Saturday 31 August 2013

தமிழ் எழுத்தாளனும் வறுமையும் - சாருத்துவம்...

பணம் சம்பாதிக்க பலவழிகள் இருக்கிறது.அதில் ஒன்று நெருங்கிய நண்பர்களின் மனசாட்சியை தேர்ந்த வார்த்தைகளால் உலுப்பி எடுப்பது.

சாதுர்யத்தால் கண்ணீர் விட வைப்பது.

அதற்காக பல கதைகளை இட்டுக்கட்டுவது.மயங்கிய சின்ன குழந்தைகளைக் காட்டி குற்ற உணர்வை தூண்டி பணம் கேட்கும் பெண்ணைப் போன்று, வறுமையை பூதக்கண்ணாடியால் பெரிதாக்கி பிறருக்கு காண்பிப்பது.

அப்படிக் காட்டிகொண்டிருக்கும் ஒருவர் எழுதுவது மாதிரி எழுதிப் பார்த்தேன்... இனி அது...

நேற்று எனக்கு நான்கு இட்லிகள் கிடைத்தன.

பக்கத்து தெரு பாம்பாட்டி ஒருவர் அவருக்கு பிச்சையாக கிடைத்த நான்கு இட்லிகளை எனக்கே கொடுத்து விட்டார்.

நான் அன்போடு கேட்டேன் ‘நான்கு இட்லிகளையும் எனக்கே கொடுத்துவிட்டீர்களே.அப்படியானால் நீங்கள் எதைச் சாப்பிடுவீர்கள்” என்று.அதற்கு அவர் உங்கள் புத்தகத்தைப் படித்து பசியாறுவேன் என்றார்.

எனக்கு அன்போடு கிடைத்த நான்கு இட்லிகள் மகிழ்ச்சியைக் கொடுத்தன.ஆனால் நான் பிச்சைக்காரனாய் என்றுமே வாழ்ந்ததில்லை.இட்லி என்று வந்துவிட்டால் ஆறுவகை சட்னி இல்லாமல் சாப்பிட்டதே இல்லை.

மேதைமைக்கு வறுமைக்குமிடையே எப்போதும் கனிந்து கிடக்கும் ரகசிய உறவால் எனக்கு இட்லி மட்டுமே கிடைத்தது.சட்னி கிடைக்கவில்லை.

வெறும் இட்லியை விண்டு சாப்பிட்டேன்.நெஞ்செல்லாம் அடைத்து தலை சுற்றி கிழே விழுந்து விட்டேன்.

நம்புங்கள் ஐயா! கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் அப்படியே விழுந்துகிடந்தேன் சுயநினைவின்றி. என்னை தூக்கி ஒருவாய் தண்ணீர் தர ஆளில்லை.உலகத்திற்கே ஞானத்தை போதிக்கும் எழுத்தாளனுக்கு வந்த நிலைமையைப் பாருங்கள்.

சும்மாவா சொன்னான் பாரதி “தனி மனிதனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்” என்று. நானே பாரதி.பாரதியே நான்.எனக்குள் பாரதியை ஒவ்வொரு அணுவாக உணர்க்கிறேன்.

கடவுளின் அருளால் இரண்டு நாட்களாகியும் அந்த இட்லி கெட்டுப்போகவில்லை.

சட்னி இல்லாவிட்டால் என்ன? கடையில் இட்லி பொடி வாங்கி வரலாம் என்று காசு தேடினேன்.காசு கிடைக்கவில்லை. வறுமை வறுமை.உள்ளங்கை ரேகையிலே வறுமையை ஒட்டி வைத்த இறைவனை பழிக்க முடியுமா? முடியாது.அவன் பெருங்கருணையுள்ளவன்.

சோபாவின் இடுக்கில் ஈர்க்குச்சியை விட்டு ஆட்டுகிறேன் ஒரு ஐந்து ரூபாய் நாணயம் கிடைத்தது.

மிச்ச ரூபாய்க்கு என்ன செய்ய? அழுகை முட்டியது எனக்கு.என் செல்ல நாய் கைகளை பிடித்து இழுத்தது. அது கொண்டு விட்ட இடத்தில் பார்த்தேன் .ஆம் கேஸ் சிலிண்டரின் மறுபக்கம் ஒரு ஐந்து ரூபாய் காயின் கிடைத்தது.

அந்தப் பசியிலும் நாய்க்கு முத்தமிட்டேன். நான் கேட்கிறேன் செய்நன்றி இல்லாதவன் என்ன பிறப்பு அய்யா? அவன் என்ன இருந்தால் என்ன ? செத்தால் என்ன?

கடைக்கு ஒடிப்போய் பத்து ரூபாய் கொடுத்து இட்லிப் பொடிக் கேட்டேன்.பத்து ரூபாய்க்கு கிடைக்காது என்கிறார்.துடித்துப் போய் நிற்கிறேன்.

நினைத்துப் பாருங்கள் தமிழ் எழுத்தாளன் ஒருவன் இட்லிப் பொடிக்காக அண்ணாச்சி கடையில் நிற்கும் கோரக் காட்சியை. நீங்கள் நினைக்க மாட்டீர்கள்.நீங்கள் உங்கள் காதலியின் மார்பில் சாய்ந்து எஸ்கேப் அவுன்யூவில் சினிமா பார்த்துக் கொண்டு இருப்பீர்கள்.தமிழன் என்றாலே பிளாஸ்டிக்கன் தானே.எந்த ஆழமான சிந்த்திப்பும் இல்லாதவன்தானே.

மூன்று மணி நேரம் கடையில் தவமாய் நின்றபிறகு கடைக்காரர் “ஏ ரொம்ப நேரம் நிக்கயில்லா.உங்களப் பார்த்தா பாவமா இருக்கு.ஆனா எங்க ஜாதிக்காரவன்வளுக்கு ஒசில உபகாரம் செய்ஞ்சே பழக்கம் இல்ல கேட்டியலா.ஒரு அரைமணி நேரம் வந்து பொட்டலம் கட்டுனியள்னா.நல்ல இட்லிபொடி பெரிய பாக்கெட்டே தாரேன்.வாரதுன்னா வாங்க” என்றார்.

எனக்கோ பசி.வேறு வழியில்லை.கடையில் பொட்டலம் கட்டும் வேலையை செய்ய ஆரம்பித்தேன்.

வான்காவுக்கு கூட இந்த நிலமை வந்ததில்லை.அவன் தம்பி பணம் அனுப்பிக்கொண்டிருந்தான்.அவன் செக்ஸ் வொர்க்கர் காதலி கிறிஸ்டின் சாப்பாடு வாங்கிக் கொடுத்தாள்.

ஆனால் எனக்கு .யாருமே இல்லை.

பொட்டலம் கட்டுவதில் முதல் வேலையாக பத்து முட்டைகளை ஒருவர் கேட்க, மடித்துக் கொடுக்கும் வேலையை செய்ய வேண்டியது இருந்தது.

எனக்கு எழுதத்தெரியும். முட்டை கட்டத்தெரியுமா? நான் எழுத்தாளன் அய்யா?

ஆர்.கே நாராயணனை உங்கள் வேலை என்னவென்று யார் கேட்டாலும் “என் வேலை எழுதுவது “என்று சொன்னாராம்.

ஆனால் நான் பிறக்கும் போதே ,சாமி பக்தியுள்ள நர்ஸ் என்னை ’புக்கர் புண்ணிவான்’ பிறந்துவிட்டான் என்று சொன்னாராம்.

பிற்காலத்தில் அதே நர்சும் நானும் தோழமையானோம்.

நான் கேட்டேன் எதைவைத்து என்னை பிறக்கும் போதே ‘புக்கர் புண்ணியவான்’ என்று சொன்னீர்கள் என்று .அதற்கு அவர் சொன்ன பதிலை இங்கே தரப்போவதில்லை.அந்தப் பதிலை என் நெஞ்சாங்கூட்டுக்குள்ளே அடைகாத்துக் கொண்டிருக்கிறேன்.

வருகிறேன் விசயத்திற்கு

முட்டை கட்ட முடியவில்லை.சரியாக பேப்பர் மடிக்கவில்லையாதலால் பத்து முட்டைகளும் தரையில் விழுந்து ஒடு உடைந்து ஒழுகியது.

அண்ணாச்சி முறைத்தார்.”யல செத்த மூதி பத்து முட்ட வெல தெரிமால.உனக்கு ஒண்ணுமே தெரியாதால.உனக்கு இட்லிப் பொடியும் கிடையாது ஒண்ணும் கிடையாது.ஒடுல’ என்று விரட்டிவிட்டார்.

வீட்டிற்கு வந்து நான்கு இட்லிகளையும் தண்ணீரைத் தொட்டு தொட்டு தின்றேன்.

வறுமையின் கொடுமையை அனுபவித்தாலே தெரியும்.

எனக்கு அண்ணாச்சி மேல் சுத்தமாக கோபமே கிடையாது.அவருக்கு என்னைத் தெரியாது.அதனால் அப்படிப் பேசிவிட்டார்.

ஆனால் உங்களுக்கு என்னைத் தெரியும். என் எழுத்து தெரியும்.

உங்களால் முடிந்தவற்றை கொடுத்து உதவலாம்.

இட்லிக்கு இட்லிபொடியைக் கூட பார்சல் செய்து அனுப்பலாம்.

விருப்பம் உடையவர்கள் மட்டும்.

விருப்பமில்லாதவர்கள் என் மெயிலுக்கு மெயில் செய்து திட்டலாம்.

வசையே எனக்கு டானிக்.அதை மற்றவர்களை திட்ட உபயோகித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு எழுத்தாளன்... 

Thursday 22 August 2013

நண்டும் மனிதனும் யானையும் பாம்பும் முதலையும் வரும் கதை...

கதைக்குள் கதை வரும்.நடுநடுவே தலைப்பை வசதிக்காக கொடுத்திருக்கிறேன்.இது ஒரே கதைதான்.

 கொஞ்சம் பொறுமையாக படித்தால் பிடிக்கலாம்....

<நண்டும் திலீபனும்>

திலீபன்,

 ’பாவம் களைய; புண்ணியம் தேட’ கங்கைக்கு நீராடச்   சென்றான்.

அவனைப் பார்த்த நண்டு, “நீ போகும் கங்கைக்கு ,என்னையும்
 கூட்டிப்போ.உன் பையில் தூக்கி வைத்துக்கொள்.கங்கையில் இறக்கிவிடு.நானும் அங்கேதான் போகிறேன்.நீ எனக்கு உதவி செய்தால்.நான் உனக்கு தக்க தருணத்தில் உதவி செய்வேன் என்றது.”.

இதைக் கேட்ட திலீபனுக்கு ஆச்சர்யம் “சின்னச்சிறிய நண்டே.நீ எனக்கு எப்படி உதவி செய்வாய்” என்றது.அதற்கு நண்டு ஒரு கதை சொன்னது.

<யானையும் எலியும்>

ஒரு ஊரில் யானை ஒன்று ஊரின் அரசன் இட்ட குழியில் மாட்டிக்கொண்டது.

எட்டு நாட்கள் அந்தக் குழியில் பட்டினியாய் கிடந்தால் மட்டுமே யானை வழிக்கு வரும் என்று அரசன் யானையை குழியில் விட்டு விட்டு வருகிறான்.

யானை அழுது கொண்டே இருக்கிறது.

அப்போது அந்தப் பக்கம்  வந்த குதிரையிடம் உதவி கேட்டது.குதிரை “யானையே நீ இதுவரை யாருக்காவது உதவி செய்திருக்கிறாயா.அப்படி செய்திருந்தால் அவர்களைக் கூப்பிடு “ என்று சொல்லி ஒடிவிட்டது.

யானை சிந்தித்து சிந்தித்துப் பார்ததது.இறுதியில் ஞாபகம் வந்தது.

ஒருமுறை அரசன். ஊரில் உள்ள எலிகளின் அட்டகாசத்தைத் தாங்க முடியாமல்,அவைகளை மொத்தமாக வளைத்து பெரிய பானையில் போட்டு விடுவான்.

மறுநாள் பானை உடைத்து எலிகளை கொல்லலாம் என்பது அவன் எண்ணம்.

எலிக் கூட்டத்தலைவன் மட்டும் தப்பி தன் கூட்டத்தாரை காப்பாற்ற என்ன வழி என்று யோசிக்கும் போத் அந்தப் பக்கமாக வந்த யானையிடம் “யானையே உன் காலால் இந்தப் பானையை உடைத்து என் சொந்தங்களை காப்பாற்றுங்கள் எனறது.யானையும் பானையை உடைத்து எலிகளைக் காப்பாற்றியது.

இந்த சம்பவம் குழியில் விழுந்த யானைக்கு நினைவு வர, எலிக்கூட்டத் தலைவனை  ஒலி எழுப்பிக் உதவிக்கு அழைத்தது.

அங்கே வந்த எலிக்கூட்டத்தலைவனின் உத்தரவு படி எல்லா எலிகளும் தங்கள் வாயால் மண்ணைக் கிள்ளி யானை மாட்டிக்க்கொண்ட குழியினுள் போட்டன.எலிக் கூட்டம் மண்ணை நிரப்பிதால் யானை வெளியே வந்தது. அரசனிடம் இருந்து தப்பித்தது.

இந்தக் கதையை சொன்ன நண்டு “ஆகையால் திலீபனே.உருவத்தை கொண்டு எடை போடாதே.சிறிய எலிகளால் கூட யானைக்கும் உதவி செய்ய முடியும் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்.என்றது

<நண்டு காக்கை பாம்பு திலீபன்>

திலீபனும் நண்டை எடுத்து பையினுள் போட்டு யாத்திரையை தொடர்ந்தான்.

ஒரு ஆலமரத்தின் அடியில் அசதியில் தூங்குகிறான்.

அந்த ஆலமரத்தில் ஒரு காக்கா உண்டு.அது மரத்தின் கிழே யாராவது வழிப்போக்கர்கள் வந்தால் ஒரு குரல் கொடுக்கும். அந்தக் குரலைக் கேட்டவுடன் பொந்திலிருக்கும் பாம்பு வந்து உறங்கிக் கொண்டிருப்பவனை கடித்து விடும்.

அவன் இறந்த பிறகு காக்கை தன் இனத்தையெல்லாம் கூப்பிட்டு மனிதனை உண்ணும்.இதற்கு பரிசாக காக்கை பாம்பிற்கு எலிகளை பிடித்துக் குடுக்கும்.

இது தெரியாமல் திலீபன் தூங்கிக் கொண்டிருக்க, பாம்பு அவனைக் கடித்து கொல்கிறது.இதை திலீபன் பையில் இருந்த நண்டு இதனைப் பார்த்து விடுகிறது.

திலீபனின் உடலைக் கொத்தவரும் காக்கைத் தலைவனின் கழுத்தை பிடித்துக் கொள்கிறது நண்டு.

நண்டியின் பிடியில் இருந்து  காக்கையால் தப்ப முடியவில்லை.

நண்டு பாம்பை நோக்கி “பாம்பே நீ திலீபனின் உடலில் இருக்கும் விஷத்தை உறிந்து காப்பாற்று இல்லாவிட்டால் இந்தக் காக்கையின் கழுத்தை நெரித்துக் கொள்வேன்.” காக்கையின் உயிரைக் காப்பாற்ற பாம்பும் திலீபனின் உடல் விஷத்தை உறிஞ்சி காப்பாற்றி விடுகிறது. திலீபன் எழுந்து தன்னை உயிர் பிழைக்க வைத்த நண்டுக்கு நன்றியை சொல்கிறான்.

சிறிய உயிரினமாய் இருப்பினும் உதவி செய்ததே என்று ஆச்சர்யப்படுகிறான்.

நண்டு திலீபனை நோக்கி ‘ நீ பொறுமையாய் ஆச்சர்யப்படு மனிதனே. இப்போது இந்தக் காக்கையை என்ன செய்வது? விட்டுவிடவா அல்லது கொடுக்கால் நெரித்துக் கொல்லவா”என்று கேட்க

அதற்கு திலீபன் ‘நண்டே நண்டே.நாம்தான் பிழைத்து விட்டோமே.பிறகு ஏன் காக்கையை கொல்ல வேண்டும்.விட்டுவிடு” என்று சொல்கிறான்.

நண்டு திலீபனிடம் “நான் விடுவதற்கு முன் ஒரு கதை சொல்கிறேன் கேள்” என்று சொல்ல ஆரம்பித்தது.

<மனிதனும் முதலையும்>

“ஏழை ஒருவன் ஆற்றங்கரையை நோக்கிப் போக,அங்கே வந்த முதலையொன்று, ’மனிதனே நிலத்தில் நான் பலம் குறைந்தவன்.உன்னை உன்னிடம் உள்ள நீண்ட தோல்பையினுள் வைத்து தூக்கிப்போ.தூக்கிப்போய் ஆற்றிவிட்டால் நன்றியுடையவனாய் இருப்பேன்” என்றது.

