு ஜோக் ஞாபகம் வருது. தயவு செய்து யாரும் கொதித்து ஆவியாய் போய்விடாதீர்கள் பாஸ்.

Hydro elecrtic power station முதன் முதலில் (say 1959 approx) வரும் போது ஒரு விவசாயி ரொம்ப கோவத்தில் இருந்தாராம். 

ஏன் என்று கேட்டார் மற்றொருவர்.

அதுக்கு அவர் “ யல ! நான் தப்ளை தாமஸ்ன்னு நெனச்சியோ ! தண்ணில உள்ள ”கரண்ட் சத்து” எல்லாத்தையும் உறிஞ்சுட்டு தண்ணிய அனுப்புனா, பயிரு எப்படில வெளையும் , என்றாராம் . :)

கருப்பட்டி காப்பி

கருப்பட்டி காப்பி குடித்திருக்கிறீர்களா ?
அடுப்புல தண்ணி வச்சு, அது கொஞ்சம் சூடானதும் , கருப்பட்டிய உடச்சு தண்ணிக்குள்ள போடனும்.

கருப்பட்டி கொதிக்கும் கேட்டியா!

அப்போ நரசூஸ் காப்பித்தூள ரெண்டு மூணு ஸ்பூன் உள்ள போட்டா கொதிச்சு பொங்கி மேல வரும் பாத்துக்க. 

அப்போம் கொஞ்ச தண்ணி ஊத்தி.(ரொம்ப கொஞ்சம்) அடுப்ப அணைச்சுரனும்.

பால தேவைக்கு , நிறம் மாத்துரத்துக்கு மட்டுமே ஊத்தனும். 

நிறய ஊத்தினா டேஸ்ட் போயிரும்.பால் ஊத்தாத காப்பி பேரு கடுங்காப்பி.

சாத்தான்குளம் பஸ் ஸ்டாண்டுல கடுங்காப்பியும், அவிச்ச சிறுபயிரோ இல்ல பனகிழங்கோ நீ சாப்பிட்டன்னு வெச்சுக்க!அப்படியே பிளாட் ஆயிருவ பாத்துக்க. அப்படி ஒரு ருசிடே !

ஒ.கே .

பிறக்கும் போதே உயர்தர நெல் வகை நடுவே பிறந்து, நயம் பருப்பு வகைகளை சாப்பிட்டு, காவேரி தண்ணீரை குடித்து,கர்நாடக இசை கேட்டு , மிஞ்சிய நேரத்தில் ஊரில் உள்ள எல்லா கோவிலையும் தரிசனம் செய்யும் உயரிய பண்பாடு உள்ள ,ஸ்டிராங் டிகிரி காப்பி மட்டுமே குடிக்கும் கும்பகோணத்து தோழி ஒருமுறை என்னிடம் சொன்னார் .

“என்னை, தண்டிக்க வேண்டுமானால், ஒரு மோசமான காப்பியை எனக்கு கொடுத்தால் போதும் என்றார்”

எனக்கு கருப்பட்டி காப்பி ஞாபகம் வந்தது.

அன்றிரவு தோழி தன் குடும்பத்துடன் சாத்தான்குளம் வருவது மாதிரியும், வேறு வழியில்லாமல் கருப்பட்டி காப்பியை கொடுப்பது மாதிரியும் கொடுங்கனவு கண்டேன் :)

சிறுகதையின் கதைச்சுருக்கம்

தினமணிகதிரில் சிறுவயதில் படித்த பாதித்த கதை.

Mr.” கே” என்கிற பேராசியருக்கும் மாணவனுக்கும் இடையே ஆழமான நட்பும் அன்பும் இருக்கிறது.

ஆனால் Mr.” கே” “மறுபிறவி” கான்செப்ட்டை நம்புபவர். மாணவன் பகுத்தறிவாதி.நம்புவதில்லை. பேராசியரை கிண்டல் செய்து கொண்டே இருப்பான். Mr.” கே” மறுபிறவியை பற்றி ஆணித்தரமாக அடித்து பேசிக்கொண்டே இருப்பார்.

ஒருநாள் Mr.” கே” திடீரென் இறந்து போய் விடுகிறார். 

மாணவனால் அந்த பிரிவை தாங்க முடியவில்லை.

அவருடைய அன்பை நினைத்து ஏங்கி கண்ணீர் உகுக்கின்றான்.

