Saturday 10 August 2013

பூமியின் விட்டம்...

ஒன்றை புரிந்து கொள்ளும் போது ஏற்படும் மகிழ்ச்சி, இருபது வயதில் பிடித்த பெண்ணோடு ஒன்றாய் பீச் மணலை அலைந்தபடியே பேசிக்கொண்டிருப்பதை போன்றது.

ஆனால் நாம் மிக லேட்டாக புரிந்து கொள்வது அல்லது வாழ்க்கை முழுவதும் புரிந்து கொள்ளாமலேயே இருக்க முயற்சிப்பது அறிவியல். அது பற்றி ஒரு பேஷனே நம் யாரிடமும் கிடையாது.

கிரேக்க அறிஞர் எரஸ்தனீஸ்(Eratosthenes) ஒரு விசயம் கேள்விப்பட்டார்.

சியன் (syene) நகரில் குறிப்பிட்ட காலத்தில் (ஜூன் 21)நிழலே இருப்பதில்லை.பகல்களும் மிக நீளமாக இருக்கின்றன என்று கேள்விப்பட்டார்.

அதன் அர்த்தம் சூரியன், சியன் நகரின் நேர் மேலே இருக்கிறது.எந்த கோணத்திலும் மாறி இருக்கவில்லை.மிகச்சரியாக மேலே இருக்கிறது.

எரஸ்தனீஸ் இருப்பது அலக்சண்டிரியாவில்.எரஸ்தனீஸ் ஜூன் 21 ஆம் தேதி வரை காத்திருந்தார்.

நண்பகலில் ’சன் டயல்’ சூரிய கடிகாரம் முன்னால் நின்றிருந்தார்.

சூரிய கடிகாரம் என்றால் நீள ஸ்கேல் ஒன்றை செங்குத்தாக நீற்க வைத்திருப்பதை கற்பனை செய்து கொள்ளுங்கள்.சூரியனின் ஒளி படும் போத் நிழல் வருமல்லவா.அதை வைத்து நேரத்தை கணக்கிடும் முறை.அந்த ‘சன் டையலின்’ நிழலை அளந்து கொண்டார்.

அதை வைத்து அலக்சண்டிரியா நகரின் மேல் சூரியன் என்ன கோணத்தில் நிற்கிறது என்பதை கண்டறிந்து ஏழு டிகிரி என்று கணக்கிட்டார்( ( நினைவில் கொள்க அவர் அலக்சண்டிரியாவில் அப்படி அளக்கும் போது சியன் நகரில் சூரியன் பூஜ்யம் டிகிரியில் நேராக நிற்கிறது).

அப்படியானால் ஒரு வட்டத்தின் சுற்றளவில் இருக்கும் சியன் நகரத்திற்கும் அலக்சண்டிரியா நகருக்கும் இடையே ஏழு டிகிரி கோணம் இருக்கிறது.

ஏழு டிகிரி என்றால் பூமி வட்டத்தின் சுற்றளவில் அம்பதில் ஒரு பங்கு (1/50) தூரம் இரண்டு நகருக்கும் இடையே இருக்கிறது. ( மொத்த வட்ட டிகிரி 360. 7/360 என்பது கிட்டத்தட்ட 1/50 ஆகும்.

இப்போது எரஸ்தனீஸ் ஒட்டகத்தையோ எடுத்துக் கொண்டார்.ஜாம் ஜாமென்று சியன் நகரை நோக்கி பயணம் செய்தார்.அப்படி பயணம் செய்ததில் இரண்டு நகருக்கும் இடையே உள்ள தூரமாக 805 கிலோ மீட்டர்கள் என்று கண்டுபிடித்தார்.

அதைஐம்பதால் பெருக்கினார்.( அலக்சிண்டிரியாவுக்கு சியனுக்கும் உள்ள தூரம் பூமியின் சுற்றளவில் 1/50 பங்கு.அதுக்குதான் அந்த ஏழு டிகிரி அளவு. .
அப்படி பெருக்கினால் அவருக்கு 40,230 கிமீ என்பது பூமியின் சுற்றளவாய் கிடைத்தது.

இப்போது விஞ்ஞானிகள் மிகத்துல்லியமாக 40,007 கிமீ என்று அதை கண்டு பிடித்திருக்கிறார்கள்.

எரஸ்தனீஸ் கண்டுபிடித்தற்கும் இப்போதையவர்கள் கண்டுபிடித்ததிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

இந்த பூமி எவ்வளவு பெரியது.அதன் சுற்றளவை கண்டுபிடிக்கலாம் என்று நினைத்ததே ஒரு புரட்சி சிந்தனைதான்.அதை செய்தும் காட்டிய எரஸ்தனீஸைப் பற்றி எத்தனை பள்ளி மாணவர்களுக்கு கல்லூரி மாணவர்களுக்குத் தெரியும் அல்லது ஆசிரியர்களுக்கு தெரியும்.

இவரைப் போன்றவர்களின் அறிவியல் கதைகளையும் கண்டுபிடிப்புகளையும் மூன்றாம் வகுப்பிலிருந்தே மாணவர்களுக்கு சொல்லி கொடுத்து அறிவியலைப் பற்றி ஒரு வெறியை ஏற்றிவிட்டால், பிற்காலத்தில் உருப்படியான விஞ்ஞானிகள் வர வாய்ப்புண்டு.

வல்லரசாவதற்கு நிறைய ஹார்ட் ஒர்க் பண்ணனும் \\

No comments:

Post a Comment