முதலையிடம் இரக்கப்பட்ட மனிதன்,அதை தூக்கி சுமந்து ஆற்றில் விட்டான்.

ஆற்றில் விட்டதும் முதலை மனிதனின் காலை பிடித்துக் கொண்டது.தனக்கு ஞாயம் அநியாயம் அறம் என்று எதுவும் கிடையாதென்றும், தனக்கு உதவி செய்தால் கூட மனிதனை சாப்பிடப்போவதாகவும் சொல்கிறது.

மனிதன் கூக்குரலிடுகிறான்.அவன் குரலைக் கேட்டு அங்கே நரியொன்று வந்தது.

நரியிடம் முதலையும் மனிதனும் நீதி கேட்டுப்போனார்கள்.

மனிதன் சொன்னான் நான் உதவி செய்தேன் என்று.

முதலை சொன்னது ’என்னுடைய இனத்தில் துரோகம் என்பதே கிடையாது. உதவி செய்தால் கூட அவனை கொன்று தின்றால் அது எங்கள் இனத்தின் குணமே அன்றி வெறுக்கப்படும் விசயமல்ல. என்று வாதாடியது.

நரி யோசித்து.முதலையிடம் ‘நீ எப்படி பையினுள் முதலில் இருந்தாய் செய்து காட்டு “ என்றது. முதலையும் போய் தன்னை அடைத்து வைத்திருந்த பையினுள் போய் உட்கார்ந்து கொண்டது.

உடனே பையை இறுக்க கயிறால் கட்டிய நரி, பெரிய கல்லால் முதலையை அடித்து கொன்றது.

பின் ஏழையிடம் “இப்படி ஏமாளியாய் இருக்காதே.தேவைப்படும் இடத்தில் இரக்கம் காட்டாதே என்றது.

இதைக் கேட்ட திலீபன் “ஆம் இந்தக் காக்கை விட்டுவைத்தால் இன்னும் பலரை கொன்றுவிடக் கூடும்.நமக்கே கூட ஆபத்தாய் முடியும் “ என்றான்.

தன் கொடுக்கால்  காக்கையை, நண்டு நிதானமாக கொன்று போட்டது.

Wednesday 21 August 2013

பத்து பொது விசயங்கள்...

-மாட்டை கடந்து போகும் போது அதன் வாலால் சுள்ளென்று அடி வாங்கியிருக்கிறீர்களா ?

-நல்ல ஆப்பிளை உருட்டி உருட்டி வாங்கலாம் என்கிற முடிவெடுக்கும் போது, அதில் மனித நகத்தழும்பை பார்த்திருக்கிறீர்களா?

-சாலையில் போகையில் பாதி குடித்துப்போட்ட வாட்டர் பாக்கெட்டை மிதித்து அதன் தண்ணீர் கால்களில் பட்டிருக்கிறதா?

-பொது இடத்தில் சத்தமாக வாயுவை பிரிக்க கூச்சப்பட்டு நாசூக்காக பிருக்ஷ்டத்தை உயர்த்திருக்கிறீர்களா?

-நண்பனிடம் நாம் கற்றுக்கொண்ட பெரிய விசயத்தை ஆர்வத்துடன் விளக்கி கொண்டிருக்கும் போதே பாதியில் அவன் “மச்சி இந்த வாரம் சனிக்கிழமை புரோகிராம் என்னடா? என்று கேட்டிருக்கானா?

-சேவாக்கோ, பீட்டர்சனோ பவுலிங்கை எதிர்கொண்டு கரெக்டாக க்ஷாட் அடிக்கும் போது உங்கள் அம்மாவோ அப்பாவோ தற்செயலாக மறைத்திருக்கிறார்களா?

-முழுக்கை சட்டையின் ஒரத்தில் ஈரம் பட்டு ஒருநாள் முழுவது உங்களை அது சின்னதாக நனைத்து கொண்டே இருந்திருக்கிறதா?

-வெளி இட ரெஸ்ட் ரூமில் டாய்லட் போகும் போது, கதவில் “வால் கிளிப்” இல்லாமல் உடையை எதில் போட என்று தெரியாமல் கழுத்திலே பாம்பு மாதிரி உடையை போட்டு இருந்தீருக்கிறீர்களா?

-நிற்கும் பஸ்ஸில் ஏறி அரைமணி நேரம் கழித்து, இருபது மீட்டர் தொலைவில் இன்னொரு பஸ்ஸை டிரைவர் ஸ்டார்ட் செய்து, “இதுதான் முதலில் போகும்” என்ற சொல்ல, லொங்கு லொங்கென்று ஒடியிருக்கிறீர்களா?

- முகநூலில் பெரிய கமெண்டை கஸ்டப்பட்டு டைப் செய்து கொண்டிருக்கும் போது, எதாவது பட்டனை தட்டி வேறு பக்கத்துக்கு போய் கமெண்ட் எல்லாம் அழிந்து போயிருக்கிறதா?

சொல்லுங்க... உங்களத்தான்... 





-

மூன்று ஜோக்குகளில் இரண்டு ஏ ஜோக்குகள்...


பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவகல்லூரி சில்வர் ஜூப்ளி விழா மலரில் ( 1982 இல வந்தது) படித்தது இந்த ஜோக்குகள்... :)

1.வயசான தாத்தா முதல் முறையா ஃப்ளைட்ல ஏறினாராம்.
முதல் பிராயாணம் விமானத்துல. அதனால பயம் பதட்டம்.

ஏறின உடன சீட் பெல்ட்ட போட்டுகிட்டார்.
ஜன்னலுக்கு வெளியே பார்த்து பிரமிச்சுட்டார்.
க்ஷாக்காகி கத்தினாராம்.

ஹேய் அங்கப்பாரு!எல்லா மனுசங்களும் குட்டி குட்டியா எறும்பு மாதிரி தெரியிறாங்க.

உடனே ஏர்ஹோஸ்டஸ் வந்து சொன்னாங்களாம்.
“சார். அது உண்மையிலே எறும்புகள்தான். ஃப்ளைட் இன்னும் புறப்படவே இல்லை”


2.நூத்தி இருபது வயசான சீன நாட்டுக்காரர்கிட்ட வெளிநாட்டு பத்திரிக்கைகாரங்க பேட்டிக்கு போனாங்களாம்.

”நீங்க எப்படி நூத்தி இருபது வயசு வரைக்கும் இப்படி இளமையா இருக்கீங்க”

“நான் வாழ்க்கையை கொண்டாட்டமாக வாழ்கிறேன்.தியானம் செய்கிறேன்.அதனால்தான்”

அப்போ பக்கத்து ரூம்ல இருந்து சர சரா சர சரான்னு சத்தம் கேட்டிருக்கு. நிருபர்கள் கேட்டிருக்காங்க
“அது என்ன சத்தம்”

“அதுவா.அது என்னோட அப்பாதான். உங்களுக்கு தெரியுமா? என் டாடிக்கு இன்னைக்குத்தான் நாலவது கல்யாணம் முடிஞ்சது,கொஞ்சம் பிஸியா இருக்கார் போல” என்றாராம்.


3.பிரஞ்சு மொழி சுத்தமா தெரியாத நம்ம ஊர் ஆளு பிரான்ஸுக்கு போனாராம்.

அங்க பொண்ணோட பழக்கம் கிடைச்சதாம். சைகையிலே பேசி பேசி அப்படியே இரவு விருந்துக்கு போனாங்களாம்.

அந்த பெண்ணுக்கு நம்ம ஆள ரொம்ப பிடிச்சு போயிட்டதாம். கண்ணாலே ஜாடை காட்ட காட்ட இவருக்கு ஒண்ணுமே புரியலையாம்.

“என்ன சொல்றீங்க? என்ன சொல்றீங்கன்னு கேட்டுகிட்டே இருந்தாராம்.”

உடனே அந்தப் பொண்ணு ,பேப்பர எடுத்து”ஒரு கட்டில் “ படத்த வரைஞ்சு காட்டி வெட்கப்பட்டு சிரிச்சதாம்.

உடனே நம்ம ஆளுக்கு சந்தோசமாம்.

சந்தோசப்பட்டு  அந்த பொண்ணுகிட்ட
“நான் கட்டில் வியாபாரம்தான் செய்றேன்னு உங்களுக்கு எப்படி தெரியும் மேடம்” அப்படின்னாராம்.


சாணக்கிய தந்திரத்திற்கு ஒரு சாம்பிள்...

சாணக்கியர் எழுதிய அர்த்தசாஸ்திரம் எல்லா பாடல்களோடும் முழு விளக்கோத்தோடு “ஸ்ரீ ஆனந்த நாச்சியரம்மா” வால் தொகுக்கபட்டுள்ளது என்னிடம் இருக்கிறது.
இதில் பாகம் ஐந்தில் வரும் முதல் அத்தியாத்தை கொடுத்திருக்கிறேன் படியுங்கள்.

நாடாளும் அரசனின் மந்திரி அல்லது பெரிய பதவியில் உள்ள அரசாங்க அதிகாரி மக்களின் நன்மதிப்பை பெற்று, அரசருக்கு துரோகத்தையோ அல்லது களங்களத்தையோ பெற்று விட்டால் அதை அனுமதிக்கக்கூடாது.

அவரை நேரடியாக கொன்றால் மக்களிடத்தில் மன்னனுக்கு அவப்பெயர் வரும்.

ஆகையால் அந்த அதிகாரியின் சகோதரனை கூப்பிட்டு அவனுக்கு மன்னன அன்பும் மரியாதையும் செலுத்த வேண்டும்.

இப்போது அதிகாரிக்கு அவர் சகோதரர் மேல் பொறாமையால் பகை வளரும். அரசன் தொடர்ச்சியாக அதிகாரியின் சகோதரனை பின்னால் இருந்து ஆதரித்து, அவனை விட்டே அதிகாரியை கொல்ல வேண்டும்.

அல்லது அந்த மந்திரிக்கோ அதிகாரிக்கோ வேலைக்காரி மூலம் பிறந்த மகனை தூண்டிவிட்டு, அவனுள் விசத்தை ஏற்றிவிட்டு அவனை வைத்தே அரசன் கொல்ல வேண்டும்.

இதன் மூலம் மன்னனுக்கும் கெட்ட பெயர் வராது.துரோக அதிகாரியும் கொல்லப்படுவார்.

இதில் இன்னமும் என்ன செய்ய வேண்டும் என்றால் அதிகாரியை கொன்ற அவர் சகோதரனையோ அல்லது மகனையோ, அரசாங்க அதிகாரியை கொன்ற குற்றம் சாட்டி உடனடியாக மன்னன் தீர்ப்பு சொல்லி கொன்றுவிட வேண்டும்.

ஏனென்றால் அவர்களே பிற்காலத்தில் மன்னனின் எதிரி ஆகலாம்.இதில் பொதுவாக நோக்கினால் “ஒரு அப்பாவியை” தூண்டிவிட்டு கொல்லச்செய்து விட்டு, அவனையே கொல்லும் பாவத்தை மன்னன் செய்வது மாதிரி தோண்றும்.ஆனால் அரசு விசயத்தில் இது “ராஜதர்மம்”

எப்படியெல்லாம் பிளான் பண்ணிருக்காங்க அந்த காலத்துல..

தன் வினை தன்னைச் சுடுமா ?

The boy in the stripped pyjamas என்ற திரைப்படத்தில் என்ன நடக்கும் என்றால் ஹிட்லரின் யூத அழிப்பில் பங்கேற்கும் அதிகாரி தன்னுடைய சின்னஞ்சிறு மகனோடு,அழகிய மனைவியோடு,யூதர்களை எரிக்கும் உலைகள் அருகே தங்கியிருப்பார்.

அவர் வேலை யூதர்களை தினமும் எரிப்பதை கண்கானிப்பது.அவர்தான் அந்த மொத்த யூனிட்டுக்கும் பொறுப்பு.

அவர் மகன் வீட்டில் விளையாடப்பிடிக்காமல் வெளியே திரிந்து கொண்டே இருப்பான்.

அப்படியே யூதர்கள் அடைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு பின்பக்க வேலியோரம் வந்து விடுகிறான்.அங்கு அவன் வயதிலேயே ஒரு யூதச்சிறுவன் வரிபோட்ட யூனிஃபார்மோடு இவனுக்கு நண்பனாகிறான்.

இருவரும் வேலிக்கு இருபுறமும் நின்று பேசிப்பேசி பழகுகிறார்கள்.

ஜெர்மானிய அதிகாரியின் சிறுவனுக்கு அந்த யூதச்சிறுவன் இருக்கும் வேலிக்குள் என்ன இருக்கிறது என்று பார்க்க ஆசை.மெல்ல யூதச்சிறுவனிடம் பேசி பேசி, அவனுக்கு சாப்பிட பழங்கள் கேக் எல்லாம் கொடுத்து(?) அவன் அந்த வேலியின் அந்தப்பக்கம் வரவிரும்பவதை சொல்கிறான்.

யூதச்சிறுவனும் ஒத்து கொண்டு.வேலியின் அடியில் சின்ன குழிதோண்டி இருவரும் இடம் மாறுகிறார்கள்.யூதச்சிறுவனின் கோடுபோட்ட பைஜாமாவை ஜெர்மானிச்சிறுவன் அணிந்து கொள்கிறான்.

அன்று யூதர்களை உலையில் போட்டு எரிக்கும் நாள்.வீட்டில் தன்னுடைய மகனை தேடிய அம்மா,எங்கும் காணாததால் கணவனிடம் சொல்ல,அந்த ஜெர்மானிய அதிகாரி தேடி தேடி பையன் இடம் மாறியிருப்பதை கண்டிபிடித்து விடுகிறார்.

தன்னுடைய மகனும் உலையில் தள்ளப்பட்டு விக்ஷ வாயு பீச்சப்பட்டு கொல்லப்படுவான் என்பதை அவரால் தாங்க முடியாமல் தடுக்க பார்க்கிறார்.அவர் படுகொலை நடக்கும் இடத்திற்கு போவதற்குள் எல்லாம் நடந்து முடிந்து விடுகிறது.

நம் எல்லோருக்கும் நன்றாக தெரிந்தகதைதான் அடுத்து சொல்லப்போவது.

அரசனின் அழகிய மகள் வயதிற்கு வர, விசேசம் நடத்த அழைக்கப்படும் புரோகிதர் அந்தப்பெண்ணின் மேல் தீராத காமம் கொள்கிறார்.அரசனிடம் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி, அரசனின் மகளலால் அரசனுக்கு பிரச்சனை என்று பயங்காட்டி அரசன் மனதில் நஞ்சை விதைக்கிறார்.

அரசனும் புரோகிதர் பேச்சை கேட்டு தன் மகளை கைகாலை கட்டி பெரிய கூடையில் வைத்து நதியில் விட்டு விடுகிறான்.

காட்டுக்கு வேட்டையாட வந்த பக்கத்து நாட்டு இளவரசன் பேரழகையுடைவன், “அது என்ன இத்த பெத்த கூடை” என்று இழுத்து கூடையை தூக்கிப்பார்க்கிறான் பேரழகியான இளவரசி.இளவரசி புரோகிதரின் சதியை சொல்ல, இளவரசன் இளவரசியை விவாகம் செய்து நல்ல பசித்த புலியை அந்த கூடையினுள் வைத்து நதியில் விட்டு விடுகிறான்.இளவரசியை அடைய படகில் ஒடோடி வந்து காமத்தோடு கூடையை தூக்கிப்பார்க்கும் புரோகிதனை கூடையினுள் அடைபட்டிருக்கும் பசித்த புலி அடித்து கொன்று தின்று விடுகிறது.

இந்த இரண்டு கதைகளும் தன் வினை தன்னை சுடும் என்பதை சுட்டுகிறது.

இரண்டாவது கதையில் வரும் கெட்ட புத்தியுள்ள புரோகிதனை புலி கொன்றதை படிக்க அறமாய் இருக்கிறது.

ஆனால் முதல் கதை ஜெர்மானிய அதிகாரியின் வினை அந்த அப்பாவி ஜெர்மானியச்சிறுவனை சுடுவதைதான் தாங்க முடியவில்லை

Tuesday 20 August 2013

அம்மை நோய்...

1873 யில் வள்ளியூரை சேர்ந்த முத்து கருப்பப்புலவர்
மகன் அருணாசல புலவர் எழுதிய ”முத்தாரம்மன் கதை” கதைபாடலை பற்றி படித்தேன்.

இந்த ஆய்வு புத்தகத்தை எழுதியவர் முனைவர் சூ.நிர்மலா தேவி.

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பா செய்திருக்கிறார்.

முத்தாரம்மனின் கதையை இந்த சுவடி இலக்கியம் தெரிவிக்கிறது.

முதலில் கதையை பார்த்துவிடலாம்.

கசிப ரிக்ஷி நாகராஜாவுக்கு செய்து கொடுத்த வேள்வியால், நாகராஜாவின் தங்கை நாகக்கன்னி கர்ப்பமாகிறார்.