ஒருமாதமாக் தன் அறையிலேயே அடைபட்டு கிடக்கிறான்.

பின்னர் மனதை தேற்றி கொண்டு பேராசிரியர் அறைக்கு சென்று அவர் புத்தகத்தை பார்த்து கொண்டிருக்கிறான்.

அப்போது ஒரு கரிய பெரிய சிலந்தி மாணவன் மேல் தாவ, அவன் பயந்து அதனை தட்டி விட்டு காலால் நசுக்குகிறான்.

இப்போது அவன் இடது பக்க மேல் க்ஷெல்பை தற்செயலாக பார்க்க. அதில் ”K" என்கிற எழுத்தையுடைய சிலந்தி வலைபின்னலை பார்த்து திடுக்கிடுகிறான்.

அவசரமாக் தான் மிதித்த சிலந்தியை பார்க்கிறான்.

சிலந்தியின் உறுப்புகளின் துடிப்பு அடங்கி கொண்டிருந்தது.

இந்த கதையை சிறுவயதில் படித்த உடன் துக்கத்தையும்.

கொஞ்ச நாள் பிறகு “கலை கிளூ கிளூப்பையும்” கொடுத்தது :)

நோக்கு கூலி தொடு கூலி...

தொழிலாளர்கள் கேரளாவில் பல வினோத சட்டங்களை வைத்திருந்தார்களாம்.

உங்கள் கடைக்கு ’ஒரு வண்டி’ சிமெண்டு மூட்டைகள் வருகிறது என்று வைத்து கொள்வோம். அதை உங்கள் ஆட்களை வைத்து இறக்கி வைக்க கூடாது. 

தொழிலாளர் சங்கத்து ஆட்களை வைத்துதான் இறக்க வேண்டும்.

இல்லையென்றால் மூட்டைகளை தொட்டு விட்டு போய்விடுவர். அதுக்கு கூலி கொடுக்க வேண்டும்.அதன் பெயர் ”தொடு கூலி”.

இன்னும் அட்வான்ஸாக சில தொழிலாளர்கள் மூட்டைகளை பார்த்து செல்வர் அதற்கு கூலி கொடுக்க வேண்டும்.அதன் பெயர் ”நோக்கு கூலி”.

அது மாதிரி “பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்” பரவிகிடக்கும் பூமி கேரளா.

அதை பற்றி ஒரு காமெடி கதை இங்கே ....

ஒருத்தன் நல்ல சக்கை பழமாக (பலாப்பழமாக) வாங்கி கொண்டு , திருநெல்வேலி போக வேண்டி திருவனந்தபுரம் பஸ்டாண்டில் நிற்கிறான்.

அங்கு வந்த கேரள தொழிலாளி ,விடு விடுவென கேட்காமலே,பழத்தை எடுத்து திருநெல்வேலி பஸ்ஸில் ஏற்றி விட்டு கூலி கேட்கிறான்.

கூலி கொடுப்பா !

”ஏம்பா நான் உன்ன ஏத்தவே சொல்லலியே !”

”இங்க அப்படித்தான். நீ கூலி கொடு.”

”எவ்வளவு ?”

”8 ரூபாய் !”

”என்னது ?”

”8 ரூபாயப்பா ? சீக்கரம் கொடு.”

”ஏம்பா பழமே 5 ரூவாதான். நீ எட்டு ரூவா தூக்கு கூலி கேக்குற.அப்ப கூலியா இந்த சக்க பழத்தையே வெச்சுக்க.ஆள விடு !”

என்று சொல்லி கிளம்பினார் திருநெல்வேலிக்காரர் . :))

நன்றியின் கதகதப்பு

ஹைதிராபாத் எக்ஸ்பிரஸ்ஸில் இரவு 11.55 க்கு முழிப்பு வருகிறது. எழுந்து பார்த்தால் குண்டூர் வந்திருக்கிறது.(15 நிமிசம் நிக்கும்).

மனைவி குழந்தை நல்ல தூக்கம். சரி என்று அப்பர் பெர்த்திலிருந்து கீழிலிறங்கி (ரொம்ப கஸ்டபட்டேன். கதவு இருப்பதால் ஏணி இல்லை) டாய்லெட் போய்விட்டு வந்து படுக்க போனால், குண்டூரில் ஏறின பெண் தன் பெட்சீட்டை தேடிக்கொண்டிருந்தார்.

