Friday, 22 June 2012

கதை போல ஒன்று - 18

’வாகத் சேன்விச்.வாகத் ஆம்லெட்.பிலாப்பி "மியா பில்ஸ்"’ என்றார் செல்வம்.

நீளமான ரொட்டியுள் வடை போன்ற ஒன்றை(பிலாப்பி)வைத்தும்,இன்ன்ரொரு ரொட்டியுள் ஆம்லெட்டை வைத்தும்,
பருப்பு வடை மாதிரி நான்கை( நூறு பில்ஸ்க்கு நான்கு) கடைக்காரர் கொடுக்க, வாங்கி கடித்தோம். 

’வாகத் சேன்விச்’ன்னா என்ன ?

’ஒரு சேன்விச்”

‘மத்தியானம் எங்க சாப்பிடுவீங்க.’

‘அதெல்லாம் கம்பெனி பாத்துக்கும்.நீங்க வந்த வேலையபார்த்தா போதும். சிரித்தார்.

செல்வம் மாதிரியான எளிமையானவர் நண்பனாய் கிடைத்தது நிம்மதியை தந்தது.

அதற்கப்புறம் நான் குவைத்திலிருந்த மூன்று மாதமும் செல்வம் நண்பராகவே இருந்தார்.

ஒரே ஒரு சண்டையை தவிர.

இப்போது யூசுப்பாய் எங்கள் டிரைவர் என்பதையும், அவர் எனக்கு ருபாயை குவைத் தினாராய் மாற்றி தந்தது,வாரா வாரம் லேப்டாப்பை ”அந்த உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து”வெளியே எடுத்து போக உதவுவது,
எந்த வேலை சொன்னாலும் செய்வது என்றிருப்பார் என்பதையும் சொல்லி கொள்கிறேன்.

கொழும்பு தமிழர். யாழ்பாணம் தமிழர் பற்றி அவர் கூறு கதைகள் சுவாரயஸ்யமானவை.

என்னுடைய உலகமே செல்வமும் , யூசுப்பாயும் என்பது மாதிரி இருவரிடமுமே நெருக்கமாக பழகினேன்.

ஆனால் அவர்கள் ரெண்டு பேருக்குள்ளேயே சண்டை வர மாட்டினது நானே. எளிதான பிரச்சனையை சிக்கலாக்கும் கலை மனிதர்களுக்கு ஆதி பழக்கம்தானே.

கம்பெனி மினி வேனின் ஜன்னல்களில் திரைச்சீலை கட்டியிருக்கும்.

குவைத்தில் வெயில் காலையிலேயே அடிக்கும் என்பதால், திரைச்சீலையை இழுத்து விட்டிருப்போம். கம்பெனி வாசல் வரைதான் வேன் போகும். எங்களை இறக்கி விட்டு “குவைத் மிலிட்டிரி” செக்கப் முடிந்து நடந்துதான் போக வேண்டும். யூசுப்பாய் வண்டியை செக்கிங் விட்டு ”சைட்” உள்ளே வண்டியை தனியே எடுத்து வருவார்.

இதில் எங்கு பிரச்சனை வந்தது என்றால் “யூசுப்பாய்” வண்டியை செக்கிங் விடும் போது திரைச்சீலை போட்டிருந்தால் மிலிட்டரிகாரன் கத்துவான்.

பொதுவாக நாங்கள் எல்லோரும் இறங்கும் போது திரைச்சீலையை சுருக்கிவிடுவோம்.அப்படி சுருக்காமல் வேண்டுமென்றே இறங்கினார் செல்வம்.

இதனால் யூசுப்பாய் வண்டியை ஆஃப் செய்து ( ஆஃப் செய்யாமல் இறங்கினால் சேஃப்டிகாரன் பிடிப்பான்) கிழே இறங்கி, திரைசீலையை சுருக்கி மறுபடி வண்டியை எடுக்க வேண்டும்.

இந்த கஸ்டத்தை யூசுப்பாய் செல்வத்திடம் எத்தனை முறை சொல்லியும் அவர் கண்டு கொள்ளவில்லை.

நான் இதை கேள்விபட்டதும் கொதித்து விட்டேன்.செல்வம் என்னிடம் பழகுவதில் இனிமை. எப்படி சொல்ல.

மறுநாள் செல்வம் வண்டியை விட்டு இறங்கும் போது .

“சார் ஸ்கிரீன சுருக்குங்க சார்” என்றேன்.

செல்வம் காது கேட்காதது மாதிரி இருந்தார்.

“உங்களத்தான் ஸ்கிரீன சுருக்குங்க” சொன்னேன் சிரித்தபடி

இப்போ டென்சனான செல்வம் ஸ்கிரீனை சுருக்கி விட்டு டக்கென்று போய்விட்டார்.

அன்று முழுவதும் பேசவில்லை , லன்சும் இல்லை.
மறுநாள் மறுபடியும் ஸ்கிரீன் போடாமல் இறங்க , அவரிடம் வாதாடாமல் நானே சுருக்கி விட்டு வந்தேன்.
மூன்று நாள் கழித்து செல்வம் அவரே ஸ்கிரீனை சுருக்க ஆரம்பித்தார்.

அடுத்த மூன்றாம் நாள் நானும் செல்வமும் இதை விட நெருக்கமானோம். ஆனால் ஸ்கிரீன் மேட்டர் பத்தி மட்டும் பேச மாட்டோம்.

யூசுப்பாய்க்கும் மகிழ்ச்சிதான்.

செல்வம் மாதிரியான ஒரு ஜெண்டில்மேன் ஏன் அப்படி செய்தார். அதற்கு காரணம் ஏதாவது இருக்குமா என்ற குழப்பம் இருக்கவே செய்கிறது.

ஏர்போர்ட் வரும் போது செல்வத்திடம் கேட்டுவிட்டேன்.

ரொம்ப நேரம் மழுப்பியவர்.

“இல்ல விஜய்! ஒரு தடவை என் வைபை ஹாஸ்பிட்டல் கூட்டி போக வேண்டி இருந்தது. சாயங்காலம் வீட்ல இறங்கி , கம்பெனி வேன்லயே , போற வழிதான், ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போலாம்ன்னு மேனஜர்கிட்ட கூட பெர்மிசன் வாங்கிட்டேன். ஆனா என் வைப் வண்டியில ஏறும்போது , கம்பெனி வண்டியில வேற யாரையும் ஏத்த மாட்டேன்னு என்ன இன்சல்ட் பண்ணிட்டாரு ,யூசுப்பாய்.” என்றார்.

No comments:

Post a Comment