பெரிய முத்து, சின்ன முத்து என்று இரண்டு பெண் குழந்தைகளை பெற்றெடுக்கிறார்.

பெரிய முத்துவும் சின்ன முத்துவும் வளர்ந்து சிவபெருமானை நோக்கி தவம் செய்கின்றார்கள்.

தவமென்றால் தவம் வீரியமான தவம். சிவன் மனமிரங்கி என்ன வேண்டும் என்று கேட்கிறார்.

பெரிய முத்துவும் சின்னமுத்துவும் அம்மைமுத்துக்களை கேட்கிறார்கள்.”எம்பெருமான் எங்களுக்கு அம்மைமுத்துக்கள் வேண்டும்.அம்மனை வழிபடாதவர்களை இந்த அம்மைமுத்துக்களை தெளித்து தண்டிப்போம்” என்று சொல்ல சிவன் வரமளிக்கிறார்.

பெரியமுத்து பெரியமுத்தம்மனாகவும், சின்ன முத்து சின்னமுத்தம்னாகவும் அவதரிக்கின்றனர்.

குஜாராத்துக்கு மேலே இருந்தே ஊர் ஊராக வருகிறார்கள்.

தங்களை வழிபடாவதவர்களுக்கு,கெட்டவர்களுக்கு,இறுமாப்பு கொண்டவர்களுக்கு நோயை கொடுத்து அம்மைமுத்துக்களை கொடுக்கிறார்கள்.

கோவம் தணிந்ததும் அடுத்த ஊருக்கு வந்து ஆக்ரோஷிக்கிறார்கள்.

இப்படியே போய் நெல்லை மாவட்டம் பட்டபுரம் என்ற ஊரில் வந்து தங்கள் பயணத்தை முடிக்கிறார்கள்.

சரி.

ஆய்வாளர் சூ.நிர்மலா தேவி இந்த கதைப்பாடல் பற்றி என்ன சொல்கிறார் என்றால் பெரியமுத்தம்மன் என்பது பெரியம்மையை( Small pox) குறிக்கிறது.

சின்னமுத்தம்மன் என்பது சின்னம்மையை (Chicken pox) குறிக்கிறது.

1600 இல் இருந்து 1900 வரை உலகம முழுவதும் இந்த இரண்டு நோய்களின் தாண்டவம் அதிகமாய் இருந்தது.

அதே தன்மை இந்தியாவிலும் இருந்ததைத்தான் இந்த கதைப்பாடல் குறிக்கிறது என்று.

ஏனெனில் இதில் பெரியமுத்தம்மன்தான் கோபக்காரியாக காட்டபடுகிறார்.

சின்னமுத்தம்மன் பெரியமுத்தம்மனுக்கு அடங்கினவர்.

நோயிலும் அப்படித்தானே பெரியம்மைதான் சின்னமையை விட பலமடங்கு ஆபத்தானது.

என்னுடைய அத்தை சின்ன வயதில் பெரியம்மை தாக்கி உயிரிழந்து உயிர் பெற்றார் என்பதை வீட்டில் போரடிக்கும்போது பாட்டி உருக்கமாய் சொல்லி அழுவார்.

“நிலைக்கும் பெரியமுத்து.நிலையாது சின்னமுத்து”

பெரியம்மை தழும்புகள் முகத்தில் இருக்கும்.

சின்னம்மை தழும்புகள் முகத்தில் நிலைக்காது.

எந்த விசயத்திற்கு காரணம் தேடுவது மனித அடிப்படை.

ஒரு காலத்தில் அம்மை நோய் வந்து எல்லோரையும் கூட்டம் கூட்டமாக கொன்று போட காரணம் தெரியாமல் திகைத்தனர்.

பிறகு இதற்கு காரணம் அம்மனின் கோபம்தான் என்று உருவாக்கம் செய்து அம்மனை குளிர்விக்க பூஜை புனஸ்காரம் செய்தனர்.

பிரச்ச்னையை தீர்க்க முடியாவிட்டால், ஏதோ காரணம் கற்பித்து மனநிம்மதி அடைவதுதான் பொதுவான மனித யுத்தி.

அதுவே நடந்திருக்கிறது.

ஒவ்வொரு ஊரிலும் இந்த பெரியமுத்தம்மனின் சின்னமுத்தம்மனின் விஜயம் இந்த கதைபாடலில் கூறப்பட்டிருக்கிறது.

இன்னொரு விசயம் என்னவென்றால் வைதீக கோயிலாளர்கள் இந்த புள்ளியில் தான் சிறுதெய்வ வழிபாட்டையே திரும்பி பார்க்கிறார்கள்.

அவர்களுக்கும் வேறு வழியில்லாமல் இந்த அம்மன் கான்செப்டை அங்கீகரித்து விடுகிறார்கள்.

சைவர்களும் வைணவர்களும் மிகக்கேவலமான சண்டையை தங்களுக்குள் போட்டுக்கொள்ளும் போது கூட, இந்த அம்மன் வழிப்பாட்டை அதிகம், தத்தம் கோவிலுள் அனுமதிப்பது இந்த பெரியம்மை சின்னம்மை நோய் பற்றிய பயத்தினால்தான்.

இன்னும் என்ன மாயம் செய்திருக்கிறது இந்த நோய் என்று பாருங்கள்.

அகமதாபாத்தை சுற்றியுள்ள நாட்டை ஆண்ட முகலாயர் வழி வந்த இஸ்லாமிய மன்னன் “உறக்கு பாதுக்ஷா” (1530-1553)என்பவர் தன்னுடைய படை பரிவாரம் (மிருகத்திற்கு வரும் அம்மை நோயும் அப்போது வீரியமாக இருந்ததாம்) எல்லாம் நோயால் தாக்கப்படுவதை கண்டு இந்த பெரியமுத்தம்மனையும் சின்னமுத்தம்மனையும் வணங்கி வழிபட்டாராம்.

இது ஒரு ஆவணமா அல்லது இலக்கியமா என்ற குழப்பம் இருந்தாலும், சுவடியில் இருக்கும் கோர்வை அதன் நம்பகத்தன்மையை அதிகரிக்கவே செய்கிறது என்று ஆய்வு சொல்கிறது.

இந்த கதைபாடல்களை கன்னியாகுமரி நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் வில்லுப்பாட்டாக பாடுகிறார்கள் இப்போதும்.

அந்த அம்மை முத்துக்கள் என்ற பெயரில் இருந்து முத்தாரம்மன் என்ற வார்த்தை வந்திருக்கலாம் என்பது ஆய்வாளரின் ஒரு யூகம்.

இன்னும் இது மாதிரி இரண்டு வேறு கருத்துக்கள் இருக்கிறது.

ஆனால் இந்த நோய் பத்தின விசயம் எனக்கு சென்சிபிளாகவும் சரியாகவும் இருக்கிறது...

சுயஇன்பம்

ஏன் ஆண்களும் பெண்களும் சுயஇன்பம்  செய்கிறார்கள் என்ற கேள்வியை ஹண்ட் என்பவர் கேட்டு அதன் விடைகளை எழுதுகிறார் இப்படி...

ஏன் சுயஇன்பம் அனுபவிக்கிறீர்கள் என்று  ஆண்களிடம் கேட்டேன்.அவர்கள் சொன்னதில் இருந்து ?

-அது செக்ஸ் இறுக்கத்தை குறைக்கிறது.தகுந்த பெண் கிடைக்காத போது,தனியே இருக்கும் போது அது கொடுக்கும் கிளர்ச்சிக்காக, மகிழ்ச்சிக்காக.

-பொதுவான இறுக்கத்தை குறைப்பதற்காக,வெறு டென்சனை மறப்பதற்காக,நன்றாக தூங்குவதற்காக.

-ஒரு கற்பனை உலகில் நுழைவதற்காக.சுய இன்பம் செய்யும் போது தனக்குத்தானே கறப்னை செய்யும் மனக்காட்சிகளை  அனுபவிப்பதற்காக.ஃபேண்டசிக்காக.

-மிக மிகச் சிலர் சுயஇன்பத்தை மனவிழிப்பின் அடைவதற்காக தன்னை உணர்ந்து தெய்வ அனுபவத்தை பெறுவதற்காக ஸ்பிரிச்சுவலாக உபயோகிப்பதற்காக என்று சொல்லியுள்ளனர்.


ஏன் சுயஇன்பம் அனுபவிக்கிறீர்கள் என்று பெண்களிடம் கேட்டேன்.அவர்கள் சொன்னதில் இருந்து ?

-செக்ஸ் இறுக்கத்தைக் குறைக்க.மகிழ்ச்சிக்காக.அது ஒரு இன்ப அனுபவமாக.தகுந்த பாதுகாப்பான துணை கிடைக்காத போது.

-உறவின் போது தனக்கு சரியான மகிழ்ச்சி கிடைக்காமல் அரைகுறையாக முடியும் போது,தூண்டப்பட்டு சரியாக முடிக்கப்படாமல் இருக்கும் போது, தூங்குவதற்காக,ரெஸ்ட்லெஸ்னஸைத் தடுக்க.

-தங்கள் சுதந்திரத்தின் அடையாளமாக, சதா சமுதாயக் கட்டுப்பாட்டில் இருக்கும் தங்களை விடுதலையாக உணர்வதற்காக.

-ஆண் பெண் உறவில் இருப்பதை விட சுய இன்பத்திலேயே உண்மையான சுகம் இருப்பதாக நினைப்பதினால். உறவை விட அதுவே தங்களுக்கு பிடித்திருப்பதால்

Saturday 17 August 2013

பர்மாவிலிருந்து இந்தியாவுக்கு நடந்தவர்கள்...

’இரண்டாம் உலகப்போர் நடக்கும் போது பர்மாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு கால்நடையாகவே நடந்து வந்தேன்’  என்று வயதானவர்கள் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள்.

என் ஆச்சியின் தாய்மாமா இது மாதிரி வந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்.அது அப்போது எனக்கு ஒரு செய்தி மட்டுமே.

டி.எஸ் பசுபதி என்பவர் தன்னுடயை நடை அனுபவத்தை ‘பர்மாவிலிருந்து நடையாய் நடந்து’ என்று புத்தகமாக எழுதியிருக்கிறார்.அதை முன் வைத்து இதை எழுதுகிறேன்.

டி.எஸ் பசுபதி 1941 யில் தன்னுடைய மூத்த மகனை தந்தையிடம் விட்டு,மனைவியையும்,மிச்ச நான்கு பிள்ளைகளையும்  அழைத்துக்கொண்டு பர்மா போகும் போது,அவர் தந்தை ”ஜாதகப்படி நீ உன் குடும்பத்தை அழைத்துப் போகத்தேவையில்லை அதனால் சிரமம் ஏற்படும் ”என்று எச்சரிக்கிறார்.

பசுபதி அதை அலட்சியப்படுத்தி குடும்பத்தையும் குழந்தைகளையும்,பர்மாவின் டவுஞ்சி(Taunggi)என்ற நகரத்திற்கு அழைத்துப் போகிறார்.

அஙகே போய் ஒருவருடத்தில்,இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் பர்மா மீது கடுமையான தாக்குதல்களை தொடுக்கிறது. ஜப்பான் டவுஞ்சி நகரை நெருங்கும் முன்னரே நிறைய மக்கள் கப்பல் வழியே நகரை விட்டு வெளியேறுகின்றனர்.நகரில் அடிக்கடி ஜப்பானின் விமானப்படைகள் குண்டுகளை வீச தொடங்கிவிட்டன.

பசுபதி உயர் அதிகாரப் பொறுப்பில் இருப்பவர்.அவருடைய மேலதிகாரி பசுபதியை ‘நீ மலேசியாவுக்கு கேப்டனாக போய்விடு’ உனக்கு நிறைய சம்பளம் தருகிறேன்.உன் குடும்பத்தை இந்தியாவுக்கு விமானம் மூலம் நானே அனுப்பி வைக்கிறேன்’ என்று கேட்கிறார்.அந்த வாய்ப்பை பசுபதி மறுக்கிறார்.மேலதிகாரி பலமுறை கெஞ்சுகிறார்.பின் விட்டுவிடுகிறார்.

பசுபதி தனக்கும் குடும்பத்திற்கும் இந்தியா போக விமான ஏற்பாடு வேண்டும் என்று கேட்கிறார்.இங்கே மேலதிகாரிக்கும் பசுபதிக்கும் நடுவே உள்ள இடைஅதிகாரி ஈகோ காரணமாக அந்த வாய்ப்பை பசுபதிக்கு தர மறுக்கிறார்.

டவுஞ்சி நகரை ஜப்பான் நேரடியாகவே தாக்க ஆரம்பித்துவிட்டது.

பசுபதி அலுவகம் மீதே குண்டுகளை போட அதிலிருந்து பசுபதி தப்பித்து வீட்டை நோக்கி ஒட ஒட அவர் பக்கம் வரை குண்டுகள் விழுந்து கொண்டே இருக்கின்றன.ஒடிப்போய் வீட்டைப் பார்த்தால் வீடு தரைமட்டமாக இருக்கின்றது.

பயத்தில் தேட,நல்லவேளையாக மனைவியும் நான்கு குழந்தைகளும் சாகவில்லை.கப்பலில் போகலாம் என்று பார்த்தால் கப்பல் போக்குவரத்தையே போரின் காரணமாக நிறுத்திவிட்டார்கள். நிச்சயமாக டவுஞ்சி நகரைவிட்டு வெளியேறியே ஆகவேண்டும்.ஜப்பான் ராணுவத்தினர் மிக நெருங்கி வந்துவிட்டார்கள் என்று தகவல்கள் கிடைத்தன.

மனைவியையும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் சேகரித்துக் கொண்டு லாரிகளில் பின்பக்கம் அமைக்கப்பட்டிருக்கும் கூடாரம் அமைப்பில் ஏறிக்கொண்டு பிராயணம் செய்கிறார்.அதுவரை அவருக்கு பல இடங்களில் துணையாக நின்ற அவருடைய செல்ல நாய் கூட வருகிறது.வண்டியில் இடமில்லாததால் நாயை குண்டுகட்டாக தூக்கி கிழேப் போடுகிறார்.நாயை பின்னாலே ஒடிவந்து களைத்து நிற்க வண்டி போய் கொண்டே இருக்கிறது.

பசுபதியையும் அவர் குடும்பத்தினரையும் சுமந்து கொண்டு 12 மணி நேரம் பிராயாணம் செய்து மேகாங்கை அடைகிறது.பின் அங்கிருந்து ஒவ்வொரு நகரமாக ரங்கூன் செல்கின்றனர்.

வழியில் பசுபதியை சந்திக்கும் தயானந்த் என்ற நண்பன் ”இங்கிருந்து இனிமேல் இரண்டு வழியாக நடந்து போகலாம்.ரோட்டின் வழி போனால் நிச்சயம் ஜப்பான் ராணுவத்திடம் சிதையுண்டு அழிந்து போவீர்கள்.ஆகையால் காட்டின் வழியே தான் போகவேண்டும்.அதுவும் சீக்கிரம் போகவேண்டும்.இல்லாவிட்டால் பருவமழை தொடங்கிவிடும்.காட்டைக் கடந்து மலைகளையெல்லாம் ஏறி இறங்குவது,அதுவும் நான்கு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு ஏறி இறங்குவது என்பது மிக ஆபத்தானது ”என்று எச்சரிக்கிறார்.

பசுபதிக்கும் அவர் மனைவி பிச்சம்மாவும் அந்த பயணத்தை எதிர்கொள்ள தயாராகி காட்டிற்குள் செல்கின்றனர்.

-காட்டில் போகும் போது புலியொன்று தாக்க,பசுபதி கூட்டத்தினருடன் வந்த ராவ் என்பவன் துப்பாக்கியை எடுத்து புலியை சுட்டு விரட்டுகிறான்.

-காட்டில் நடக்க நடக்க நிறைமாத  கட்டத்தில் உள்ள பெண்களுக்கு குழந்தை பிறக்கின்றது.சரியான மருத்துவ வசதி இல்லாததால் சில குழந்தைகள இறந்தும்.சில தாய்கள் இறக்கவும் செய்கின்றனர்.பசுபதியுடன் வந்த ஒரியப் பெண் பிரசவத்த இரண்டாம் நாள் இறக்கிறாள்.அவள் கணவன் ‘இந்தக்குழந்தைக்கு எப்படி பால் செய்துகொடுப்பேன்’ என்று அழுது கொண்டே இருக்கும் போதே அந்தக்குழந்தையும் இறக்கிறது.

-பிரம்புகூடைகளை ஆதிவாசிகளிடம் இருந்து வாங்கி அதில் குழந்தைகளைப் போட்டுக்கொண்டு நடக்கின்றனர்.

-உயரமான மலைச்சரிவுகளில் உயிரை பணயம் வைத்து தங்குகின்றனர்.ஏறி இறங்குகின்றனர்.