நான் உதவ நினைத்தேன்.வேண்டாம் என்று விட்டு விட்டேன்.

போய் படுத்து கொண்டேன்.மேலிருந்து கவனிக்கிறேன்.

அவர் திணருகிறார்.தலையணை இல்லை, கம்பளி இல்லை. இரண்டு வெள்ளை போர்வை மட்டுமே இருக்கிறது.

நல்ல குளிர். என்னால் தூங்க முடியவில்லை.(நல்லவன் இல்லையா ?).

இறங்கி வந்து அவரை உட்காரச்சொல்லி , ஒவ்வொருவராய் தேடினேன்.

மிடில் பெர்த்காரர் ரெண்டு கம்பெளி வைத்திருக்கிறார். பிடிங்கி கொடுத்தாயிற்று.

சைடு அப்பர் பெண் இரண்டு தலையணை (எந்த குற்ற உணர்வும் இல்லாமல்) வைத்திருக்கிறார்.அவர் கணவனை எழுப்பி “ரெக்குவஸ்ட் ஃபார் பில்லோ” போட, அவர் வேண்டா வெறுப்பாக எடுத்து கொடுத்தார்.

இப்போதுக்கு பெண்ணுக்கு மகிழ்ச்சி.

மூக்குத்தி அணிந்து,உயரமாய்,ஆரோக்யமாய் ”டிப்பிக்கல் தெலுகு அம்மாயி”.

அவர் சொன்ன நன்றி குளிருக்கு இதமாய் இருந்தது. மனைவியும் பார்க்கவில்லை என்று தெரிந்த போது இன்னும் இதமாய் இருந்தது.நன்றாய் தூங்கினேன்.

வழக்கு எண் பற்றி சாருவுக்கு ஒரு கேள்வி ?

வழக்கு எண் படத்தை சாரு நிவேதிதா “குப்பை” என்று சொல்லி , அப்படி மனதில் பட்ட உண்மையை மறைக்காமல் சொன்னால்தான் தனக்கு தூக்கம் வரும் என்று சொல்லி இருந்தார்.

கொஞ்ச நாள் முன்னர் சாருவின் “எக்ஸைல்” நாவல் ( எனக்கு பிடித்த நாவல்) வந்த போது மாமல்லன் ( இவரும் பிடிக்கும் பாஸ்) அதை முழுதும் படிக்கமுடியவில்லை, உப்பு சப்பில்லாத நாவல் என்று தன் மனதில் உள்ள உண்மையை சொல்லும் போது, சாரு “This is not my cup of Tea" என்று ஒதுங்கி விட வேண்டியதுதானே என்று கேட்டார்.

எனக்கு இரண்டு டவுட் வந்துச்சு . அது என்னன்னா ?

1.மாமல்லனும் மனதில் பட்டதை சொன்னால்தானே அவராலும் நிம்மதியா தூங்க முடியும் சாரு மாதிரி ? :)

2.எக்ஸைலை படிக்காமல் குற்றம் சொன்ன மாமல்லனை போட்டு தாக்கி எழுதிய சாருவின் பன்னிரு ஆழ்வார்களும், அறுபத்தி மூன்று நாயன்மார்களும் ”வழக்கு எண்” படத்தை முழுதும் பார்க்காமல் குற்றம் சொன்ன சாருவை பார்த்து ஒரு கேள்வியும் கேட்காமல் இருப்பது ஏன் ?

பின்குறிப்பு :

””நியாயம் என்பது களிமண் மாதிரி, யாருக்கு பேச்சு திறமை இருக்கிறதோ அவர்கள், ஏற்றால் போல் உருவம் செய்து மற்றவரையும் நம்ப வைத்து விடுவார்கள்””” ---- பாலகுமாரன் :))

பாப்கார்ன் வாங்கி கொடுத்தவர்

சென்னையில் படம் பார்க்க போனேன்.

ஒல்லியாக, டிப்டாப்பாக என்னருகில் ஒரு பெரியவர் தன் மனைவியோடு அமர்ந்திருந்தார்.

பேச்சு கொடுத்தேன்.

அவர் பிரபல வார பத்திரிக்கையில் 43 வருடம் ( யப்பா சாமி) பிரிண்டிங் சூப்பர்வைஸராக வேலை பார்த்திருக்கிறார்.

