Wednesday 21 August 2013

பத்து பொது விசயங்கள்...

-மாட்டை கடந்து போகும் போது அதன் வாலால் சுள்ளென்று அடி வாங்கியிருக்கிறீர்களா ?

-நல்ல ஆப்பிளை உருட்டி உருட்டி வாங்கலாம் என்கிற முடிவெடுக்கும் போது, அதில் மனித நகத்தழும்பை பார்த்திருக்கிறீர்களா?

-சாலையில் போகையில் பாதி குடித்துப்போட்ட வாட்டர் பாக்கெட்டை மிதித்து அதன் தண்ணீர் கால்களில் பட்டிருக்கிறதா?

-பொது இடத்தில் சத்தமாக வாயுவை பிரிக்க கூச்சப்பட்டு நாசூக்காக பிருக்ஷ்டத்தை உயர்த்திருக்கிறீர்களா?

-நண்பனிடம் நாம் கற்றுக்கொண்ட பெரிய விசயத்தை ஆர்வத்துடன் விளக்கி கொண்டிருக்கும் போதே பாதியில் அவன் “மச்சி இந்த வாரம் சனிக்கிழமை புரோகிராம் என்னடா? என்று கேட்டிருக்கானா?

-சேவாக்கோ, பீட்டர்சனோ பவுலிங்கை எதிர்கொண்டு கரெக்டாக க்ஷாட் அடிக்கும் போது உங்கள் அம்மாவோ அப்பாவோ தற்செயலாக மறைத்திருக்கிறார்களா?

-முழுக்கை சட்டையின் ஒரத்தில் ஈரம் பட்டு ஒருநாள் முழுவது உங்களை அது சின்னதாக நனைத்து கொண்டே இருந்திருக்கிறதா?

-வெளி இட ரெஸ்ட் ரூமில் டாய்லட் போகும் போது, கதவில் “வால் கிளிப்” இல்லாமல் உடையை எதில் போட என்று தெரியாமல் கழுத்திலே பாம்பு மாதிரி உடையை போட்டு இருந்தீருக்கிறீர்களா?

-நிற்கும் பஸ்ஸில் ஏறி அரைமணி நேரம் கழித்து, இருபது மீட்டர் தொலைவில் இன்னொரு பஸ்ஸை டிரைவர் ஸ்டார்ட் செய்து, “இதுதான் முதலில் போகும்” என்ற சொல்ல, லொங்கு லொங்கென்று ஒடியிருக்கிறீர்களா?

- முகநூலில் பெரிய கமெண்டை கஸ்டப்பட்டு டைப் செய்து கொண்டிருக்கும் போது, எதாவது பட்டனை தட்டி வேறு பக்கத்துக்கு போய் கமெண்ட் எல்லாம் அழிந்து போயிருக்கிறதா?

சொல்லுங்க... உங்களத்தான்... 





-

1 comment:

  1. எப்போதாவது பொது இடங்களில் இருக்கும் பொழுதே மாதவிலக்காகி உட்கார்ந்தால் உடைகளில் பட்டுவிடும் என்று வீடு திரும்பும் வரை வலியுடன் நின்று கொண்டே பயணித்திருக்கிறீர்களா?

    ReplyDelete