-சில இடங்களில் ஒரு டின் தண்ணீரை ரூபாய் ஐம்பது கொடுத்து ( அந்த காலகட்டத்தில் சவரன் தங்கம்  45 ரூபாய்) வாங்கும் நிலமை வருகிறது.

-பசுபதியிடம் பகதூர்,சந்தோஷ் என்ற இரு நேபாளி வாலிபர்கள் கூட்டத்தில் சேர்க்கச் சொல்லி கெஞ்சுகின்றனர்.பரிதாபப்பட்டு பசுபதி சேர்க்கிறார்.பின்னால் சந்தோஷ் பசுபதியின் நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துச் செல்கிறான்.பகதூர் பிற்பாடு பணத்தை கொள்ளையடிக்க முயற்சிசெய்து பின் பிடிபட்டு அடிவாங்கிப் போகிறான்.

-பசுபதிக்கு விமானச்சலுகையை மறுத்த இடையதிகாரியும் அகதியாக கால்நடையாக வருவதைப் பார்க்கிறார் பசுபதி.

-பசுபதி அவசரத்திற்கு நெருப்பு கேட்டபோது கொடுக்க மாட்டேன் என்று எரிந்து விழுந்த நேபாளி, நடைப் பயணத்தில் தன் குடும்பத்தை இழந்து, அதை பசுபதியிடம் சொல்லி அழுகிறார்.

-கொக்கைன் மாத்திரைகளும், பொட்டாசியம் பர்மாங்குனேட்களும் பசுபதி குடும்பத்தை பல இடக்களில் காப்பாற்றுகின்றன.

-பல இடங்களைலில் பிணங்கள் மிதக்கும் குட்டைகளில் இருந்து நீர் எடுக்கின்றனர்.

-ஒரு இடத்தில் ஆதிவாசியினர் உணவுக்கு பதிலாக பணத்தை மறுக்கிறார்கள்.ஆனால் நாணயங்களை விரும்புகிறார்கள்.காரணம் நாணயங்களை கோர்த்து கழுத்தில் போட்டு ரசிக்கிறார்கள்.பணம் என்பதற்கு மதிப்பே இல்லாமல்போய்விட்டது.அவர்களுடன் நடந்த நகைவியாபாரி ஒரு கைப்பிடி ரங்கூன் வைரத்தை கொடுத்து மாவு வாங்க முயற்சிக்கிறார்.

-பசுபதி கூட்டத்தில் வரும் ராஜா என்ற நண்பர் குழந்தையுடன் மலையில் ஏறும் போது சறுக்கி குழந்தைக்கும் அவருக்கும் அடிபட்டு விடுகிறது.ராஜா பசுபதியைப் பார்த்து, ’என் மனைவியை அழைத்து முன்னால் செல்.நான் வந்து சேர்ந்து கொள்கிறேன்’ என்கிறார்.பின் பல மணி நேரம் கழித்து ராஜா மட்டும் தனியே வந்தார் .’குழந்தை எங்கே?” என்ற கேள்விக்கு குழந்தை இறந்துவிட்டது.விட்டு விட்டு வந்துவிட்டேன்’ என்கிறார்.

-இரண்டு நாட்களில் பசுபதின் நான்கு வயது குழந்தை காய்ச்சல் கொண்டு இறந்துவிடுகிறது.

-இன்னும் போகப் போக மிகச்சோர்வாகின்றனர்.பசுபதியிடம் ஒருபடி புழுத்த அரிசி மட்டுமே இருக்கின்றது.அதை குழந்தைகளுக்கு கொடுத்து சமாளித்து போகின்றனர்.வழியில் பல இடங்களில் அட்டைகள் வேறு ரத்தம் உறிஞ்சி துன்பம் கொடுத்தன.பசுபதியே சில சமயம் தன் பொறுமை குணத்தை விட்டு கோபத்தில் மனைவி குழந்தைகளை அடிப்பதும்.பின் தன் செயலுக்கு வெட்கமடைவதுமாய் மனசமநிலையை இழக்கிறார்.

-ஒரு மலைச்சரிவில் ஏறும் போது அங்கே வெள்ளைக்காரர்கள் கூடாரத்தைப் பார்க்கிறார்கள்.உதவி கேட்கிறார் பசுபதி.அதில் ஒரு வெள்ளைககாரர் அன்று பசுபதி நடக்கும் இடத்திற்கு வந்து பால் டின்கள், அரிசி எல்லாம் குடுத்துவிட்டு, பசுபதியிடம் ஒரு அட்டையையும் கொடுக்கிறார்.” இதில் என் இங்கிலாந்து விலாசம் இருக்கிறது. ஒருவேளை நான் இறந்த செய்தி உனக்கு கிடைத்தால் தயவு செய்து இந்த விலாசத்திற்கு செய்தி சொல்லி விடு. அது கொஞ்சமாவது என் குடும்பத்தினருக்கு ஆறுதலாய் இருக்கும்” என்கிறார்.

-பசுபதியின் முதல் பெண்ணும் நோயினால் இறக்கிறாள்.பசுபதியும் பிச்சமாவும் கதறுகிறார்கள்.

-இதற்கிடையில் இறந்த நண்பர் ராஜாவின் மனைவி தன் குழந்தையுடன்,வேறு ஒரு குழுவோடு செல்கிறார்.பசுபதிக்கு அந்தக் குழுவின் இரக்கம் பற்றி சந்தேகம் வருகிறது. நண்பனின் மனைவியிடம் அங்கே போகாதே என்று சொல்லச் சொல்லக்கேட்காமல் போய்,அவர்கள் உணவு கொடுக்காமல் போக,குழந்தையுடன் செத்துப் போகிறாள்.

-போகும் வழியில் நதியொன்று குறுக்கிடுகிறது.மழை பொழிவதால் நதியில் வெள்ளம் உயரம் அதிகரிக்க,பதினைந்து நாள் நதிக்கரையில் தங்குகின்றனர்.

-இப்படி தங்கியிருக்கும் போது பசுபதியின் எஞ்சியிருக்கும் இரண்டு பெண்களில் ஒரு பெண் இருந்து விடுகிறாள்.

-நதி நீர் குறைந்த  பிறகு பசுபதி மற்றும் பலகுழுவினர் மூங்கில் கம்புகளை ஊன்றி போகிறார்கள்.அப்போது திடீரென்று வந்த காட்டாற்று வெள்ளம் பத்து பேரை பசுபதி கண்முன்னாலே அடித்துச் செல்கிறது.

-பசுபதியின் மனைவி பிச்சம்மா ஆற்றைக் கடக்கும் போது அவள் நெஞ்சளவிற்கு நீர் இருக்கிறது.ஆற்றின் அற்றம் வந்தும் கூட பிச்சம்மா வெளியே வராமல் இருக்கிறார்.”என்னால் வரமுடியாது.நான் இடுப்பில் கட்டியிருந்த துணி ஆற்றின் வெள்ளத்தில் போய் விட்டது.துணி கொடுங்கள்” என்று கேட்க பசுபதி வேறுவழியில்லாமல் செத்த பிணத்தின் சட்டை ஒன்றை எடுத்து மனைவிக்கு வீச, அதை எடுத்து  பிச்சம்மா தன் மானத்தை மறைத்து வெளியே வருகிறார்.

-இன்னும் போகப் போக பசிபொறுக்காமல் பிச்சமாவின் கல்யாணப்புடவையை ஆதிவாசிகளிடம் கொடுத்து பத்து சோளக்கதிர்களும்,பத்து காராமணி பொட்டலங்களும் வாங்குகிறார் பசுபதி.

-நதியை கடந்து ஒரிரு நாட்களில் அவர்களி எஞ்சியிருக்கும் குழந்தையும் இறந்து விடுகிறாள்.முதலில் பசுபதி ’தனியே குழந்தைகளை அழைத்து இந்தியா செல் என்று சொன்னதை தான் மறுத்ததால்தானே எல்லாக் குழந்தைகளும் இறந்துவிட்டன என்று ஏங்கி ஏங்கியே உடல் பலம் குறைகிறாள். “நம் முதல் மகன் இந்தியாவில் அப்பாவுடன் இருக்கிறான்.அவனைப் பார்க்கவாது நீ உயிரோடு இருப்பாய் “என்று பசுபதி பிச்சம்மாவை தேற்றுகிறார்.

-இன்னும் பிராயணத்தில் மூன்று யானைப்பாகன்கள் வந்து இந்தியா இன்னும் 100 மைல் தொலைவுதான்.காசு கொடுத்தால் நாங்களே கொண்டுப் போய் விடுகிறோம் என்று சொல்லி பசுபதியிடம் இருக்கும் 3000 ரூபாயை கொள்ளையடிக்கப் பார்க்கிறார்கள்.
பசுபதி குழுவில் இருக்கும் ராவ்  துப்பாக்கியால் இரண்ட்டு யானைப் பாகன்களை கொல்கிறான்.மூன்றாமவன் கும்பிட்டு ஒடிபோகிறான்.

-பிரயாணம் செய்யச் செய்ய பசி தாங்க முடியவில்லை.ராவ் பசி பொறுக்க மாட்டாமல் கண்ணில் கண்ட காட்டுஇலைகளையும் சில சமயம் கற்களையும் உண்கிறான்.”கற்களை ஏன் உண்கிறாய்? “ என்று கேட்டால் “ஒருவேளை அது உணவாக இருக்காதா என்ற நப்பாசைதான்” என்கிறான்.பின் ராவ் பசி பொறுக்காமல் துப்பாக்கியை எடுத்து சுட்டுக்கொள்ளப் போகிறான்.பிச்சம்மா துப்பாக்கியை ராவுக்கு தெரியாமல் ஆற்றில் எறிகிறாள்.

-விஷ காய்களை உணவு என்று நினைத்து சாப்பிட்டு வயிறு குடல் எல்லாம் கடுப்பாகி காந்தலாகி பரிதாபமாய் இறந்து போகிறான் பசுபதி குடும்பத்தை புலியிடமும்,யானைபாகர்களிடம் இருந்தும் காப்பாற்றிய ராவ்.

-இப்போது பசுபதி குழுவில் பசுபதியும் அவர் மனைவி பிச்சம்மா மட்டுமே இருக்கிறார்கள்.பசுபதிக்கு பிச்சம்மா தனக்கு முன் இறந்தால்,அவர் இல்லாமல் எப்படி வாழ்வது என்று கவலை.ஒருவேளை தான் இறந்தால் தான் இல்லாமல் பிச்சம்மா எப்படி இருப்பார் என்ற கவலை வருகிறது.பைத்தியம் பிடித்தாற் போல் ஆகிறார்.

-இதற்கிடையில் பிச்சாமவுக்கு ஜூரம் வருகிறது.சரியாகிறது.பசுபதிக்கும் வருகிறது சரியாகிறது.

-இது மாதிரி அவர்கள் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு தாய் தன் இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு அழுதுக் கொண்டிருக்கிறாள் அனாதையாக.பசுபதியும் பிச்சம்மாவும் விசாரிக்க, அவள் கூட நடந்து வந்த கணவன் இறந்துவிட்டார் என்று அழுகிறார்.ஆனால் பசுபதியின் மனதிற்கு பிறருக்கு உதவி செய்து செய்து மரத்து விட்டது. உதவ முடியாது என்று மறுக்கிறார்.அந்தத் தாய் அன்று இரவு மட்டுமாவது தங்கி தைரியம் சொல்லி போகும் படி கேட்க பசுபதியும் பிச்சம்மாவும் தங்குகின்றனர்.மறுநாள் விடிகாலையில் அந்தத் தாய் இறந்து கிடக்க பக்கத்தில் இரண்டு வயது குழந்தை அழுதுகொண்டிருக்க,நான்கு வயது குழந்தை ‘அம்மா எழும்பு’ என்று எழுப்பிக்கொண்டிருக்கிறது” இதைப் பார்த்த அதிர்ச்சியில் பசுபதி உடனே பிச்சமாவை இழுத்துக் கொண்டு ஒடுகிறார்.அந்தக் குழந்தைகளை இழுத்து நடந்தால் நிச்சயமாக ஊர் போய் சேர முடியாது என்று பசுபதி நம்பினார்.அவ்வளவு பசி.அவ்வளவு இயலாமை அவரிடம் இருந்தது.இருப்பினும் இரண்டும்,நான்கும் வயதுடையை குழந்தைகளை தனியாக காட்டில் விட்டுச்செல்லும் கொடூரமான மனம் எப்படி வந்தது என்று அதை நினைத்து நினைத்து பசுபதி வாழ்கை இறுதி வரை மனம் குமைகிறார்.

-பிச்சம்மாவுக்கு வாழ்க்கையின் மீதுள்ள பற்றே போய்விட்டது.கொஞ்சம் கொஞ்சமாக நோய் அவரைத்தாக்குகிறது. கண்மூடுகிறார்.பசுபதி பிச்சம்மாவை எழுப்பிப் பார்க்கிறார்.மூச்சில்லை.திரும்ப திரும்ப எதாவது சொல்லி பேசுகிறார்.பிச்சமாவிடம் சத்தமில்லை.பின் பிச்சம்மா ஒருவேளை கண்முழித்தால் அவருக்கு டப்பாவில் தண்ணீரை தலைபக்கத்தில் வைக்கிறார்.துணியை எடுத்து பிச்சம்மா முகத்தை மூடுகிறார்.திரும்பிப் பார்க்காமல் நடக்கிறார்.பின் ஒருவேளை உயிர்பிழைத்து வரமாட்டாரா மனைவி என்று திரும்பவம் வந்துப் பார்க்கிறார்.அழுகிறார்.அவரை கடமையும் வாழ்க்கையும் அழைக்கிறது. திரும்பாமல் நடந்துப் போகிறார் பிச்சமாவை விட்டு... விலகி...

-அதன் பிறகு ஐந்துநாட்கள் விடாமல் நடக்கிறார்.இந்தியா இன்னும் ஐம்பது மைல் தூரத்தில் தான் இருக்கிறது என்று அறிகிறார்.

-நடக்கிறார் வெறி கொண்டவராய்

-வழியியில் அகதிகள் தற்காலிகமாக தங்கும் கேம்ப்பைப் பார்க்கிறார்.அங்கு சென்று அரிசி வாங்கி கஞ்சிக் காய்ச்சி வயிற்றுக்கு குடிக்கிறார்.அவருக்கு உடல் ஜுரம் கண்டிருக்கிறது.கேம்பில் உள்ள சிறுவயது டாக்டர் அவருக்கு நிமோனியா வந்திருக்கிறது என்று சொல்லி இன்னும் பத்து மைல் தூரம் போனால் இந்தியா வந்து விடும்.அங்கு நோய்க்கு சிகிச்சை கிடைக்கும் என்கிறார்.அதைக் கேட்டு பசுபதிக்கு சொல்ல முடியாத சோர்வு வருகிறது.இருப்பினும் மருத்துவரின் கண்டிப்பு மட்டுமே அவருக்கு ஊக்கத்தைக் கொடுக்கிறது.

-இன்னும் பத்து மைல் நடக்கிறார்.

-நடந்து 26-7- 1942 ஆம் ஆண்டு அஸாம் மாநிலத்தை சேர்ந்த டிப்பங் என்ற ஊரைச் சென்றடைகிறார்.கிட்டத்தட்ட நூறு நாட்கள் நடந்து இந்தியாவை அடைந்திருக்கிறார்.உணர்ச்சியில் இந்திய மண்ணை எடுத்து தன் உடம்பெல்லாம் பூசிக்கொள்கிறார்.

-அங்கே அவருக்கு நோய்க்கான சிகிச்சை கொடுத்தனர்

-சாப்பிடுவதற்கு சப்பாத்தியும் வேகவைத்த பருப்பும் கொடுத்தனர்.நல்ல உணவை பசுபதி, மூன்று மாததிற்கு பின் அன்றே உண்கிறார்.

இப்படியாக பசுபதி குடுமத்தோடு பர்மாவில் இருந்து கிளம்பியவர் தன் குழந்தைகள் எல்லாவற்றையும் இழந்து,மனைவியையும் இழந்து தனியாளாக இந்தியா வருகிறார்.

பசுபதி தன் பயணத்தை வெறுமே மேற்கொள்ளவில்லை.தன்னுடன் வந்தக் குழுக்களுக்கெல்லாம் எவ்வளவு உதவி செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்து கொண்டுதான் வந்திருக்கிறார்.

இன்னொன்றையும் இங்கே சொல்ல வேண்டும்.பசுபதி நோய்தீர்க்கும் கொக்கய்ன் மாத்திரைகளையும்.,தண்ணீரை சுத்தப் படுத்து பொட்டாசியம் பெர்மாக்குனைட்டையும் வைத்திருந்தார்.கையில் துப்பாக்கி வைத்திருந்தார்.அவருக்கே இந்த கதியென்றால்.ஒன்றுமே தெரியாமல் ஒன்றுமே கிடைக்காமல் ஒன்றுமே இல்லாமல் வந்திருக்கும் ஏழை மக்களின் நிலை என்னவாயிருந்திருக்கும்.

