Tuesday 26 June 2012

Optimal Foraging Theory

நீங்கள் ரோட்டில் போகும் போது பத்து ரூபாய் நோட்டுக்கள் இருபது சிதறி கிடக்கின்றன.

ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்றே ஒன்றுதான் கிடக்கின்றது.

காற்றினால் எல்லா நோட்டுக்களும் பறக்கின்றன. எதன் பின்னால் ஓடுவீர்கள். பத்து ரூபாய் நோட்டுக்கள் பின்னாலா ? அல்லது ஒற்றை ஆயிரம் ரூபாய் பின்னாலா?

இதைத்தான் உணவு விசயத்திலும் உயிரினிங்கள் செய்கின்றன.

புலி முதலில் மானை வேட்டையாடுகின்றது.எலியை வேட்டையாடுவதில்லை. ஏனெனில் மான் கறி எலி கறியை விட அளவில் அதிகம். குறைந்த சக்தியை செலவளித்து நிறைந்த லாபம்.

அப்போ யானையில் நிறைய கறி இருக்கிறதே அதை ஏன் புலி அடிப்பதில்லை என்ற கேள்வி வருகிறது. யானையை தாக்கும் போது நிறைய சக்தி விரமாகிறது.உயிருக்கும் ஆபத்து.

எல்லா விதத்திலும் பார்க்கும் போது மான் தான் பெஸ்ட்

இப்போது மான் அழிந்துவிட்டது என்று வைத்து கொண்டால், முயல். முயலும் இல்லையென்றால் எலி.எலியும் இல்லையென்றால் வெட்டுகிளி.

மனிதர்களுக்கும் இந்த தியரி பொருந்தும்.

உணவே கிடைக்காத மனிதர்கள் எலிக்கறி சாப்பிடுவதை பார்க்கிறோம்.

ஒரிசா பஞ்சம் வரும் போது, பசி தாங்காமல் மரத்தை அறுத்து அதன் பொடியை கஞ்சாக்கி குடித்து உயிர் விட்டவர்கள் உண்டு.

மத்திய சீனாவில் கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளாக பஞ்சம் விட்டுவிட்டு வந்ததாம்.

அதனால்தான் அந்த மக்களுக்கு பூச்சிகளை தின்னும் பழக்கம் வந்ததாம்.(ஏனெனில் மிருகங்களுக்கு,பயிர்களுக்கு, கிழங்குகளுக்கு தட்டுப்பாடு. வேறு வழியில்லை பத்து ருபாய் நோட்டுகளை பொறுக்க வேண்டும்தான்.)

பிறகு பூச்சியிலும் ருசியை கண்டு இப்போது வரை அதை தொடர்கிறார்கள்.

இந்த தியரி பேர் Optimal Foraging Theory.இதை எனக்கு சொல்லி கொடுத்தவர் Marvin Harris. :))

No comments:

Post a Comment