நிறைய சொன்னார். இந்த ஒரு பக்க கதை, ஜோக்குகள், தன்னம்பிக்கை கட்டுரைகள், “கதவை திற” டைப் ஆன்மிகங்கள் எல்லாம் ஒரு வாரம் முன்னரே தயாராகி விடுமாம்.

தலையங்கத்திற்க்கும் “ஹாட் கரண்ட் மேட்டர்” கட்டுரைக்கும் இரண்டு பக்கம் காத்திருக்குமாம் காலியாக.

பிரிண்டிங் அட்வான்ஸ் டெக்னாலஜி பற்றியும் நிறைய சொன்னார்.நிறைவாக பேசினார்.

அப்போது ஒரு அம்மா தன் வயது பெண்களோடு சீட்டில் அமர்ந்து முடிக்கும் முன்னரே ஏ.ஸி இல்லை என்று சத்தம் போட ஆரம்பித்தார்.

தியேட்டர் ஊழியர்களுகும் அவருக்கும் சரியான் சண்டை.அந்தம்மா பெரிய லெவல் போல. கடைசியில் அவர் புண்ணியத்தால் நல்ல குளிர் கிடைத்தது.

நானும் பெரியவரும் இதை பார்த்து கொண்டிருந்தோம்.

நான் சொன்னேன் ,” இவ்வளவு ஆவேசமாக அடிவயிற்றில் இருந்து கத்தினால், எப்படி அந்தம்மாவினால் நிம்மதியாக படம் பார்க்க முடியும் “.

பெரியவர் சொன்னார் “ நானும் அதைத்தான் நினைத்தேன் தம்பி”.

பின்னர் படத்தின் இடைவேளையில் பெரியவர் ,எனக்கும் சேர்த்தே “பாப் கார்ன்” வாங்கி கொடுத்தார்.

பேருக்கு கூட அதை மறுக்க தோண்றவில்லை.

என் நெடுநாள் நண்பர் அல்லது அப்பா , அல்லது சித்தி “பாப் கார்ன் “ வாங்கி கொடுத்தால் எப்படி வாங்கி கொறிப்பேனோ அப்படி கொறித்தேன்... :)

போலீஸ் துப்பாக்கி சுடுமா ?

தம்பி சொன்ன கதை இது.

பயலுகள் ஃபைனல் இயர் பிராஜக்டுக்காக வடபழனி பக்கம் சுத்தி திரிந்திருக்கிரான்கள்.

அங்கே போலீஸ் ஸ்டேசன் முன்னால் இருந்த போலீஸ்காரரிடம்.(போலீஸ் ஸ்டேசன் முன்னால் போலீஸ்தானேப்பா நிப்பார். நல்லா போடுறிய ஸ்டேட்டஸ்) பேசி பழகி இருக்கிறான்கள்.

அவரும் நல்லா பேசி, தன் அக்கா பொண்ணு கல்யாணத்துக்கு, வாங்கின நகை டிசைன் முதற்கொண்டு பேசி இருக்கிறார்.

இப்போது தம்பியின் நண்பன் போலீஸ்காரரிடம் காமெடியா ஒரு கேள்வி கேட்க, அவர் முகம் சிவந்திருக்கிறார்.

எல்லோரையும் கத்தி “வாங்கடா ஸ்டேசுனுக்கு” ன்னு கூப்பிட்டு பெஞ்சில் உட்கார வைத்துவிட்டார்.

அப்புறம் இன்ஸ்பெக்டர் வர போலீஸ்காரர் விசயத்தை சொல்ல , இன்ஸ்பெக்டரின் சிவந்த விழிகள் மேலும் சிவக்க பயலுகள் அழ ஆரம்பிக்க, ஒரு மணி நேர மிரட்டலுக்கப்பால் குதிகால் பின்னால் அடிக்க ஓடிவந்திருக்கிறான்கள்.

அப்படி என்னல கேட்டீங்க என்றேன் தம்பியிடம்.