பதினான்கு கிலோ மீட்டர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வர நான் என்ன பாடுபட்டேன்.1000 படிகள் சோளிங்கர் மலையில் ஏற என்ன பாடுபட்டேன்.ஆனால் பசுபதியும் பிச்சம்மாவும் எப்படி இவ்வளவு தூரத்தையும்,உயரத்தையும் கடந்தார்கள்.

பசுபதியின் பர்மா இந்திய நடைபயண சம்பவத்தை படிக்கும் போது கடவுள் இல்லாமலுமிருக்கிறார்.இருக்கவும் செய்கிறார் என்பது போன்று, எனக்குள் எழும் உணர்வு நிஜமனது என்பதை நம்புகிறேன்.

Thursday 15 August 2013

பிற்கால சோழர்கள்...

சதாசிவ பண்டாரத்தார் எழுதிய ’பிற்கால சோழர்கள்’ என்ற நூலை ஒரளவுக்கு படித்து விட்டேன்.

சதாசிவ பண்டாரத்தார் எழுதிய இந்த நூல்தான் கல்கி பொன்னியின் செல்வன் எழுத தூண்டுதலாய் இருந்த ஒன்று.

இது பற்றி பெரிய பதிவாய் எழுத இன்னும் ஆழமாக படிக்க வேண்டும் என்பதால் துணுக்குகளாய் நான் படித்து புரிந்து கொண்டது பற்றி எழுதுகிறேன்.

-பிற்கால சோழர்களின் கதை விஜாலயச்சோழனிடமிருந்து தொடங்குகிறது. கிபி 846 ஆம் ஆண்டு முத்தரையர்களை நிருபதுங்க வர்மன் என்ற பல்லவ மன்னனின் துணையோடு முறியடித்து சோழ தேசத்தை மீட்கிறான். இவருடைய உடலில் 96 விழுப்புண்கள் இருந்ததாம்.

-விஜயாலயச்சோழனின் மகன் ’முதல் ஆதித்த சோழன்’ தன் தந்தைக்கு உதவிய பல்லவ மன்னனின் புதல்வன் ‘அபராஜித வர்மனை’ போரில் வென்று சோழதேசத்தை விஸ்திரிக்கிறார்.

-பொதுவாக சோழர்கள் சைவ மதத்தை ஆராதிப்பவர்களாக இருக்கிறார்கள்.அதற்காக மற்ற மதங்களை எதிர்ப்பதும் இல்லை.ஒன்றிரண்டு இடங்களில் மட்டுமே மதவெறியைக் காண்கிறோம்.

-’முதல் ஆதித்த சோழனின்’ மகன் பராந்தகச்சோழனே சிதம்பரம் கோவிலுக்கு பொற்கூரை வேய்ந்த மன்னன் (விஜாயலயச்சோழன் பேரன்)

-சோழ வம்சத்தில் இராசகேசரி,பரகேசரி என்ற பட்டம் கொண்டு ஆள்வது பழக்கமாய் இருந்து வந்தது. அதாவது ஒரு மன்னன் இராசகேசரி என்று பட்டம் கொண்டு ஆண்டால்,அதற்கு அடுத்து வரும் மன்னன் பரகேசரி என்ற பட்டத்தோடு ஆள்வான்.அதற்கடுத்து வருபவர் இராசகேசரி. இப்படி மாற்றி மாற்றி வைத்துக் கொள்வார்கள்.எந்த இடத்திலும் இந்தப் பாலிஸியை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

-பொன்னியின் செல்வன் நாவலில் மூலமாக புகழ்பெற்ற ஆதித்தச் சோழன் கொலையில், கொலையாளி ரவிதாசரும் அவரது கூட்டாளிகள்தான் என்று சதாசிவ பண்டாரத்தார் கூறுகிறார்.சுந்தரச்சோழன் இறந்து உத்தமச்சோழன் ஆட்சி செய்து போக பதினாறு ஆண்டுகள் ஆகி இராச இராச சோழன் வந்த பிறகுதான் கொலையாளிகள் உடந்தை என்று தண்டனை கொடுத்ததாக கல்வெட்டு கிடைத்திருக்கிறது.சதாசிவ பண்டாரத்தா உத்தமச்சோழன் தண்டனை கொடுத்ததாக கல்வெட்டு கிடைக்கவில்லை.கல்வெட்டு கிடைக்காதற்காக ஒருவனை சந்தேகப்பட முடியாது.அதனால் ரவிதாசனே கொலையாளி என்கிறார்.

-இராச இராச சோழனின் மகன் இராசேந்திரச் சோழன் கடல்கொண்டு சுமத்திரா தீவுகள் வரை பிடிக்கிறான்.பாண்டியனை வென்று அவன் மகனை பாண்டிய தேசத்திற்கு ராஜாவாக்குகிறான்.’ சோழ பாண்டியன்’
என்ற வம்சத்தை உருவாக்க முயல்கிறான்.தன் மகனுக்கு ‘சடையவர்மன் சுந்தர சோழ பாண்டியன்” என்று முடிசூட்டுகிறான் ( கவனிக்க சோழபாண்டியன்).

-இராச இராசன்/இராசாதிராச இந்த இரண்டும் வெவ்வேறு பெயர்கள்.இந்த இடத்தில் சோழ சரித்திரம் படிப்பவர்கள் கவனமாய் இருக்க வேண்டும்.

-இராசேந்திர சோழனுக்கு ஒரு சிறப்பு உண்டு.அவருடைய எல்லா புதல்வர்களும் அரியணையை ஆண்டிருக்கிறார்கள்.முதல் புதல்வன் ‘முதல் இராசாதிராச சோழன்’ ஆண்டு போரில் மறைய, அடுத்த புதல்வன் ‘இரண்டாம் இராசேந்திர சோழன் ஆண்டான், அவனும் இறந்து போக, அடுத்தவன் வீரராசேந்திர சோழனும் ஆள்கிறான்.( ஏற்கனவே ‘சோழபாண்டியன்’ அவரும் இராசேந்திர சோழன் புதல்வர்தான்)

-வீரராசேந்திர சோழனின் (விட்ராதீங்க இவர் இராசேந்திர சோழனில் கடைசி மகன் )மகன அதிராசேந்திர சோழன் சில மாதங்களே ஆட்சி செய்கிறான்.நோயுற்று இறந்து விடுகிறான்.

இந்த இடத்தில் பிந்தையைய சோழர்களின் முதல் செட் முடிகிறது.கவனிக்க இதில் எல்லா மன்னர்களையும் நான் சொல்லவில்லை.இது துணுக்கு பத்திதான்.அடுத்து பிற்கால சோழர்களின் இரண்டாம் செட்

-இப்படியாக வீரராசேந்திர சோழனின் இறப்புக்கு பின்னால், சோழ வம்சத்திற்கு வாரிசு இல்லை.என்ன செய்வதென்ர்று சோழ மந்திரிகள் திகைக்க அதற்கொரு தீர்வாக இராசேந்திரச் சோழனின் மகள் வயிற்றுப் பேரனான குலோத்துங்கச் சோழன் ஆட்சி பொறுப்பிற்கு வருகிறான்.

-குலோத்துங்க சோழன் உண்மையில் கீழைசாளுக்கிய மன்னன் இராசராச நரேந்திரனுக்கும் இராசேந்திரச் சோழரின் புதல்வி அமங்கை தேவியாருக்கும் பிறந்தவன்.வேங்கி நாட்டு இளவரசனாக ‘விஷ்ணுவர்த்தன்’ என்று பெயரில் பட்டம் சூட்டிக்கொண்டவன்.

-வேங்கிநாடு என்பது விஜயவாடாவை தலைநகராக கொண்ட நாடு.குலோத்துங்கச் சோழன் வேங்கி நாட்டை ஆள்வதை அவன் சித்தப்பா விசயாதித்தன் விரும்பவில்லை.இதனால் சித்தப்பாவிடம் பகை வளர்கிறது.பின் குலோத்துங்கச் சோழன் போட்டியில் விலகி விடுகிறார்.

-அந்த நேரத்தில் சோழ சிம்மாசனம் காலியாகி ஆளில்லாமல் இருக்கவே “சாளுக்கிய சோழனான” குலோத்துங்கன் உருவாகிறான்.( சோழ பாண்டியன் என்று பாண்டிய வம்சத்தை அவமதித்ததிற்கு பதிலான ஊழ்வினையோ என்னவோ )

மேலை சாளுக்கிய நாடுகள் மீது போர்தொடுத்து கைப்பற்ற முயற்சிப்பது வீண் வேலை.அதனால படைவீரர்களும் பொருளாதாரமும்தான் நாசமாய் போகிறது என்று அது மாதிரிப்போரை அறவே வெறுத்தார்.இது மிக முக்கியமான முடிவாகும்.

-குலோத்துங்கச் சோழன் மாபெரும் வீரன். ஏற்கனவே பல போர்களை இராசேந்திரச் சோழனோடு சேர்ந்து செய்தவன்.சோழநாட்டை மிகந்நேர்த்தியாக ஆட்சி செய்தவர்.

-குலோத்துங்க சோழன் காலத்தில் சுங்க வரி கிடையாது. இதனால் ‘சுங்கம் தவிர்த்த சோழன்’ என்று அறியப் பெற்றான்.சுங்கத்தில் கிடைககாத பணத்தை விளைநிலங்களையெல்லாம் அளந்து ஒழுங்கு படித்தி வரி வசூலிப்பதில் ஈடு செய்தான்.முதல் முதலில் நிலவரியை ஒழுங்கு படுத்தியது குலோத்துங்கன்.அதற்காக அவன் எடுத்துக் கொண்ட காலங்கள் இரண்டு வருடங்கள்.

-குலோத்துங்கன் ஐம்பது வருடம் ஆட்சி செய்கிறான். சோழ ஆட்சி காலத்தில் இது நீண்ட ஆண்டுகளாகும்.

-இதற்கிடையில் குலோத்துங்கனின் தம்பி (சித்தப்பா பையன் )இறந்து விட அவன் அப்பா குலோத்துங்கனை விரட்டிய விசாதித்தன் மகன் இழப்பு தாளாமல் அவரும் இறந்துவிட, குலோத்துங்கன் தன் ஒவ்வொரு மகனாக இரண்டிலிருந்து ஐந்து வருடங்கள் வரை வேங்கி நாட்டை ஆண்டு திரும்ப செய்கிறார். நான்கோ ஐந்தோ பேர் இப்படி வேங்கி நாட்டை ஆள்கிறார்கள்.

-இரண்டு கலிங்கப்போர்களை பார்த்தவன் குலோத்துங்கன்,.இதில் முதல் கலிங்கபோரை செய்தது குலோத்துங்க சோழனின் மூத்த மகன் விக்கிரம சோழன்தான்.இருப்பினும் அப்போது விக்கிரம சோழன் ஆட்சி செய்யவில்லை என்பதால் அந்த வெற்றியின் புகழ் குலோத்துங்கனுக்கே வந்துவிடுகிறது.

-குலோத்துங்க சோழனின் முதல் மகன் விக்கிரமச் சோழன் ஆட்சிக்குவருகிறான்.கவிஞர் ஒட்டக்கூத்தர் இவன் காலத்தில் இருந்துதான் தன் அரச புலவராக பதவியேற்று சிறப்பிக்கிறார்.மிகப்பெரிய பஞ்சம் வருகிறது இவர் ஆட்சிகாலத்தில்.

-விக்கிரமனின் மகன் இரண்டாம் குலோத்துங்கன். இவர்தான் தசாவதாரம் நெப்போலியன்.தில்லை கோவிலை எழுப்ப இடைஞலாய் இருந்த திருமால் சிலையை கடலில் போட்டதுதவிர யாரையும் மதமாற்ற சித்திரவதையெல்லாம் செய்ய வில்லை.இவனை மதச சகிப்புள்ள நல்லவர்தான் என்று சதாசிவ பண்டாரத்தார் கூற்கிறார்.

-நன்னூலை(இலக்கண நூல்) எழுதிய பவணநிதி முனிவர்,மூன்றாம் குலோத்துஙக்ன் காலத்தில் அவையில் இருந்தவரே.

-பாண்டியன் மாறவர்மன் சுந்தர பாண்டியன் வீரம் கொண்டு மூன்றாம் ராசராசனை (கிபி 1216-1258) தோற்கடிக்கிறான்.சோழர்களின் வீழ்ச்சி ஆரம்பமாகிறது

-பிற்கால சோழ அதிகாரத்தின் கடைசி முகமாக மூன்றாம் ராசேந்திரன் இருக்கிறான்.இவன் சடைய வர்மனால் 1251 இல் தோற்கடிக்க படுகிறான்.பல உள்காயங்களுக்கு பிறகு 1279 இறந்து விடுகிறான்.

-இங்கே பிந்தைய சோழர்களின் சரித்த்ரம் முடிகிறது.

Saturday 10 August 2013

புலன்களில் விளையும் விஞ்ஞானம்.

பவுத்தம் விஞ்ஞானம் என்பதை புலன்கள் என்கிறது.கண்,காது,மூக்கு,தொடுதல்,வாய் மூலம் எதை அறிகிறோமோ அதுதான் விஞ்ஞானம்.

புலன்களை இன்னும் தெளிவாக்கி கொள்ளலாமே தவிர,புலன்கள் சொல்லும் அறிவு தாண்டி விஞ்ஞானத்திற்கு வேலை இல்லை,அதனால் மேலும் உள்ளே போகமுடியாது என்றும் சொல்கிறது.அது பற்றியல்ல இந்த பத்தி.

ஆனால் நாம் புலன்களால் என்ன பார்க்கிறோமோ அதையே நம்பியும் இருக்கிறோம்,இருந்து கொண்டிருக்கிறோம்,இருக்கப் போகிறோம்.

முன் காலத்தில் காலரா நோயினால் நம்மூர்களில் இறப்பு நிகழும் போது, மக்கள் செய்த முதல் காரியம் தண்ணீர் கொடுப்பதை நிறுத்தியதுதான்.

தண்ணித் தண்ணியாகத்தானே போகிறது.அதிக தண்ணீர் கொடுத்தால் அதிகமாய் தண்ணீராய் வெளியே போகும்.ஆகையால் நீரை நிறுத்து.

ஆனால் உண்மை அதுவல்ல.வயிற்றுப் போக்கு ஏற்படும் நீர் நிறைய அருந்திக் கொண்டிருந்தாலே போது மானது.அதுவே காலராவை எதிர்க்கும் நல்ல மருந்து.

அயர்லாந்தில் உருளைக்கிழங்கு சாகுபடியில் பூஞ்சைக்காளான் தாக்கி அழுகி,பஞ்சம் நிலவும் போது,பக்கத்தில் நிற்கும்  ரயில் வண்டியிலிருந்து வரும் Static Electricity தான் காரணம் என்று பலரும் நம்பினார்கள்.

முதன்முதலில் இந்தியாவில் ‘ஹைட்ரோ பவர்’ எடுக்கும் போது அப்பாவி மக்கள் பலர் “தண்ணியில உள்ள கரண்ட் சத்த எடுத்துட்டா பயிர் எப்படி விளையும்” என்று கேட்டார்களாம்.

அதுமாதிரியே கிரேக்கர்கள் எலி பழைய துணிகளில் இருந்துதான் உருவாகிறது என்று நம்பினார்கள்.

கிறிஸ்து பிறப்பதற்கு முப்பது வருடம் முன்னால்  பிறந்த விர்ஜில் என்ற லத்தீன் கவிஞர் விவசாயத்தைப் பற்றி விர்ஜில்’ஸ் ஜியோர்ஜிக்ஸ் (Virgil's georgics)என்ற தன்னுடைய புத்தகம் நான்கில் ,எப்படி தேனீக்களை உற்பத்தி செய்வது என்று சொல்லியிருக்கிறார்.அந்த முறைகளைப் பார்ப்போம்.

- காளையின் மூக்கையும் வாயையும் துணியால் அடைக்கவும்.மூச்சு திணறி இறந்துவிடும்.எதற்காக இப்படி அடைத்துக் கொள்கிறோம் என்றால்,அப்போதுதான் ஆன்மா வெளியே போகாது.

- தோலை கிழித்து எடுத்துக் கொள்ளவும்

-பின் அந்த காளையின் உடலை விட்டுச் செல்லவும்.

-ஒரு வாரம் பிறகு தேனிக்கள் அந்த உடலிருந்து வரும்.

படித்து விட்டு சிரிக்கக் கூடாது.கிறிஸ்து பிறக்கும் முன் ஐரோப்பாவில் இருந்த விஞ்ஞான புத்தகத்தில் உள்ள செய்திதான்.பிரச்சனை என்னவென்றால் அவர்கள்  அரைகுறை புலன்களால் ஆராய்ச்சி செய்தார்கள்.அழுகிய உடலில் இருந்து தேனி வடிவத்தில் ஒரு ஈ வந்தது.அதை தேனி என்றார்கள். அது தேனீயா இல்லையா என்று யாருக்கும் தெரியாது?

