பவுத்தம் விஞ்ஞானம் என்பதை புலன்கள் என்கிறது.கண்,காது,மூக்கு,தொடுதல்,வாய் மூலம் எதை அறிகிறோமோ அதுதான் விஞ்ஞானம்.
புலன்களை இன்னும் தெளிவாக்கி கொள்ளலாமே தவிர,புலன்கள் சொல்லும் அறிவு தாண்டி விஞ்ஞானத்திற்கு வேலை இல்லை,அதனால் மேலும் உள்ளே போகமுடியாது என்றும் சொல்கிறது.அது பற்றியல்ல இந்த பத்தி.
ஆனால் நாம் புலன்களால் என்ன பார்க்கிறோமோ அதையே நம்பியும் இருக்கிறோம்,இருந்து கொண்டிருக்கிறோம்,இருக்கப் போகிறோம்.
முன் காலத்தில் காலரா நோயினால் நம்மூர்களில் இறப்பு நிகழும் போது, மக்கள் செய்த முதல் காரியம் தண்ணீர் கொடுப்பதை நிறுத்தியதுதான்.
தண்ணித் தண்ணியாகத்தானே போகிறது.அதிக தண்ணீர் கொடுத்தால் அதிகமாய் தண்ணீராய் வெளியே போகும்.ஆகையால் நீரை நிறுத்து.
ஆனால் உண்மை அதுவல்ல.வயிற்றுப் போக்கு ஏற்படும் நீர் நிறைய அருந்திக் கொண்டிருந்தாலே போது மானது.அதுவே காலராவை எதிர்க்கும் நல்ல மருந்து.
அயர்லாந்தில் உருளைக்கிழங்கு சாகுபடியில் பூஞ்சைக்காளான் தாக்கி அழுகி,பஞ்சம் நிலவும் போது,பக்கத்தில் நிற்கும் ரயில் வண்டியிலிருந்து வரும் Static Electricity தான் காரணம் என்று பலரும் நம்பினார்கள்.
முதன்முதலில் இந்தியாவில் ‘ஹைட்ரோ பவர்’ எடுக்கும் போது அப்பாவி மக்கள் பலர் “தண்ணியில உள்ள கரண்ட் சத்த எடுத்துட்டா பயிர் எப்படி விளையும்” என்று கேட்டார்களாம்.
அதுமாதிரியே கிரேக்கர்கள் எலி பழைய துணிகளில் இருந்துதான் உருவாகிறது என்று நம்பினார்கள்.
கிறிஸ்து பிறப்பதற்கு முப்பது வருடம் முன்னால் பிறந்த விர்ஜில் என்ற லத்தீன் கவிஞர் விவசாயத்தைப் பற்றி விர்ஜில்’ஸ் ஜியோர்ஜிக்ஸ் (Virgil's georgics)என்ற தன்னுடைய புத்தகம் நான்கில் ,எப்படி தேனீக்களை உற்பத்தி செய்வது என்று சொல்லியிருக்கிறார்.அந்த முறைகளைப் பார்ப்போம்.
- காளையின் மூக்கையும் வாயையும் துணியால் அடைக்கவும்.மூச்சு திணறி இறந்துவிடும்.எதற்காக இப்படி அடைத்துக் கொள்கிறோம் என்றால்,அப்போதுதான் ஆன்மா வெளியே போகாது.
- தோலை கிழித்து எடுத்துக் கொள்ளவும்
-பின் அந்த காளையின் உடலை விட்டுச் செல்லவும்.
-ஒரு வாரம் பிறகு தேனிக்கள் அந்த உடலிருந்து வரும்.
படித்து விட்டு சிரிக்கக் கூடாது.கிறிஸ்து பிறக்கும் முன் ஐரோப்பாவில் இருந்த விஞ்ஞான புத்தகத்தில் உள்ள செய்திதான்.பிரச்சனை என்னவென்றால் அவர்கள் அரைகுறை புலன்களால் ஆராய்ச்சி செய்தார்கள்.அழுகிய உடலில் இருந்து தேனி வடிவத்தில் ஒரு ஈ வந்தது.அதை தேனி என்றார்கள். அது தேனீயா இல்லையா என்று யாருக்கும் தெரியாது?
இந்த விர்ஜில் எழுதிய புத்தகத்தில் தேனி வரும் முறை பற்றி சொன்னதற்கு ஒத்து ஊதுவதாக கிரேக்க தொன்மத்தில் உள்ள கதையை சுருக்கமாக சொல்லிவிடுகிறேன்.
பெருங்கடவுள் அப்பல்லோவின் மகன் அரிஸ்டஸ், தேனீக்களின் தேவனாக இருக்கிறான்.
எப்படி தேனிக்களை வளர்ப்பது என்று அவன் அம்மா பூமித்தாய் கயாவின், தேவதைகள் சொல்லிக்கொடுக்கின்றன.
அரிஸ்டஸ் நிறைய தேனீக்கள் வளர்த்து தேன் எடுத்து வந்தான்.
அப்போது அரிஸ்டஸுக்கும்,ஒரிபஸின் மனைவி யூரிடைஸுக்கும் இடையே முறை தவறிய காதல் வருகிறது.அரிஸ்டஸுடன் அவசரமாக வெளியேற நினைக்கும் யூரிடைஸ் தேவதை தெரியாமல் பாம்பொன்றை மிதித்து விட பாம்பு யூரிடைஸை கொன்று விடுகிறது.
இதனால் கோபமான யூரிடைஸின் ’தேவதைகள்’, அரிஸ்டஸ் வளர்க்கும் எல்லாதேனீக்களையும் கொன்று விட, அரிஸ்டஸ் கவலையுற்று அம்மா பூமித்தாய் கயாவிடம் போகிறான்.
அவள் புரோடீஸைப் என்னும் தேவனை பார்க்க சொல்ல புரோட்டீஸ் எப்படி தேனீக்களை மறு உற்பத்தி பற்றி சொல்கிறார் அரிஸ்டஸிடம்.
அது
-இலைகள் அடர்ந்த அறையில் நான்கு காளைகளையும்,நான்கு கன்றுகளையும் கொன்று வைத்துவிடு
-பின் அவற்றின் உடல்களை ஒன்பது நாட்கள் தொந்தரவு செய்யாமல் தனி அறையில் வைக்க வேண்டும்,
அரிஸ்டாஸ் அப்படியே செய்ய, ஒன்பது நாட்கள் பிறகு தேனீக்கள் அந்த காளையின் உடலில் இருந்து வெளியே வருகின்றன.
இப்படியாக தேனீககள் மிருகங்களின் உடலில் இருந்துதான் ,பிறக்கிறது என்பதாக கடுமையான நம்பிக்கை இருந்திருக்கிறது.
1966 ஆம் ஆண்டு ஃப்ரான்சிஸ்கோ ரெடி என்பவர்,தேனீக்கள் அது மாதிரி காளை மற்று மிருகங்களின் உடலில் இருந்து வரவில்லை என்பதை நிருபித்தார்.
பின் எவை தேனீக்கள் ரூபத்தில் இறந்த உடல்களில் இருந்து வருகிறது.பார்க்க அசலாய் தேனீககள் மாதிரி தெரியும் Hoover flies என்ற ஈக்கள்தாம் அது.
அதை பார்க்க தேனீ போன்றே இருக்கிறது.ஆனால் தேனியில்லை.
இப்படியாக இந்த ‘ஹூவர் ஃப்ளைஸை’ ப்பார்த்து தேனீ என்று ஏமாந்திருக்கிறாகள் பலர்.

No comments:
Post a Comment