“அது ஒண்ணுல்ல விஜய், நம்ம பால்ராஜ் இல்ல. அந்த நாயிதான் கேட்டது, போலீஸ்காரர்ட்ட “சார். எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்டு, உங்க கையில வைச்சிருக்க துப்பாக்கி உண்மையில சுடுமா ? இல்ல சும்மா ஸீனுக்கு வைச்சிருக்கீங்களா” ன்னு கேட்டுட்டான் . :)

ஃபேன் சர்வீஸ்

வீட்டில் இரண்டு பேனும் சரியாய் சுற்ற வில்லை. 

கெப்பாசிட்டர் தான் பிரச்சனை என்று நன்றாய் தெரிகிறது.

எதற்கும் எலக்டிரீசியனை கூப்பிடலாம் என்று Hyderabad electrician என்னும் நம்பருக்கு போன் செய்தேன். 

இரண்டு பேனுக்கு சேர்த்து 250 ரூபாய் எனவும் இரண்டு கெப்பாசிட்டருக்கு 70 ரூபாய் எனவும் சேர்த்து 320 ரூபாய் ஆகும் என்று சொல்ல, அதிகமாய் தெரிந்தாலும் வெயில் கொடுமையால் ஒ.கே சொன்னேன்.

இரண்டு பேர் நீல டீ சர்ட்டிலும் பாலீஸ் சூவிலும் வந்து பட பட வென்று கெப்பாசிட்டர் மாத்தினார்கள்.

பேனை பள பள வென்று துடைத்தார்கள். 250 + 70 பில் போட்டு வாங்கி சென்று விட்டனர்.

பேன்கள் வேகமாய் சுத்தியதால் ஆனந்தம் பரவிற்று. எனக்கோ பெருமிதம். ஒரு வேலையை உருப்படியாய் முடித்து விட்டேனாம்.

மனைவியோ இந்த சிறிய வேலையை கூட செய்ய தெரியாமல் இருக்கிறீர்களே என்று கிண்டல்.

அரை மணி நேரம் கழித்து காலிங் பெல் அடிக்க , மறுபடியும் அந்த இளைஞர்கள்.

250 என்பது அதிக சார்ஜ் என்று கம்பெனி ஃபீல் பண்ணுகிறதாம். அதனால் 125 ரூபாயை ரிட்டன் கொடுத்தார்கள்.

நான் அதில் 25 ரூபாயை அவர்களுக்கு “சாய் பாணி” சாப்பிட கொடுத்தேன். வாங்கவே இல்லை.

பணிவோடு உறுதியாய் மறுத்து போய்விட்டனர்.

எழுத்தாளர் நா.பார்த்தசாரதி சொல்வது போல
“கங்கை இன்னும் வற்றி விட வில்லை” :)

கணிதமும் வல்லரசாவதும்

மேத்ஸில் Analytical geometry என்று ஒரு பாடம்.

வடிவத்தை( வட்டம், நீள் வட்டம் ,உருண்டை) கணித சூத்திரங்களாக வெளிப்படுத்தும் கணிதமுறை.

உதாரணமாக வட்டத்தின் பொது வாய்ப்பாடு
x^2 + y^2 = r^2 .

இதில்' r' என்பதை 5 என்று வைத்துக்கொள்ளுங்கள். 

அப்படியானால் x^2 + y^2 = 25.

இப்போது x க்கு 0,1,2 என்று value கொடுத்து அதற்கு வரும் y விடையை எழுதிக்கொள்ளுங்கள். x^2 + y^2 = 25 என்ற சூத்திரத்திற்கு அது (0,5) (1,4.89)(2,4.58)... போன்ற புள்ளிகளை கொடுக்கும்.

இப்போது ஒரு Graph sheet எடுத்து அந்த புள்ளிகளை மார்க் பண்ணுங்கள்.அந்த புள்ளிகளை இணைத்தால் ஒரு அழகான வட்டம் வரும்.

ஸோ! உலகத்துல உள்ள எந்த வடிவத்தையும் ஃபார்முலாவ எழுத முடியும். அந்த ஃபார்முலாவ மார்க் பண்ணினா அந்த வடிவமும் வரும்.

<<திபெத்தியர்களின் பல கலைவடிவங்களுக்கு சூப்பர் கம்பியூட்டராலத்தான் ஃபார்முலா கொடுக்க முடியுமாம் என்று பெருமை பேசுபவர்களும் உண்டு :)) >>

”இப்படித்தான பாஸ்! அனாலிடிக்கள் ஜியோமெட்ரி சொல்லிதரணும். ”

ஆனா என் ஸ்கூல் லைஃப்ல, ஒரு வாத்தியார் கூட இத சொல்லி தந்தது கிடையாது.

