Sunday, 4 August 2013

அசோகரை கண்டுபிடித்த பிரின்செப் ...

1819 ஆம் வருசம் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு ஜேம்ஸ் பிரின்செப்(James Princep) வந்த காரணம் “நாணயங்கள்” உற்பத்தி செய்வதை கண்காணிக்க.

பழைய நாணயங்களை ஆராய்வது அவருக்கு பிடிக்கும்.அறிவியலில் ஆர்வம் உடையவர், நல்ல கட்டிடகலை கலைஞர்,ஒவியம் வரைவதில் நிபுணர்.இப்படி பலமுகங்கள் உண்டு பிரின்செப்சுக்கு.ரபீர்ந்தநாத் தாகூரின் தாத்தா, ராம்மோகன் ராய் போன்றவர்கள் நண்பர்கள்.

பிரின்செப் குதிரையில் உலா போகும் போது இரண்டு பெரிய உயரமான தூண்களை(ஸ்தூபாக்கள்) பார்த்திருக்கிறார். அதில் ”ஊசிமனிதர்கள்” போன்ற விநோதமான எழுத்துக்கள் அடங்கிய வாசகங்கள் அவரை ஈர்க்கிறது.

இது என்ன மொழி என்று அங்குள்ள மக்களிடமும் அறிஞர்களிடமும் கேட்கிறார்.யாருக்கும் தெரியவில்லை( அவர்கள் இம்மை மறுமை இறைவன் என்று சதா சாமி பாதங்களில் விழுந்து பிறவி பெருங்கடலை கடக்க தெப்பம் கண்டுபிடிக்கும் பணியில் இருக்கிறார்களே).

பிரின்செப் “ஏஸியாட்டிக் சொசைட்டி” என்று ஆராய்ச்சி சங்கத்தில் உள்ளவராகையால், அது மாதிரி எழுத்துக்கள் இந்தியாவில் எங்கெல்லாம் இருக்கிறது என்று தேடச்சொல்கிறார்.

ஒரிசாவில் ”தஹ்லி” என்ற இடத்திலும், குஜராத்தில் “கிர்னர்” என்ற இடத்திலும் இன்னும் இந்தியா முழுக்க மைசூர் வரை கிடைக்கிறது

அது மாதிரியான ஊசிமுனை எழுத்துக்கள்.இதற்கு முன்னால் இந்த எழுத்துக்களை யாராவது ஆராய்ந்திருக்கிறார்க்ளா என்று பார்த்தால். ஒருவர் செய்திருக்கிறார்.அவர் “அது அலெக்ஸாண்டர் இந்தியாவுக்கு படைஎடுத்து வென்ற பிறகு எழுதி வைத்த கல்வெட்டு என்று அசால்டாக சொல்லிவிட்டு போய்விட்டார்.

அலெக்சாண்டர் எங்கே டில்லி வந்தார்? அவர் பஞ்சாப் பாதி கூட வரவில்லையே என்று அந்த கருதுகோளை அப்போதே நிராகரித்தார் பிரின்செப்.

அது சமஸ்கிரத்தின் மூலமான் “தேவநாகரியும்” இல்லை.புராணங்கள் கற்ற வேதபண்டிதர்கள் இப்படி ஒரு மொழியே தங்களுக்கு தெரியாது என்று சாதித்துவிட்டனர்.

பிரின்செப் அந்த கேள்வியுடனே அலைந்தார்.

ஒருநாள் யோசித்துக்கொண்டே நடக்கும் போது, ஒரு சிறிய ஸ்தூபாவின் உடைந்த பகுதியை பார்க்கிறார்.அதில் மூன்று வாக்கியத்தில் மூன்று இடத்திலும் ஒரே வார்த்தைகள் இருக்கிறது.

ஒரு ஃபிளாக்ஷ் அடிக்கிறது பிரின்செப்சுக்கு.
பொதுவாக யாராவது ஒரு ”தானம்” கொடுத்தால் அதை வாக்கியத்தின் முதலிலோ அல்லது இறுதியிலோ “தானம்” இன்னார் என்று எழுதிவைக்க்கும் வழக்கம் அன்றே இருந்திருக்கிறது,சமஸ்கிருதத்திலும் “தா,ன,ம்” என்றுதான் அது வரும். அதுமாதிரி இந்த “ஊசிமனிதர்கள்” எழுத்து மொழியில் ஏன் இந்த மூன்று எழுத்துக்களும் “தா அல்லது த” , “ன” “ம்” என்பதை குறிப்பதாக இருக்ககூடாது.பிடித்து விட்டார்.

பிராமி எழுத்துக்களின்  மூன்று எழுத்துக்களை வெற்றிகரமாக கண்டுவிட்டார்.இந்தியாவில் இருந்து எல்லா பிராமி எழுத்த்க்கள் கல்வெட்டையும் பிரதி எடுத்து ஒவ்வொன்றாய் கண்டுபிடித்தார்.அந்த பிராமி எழுத்தக்களுக்கும் “பாலி” மொழிக்கு சம்பந்தம் இருப்பதை சொன்னார்.

அந்த கல்வெட்டுகள் எல்லாவற்றிலும் “தேவநாம்சி பியதாசி ராஜா ஹேவம் அஹா” என்று தொடங்கியது. அதற்கு அர்த்தம் என்னவென்றால் “கடவுளுக்கு விருப்பமான பியதாசி ராஜா சொல்வது என்னவென்றால்” .

எல்லா வாக்கியத்திலும் “தேவாம்சி பியதாசி” என்று ராஜா பேர் சொல்லப்பட்டதால் பிரின்ஸ்செப்புக்கு குழப்பம். ராஜாவின் பேர் “பியதாசி” என்பதா இன்னும் எதாவது இருக்கிறதா? என்பது மாதிரி.