இந்த விர்ஜில் எழுதிய புத்தகத்தில் தேனி வரும் முறை பற்றி சொன்னதற்கு ஒத்து ஊதுவதாக கிரேக்க தொன்மத்தில் உள்ள கதையை சுருக்கமாக சொல்லிவிடுகிறேன்.

பெருங்கடவுள் அப்பல்லோவின் மகன் அரிஸ்டஸ், தேனீக்களின் தேவனாக இருக்கிறான்.

எப்படி தேனிக்களை வளர்ப்பது என்று அவன் அம்மா பூமித்தாய் கயாவின், தேவதைகள் சொல்லிக்கொடுக்கின்றன.

அரிஸ்டஸ் நிறைய தேனீக்கள் வளர்த்து தேன் எடுத்து வந்தான்.

அப்போது அரிஸ்டஸுக்கும்,ஒரிபஸின் மனைவி யூரிடைஸுக்கும் இடையே  முறை தவறிய காதல் வருகிறது.அரிஸ்டஸுடன் அவசரமாக வெளியேற நினைக்கும் யூரிடைஸ் தேவதை தெரியாமல் பாம்பொன்றை மிதித்து விட பாம்பு யூரிடைஸை கொன்று விடுகிறது.

இதனால் கோபமான யூரிடைஸின் ’தேவதைகள்’, அரிஸ்டஸ் வளர்க்கும் எல்லாதேனீக்களையும் கொன்று விட, அரிஸ்டஸ் கவலையுற்று அம்மா பூமித்தாய் கயாவிடம் போகிறான்.

அவள் புரோடீஸைப் என்னும் தேவனை பார்க்க சொல்ல புரோட்டீஸ் எப்படி தேனீக்களை மறு உற்பத்தி பற்றி சொல்கிறார் அரிஸ்டஸிடம்.

அது

-இலைகள் அடர்ந்த அறையில் நான்கு காளைகளையும்,நான்கு கன்றுகளையும் கொன்று வைத்துவிடு

-பின் அவற்றின் உடல்களை ஒன்பது நாட்கள் தொந்தரவு செய்யாமல் தனி அறையில் வைக்க வேண்டும்,

அரிஸ்டாஸ் அப்படியே செய்ய, ஒன்பது நாட்கள் பிறகு தேனீக்கள் அந்த காளையின் உடலில் இருந்து வெளியே வருகின்றன.

இப்படியாக தேனீககள் மிருகங்களின் உடலில் இருந்துதான் ,பிறக்கிறது என்பதாக கடுமையான நம்பிக்கை இருந்திருக்கிறது.

1966 ஆம் ஆண்டு ஃப்ரான்சிஸ்கோ ரெடி என்பவர்,தேனீக்கள் அது மாதிரி காளை மற்று மிருகங்களின் உடலில் இருந்து வரவில்லை என்பதை நிருபித்தார்.

பின் எவை தேனீக்கள் ரூபத்தில் இறந்த உடல்களில் இருந்து வருகிறது.பார்க்க அசலாய் தேனீககள் மாதிரி தெரியும் Hoover flies என்ற ஈக்கள்தாம் அது.

அதை பார்க்க தேனீ போன்றே இருக்கிறது.ஆனால் தேனியில்லை.

இப்படியாக இந்த ‘ஹூவர் ஃப்ளைஸை’ ப்பார்த்து தேனீ என்று ஏமாந்திருக்கிறாகள் பலர்.


கொஞ்சம் நீளமான அம்புலிமாமா டைப் க

கொஞ்சம் நீளமான அம்புலிமாமா டைப் கதை.மொபைலில் படிப்பவர்களுக்கு எரிச்சலைத் தரலாம் :)

மரணப்படுக்கையில் இருக்கும் அப்பாவிடம் காஞ்சி சில வாக்குறுதிகளை கொடுத்தான்.

“அப்பா நான் அம்மாவுக்கு வீட்டைக் கொடுத்துவிடுவேன்.தம்பிக்கு நிலத்தை கொடுத்து விடுவேன்”

“நீ என்ன செய்வாய் காஞ்சி”

“நான் எங்காவது பட்டணத்துக்கு போய் பிழைத்துக்கொள்வேன்  அப்பா”

அப்பா நெகிழ்ந்து ஒரு பணமுடிப்பை கொடுத்து,அவசியம் வந்தால் இதை செலவு செய்.பேராசைக்காக இதை உபயோகிக்காதே என்று மண்ணுலகை விட்டு செல்கிறார்.

காஞ்சி ராஜாவின் கோட்டையை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறான்.இரண்டு நாட்கள் நடந்ததும் தூக்க கண்களை சுழற்ற தூங்கிக் கொண்டிருக்கும் போது அவனை கொள்ளையர்கள் மூவர் தாக்குகின்றனர்.எதிர்ப்பாராவிதமாக அங்குவந்த தெருநாய் ஒன்று கொள்ளையர்களை கடித்து விரட்டி காஞ்சியை காப்பாற்ற, காஞ்சியும் நாயும் தோழர்களாகின்றனர்.

கோட்டைக்கு வெளியே ஒரே விழா ஆரவாரம்.மறுநாள் இளவரசிக்கு சுயம்வரமாம். காஞ்சி கோட்டை வாசல்காரனிடம் உள்ளே வேலை கிடைக்குமா என்று கேட்க,கோட்டைக் காவலாளி “இளவரசிக்கு திருமணம்.வேலையில்லாமல் இருக்குமா.உள்ளே போ.ஆனால் இந்த அசிங்கம் பிடித்த நாயை வெளியே விட்டு கோட்டைக்குள் போ” என்று சொல்கிறான்.

அதைக் கேட்ட காஞ்சி கடுமையாக விவாதிக்கிறான்.நாயில்லாமல் கோட்டைக்குள் போகமுடியாது என்று சொல்லி மறுத்து திரும்ப எத்தனிக்கும் போது, இதையெல்லாம் தன் அரண்மனையில் இருந்து பார்த்து கொண்டிருந்த இளவரசி,வேலையாளை அழைத்து நடந்ததை அறிந்து கொண்டு வரச்செய்கிறாள்.அவன் சொன்னதும் “ஒரு நாயிடமே இவ்வளவு அன்புடையவனாக இருக்கிறானே.கட்டிய மனைவியிடமும் எப்படி அன்பை பொழிவான்.இவனே எனது கணவன்” என்று முடிவெடுக்கிறாள்.அதை காஞ்சியிடம் சொல்லியும் விடுகிறாள்.

காஞ்சிக்கு தன் தோட்டத்தில் வேலை போட்டுக்கொடுக்கிறாள்.காஞ்சி இளவரசியை தற்செயலாக பார்க்க இளவரசியின் அழகில் மயங்கி விடுகிறான்.தானும் மறுநாள் சுயம்வரத்தில் கலந்து கொள்ள விருப்பப்படுகிறான்.

ஆனால் பணத்திற்கு என்ன செய்வது? அப்பா கொடுத்த பணமுடிச்சி ஞாபகத்திற்கு வந்தது.அதை அசைக்க ஆரம்பித்தான் பொற்காசு விழுந்தது.இப்படியாக அவன் அசைக்க அசைக்க பல பொற்காசுகள் குவியவே, சந்தைக்கு போய் ஆபரணங்கள்,உடைகள்.குதிரை என்று வாங்கி இளவரசனாக மாறிவிட்டான்.அவன் சுயம்வரத்திற்கு போவதற்கு நாய் எதிர்ப்பு தெரிவித்தது.அவன் கைகளைப் கவ்வி இழுத்தது.காஞ்சிக்கு கோபம் வந்தது.

நாயை அடித்து விரட்டுகிறான்.ஆனால் அவனை விட்டுபோகவில்லை.அவனை அரண்மனையுனுள் சுயம்வரத்திற்கு அனுப்பிவிட்டு வெளியே அவனுக்கு தெரியாமல் காத்திருந்தது. சுயம்வரத்தில் மாலையை தனக்கு சூட்டுவாள் என்ற காஞ்சியை மறுத்து இளவரசி யாருக்கும் மாலைபோடாம்ல் போய்விடுகிறாள்.

மாலையை எதிர்ப்பார்த்த காஞ்சிக்கு,இளவரசியின் செயல் அவமானமாக தெரிந்ததால் துடித்தான்.அந்த அவமானத்தை அவனால் மறக்கவே முடியவில்லை.வெளியே வந்தால் அவன் அவமானப்படுத்தி துரத்திய நாய் நிற்கிறது வாலை ஆட்டி.அதைக் கட்டி கொள்கிறான்.கோட்டையை விட்டு வெளியேறி ஒரு மரத்தடியில் அன்று இரவு தூங்கப்போகிறான். நாயும் பக்கத்தில் வாஞ்சையாக படுத்துகொண்டது.

நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருக்கும் போது அவனை ஒரு கை எழுப்பிகிறது.எழுந்து பார்த்தால் அது அவனுக்கு மாலை போடுவேன் என்று சொல்லி போடாமல் அவமானப்படுத்திய இளவரசி.பல்லக்கு தூர பல்லக்கு வீரர்களோடு நிற்கிறது.இளவரசி சொல்கிறாள் “என்னை மன்னித்து விடுங்கள்.அப்பாவி நாய்க்காக கோட்டை வாசல்காரனிடம் வாதாடிய காஞ்சியைத்தான் எனக்கு பிடித்திருந்தது.உங்களை விரும்பினேன்.ஆனால் எப்போது நாயை உதறி உதாசீனப்படுத்தி விட்டு சுயம்வரத்திற்கு தனியாக வந்தீர்களோ, அப்போது உங்களை மணமுடிக்க விருப்பம் இல்லாமல் போய்விட்டது.ஆனால் இப்போது நாயுடன் அன்பாக இருக்கும் பழைய காஞ்சியைப் பார்த்து விட்டேன்”.
பின் காஞ்சியின் கழுத்தில் மாலையிடுகிறாள்.

அன்றிலிருந்து காஞ்சி வாழ்க்கை முழுவதும் எளிமையாகவும் அன்பாகவும் கருணையாகவும் அனைவரிடமும் பழகி வந்தான்.

சி.சு செல்லப்பாவும் எழுத்தும்...

இப்படியெல்லாம் தவமாய் தவமிருந்து வளர்க்கப் பட்டிருக்கிறது தற்கால தமிழலக்கியம்.

இலக்கியத்தில் என்ன இருக்கிறது என்று தயவு செய்து இனிமேல் கேட்டு விடாமல்.அதற்கான பதிலை நாமே தேடினால் மட்டுமே அது கண்களுக்கு தெரியும்.

<<1956ல் சுதேசமித்ரனில் சி.சு.செ ‘’சிறுகதையில் தேக்கம்’ என்ற கட்டுரை எழுத,அதற்கு மறுப்பாக அகிலன்,ஆர்வி முதலியவர்கள் எழுதினார்கள்.இதன் விளைவாக,விமர்சனத்திற்காக ஒரு சிற்றேடு தொடங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு ‘எழுத்து’ என்ற மாதப் பத்திரிக்கையை தொடங்கினார்.சில இதழ்கள் வந்த பிறகு நா.பிச்சமூர்த்தியின் வசன கவிதை அதில் வந்தது.பின்பு அதன் போக்கே மாறிவிட்டது.முதலில் விமர்சனக் குரலாக பிரகடனப் படுத்திக் கொண்டு வந்த ‘எழுத்து’ புதுக்கவிதைக்கான களமாக மாறியது.அவர் கூற்றுப்படியே தற்செயலான நிகழ்ச்சிதான்.

புதுக்கவிதைக்கு இரண்டு முனைகளிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது.ஒன்று தமிழ் பண்டிதர்களிடமிருந்து. இவர்கள் ‘புதுக்கவிதை’ என்ற வடிவத்தை உதாசீனப் படுத்தியதன் மூலம் தம் எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஆனால் கடுமையான எதிர்ப்பை காட்டியவர்கள் கம்யூனிஸ்ட்கள்தான்.கேலியும் கிண்டலும் செய்தார்கள்.எழுத்து பத்திரிக்கையின் தலையங்கங்களைப் படித்துப் பார்த்தால் சி.சு. செல்லப்பாவின் மகத்தான பணியை உணர்வார்கள்.

‘தமிழ் கவிதையில் கொஞ்ச நஞ்சம் இலக்கணம் இருக்கிறது.அதையும் அழிக்க வந்துவிட்டான் இந்த பார்ப்பான்’ என்று பண்டிதர்களும், ‘அமெரிக்க முதலாளித்துவத்தின் விற்பனையாளன்’ என கம்யூனிஸ்ட்டுகளும் தாக்கினர்.

விமர்சனத்திற்காகவே தொடங்கிவிட்ட இதழ் சிற்ப்பாக இருக்க வேண்டும் என்ற வெறியில் நாளொன்றுக்கு பதினான்கு மணி நேரம் கூட ஆங்கிலத்தில் திற்னாய்வு நூல்களை தன்னுடைய நாற்பத்தியேழாவது வயதில் சு.சு.செ படிக்கத் தொடங்கினார்.சென்னையிலுள்ள எல்லா நூலகங்களில் உள்ள ஆங்கில இலக்கிய புத்தகங்களையும் படித்தார்.தொல்காப்பியமும் நன்னூலும் படித்தார்.

எழுத்து வின் தொடக்க காலத்தில் க.நா.சு,சிட்டி,நா.சிதம்பர சுப்ரமண்யம் எழுதினார்கள்.ஆனால் நிறுத்தி விட்டார்கள்.அவர்கள் யாருமே சி.சு.செ வை அவ்வளவாக மதித்தது கிடையாது.விமர்செனத்திற்கென்றே ஒரு பத்திரிக்கையா என்று கிண்டல் செய்தனர்.’இது ஒரு அசடு ஆர்வக் கோளாறினால் ஏதோ செய்கிறது’ என்று பரிதாபப் பட்டார்கள்.

ஆனால் சி.சு.செவுக்கு ஆத்மார்த்தமாக ஒத்துழைப்பு தந்தவர் ந.பிச்சமூர்த்திதான்.சி.சு.செவின் முயற்சி தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கிய இடம் பெறும் என்று நம்பினார் அவர்.

’எழுத்து’ மிகுந்த பணத் தட்டுப்பாட்டில் இருந்தது. எழுத்து புதிய படைபாளிகளுக்கு இடம் கொடுத்தது என்பதைவிட,பிற்காலத்தில் தடம் பதித்தவர்களை அடையாளம் கண்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

பிரமிள்,வைதீஸ்வரன்ம்சி.மணி,ந.முத்துச்சாமி,வெங்கட் சாமிநாதன், சி.கனகசபாபதி இவர்களை குறிப்பிட வேண்டும்.>>

- கி.அ சச்சிதானந்தம்

பத்து பூரி சாப்பிட்டேன் மச்சி...

-காலேஜில் என்னுடன் படித்த நண்பனுக்கு, சொன்ன சம்பவத்தையே திரும்ப ஒருதடவை சொன்னால் பிடிக்காது.’மச்சி நீ சொல்லிட்டடா’ என்பான்.அப்படி சொல்வது அவனுக்கு அலுப்பை தருவதாக அடிக்கடி சொல்வான்.

-காலேஜில் என்னுடன் படித்த அதே நண்பனுக்கு எதுவுமே சரியாய் அமையவில்லை.

அப்பா மனக்கோணல் உடையவர்.அடுத்தவரை துன்புறுத்தி ரசிக்கும் பழக்கமுடையவர்.அதனால் அம்மாவும் அப்படியே ஆக்கப்பட்டார்.

இதனால் சொந்தங்கள் அவன் குடும்பத்தை கிண்டல் செய்தன.தூற்றின.உன் அப்பா இப்படி? உன் அம்மா இப்படி ?என்று சொல்வதன் மூலம் அவன் தன்னம்பிக்கையை சிதைத்தன.

வீட்டில் பணமும் கிடையாது.நுகர்வு இன்பமும் நண்பனுக்கு கிடையாது.

மொத்தத்தில் வீட்டுக்கு போகவே பயப்படுவான்.எப்போதும் கவலையாகவே இருக்கிறது என்று புலம்புவான்.

அதுமாதிரி இருக்கையில்,அவனுடன் படித்த நார்த் இண்டியன் பெண்ணை அக்காவாக நினைக்க ஆரம்பித்தான்.அக்காவாகவே பழக ஆரம்பித்தான்.

இவன் பத்தாம் வகுப்பு படித்தவன் என்பது அந்தப் பெண் பிளஸ் டூ படித்தவள் என்பதும் கூட காரணம்.ஆனால் இவன் வைத்தது உண்மையான பாசம்.

அந்தப் பெண் பார்க்க இளம் வயது நடிகை கிரண் மாதிரியே இருப்பார்.சொந்த மாநிலம் அருணாச்சல் பிரதேசம்.

