Tuesday, 26 June 2012

குழந்தைகள் ஆண்கள் பெண்கள்

பொதுவாக சீரியஸ் இலக்கியவாதிகளால் ஒதுக்கி தள்ளப்பட்ட நாவல் சுந்தர ராமசாமியின் “குழந்தைகள் ஆண்கள் பெண்கள்’.

ஆனால் என்னளவில் அதிகம் பிடித்த நாவல்களில் ஒன்று.

அந்த நாவலில் வரும் பாலு என்ற தாழ்வு மனப்பான்மை கொண்ட சிறுவன் நான்தான் என்ற அழ்மன எண்ணம் கூட காரணமாய் இருக்கலாம்.

பாலு வரும் இடத்தை எல்லாம் எத்தனை முறை படித்தாலும் தீராது.

எஸ்.ஆர்.எஸ் என்பவர் தீவிர ஒழுங்குவாதி. எதுவுமே பெர்பெக்டாக இருக்க வெண்டும்.

அவருக்கும் அவர் பையன் (சிறுவன்) பாலுவுக்கும் இருக்கும் உறவு சிக்கல்தான் கதைக்களம்.

பாலு ஒரு குடையை தொலைத்து விடுகிறான்.எஸ்.ஆர்.எஸ் கடும் கோபம் கொண்டு குடையை கொண்டு வந்தால்தான் வீட்டுக்குள் வர வேண்டும் என்று சொல்ல அது பாலுவின் மனதை பாதிக்கிறது.

பின்னால் ஒரு மனநல டாக்டர் பாலுவை சோதித்துவிட்டு எஸ்.ஆர்.எஸ் இடம் பேசும் இடம் இருக்கிறதே... அடடா ! அற்புதம்.

அந்த மனநல டாக்டர் சொல்லும் முக்கியமான பாயிண்ட். “ குழந்தைகளுக்கு தண்டனையை விட அந்த தண்டனையில் இருக்கும் நாடகத்தனம் தான் பாதிப்பை ஏற்படுத்துகிறது” .

எவ்வளவு அருமையான வார்த்தைகள்

நிற்க.

“நீயா நானா “ புரொகிராமில் ஒரு சமூக சேவகர்(ஆண்) சீஃப் கெஸ்டாக வந்திருந்தார். அவர் சொன்ன சம்பவத்தை சொல்கிறேன்.

அவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது, ஏதோ தவறு செய்தற்காக, மற்றொரு தவறு செய்த பெண்ணின் காதை பிடித்து தோப்புகாரணம் போட செய்தாராம் ஆசிரியர்.

அந்த சீஃப் கெஸ்டுக்கு அறுபது வயது இருக்கும். அனால் அத்தனை வருடம் கழித்து அந்த சம்பவத்தை அழாமல் அவரால் சொல்ல முடியவில்லை.

பார்க்கும்ப்போது என்னையும் அழவைத்தது அது.(அவரின் தழுதழுப்பு)

அவர் ஆசிரியர் ’ஒரு அடி’ கொடுத்து விட்டிருந்தால் அன்றே அதை எல்லோரும் மறந்திருப்பார்கள். ஆனால் அந்த ஆசிரியர் கொடுத்த தண்டனையின் நாடகத்தனம் அவரை அறுபது வயதிலும் அழச்செய்கிறது.

இதைத்தான் சு.ரா சொல்கிறார்.

தி.ஜானகிராமன் “முள்முடி” சிறுகதையில் இதை பக்காவா சொல்லி இருப்பார்.

எழுத்தாளர் களந்தை பீர்முகம்மது என் மாமாவின் நெருங்கிய நண்பர்.

புத்தக கண்காட்சியில் மாமா, களந்தை பீர்முகம்மதுவிடம் என்னை அறிமுக படுத்த (அப்போ நான் சின்ன பையன்) அவரிடம் நான் கேட்ட முதல் கேள்வி “ “குழந்தைகள் ஆண்கள் பெண்கள்’ உங்களுக்கு பிடித்திருந்தா சார்.

அவர் யோசித்து ”பிடித்திருந்தது . ஆனால் அதில் 20 % பாகத்தை எடிட் செய்து வெளியிட்டிருந்தால் இன்னும் அற்புதமாய் இருந்திருக்கும்” என்றார்.

எனக்கு சந்தோசம் பிடிபடவில்லை.

களந்தை பீர்முகம்மது மேல் அப்போது வந்த மரியாதை இருக்கே... அட போங்க பாஸ்... :))

2 comments:

  1. ஒரு வேளை அந்த தண்டனை யை உங்களுக்கு கொடுத்திருந்தால் நீங்கள் அதை என்ஜாய் செய்துருபீர்களா விஜய் ......................... but jokes apart, உங்கள் கதைகளில் என்னை மிகவும் பாதித்த கதை இது .......................

    ReplyDelete