காலேஜ் லைப்ல , இத நானே கண்டுபிடிச்சி, நிறைய Graph sheet வாங்கி பிராக்டிக்கலா செய்து பரவசபட்டிருக்கிறேன்.

அறிவிலோ, கணிதமோ,அத நம்ம வாத்தியார் ஃபீல் பண்ண வைச்சுட்டாருன்னாலே நம்ம நாடு வல்லரசாயிடும்.

அதுவரைக்கும் நாம “ The rate of change of velocity is acceralation " ன்னு மனப்பாடமா சொல்லி மார்க்க லட்டு மாதிரி தட்டி ஸ்டேட் ஃபர்ஸ்ட் எடுத்துகிட்டே இருப்போம்.

அப்துல் கலாம் சிரித்த முகத்துடன் குழந்தைகள் கிட்ட உரையாடிகிட்டே இருப்பார். :)

Optimal Foraging Theory

நீங்கள் ரோட்டில் போகும் போது பத்து ரூபாய் நோட்டுக்கள் இருபது சிதறி கிடக்கின்றன.

ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்றே ஒன்றுதான் கிடக்கின்றது.

காற்றினால் எல்லா நோட்டுக்களும் பறக்கின்றன. எதன் பின்னால் ஓடுவீர்கள். பத்து ரூபாய் நோட்டுக்கள் பின்னாலா ? அல்லது ஒற்றை ஆயிரம் ரூபாய் பின்னாலா?

இதைத்தான் உணவு விசயத்திலும் உயிரினிங்கள் செய்கின்றன.

புலி முதலில் மானை வேட்டையாடுகின்றது.எலியை வேட்டையாடுவதில்லை. ஏனெனில் மான் கறி எலி கறியை விட அளவில் அதிகம். குறைந்த சக்தியை செலவளித்து நிறைந்த லாபம்.

அப்போ யானையில் நிறைய கறி இருக்கிறதே அதை ஏன் புலி அடிப்பதில்லை என்ற கேள்வி வருகிறது. யானையை தாக்கும் போது நிறைய சக்தி விரமாகிறது.உயிருக்கும் ஆபத்து.

எல்லா விதத்திலும் பார்க்கும் போது மான் தான் பெஸ்ட்

இப்போது மான் அழிந்துவிட்டது என்று வைத்து கொண்டால், முயல். முயலும் இல்லையென்றால் எலி.எலியும் இல்லையென்றால் வெட்டுகிளி.

மனிதர்களுக்கும் இந்த தியரி பொருந்தும்.

உணவே கிடைக்காத மனிதர்கள் எலிக்கறி சாப்பிடுவதை பார்க்கிறோம்.

ஒரிசா பஞ்சம் வரும் போது, பசி தாங்காமல் மரத்தை அறுத்து அதன் பொடியை கஞ்சாக்கி குடித்து உயிர் விட்டவர்கள் உண்டு.

மத்திய சீனாவில் கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளாக பஞ்சம் விட்டுவிட்டு வந்ததாம்.

அதனால்தான் அந்த மக்களுக்கு பூச்சிகளை தின்னும் பழக்கம் வந்ததாம்.(ஏனெனில் மிருகங்களுக்கு,பயிர்களுக்கு, கிழங்குகளுக்கு தட்டுப்பாடு. வேறு வழியில்லை பத்து ருபாய் நோட்டுகளை பொறுக்க வேண்டும்தான்.)

பிறகு பூச்சியிலும் ருசியை கண்டு இப்போது வரை அதை தொடர்கிறார்கள்.

இந்த தியரி பேர் Optimal Foraging Theory.இதை எனக்கு சொல்லி கொடுத்தவர் Marvin Harris. :))

அலெக்ஸாண்டருக்கு துறவி சொன்ன பதில்

நான்காம் நூற்றாண்டில், அலெக்ஸாண்டர் உலகையே வெற்றி கொண்டு , இந்தியாவையும் வெற்றி கொண்ட கர்வத்தில் குதிரையில் வந்து கொண்டிருக்கிறார். அப்போது ஜைன துறவிகள் அவரை கவனிக்காவதராய் கடந்து செல்ல எரிச்சலைடைந்து கேட்கிறார்.