நான் நண்பனிடம் சொல்வே ‘மச்சி இப்படி பால் போளி மாதிரி இருக்கா.இவ கிட்ட எப்படி மச்சி அக்கான்னு பழகுற.’ என்று சொன்னால் கோபப்படுவான்.ரக்சா பந்தன் கயிறு, ஒன்றாய் உட்கார்ந்து படித்தல் என்று அவர்கள் உறவு மிக நன்றாய் வளர்ந்தது.

அவனுக்கு சிக்மெண்ட் பிராய்ட் பற்றி சொல்வேன்.ஈடிபஸ் காம்பளக்ஸ்,எலக்கிடிரா காம்பிளக்ஸ் இதையெல்லாம் சொல்லுவேன்.

நண்பன் என்னை திட்டுவான். ‘தியரி சொல்லி சொல்லி செத்துராத மச்சி.கொஞ்சம் ஃபீலிங்ஸா இரு. எனக்கு உண்மையிலே அவங்கள பாத்தா அக்காவா தோணுது என்பான்.

படிப்பு முடியும் வரை தன் எல்லா துன்பங்களையும் அக்காவுடன் பழகுவதில் கரைத்து விட்டிருந்தான்.

கல்லூரி முடிந்து அந்த பெண் டில்லி போய்விட இவன் மறுபடியும் சோர்ந்தான்.ஒன்றுமே ஒடவில்லை இவனுக்கு.’மச்சி நீ துடிக்கிற அளவுக்கெல்லாம் அந்தப் பொண்ணு துடிக்காது மச்சி.உன் பாசத்தால அதுக்கு தொல்ல பண்ணாத’ என்றேன்.

அதைகேட்டு தலையை தலையை ஆட்டிவைத்தான்.

கிட்டதட்ட வாரா வாரம் வீட்டுக்கு வரும் அவன் ஒருமாதமாக வரவில்லை.ஒருமாதம் கழித்து வந்தான்.முகமெல்லாம் மலர்ந்திருந்தது.

“என்ன மச்சி ஜாலியா இருக்க ‘ என்றேன்.

‘மச்சி நான் டில்லிக்கு போனேண்டா ‘

‘இது எப்போ’

‘போன வாரம்தான் போனேன்.அக்காகிட்ட எதுவுமே சொல்லல.நேரப் போயிட்டேண்டா.’

‘அடப்பாவி இத விட ஒரு பொண்ண கொடும படுத்தவே முடியாது.அவ அப்பா அம்மா எல்லாரும் இருக்கும் போது சொல்லாம கொள்ளாம் போன அவளுக்கு எவ்வளவு தர்ம சங்கடமாயிருக்கு மச்சி’

‘சரி அத விடு.முதல்ல அக்கா கொஞ்சம் ஷாக் ஆனாங்க.ஆனா வீட்ல எல்லார்கிட்டயும் அறிமுகப்படுத்தி வைச்சாங்க. எனக்கு நல்ல பசி.என்ன கிச்சனுக்கு பக்கத்துல உள்ள டைனிங் ரூம் கூட்டிப்போய் பூரி சுட்டுத்தந்தாங்க.நல்லா சாப்பிட்டேன் மச்சி.பத்து பண்ணெண்டு பூரி சாப்பிட்டேன்.”

“பத்து பூரி சாப்பிட்டியா.எங்க வீட்ல எல்லாம் ரெண்டுதான் சாப்பிடுவ டீசண்ட் பாப்ப.”

“மச்சி என் அக்கா சுட்டுப்போடுறாடா.நான் உரிமையோடு சாப்பிடுவேன்,பத்து பண்ணெண்டு பூரி சாப்பிடுவேன்.சாப்பிட்டேன்”

“ம்ம்ம்”

“மச்சி திருப்தியா சாப்பிட்டேண்டா லைஃப்லேயே.பத்து பண்ணெண்டு பூரி சாப்பிட்டேன்.நல்லா கிழங்கு எல்லாம் வைச்சு”

இப்படியே பூரி சாப்பிட்ட சம்பவத்தை இருபது முறைக்கு குறையாமல் சொல்லிக்கொண்டே இருந்தான்.

அவனுக்கு பொதுவாக யாராவது திரும்ப திரும்ப ஒரே சம்பவத்தை சொன்னால் பிடிக்காது,அவனும் அப்படி சொல்லவே மாட்டான் ,என்பது தெரிந்த எனக்கு மிக ஆச்சர்யமாய் இருந்தது.

எனக்கு குடும்பம் சரியாக அமைந்துவிட்டதால் அவன் துன்பத்தை துல்லியமாக புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது.

ஆனால் அவன் “பத்து பண்ணெண்டு பூரி சாப்பிட்டேன்” என்று சொல்லும் போது துல்லியமாக புரிந்து கொண்டேன் அவன் உணர்வுகளை.

அறிவியல் படிப்பது பற்றி தமிழ் தலைவர்கள்...

இந்தியாவில் சயின்ஸ் படிப்பது பற்றிய விழிப்பில்லாத தன்மை நோக்கி எழும் அலோசனையும் எள்ளலும் ஆதங்கமும் கொண்ட தமிழர்களின் கருத்துக்களை எழுதியிருக்கிறேன் இந்த பத்தியில்.

அதுக்கு முன்னாடி... 

பாரதியார் எழுதிய கட்டுரைகளைப் எல்லாம் கண்டிப்பா படிச்சிருங்க.படிக்க மிக மிக சுவாரஸ்யமாக இருக்கிறது.மனிதர் வீரேந்திர சேவாக் மாதிரி எல்லாப் பக்கமும் பேட்டை வீசுகிறார்.

அவர் படித்திருக்கும் ஆங்கில பத்திரிக்கைகளையெல்லாம் தனியாக ஒரு பதிவில் போடுகிறேன்.பல இடங்களில் காந்தியை கண்ணியமாக விமர்சித்திருக்கிறார்.

இசை,ஜாதி,மதம்,விஞ்ஞானம்,பூமி சாஸ்த்திரம்,மானுடவியல் என்று எல்லாவற்றையும் எழுதியிருக்கிறார். எதைத்தான் அவர் எழுதவில்லை.

அவர் கட்டுரை போரடிக்காமல் இருப்பதற்கு காரணம் அவர் ஆங்காங்கு கொடுக்கும் தகவல்கள்.அவர் எழுதிய பத்திகளில் ஒன்று.விஞ்ஞானம் மக்களிடம் போய் சேரவேண்டிய ஆலோசனைகளை சொல்கிறார்.

< ஒரு விரதமெடுத்தால் என்ன வந்தாலும் அதை கலைக்கக் கூடாது.ஆரம்பத்தில் கலைந்து கலைந்துதான் போகும்.திரும்ப திரும்ப நோக்கிக்கொள்ள வேண்டும்.நமது தேசத்திலே சாஸ்திர(சயின்ஸ்) படிப்பு வளரும்படி செய்ய வேண்டும் என்று சில பண்டிதர்கள் அபேஷிக்கிறார்கள்.

இதற்கு மற்ற ஜனங்களிடமிருந்து தக்க உபபலம் கிடைக்கவில்லை,இருந்தாலும் இந்த நோக்கத்தை மறந்து விடலாகாது.ஊதுகிற போது ஊதினால் விடிகிற போது விடியும்.சாஸ்திர படிப்பு (சயின்ஸ்) முக்கியம்.அதிலேதான் நன்மையெல்லாம் உண்டாகிறது.சயின்ஸ் மனித ஜாதியை உயர்த்தி விடும்.

காசிக்கு வழி தெற்கே காட்டுகிற மனிதன் கைலாயத்திற்கு நேர்வழி காட்டுவானோ?>

இது மாதிரி சுந்தர ராமசாமி, கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா சொன்னதாக சொன்னதும் சுவாரஸ்யம்.

அதை மதத்தின் மீதான தாக்குதலாக எடுத்துக் கொள்ளாமல், அறிவியல் மேல் பிடிப்பில்லாமல் இருக்கும் மக்களை ஆக்கப்பூர்வமாக கிண்டல் செய்வதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஜீவா சிறுவயது சு.ராவிடம் சொன்னாராம் .(சுருக்கியிருக்கிறேன்) “பாத்துக்க தம்பி.சினன் எறும்ப பத்தி நமக்கு என்ன தெரியும்.

ஆனா வெளிநாட்டுக்காரன் புஸ்தகம் எழுதியிருக்கிறான்.வேலைக்கார எறும்புக்கு தடி புக்கு,ராணி எறும்புக்கு தனி புக்கு.கடிக்கிற எறும்புக்கு ஒரு புக்க்கு. கடிக்காத எறும்புக்கு ஒரு புக்கு. இப்படி பிரிச்சி பிரிச்சி பெருசு பெருசா எழுதி அறிவ வளத்துக்கிறான்.

நாம என்ன பண்றோம்ன்னா “ஒம்” என்ற வார்த்தையில உலகமே அடங்கியிருக்குன்னு அறிவியல படிக்காம ஒதுக்கி தள்ளிடுறோம்”

இப்படி சமுதாய அக்கறையுடன் கலாய்க்கிறார் ஜீவா.

அடுத்து அண்ணா...

அண்ணா அதிவிரைவு ரயிலில் போய்கொண்டிருந்த அனுபவத்தை எழுதுகிறார்.(உள்வாங்கியதை எழுதியிருக்கிறேன்)

”என்னுடன் பிராயணம் செய்யும் சக பயணிகள் பேசுவதை கேட்கிறேன்.அனைவரும் ரயில் சென்றடையும் ஊரின் சிறப்பு வாய்ந்த தெய்வத்தையும்,அதற்கு என்ன என்ன செய்தால் நல்ல நேர்ச்சை என்பது பற்றியும், இன்னும் பல தெய்வங்களைப் பற்றியும் அடிக்கடி பேசிக்கொண்டே வந்தார்கள்.

ஆனால் அதில் ஒரு பயணி கூட,இப்படி ரயில் நம் இத்தனை பேரையும் இவ்வளவு வேகத்தில் இழுத்துக் கொண்டு போகிறதே.அது எப்படி அப்படி ஒடுகிறது? என்ன அறிவியல் காரணம்? என்ற கேள்விகளை எழுப்பவே இல்லை...

இரக்க மனதுடையவனைப் பற்றிய அம்புலிமாமா டைப் கதை...

மரணப்படுக்கையில் இருக்கும் அப்பாவிடம் காஞ்சி சில வாக்குறுதிகளை கொடுத்தான்.

“அப்பா நான் அம்மாவுக்கு வீட்டைக் கொடுத்துவிடுவேன்.தம்பிக்கு நிலத்தை கொடுத்து விடுவேன்”

“நீ என்ன செய்வாய் காஞ்சி” 

“நான் எங்காவது பட்டணத்துக்கு போய் பிழைத்துக்கொள்வேன் அப்பா”

அப்பா நெகிழ்ந்து ஒரு பணமுடிப்பை கொடுத்து,அவசியம் வந்தால் இதை செலவு செய்.பேராசைக்காக இதை உபயோகிக்காதே என்று மண்ணுலகை விட்டு செல்கிறார்.

காஞ்சி ராஜாவின் கோட்டையை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறான்.இரண்டு நாட்கள் நடந்ததும் தூக்க கண்களை சுழற்ற தூங்கிக் கொண்டிருக்கும் போது அவனை கொள்ளையர்கள் மூவர் தாக்குகின்றனர்.எதிர்ப்பாராவிதமாக அங்குவந்த தெருநாய் ஒன்று கொள்ளையர்களை கடித்து விரட்டி காஞ்சியை காப்பாற்ற, காஞ்சியும் நாயும் தோழர்களாகின்றனர்.

கோட்டைக்கு வெளியே ஒரே விழா ஆரவாரம்.மறுநாள் இளவரசிக்கு சுயம்வரமாம். காஞ்சி கோட்டை வாசல்காரனிடம் உள்ளே வேலை கிடைக்குமா என்று கேட்க,கோட்டைக் காவலாளி “இளவரசிக்கு திருமணம்.வேலையில்லாமல் இருக்குமா.உள்ளே போ.ஆனால் இந்த அசிங்கம் பிடித்த நாயை வெளியே விட்டு கோட்டைக்குள் போ” என்று சொல்கிறான்.

அதைக் கேட்ட காஞ்சி கடுமையாக விவாதிக்கிறான்.நாயில்லாமல் கோட்டைக்குள் போகமுடியாது என்று சொல்லி மறுத்து திரும்ப எத்தனிக்கிறான்.

இதையெல்லாம் தன் அரண்மனையில் இருந்து பார்த்து கொண்டிருந்த இளவரசி,வேலையாளை அழைத்து நடந்ததை அறிந்து கொண்டு வரச்செய்கிறாள்.

வேலையாள் சொன்னதும் “ஒரு நாயிடமே இவ்வளவு அன்புடையவனாக இருக்கிறானே.கட்டிய மனைவியிடமும் எப்படி அன்பை பொழிவான்.இவனே எனது கணவன்” என்று முடிவெடுக்கிறாள்.

காஞ்சிக்கு தன் தோட்டத்தில் வேலை போட்டுக்கொடுக்கிறாள்.காஞ்சி இளவரசியை தற்செயலாக பார்க்க இளவரசியின் அழகில் மயங்கி விடுகிறான்.இளவரசியும் காஞ்சி மீதான தன் விருப்பத்தை சொல்லிவிடுகிறாள்.

இதனால் காஞ்சி மறுநாள் சுயம்வரத்தில் அவனும் கலந்து கொள்ள விருப்பப்படுகிறான்.

ஆனால் பணத்திற்கு என்ன செய்வது? அப்பா கொடுத்த பணமுடிச்சி ஞாபகத்திற்கு வந்தது.அதை அசைக்க ஆரம்பித்தான் பொற்காசு விழுந்தது.இப்படியாக அவன் அசைக்க அசைக்க பல பொற்காசுகள் குவியவே, சந்தைக்கு போய் ஆபரணங்கள்,உடைகள்.குதிரை என்று வாங்கி இளவரசனாக மாறிவிட்டான்.

அவன் சுயம்வரத்திற்கு போவதற்கு நாய் எதிர்ப்பு தெரிவித்தது.அவன் கைகளைப் கவ்வி இழுத்தது.காஞ்சிக்கு கோபம் வந்தது.

நாயை அடித்து விரட்டுகிறான்.ஆனால் அவனை விட்டுபோகவில்லை.அவனை அரண்மனையுனுள் சுயம்வரத்திற்கு அனுப்பிவிட்டு வெளியே அவனுக்கு தெரியாமல் காத்திருந்தது. சுயம்வரத்தில் மாலையை தனக்கு சூட்டுவாள் என்ற காஞ்சியை மறுத்து இளவரசி யாருக்கும் மாலைபோடாம்ல் போய்விடுகிறாள்.

மாலையை எதிர்ப்பார்த்த காஞ்சிக்கு,இளவரசியின் செயல் அவமானமாக தெரிந்ததால் துடித்தான்.அந்த அவமானத்தை அவனால் மறக்கவே முடியவில்லை.

வெளியே வந்தால் அவன் அவமானப்படுத்தி துரத்திய நாய் நிற்கிறது வாலை ஆட்டி.அதைக் கட்டி கொள்கிறான்.கோட்டையை விட்டு வெளியேறி ஒரு மரத்தடியில் அன்று இரவு தூங்கப்போகிறான். நாயும் பக்கத்தில் வாஞ்சையாக படுத்துகொண்டது.

நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருக்கும் போது அவனை ஒரு கை எழுப்பிகிறது.எழுந்து பார்த்தால் அது அவனுக்கு மாலை போடுவேன் என்று சொல்லி போடாமல் அவமானப்படுத்திய இளவரசிதான்.

பல்லக்கு தூர பல்லக்கு வீரர்களோடு நிற்கிறது.

இளவரசி சொல்கிறாள் “என்னை மன்னித்து விடுங்கள்.அப்பாவி நாய்க்காக கோட்டை வாசல்காரனிடம் வாதாடிய காஞ்சியைத்தான் எனக்கு பிடித்திருந்தது.உங்களை விரும்பினேன்.ஆனால் எப்போது நாயை உதறி உதாசீனப்படுத்தி விட்டு சுயம்வரத்திற்கு தனியாக வந்தீர்களோ, அப்போது உங்களை மணமுடிக்க விருப்பம் இல்லாமல் போய்விட்டது.ஆனால் இப்போது நாயுடன் அன்பாக இருக்கும் பழைய காஞ்சியைப் பார்த்து விட்டேன்”. என்று சொல்லி காஞ்சியின் கழுத்தில் மாலையிடுகிறாள்.

அன்றிலிருந்து காஞ்சி வாழ்க்கை முழுவதும் எளிமையாகவும் அன்பாகவும் கருணையாகவும் அனைவரிடமும் பழகி வந்தான்.

-தவுலத் பாண்டே எழுதிய ’டேல்ஸ் ஆஃப் இந்தியா’ புத்தகத்தில் வாசித்தது.