அப்போது இலங்கையில் இருந்து ஒருவர் ஒருவர் தகவல் கொடுக்கிறார்”பாஸ் இங்கே இலங்கை மன்னன் பற்றிய கல்வெட்டிலும் இலங்கை மன்னன் பேர்” தேவநாம்சி பியதாசி” என்றே போட்டிருக்கிறது. இதைக்கேட்டதும் பிரின்செப்ஸ் குழம்பிவிட்டார்.

அதற்கு அடுத்தாற்போல இன்னொரு தகவலும் வருகிறது இலங்கையிலிருந்து “ பாஸ்.சொல்ல மறந்துட்டேனே அந்த இலங்கை மன்னன் “தேவநாம்சி பியதாசி” என்ற பட்டத்தை பெரிய இந்திய சக்கரவர்த்தியிடம் பகிர்ந்தே பெற்றுள்ளார்” .

பிரின்செப்ஸ் நிமிர்ந்து உட்காரும்போது. இன்னொரு தகவல் கர்நாடகம் மைசூரில் மாஸ்கி என்ற இடத்தில் இருந்து வருகிறது” பாஸ்.இங்கே இருக்கும் கல்வெட்டுகளில் மன்னன் பெயர்” தேவநாம்சி பியதாசி அசோகன்” என்று இருக்கிறது.அந்த சக்கரவர்த்தியின் பெயர் “அசோகர்” . அசோக சக்கரவர்த்தி ( இதை எழுதும் போது எனக்கு சிலிர்க்கிறது).

மவுரியரின் பேரனான அசோகர் பற்றி அதுவரை வரலாறு கவனிக்கவில்லை. அவன் ஒரு அடையாளம் தெரியாத மன்னர் என்றே நினைத்து வந்துள்ளனர்.ஆனால் பிரின்செப்ஸ் என்ற ஆங்கிலேயர்தான் அசோகரை கண்டுபிடித்தார்.
அதன் பிறகு அசோகரின் எல்லா கல்வெட்டுகளையும் படித்து முடித்தார்.அவர் படித்து புரிந்து கொண்டது இவை.

-எல்லா மன்னர்கள் போல இந்திரன் சந்திரன் என்று மட்டும் அசோகர் தன்னை பற்றி எழுதிவைக்கவில்லை.தன்னை ஒரு அவதாரமாக முன்னிருத்தவே செய்யவில்லை.தான் செய்த பாவங்களையும் கல்வெட்டிலே செதுக்கியுள்ளார்.

-பல இடங்களில் வெட்கத்தை விட்டு மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

-அசோகர் காலத்தில் மிருகவதை கடுமையாக தடுக்கப்பட்டுள்ளது

-தம்மா என்ற தர்ம சக்கரத்தை அடிப்படையாக கொண்டு மிகப்பெரிய “தர்மம் “ பற்றி பேக்ஷனோடு வாழ்ந்திருக்கிறார் அசோகர்.

-சாப்பிடும் போது அரிசி பால் சர்க்கரை கலந்த “கீர்” வகை இருந்தால் அசோகர் மகிழ்வாராம்.

இதுமாதிரி நிறைய. இந்த கட்டுரை அசோகர் பத்தின கட்டுரை அல்ல. ஹீரோ பிரின்செப்ஸ் பற்றின கட்டுரை.

இப்படியாக  தூங்காமல் கல்வெட்டுகளை ஆராய பணியாற்றிய பிரின்செப்சால் தன் உடல்நலத்தை பேணமுடியவில்லை.

அவரைக் கட்டாயப்படுத்தி இங்கிலாந்து கூட்டிசென்றார்கள். அங்கு கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு, 1840 ஆம் வருடம் இறந்து போகிறார்.

தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்துகிறீர்கள்.அந்த ஒரு நிமிட மவுனத்தில் தான் தேசிக்கொடியை உற்று நிதானமாக உள்வாங்குகிறீர்கள்.

அடடே! அது என்ன பாஸ் நடுவல இருக்கிறது

அதுதான் “அசோகசக்கரம்”. இருபத்தி நான்கு ஆரங்களை உடையது.

அது யாருடையது? கேள்விலேயே பதில் இருக்கு. அது அசோகரோட “தர்மசக்கரம்”. அது அசோகரட தர்ம சக்கரம்ன்னு யாருப்பா சொன்னது? என்ன புருஃப்?

அது கல்வெட்டுக்களில் இருக்கிறது.

சரி. கல்வெட்டில் என்ன ஹிந்தியிலா இருந்தது, அல்லது தமிழிலா? அல்லது கிரேக்கத்திலா?

அது வந்து ஆங் அந்த கல்வெட்டெல்லாம் “பிராமி” மொழியில் இருந்தது. அத “அசோக பிராமி எழுத்துன்னும் சொல்வாங்களாம்.

அந்த பிராமி எழுத்துக்கள முதல் முதல்ல அர்த்தம் பண்ணிக்க கத்துகொடுத்தது யாருப்பா? தெரியல பாஸ். தேட் டீடேய்ல்ஸ் அன்ஃபார்சுனேட்லி ஐ டோண்ட் நோ?

சரி நான் சொல்றேன் அத கண்டு பிடிச்சது “ஜேம்ஸ் பிரின்செப்”.

இனிமேல் அசோகரை பத்தி நினைக்கும்போதெல்லாம் ஜேம்ஸ் பிரின்செப்பும் உங்க நினைவுக்கு வரனும்.

No comments:

Post a Comment