Wednesday, 27 June 2012

கதை போல ஒன்று - 20


கதை போல ஒன்று - 20

லைட்டை ஆஃப் பண்ணி , போர்வையை போர்த்தினாள்.

இருட்டுக்கும் அந்தரங்கத்துக்கும் ,அப்படி ஒரு ராசி.

அவளுக்கு , சதுரங்க நகர்த்துதலாய் அவன் பேசியது எல்லாமே நினைவுக்கு வந்து தொலைக்கின்றது.

எப்படி பேசுகிறான்.

அவன் பேசும்போது எவ்வளவுதான்
ரசிக்கவில்லை  போன்று முகபாவனை வைத்திருந்தாலும், மீறி ஒரு ரசிப்பு கண்சுருக்கலோ, புன்சிரிப்போ செய்து விடுகிறாள்.

-என் தங்கச்சிய பிளஸ் டுல கம்பியூட்டர் சயின்ஸ் சேர்க்கலாமா ? இல்ல ஃபர்ஸ்ட் குரூப் சேர்க்கலாமா

-நேத்து உங்கள் பத்தி என் டைரில எழுதி வைச்சேன்.

-உங்க டிரஸ் ரொம்ப அழகு. காஸ்ட்லியா ?
 ஏன் கேக்குறேன்னா இவ்வளவு அழகா நான் ’ஒயிட் கலர் சுடி’ பாத்ததே இல்லை

-டெய்லி கேரட் சாப்பிடுங்கப்பா. இப்போ ’ஐ புரோ’ டிரிம்   பண்ணிருக்கீங்க, சூப்பரா இருக்கு. ”வேகஸிங்” கிளாமரா  இருக்கு.
ஆனா ஸ்கின் ஆரோக்கியாமான இருக்கனுமில்ல

-நேத்து உங்கள் பத்தி என் அக்காகிட்ட சொன்னேன். “என்னடா எப்பவும் அவங்க பெருமையே பேசுறியேன்னு திட்டுனாங்க.
 நானும் பதிலுக்கு அவ கிட்ட சண்ட போட்டேன்.
அக்காவுக்கு, வர்ற சண்டே பர்த்டே. புடவ எடுக்கனும் ஷாப்பிங் வர்றீங்களா ?

-இந்த சாட்டர்டே சண்டே ஏங்க வருது, ஸ்கெட்சால வரைஞ்சா மாதிரி இருக்கிற ,’உங்க முகத்தெ’ ரெண்டு நாள் பாக்க முடியாதே.

-ஹலோ சும்மாதான் போட்டேன். ஏன் ஆபீஸுக்கு வரல. அய்யோ உடம்பு சரியில்லையா. நான் வேணுன்னா வரட்டா ? வேணாமா.
டாக்டர பாத்து டேப்லட்ஸ எடுத்துக்கோங்க.

- இதென்ன நெயில் பாலீக்ஷ் மாத்திட்டீங்களா? ஸ்டட் கூட புதுசு போல இருக்கே. அழகாயிருக்குப்பா ?

-நேத்து “Magladene sister's ன்னு ஒரு படம் பார்த்தேங்க. ஒரு பொண்ண ஒருத்தன் பலாத்காரம் செய்றான். அதுக்காக அந்த பொண்ண
 சேரிட்டி ஹோம் மாதிரி ஒரு இடத்துல வைச்சி காலம் பூரா அடிமை வேலை செய்ய வைக்கிறாங்க. பாவங்க பொண்ணுங்க. அதுல ஒரு கேரக்டர். அழகுன்னா அழகு உங்களே மாதிரி, அவ மூக்க பாத்தீங்கன்ன உங்க மூக்கு மாதிரியே எடுப்பா , க்ஷார்ப்பா ...

-என்ன கழுத்த ஒரு மாதிரி சாய்ச்சு வெச்சிருக்கீங்க. கழுத்து வலியா ? கழுத்த அசைச்சு அசைச்சு வலிக்குதா இல்லையான்னு செக் பண்ணி பண்ணி பாக்காதீங்க. இதோ நான் போய் ’மூவ்’ ம் டேப்லட்ஸும் வாங்கி வரேன்.

-போன வாரம்ன்னு நினைக்கிறேன், ஒரு யெல்லோ கலர் காட்டன் சாரியில வந்தீங்களே. தேவதை மாதிரி இருந்தீங்க.

- வீட்டு பக்கத்துல ஒரு சின்ன பையன்ங்க . கஸ்டபட்டவன். மூணு வருசமா ஃபீஸ் கட்டுறேன். அவன் புக்ஸ் செலவ நீங்க ஏத்துகிறீங்களா ? உங்கள பத்தி அவன்கிட்ட சொல்லி இருக்கேன். உஙகளக்கு என்ன பேரு சொல்லி இருக்கேன் தெரியுமா “தேவதை அக்கா” ன்னு
  ஹா ஹா ஹா! என்ன எதுவும் சொல்ல மாட்டேங்கிறீங்க. அப்படி கூப்பிடுறது பிடிக்கலையா ? சரி இனி கூப்பிடல. ஆனா அதுதாங்க உங்களுக்கு பொருத்தமான பேரு.

- நாளைக்கு வரும் போது எனக்கு பிடிச்ச ”லெமன் ரைஸும் பொட்டட்டோ ஃபிரையும்” எடுத்துட்டு வர்றீங்க.

-அடுத்த வாரம் மும்பை போயிட்டு டு டேஸ்ல வந்துருவேன். உங்களுக்கு என்ன கிஃப்ட்டு வேணும். வேணாம்ன்னு சொன்னா நான் மும்பைக்கே போகல.

- என் கனவுல நீங்க வந்தீங்க. அன்பா என் தலைய கோதி விட்டீங்க. அதுல விகற்பமே இல்ல. மெரூன் கலர் சுடி போட்டு , ஸாப்டா ...


என்னதான் அவள் தத்துவம் படிக்கிறவளானாலும். தன்னம்பிக்கை உடையவளானாலும் அவன மாதிரி “கன்னிங் பெல்லோ”  பையன் நல்லவனா ? கெட்டவனா ? என்று எப்படி கண்டுபிடிப்பாள்.

அட இதப்பார்டா! இந்த பொண்ண !
மறுபடியும் போர்வை கிட்டு அவன் பேச்சை ரசிக்குது...

No comments:

Post a Comment