Stroop effect

ஒரு ’மான்’ படத்துக்கு மேல ‘மீன்’ அப்படின்னு எழுதியிருந்தா நாம சட்டுன்னு மான்னு சொல்லுவோமா அல்லது அது மீனுன்னு சொல்லுவோமா.

முதல்ல நம்ம மூளை, படத்த கிரகிக்கிச்சு சொல்லுமா?அல்லது எழுத்த கிரகிச்சு சொல்லுமா?

படமா? எழுத்தா?

எழுத்ததான் கிரகிச்சிக்குமாம்.

இந்த எஃபெக்டுக்கு பேரு ஸ்டுரூப் எஃபக்ட் (Stroop effect).

சின்னச் சின்ன துரோகங்கள்...

அன்று நானும் அலுவலகத் நண்பரும், எங்களுக்கு சிறுவயதில் நேர்ந்த சின்ன சின்ன துரோகங்களை பகிர்ந்து கொண்டிருந்தோம். செம ரகளையாக போனது.

முதலில் என்னுடையது. 

திருச்செந்தூரில் மாமா, நாங்கள் அண்ணன் தம்பிகள் அக்கா தங்கைகள் என்று அனைவருக்கும் ஒரு போட்டி வைத்தார் “VEERA PANDIYA KATTABOMMAN" என்ற வார்த்தையில் இருந்து பல வார்த்தைகளை எடுத்து எழுத வேண்டும்.யார் அதிகம் எழுதிகிறார்களோ அவர்களுக்கே பரிசு.நானும் அண்ணனும் அப்படி எழுதிக் கொண்டிருக்கும் போது, அண்ணன் என்னிடம் கேட்டான்

“நீ எத்தன வார்த்த எழுதியிருக்க”

“நான் பதினொன்னு இதுவரைக்கு எழுதியிருக்கிறேன்”

பதிலுக்கு நான் கேட்டேன்.

‘நீ எத்தன எழுதியிருக்க”

“நான் சொல்ல மாட்டேன்”

“இல்ல நான் சொன்னேல்லால”

”இல்ல என்னால சொல்ல முடியாதுல.உன்னால ஆனத பாத்துக்க” என்று சொல்லிவிட்டான்.

எனக்கு ஒரு பிள்ளை பிறந்து,அண்ணனுக்கு இரண்டு பிள்ளை கள் பிறந்தால் கூட இப்போதும் இதை நினைத்தால் எனக்கு துரோகமாக படும் என்று நண்பரிடம் சொன்னேன்.

இப்போது அவர் அனுபவித்த துரோகத்தை சொன்னார்.

நண்பர் ஸ்கூல் படிக்கும் போது, முழுவருட கடைசிப் பரிட்சை முடியந்த அடுத்த நிமிடம், கூடப் படிக்கும் பையன் வந்து நண்பரின் எல்லா புத்தகத்தையும் அவன் தங்கைக்கு என்று வாங்கிப் போய்விடுவானாம்.

அவனும் நண்பனின் வகுப்புதான்.”நண்பா நீயும் நானும் ஒரேகிளாஸ்தான.உன் புக்க உன் தங்கச்சிக்கு கொடேன்” என்று சொல்ல நண்பருக்கு கூச்சமாய் இருக்குமாம்.அதனால் கொடுத்து விடுவாராம்.

உண்மையில் அந்தப் பையன் நண்பரின் புத்தகத்தை வாங்கி விற்று விடுவானாம்.

அடுத்த வருடம் நண்பர் தன்னிடம் உள்ள கணித பாடப்புத்தகத்தில் ஒன்றை கால்வருட பரிட்ச்சை லீவில் தொலைத்துவிட்டார்.அப்போது புது புக்கு சரியாய் கிடைக்கவில்லை.அந்தப் பையன் நண்பனிடம் வாலண்டியராக வந்து “நண்பா என்கிட்ட இரண்டு புக்கு இருக்கு.உனக்கு ஒண்ணு வேணுமா” என்று கேட்க, நண்பரும் ஆம் ஆம் என்று மண்டையை ஆட்ட,

“அப்போ காசு கொடுத்து வாங்கிக்க.நாளைக்கு எடுத்துவாரேன்’ என்று சொல்லி கவனமாக காசை வாங்கிக்கொண்டு கொடுத்தானாம்.

நண்பர் எங்கிட்ட சொன்னார் “பாருங்க பாஸ் மூணுவருசம் எல்லா புக்கையும் ஒசியில எங்கிட்ட வாங்கிகிட்டு, எனக்கு ஒரு புக்கு தேவைங்கிற போது அதுல காசு பாக்குறான் பாருங்க” என்றார்.

சின்ன சின்ன துரோகங்கள்.

ஒவர் டிசைனும் சிவாஜி கண்ணாடியும்...

ஒவர் டிசைன் அப்படின்னா என்னன்னு தெரியுமா?

அந்த காலத்துல ஒத்த மனுசன் உட்கார்ரதுக்கு, பத்து பேர் உட்காருராப்புல தேக்குல சேர் செய்ஞ்சு போடுவாங்க தெரியுமா?ஆதுதான் ஒவர் டிசைன்.

முன்னாடி மெட்டல்ல செய்யப்பட்ட ஒவர் டிசைன் செய்யப்பட்ட பொருட்கள் எல்லாம் இப்போ பிளாஸ்டிக் இருக்கிறதால மாறிடிச்சு.

எப்போ இந்த டாப்பிக் நினைவுக்கு வந்துச்சுன்னா “அண்ணன் ஒரு கோயில்” படத்துல சிவாஜி போட்டுட்டு வர பெத்த கண்ணாடிய பாக்கும் போதுதான்.

எந்தா அகலம்.

அவரு ரெண்டு கண்ணுல போட்டுட்டிருக்கிற கண்ணாடிய வெச்சி நாப்பது ஐம்பது கண்ணாடி செய்லாம் போலயடே 

ம.பொ.சி அப்படி என்னதான் செய்தார்...

முகிலை இராசமாணிக்கம் எழுதிய “தமிழக எல்லை போராட்டங்கள் புத்தகத்தை படித்து இந்த பத்தியை எழுதுகிறேன்.

ம.பொ.சிவஞானம் என்பதின் அப்பரிவேசனே ம.பொ.சி

இவர் என்ன செய்தார்?
.
தமிழ்நாட்டுக்காக எவ்வளவோ செய்தவரை இப்படியா அறிமுகப்படுத்துவது என்ற கேள்வி எழுந்தாலும் 1990களில் பிறந்த ஒரு வாலிபனுக்கு ம.பொ.சி தெரியவதில்லை.(எனக்கும் கொஞ்ச நாள் முன்னாடிதான் தெரியும்).அதனால் அவர் செய்த போராட்டங்களைப் பற்றி கொஞ்சம்.

ந்திய சுதந்திரத்திற்கு பிறகு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படுகின்றன.மதராஸ் ஸ்டேட்டில் இருந்து கேரளா,கர்நாடகா,மற்றும் ஆந்திரம் போன்ற மாநிலங்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.

அப்படிப் பிரிக்கையில் திருத்தணி,சித்தூர்,திருப்பதி எல்லாம் ஆந்திரமாநிலத்துடன் போக, ’குமரி முதல் வேங்கடம்’ வரை தமிழ்நாட்டுக்குதான் சொந்தம் என்று போராடி திருத்தணியையும்,சென்னையையும் மீட்டுக் கொடுத்த முக்கியமான சக்தி ம.பொ.சி.

அவருடைய கொள்கைகளை யாருக்காகவும் காம்பிரமைஸ் செய்யவே இல்லை.காமராஜர்,ராஜாஜி,மற்றும் இதர காங்கிரஸ் தலைவர்கள் கொஞ்சம் தளுக்காக இருக்க முயற்சி செய்ய, ம.பொ.சி மட்டும் நேரடியாக இருந்தார்.தமிழ்நாட்டின் உரிமை மீது அவர் சமரசமே செய்ய வில்லை.

ம.பொ.சி திருப்பதி வரை தமிழ்நாட்டுக்கே சொந்தம் என்று சொன்னார்.அதற்கு பல ஆதாரங்கள் கொடுத்தார்.

1911 வரை திருப்பதி வட ஆற்காடு மாவட்டத்தில்தான் இருந்தது.வசதிக்காக அது பிரிக்கப்பட்டு தெலுங்கு பேசும் மக்களின் ஆதிக்கத்திற்கு உடபட்டது.

அது பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காக சென்னையிலிருந்து திருவாலங்காடு வழியே திருத்தணி வழியே திருப்பதி வரை கூட்டங்கள் கூடி பேசினார்.பல கூட்டங்களில் ஆந்திரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஆர்பாட்டம் நடத்தினர்.

ஆனால் ம.பொ.சி வெற்றிகரமாக அவர் பயணத்தை முடித்தார்.அந்த பயணத்தில் முழங்கிய முக்கிய கோசம்

“வேங்கடத்தை விடமாட்டோம்
வேங்கடம் தமிழகத்தின் எல்லை
தமிழா தூங்காதே!
தணிகை ( திருத்தனி) தமிழர்களுக்கே!

திருப்பதி தமிழ்நாட்டுக்கு கிடைக்காததிற்கு தமிழ் பொதுஜனங்களின் புத்தியும் காரணம் என்று நம்பினார் ம.பொ.சி.

தமிழர்கள் திருப்பதிக்கு கூட்டம் கூட்டமாக போகவேண்டும்.அதன் மூலம் தமிழ் மொழியின் ஆதிக்கம் திருப்பதியில் தெரிய வேண்டும் என்றும் அதன் மூலம் திருப்பதி தமிழகத்திற்கு என்ற தார்மீக கருத்திற்கு வலு கிடைக்குமென்றும் நம்பினார்.

ஆனால் தமிழக மக்கள் திருவரங்கம்,ஆழ்வார் திருநகரி,திருப்பெரும்புதூர் போன்றவற்றுக்குத்தான் போனார்களே தவிர திருப்பதியை சரியாய் கவனிக்கவில்லை என்று எண்ணினார்.ஆனால் ஆந்திரர்களுக்கு திருப்பதியே எல்லாம்.அவர்கள் எல்லாம் திருப்பதில் குவிந்து குவிந்து அவர்களுடைய இடமாகவே ஆக்கிவிட்டதாக ம.பொ.சி வருத்தப்பட்டார்.

முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் திருப்பதி,திருத்தணி,சித்தூர் மாவட்டம். இம்மூன்றும் தமிழகதிற்கானவை என்று தீர்மானம் நிறைவேற்றினார்.

இவருக்கு உற்ற துணையாக ராஜாஜி நிற்கிறார்.ம.பொ.சியின் வடஎல்லை போராட்டத்தின் தீவிரத்தை உணர கீழ்காணும் கதையை ம,பொ.சியே சொல்கிறார்.

<ஆந்திர மாநிலம் பிரிக்கபட வேண்டும் என்று தியாகி பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருக்கிறார்.அவர் மேல் உள்ள மதிப்பால் நான் அவரைப் பார்க்கப் போனேன்.

அவரை வணங்கினேன்.பொட்டி ஸ்ரீராமுலுவுடன் ‘ஆந்திரகேசரி பிரகாசம்’ என்பவரும் இருந்தார்.

பிரகாசம் என்னிடம் ஆந்திரா பிரிக்கப்பட்டால் கொஞ்ச வருடங்கள் சென்னையை தற்காலிக தலைநகராக பகிர்ந்து கொள்ள என்னிடம் கேட்டார்.

நான் ’அது முடியாது’ என்று சொல்ல ஆந்திரகேசரி பிரகாசம் ஆவேசமாக”உங்களுக்கு மாவட்டத்தின் தலைநகரே மாநிலத்தின் தலைநகர் மாதிரி முன்னேறிக்கிடக்கிறது.உதாரணமாக உங்கள் ஈரோட்டைப் பாருங்கள்.எப்பேற்பட்ட வளர்ந்த நகரம்.

ஆனால் எங்களுக்கு ஆந்திரத்தில் அப்படியான எந்த நகரமும் இல்லை.அதனால் தெலுகர்கள்,சென்னையில் தற்காலிக அரசை நியமிக்க உதவ வேண்டும் என்று சொன்னார்.

“அது நடக்காது” என்று கடுமையாக மறுத்து வெளியே வந்தேன்.>

இன்னொரு கட்டத்தில் ம.பொ.சியின் கடும் போராட்டம் தாங்காமல் முதலைமச்சர் பதவியில் உள்ள ராஜாஜியே அவரை கைது பண்ண வேண்டிய நிலமை.ராஜாஜி எவ்வளவோ கேட்டும் ம.பொ.சி அதற்கு இணங்கவில்லை. நின்று போராடி சிறை சென்றார்.

பொட்டி ராமுலு உண்ணாவிரதத்தில் உயிர் துறக்க, ஆந்திரம் கொந்தளித்து நேரு ஆந்திர மாநிலம் அமைக்க ஒப்புதல் கொடுக்கிறார்.

ஆந்திரர்கள் சென்னையை அவர்களுக்கு வேண்டும் என்று தீர்மானமாக கேட்கிறார்கள்.

சென்னையை தற்காலிக தலைநகரமாகவாது கேட்கிறார்கள்.ம.பொ.சி வெறித்தனமாக மறுக்கிறார்.

உடனே மாநகராட்சியை கூட்டி சென்னையை குடுக்க முடியாது என்று உரையாற்றி தீர்மானம் கொண்டுவரச் செய்கிறார்.

ஒருவேளை சென்னையை ஆந்திரத்திற்கு கொடுத்து விட்டால் சென்னைக்கும் ஆந்திரத்திற்கும் இடையே உள்ள தமிழக் பகுதிகள் எங்கே போகும்.அதுவும் ஆந்திரத்திற்கா? என்று கேள்வி எழுப்பினார்.

அங்கே ‘சென்னை மனதே’ என்று ராயலசீமா தெலுகர்கள் போராடி சிக்கலை அதிகப்படுத்துகின்றனர்.

நேரு ‘வான்சூ’ என்னும் ராஜஸ்தானிய நீதிபதியை விசாரிக்க சொல்கிறார்.

வான்சூவிடம் ம.பொ.சி பல இலக்கிய,உண்மை ஆதாரங்களை கொடுத்து திருத்தணி,சென்னை,திருப்பதி எல்லாமும் தமிழகத்துக்கே என்று விளக்குகிறார்.

இருப்பினும் நீதிபதி சொன்ன ஆலோசனைப்படி சென்னையை இருமாநிலங்களுக்கும் தற்காலிகமாக கொடுக்கலாம் என்று நேரு எண்ணுவதாக செய்திகள் வர ம.பொ.சி கவலையானார்.

பின் ராஜாஜியுடன் ஆலோசனை செய்தபடி, ராஜாஜி நேருவிடம் போய் “சென்னையை தற்காலிகமாக ஆந்திரத்திற்கு உபயோகிக்க கொடுத்தால் நான் பதவி விலகுவேன்.அதன் பின் வேறு ஒருவரை நியமித்துக் கொள்ளுங்கள்” என்று சொல்ல நேரு யோசிக்கிறார்.

பின் ம.பொ.சியின் மிக அருமையான உண்மையை விளக்கும் சென்னை மாநகராட்சி கூட்டத்தின் உரையை நேரு படிக்க நேரிடுகிறது.

இதற்கிடையில் 2000 தந்திகள் நேருவுக்கு போகிறது.அதில் இப்போது சென்னையை கொடுத்தால் பின் அது இரண்டு இனத்திற்கான மாபெரும் கலவரமாக வெடித்து, தமிழ்நாடு ஆந்திர எல்லைபகுதி நிரந்தர பதட்ட பகுதியாக ஆகிவிடும் என்ற செய்தி இருந்தது.

ராஜாஜியின் மிரட்டல்,ம.பொ.சியின் உரை.2000 தந்திகள் எல்லாம் சேர்த்து நேருவை யோசிக்க வைத்தன.

முடிவாக சென்னை தமிழகத்திற்கே சொந்தமானது, ஆந்திரா அதன் இடத்திலேயே ஒரு நகரத்தை தலைநகரமாக கொள்ளும் என்கிற நிம்மதி பெருமூச்சி விடும் அறிக்கையை நேரு வாசிக்கிறார்.

இப்படியாக சென்னையை மீட்டு தமிழகத்தில் ஒட்ட வைத்தவர் ம.பொ.சி அவர்களே.

இன்னும் இவர் போராடியதில் 1960 ஆம் ஆண்டு திருத்தனியில் 460 கிராமங்களும்,சித்தூரில் 26 கிராமங்களும் தமிழ்நாட்டில் இணைந்தன.ம.பொ.சியின் போராட்டத்தில் தமிழகத்திற்கு 415 சதுர கிமீ நிலம் கிடைத்தது.

இனிமேல் ம.பொ.சி யாரென்று கேட்டால் உடனே சொல்லுங்கள்... “அவர் உரிமையை மீட்டவர்” என்று.