”உலகின் சக்கரவர்த்தியான என்னை , நீங்கள் முழுமையாக மரியாதை செய்யவில்லையோ என்ற சந்தேகம் வருகிறது ,துறவிகளே ! “

அதற்கு துறவிகள் சொன்ன பதில்.

”அலெக்ஸாண்டர்! நாம் நிற்கிறோமே , அந்த அளவு நிலத்தைதான் எல்லா மனிதர்களும் சொந்தம் கொண்டாட முடியும்.

எங்களை போன்ற சாதரண மனிதனான ’நீ’ எப்போதும் சுறுசுறுபானவனாய்!
ஆனால் எவர்க்கும் நல்லவனாய் இல்லை.

உன் வீட்டிலிருந்து பல மையில் தூரம் வந்து உனக்கும் மற்றவர்களுக்கும் தேவையற்ற தொந்தரவாய் இருக்கின்றாய்!விரைவில் நீ மரணிக்கும் போது, உன்னை புதைக்க எவ்வளவு நிலம் தேவையோ அது மட்டுமே உன்னுடையது”

என்று ஜைன துறவிகள் சொன்னது கேட்ட அலெக்ஸாண்டரின் முகத்தை கற்பனை செய்து பாருங்கள்.

சிரிப்பு பொங்கி வரும் உங்களுக்கு...

ரசனை

சாரு வட்டத்தில் படித்ததில் பிடித்தது.... 

Senthil Kumar என்பவரின் கருத்து இது. எவ்வளவு அருமையான கருத்து... இம்பிரஸிவ்...

பிடித்தது பிடிக்கலை என்பதை விட மற்றவருடைய விருப்பு வெறுப்பு உங்களின் ரசிப்பு திறனை Influence ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

எந்த ஒரு படைப்புமே தனிமனித விருப்பு வெறுப்பிற்க்கு அப்பாற்பட்டு விமர்சித்தாலே போதுமானது. 

ஜெயமோகனை படித்தால் தூக்கம் வரும்னு நினைச்சிட்டு படிச்சா அது எவ்வளவு தான் நல்லா இருந்தாலும் தூக்கம் வரமாதிரி தான் இருக்கும் .

உங்களுக்கு கரகாட்டகாரன் பிடித்தது ஆனால் அதை வெளியே சொன்னால் நம்மை ஒரு மாதிரி நினைத்து கொள்வார்கள் என்பதற்காக பிடிக்காத‌/ உலக சினிமாவை பிடித்தாக சொல்லாதீர்கள்.

ராணி காமிக்ஸ், ராஜேஷ்குமார்,பாலகுமாரன்,சுஜாதா,ஜெமோ,சாருன்னு ஒவ்வொரு காலகட்டத்தில் சிலர் நம்முடைய ஹீரோவாக இருப்பார்கள்.

ஆனால் அது நிரந்திரமில்லை.

நான் எப்படி ராஜேஷ்குமார் நாவலை விழுந்து விழுந்து படித்தேன் என்று நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது .

அதற்காக இன்று யாராவது ராஜேஷ்குமாரை படித்தால் அவரை ஏளனமாக பார்க்க மாட்டேன்.

குழந்தைகள் ஆண்கள் பெண்கள்

பொதுவாக சீரியஸ் இலக்கியவாதிகளால் ஒதுக்கி தள்ளப்பட்ட நாவல் சுந்தர ராமசாமியின் “குழந்தைகள் ஆண்கள் பெண்கள்’.

ஆனால் என்னளவில் அதிகம் பிடித்த நாவல்களில் ஒன்று.

அந்த நாவலில் வரும் பாலு என்ற தாழ்வு மனப்பான்மை கொண்ட சிறுவன் நான்தான் என்ற அழ்மன எண்ணம் கூட காரணமாய் இருக்கலாம்.

பாலு வரும் இடத்தை எல்லாம் எத்தனை முறை படித்தாலும் தீராது.

எஸ்.ஆர்.எஸ் என்பவர் தீவிர ஒழுங்குவாதி. எதுவுமே பெர்பெக்டாக இருக்க வெண்டும்.

அவருக்கும் அவர் பையன் (சிறுவன்) பாலுவுக்கும் இருக்கும் உறவு சிக்கல்தான் கதைக்களம்.

