Tuesday, 26 June 2012

சுக சப்தாதி

 “ சுக சப்தாதி” என்று சமஸ்கிருத ‘கதா இலக்கியத்தில் ‘ வரும் 70 கதைகளின் தொகுப்பு. சமீபத்தில்தான் படித்து முடித்தேன்.
அருமையான புத்தகம். ஆங்கிலத்தில் கிடைக்கிறது. 

'Shuka Saptati' Seventy tales of the Parrot - Translated from Sanskrit by A.N.D Haksar

மதனுக்கும் பிரபாவதிக்கும் கல்யாணம்.
திருமணம் முடிந்த கையோடு, சூதாட்டம், பெண்கள் என்று வெட்டியாய் இருக்கிறான் மதன்.

பிரபாவதி வளர்க்கும் கிளி ஒன்று, கடமை செய்வதை பற்றிய கதையை மதனுக்கு சொல்ல
மதன், திருந்தி வேலை தேடி வேறு ஊருக்கு செல்கிறான்.

முதலில் கட்டுபாடாய் இருந்த பிரபாவதியை
தோழிகள் மனசை மாத்துகின்றனர். கணவன் இல்லாத சமயம் இன்னொரு காதலனை காதல் செய் என்று சொல்லி அதில் வெற்றியும் பெற்று விடுகின்றனர்.

பிரபாவதி ஊர் அடங்கும் நேரம், தோழிகளோடு காதலன் வீட்டுக்கு போக எத்தனிக்கும் போது, கிளி தடுக்கிறது.

தான் ஒரு கதை சொல்லுவதாகவும் அதை கேட்டு விட்டு காதலன் வீட்டுக்கு போக சொல்லி கேட்கிறது.

பிரபாவதியும் சரியென்று கதையை கேட்கிறாள்.

இப்போ கதை.

<<தலைவி கணவன் இல்லாத சமயத்தில்,வேலைக்காரியை விட்டு காதலனை கூட்டி வரச்சொல்கிறாள்.

காதலன் அன்று ஊரில் இல்லை என்று வேலைக்காரி சொல்லி , வேறு எதாவது ஆணை கூட்டி வருகிறேன் என்று வேலைக்காரி வற்புறுத்த, அரைகுறையாக தலையசைத்து வைக்கிறாள் இவள்.

அந்த முட்டாள் வேலைக்காரி ஊருக்கு போகாத தலைவியின் கணவனையே அழைத்து வர , கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அதிர்ச்சியாகின்றனர்.

இப்போது கிளி பிரபாவதியை பார்த்து சொல்கிறது, “நீ இன்று உன் காதலனை சந்திக்க வில்லை என்றால், அந்த மனைவி எப்படி சமாளித்தாள் என்று சொல்வேன்” என்றது.

பிரபாவதி காதலனை மறந்தாள். விடை கேட்டாள்.

கிளி தொடர்ந்தது. “ கணவனை பார்த்த மனைவி, சுதாரித்து கொண்டு, அவனை சோதனை செய்ய தானும் வேலைக்காரியும் போட்ட நாடகம் என்று ‘ஓ’ வென்று அழுகிறாள். விநாடியில் கணவனை முழு குற்றவாளியாக்கி தப்பித்தாள் .

மறுநாள் இரவு பிரபாவதி , மறுபடியும் காதலனை பார்க்க கிளம்ப கிளி இன்னொரு கதை சொல்கிறது.

இது மாதிரி எழுபது நாட்கள் சொல்கிறது.

பிராபாவதியை தடுக்கிறது.

எழுபதாவது நாள் பிரபாவதியின் கணவன் மதன் வேலையை முடித்து வர, பிரபாவதி தனக்கு புத்திமதி சொன்ன கிளியை பாராட்டி கணவனைடம் மன்னிப்பு கேட்க, மதனும் பிரபாவதியும் மகிழ்கிறார்கள் இல்லறத்தில்.

No comments:

Post a Comment