பாலு ஒரு குடையை தொலைத்து விடுகிறான்.எஸ்.ஆர்.எஸ் கடும் கோபம் கொண்டு குடையை கொண்டு வந்தால்தான் வீட்டுக்குள் வர வேண்டும் என்று சொல்ல அது பாலுவின் மனதை பாதிக்கிறது.

பின்னால் ஒரு மனநல டாக்டர் பாலுவை சோதித்துவிட்டு எஸ்.ஆர்.எஸ் இடம் பேசும் இடம் இருக்கிறதே... அடடா ! அற்புதம்.

அந்த மனநல டாக்டர் சொல்லும் முக்கியமான பாயிண்ட். “ குழந்தைகளுக்கு தண்டனையை விட அந்த தண்டனையில் இருக்கும் நாடகத்தனம் தான் பாதிப்பை ஏற்படுத்துகிறது” .

எவ்வளவு அருமையான வார்த்தைகள்

நிற்க.

“நீயா நானா “ புரொகிராமில் ஒரு சமூக சேவகர்(ஆண்) சீஃப் கெஸ்டாக வந்திருந்தார். அவர் சொன்ன சம்பவத்தை சொல்கிறேன்.

அவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது, ஏதோ தவறு செய்தற்காக, மற்றொரு தவறு செய்த பெண்ணின் காதை பிடித்து தோப்புகாரணம் போட செய்தாராம் ஆசிரியர்.

அந்த சீஃப் கெஸ்டுக்கு அறுபது வயது இருக்கும். அனால் அத்தனை வருடம் கழித்து அந்த சம்பவத்தை அழாமல் அவரால் சொல்ல முடியவில்லை.

பார்க்கும்ப்போது என்னையும் அழவைத்தது அது.(அவரின் தழுதழுப்பு)

அவர் ஆசிரியர் ’ஒரு அடி’ கொடுத்து விட்டிருந்தால் அன்றே அதை எல்லோரும் மறந்திருப்பார்கள். ஆனால் அந்த ஆசிரியர் கொடுத்த தண்டனையின் நாடகத்தனம் அவரை அறுபது வயதிலும் அழச்செய்கிறது.

இதைத்தான் சு.ரா சொல்கிறார்.

தி.ஜானகிராமன் “முள்முடி” சிறுகதையில் இதை பக்காவா சொல்லி இருப்பார்.

எழுத்தாளர் களந்தை பீர்முகம்மது என் மாமாவின் நெருங்கிய நண்பர்.

புத்தக கண்காட்சியில் மாமா, களந்தை பீர்முகம்மதுவிடம் என்னை அறிமுக படுத்த (அப்போ நான் சின்ன பையன்) அவரிடம் நான் கேட்ட முதல் கேள்வி “ “குழந்தைகள் ஆண்கள் பெண்கள்’ உங்களுக்கு பிடித்திருந்தா சார்.

அவர் யோசித்து ”பிடித்திருந்தது . ஆனால் அதில் 20 % பாகத்தை எடிட் செய்து வெளியிட்டிருந்தால் இன்னும் அற்புதமாய் இருந்திருக்கும்” என்றார்.

எனக்கு சந்தோசம் பிடிபடவில்லை.

களந்தை பீர்முகம்மது மேல் அப்போது வந்த மரியாதை இருக்கே... அட போங்க பாஸ்... :))

சுய மரியாதை

இது Sandhiya Sreenivasan கேட்ட கேள்விக்கு Gayathri Karthik யின் பார்வை... அசத்தல் பதிலென்று நான் நினைக்கிறேன்... 

’நெருங்கிய உறவகளிடம் சுய மரியாதையை விட்டு கொடுக்கலாமா வேண்டாமா?" 

சுயமரியாதையை விட்டு கொடுத்தால் ஒரு விளைவு...அந்த விளைவுக்கு தயாரா என்று நேர்மை உடன் யோசிக்கவும்...

சுயமரியாதையை விட்டு கொடுக்காவிட்டால் ஒரு விளைவு... அந்த விளைவுக்கு தயாரா என்று நேர்மை உடன் யோசிக்கவும்...

சுயமரியாதையை விட...எந்த விளைவுக்கு நீங்கள் தயாரோ...அந்த விளைவுக்கான choice ethuvo...அதை தேர்வு செய்யவும்...:):)