Monday 7 March 2016

'With respect to’

'With respect to' என்பதை இப்படி புரிய வைக்க முயற்சி செய்தேன்.
மழை பெய்யும் போது உப்பளம் வைத்திருப்பவனுக்கு பிரச்சனை.
விவசாயம் செய்பவனுக்கு மகிழ்ச்சி.
அப்படியானால்
மழை 'With respect to’ உப்பளக்காரன்- கெட்டது
மழை ‘ 'With respect to’ விவசாயி- நல்லது.
ராவணனுக்கு சப்போர் பண்றதுல அவன் கூட இருக்கிற மூணு பேரு மூணு முடிவு எடுக்குறாங்க.
கும்பகர்ணன், விபீஷணன், இந்திரஜித்
கும்பகர்ணன் என்ன சொல்றான்னா “அண்ணா நீ செய்தது தப்பு. ஆனாலும் உனக்குதான் நான் சப்போர்ட் செய்வேன்”
விபீஷணன் சொல்றான் “அண்ணா நீ செய்தது தப்பு. அதனால உன்கிட்ட நான் இருக்க மாட்டேன்னு ராமன் கிட்ட போயிருரான்”
இந்திரஜித் ” அப்பா நீ செய்தது கரெக்ட். நான் உனக்கு சப்போர்ட் பண்றேன்னு” சொல்றான்.
அப்போ 'With respect to' ராவணன்
கும்பகர்ணன் - கொஞ்சம் உபயோகம். ஏன்னா மனசார முழுமூச்சா அவனால சண்டை போட முடியாது
விபீஷணன் - சுத்த வேஸ்ட். உபயோகமே இல்ல.
இந்திரஜித் - ரொம்ப உபயோகம். முழு ஆதரவு கொடுக்கிறான்.
அதே இது 'With respect to' ராமன்
கும்பகர்ணன் - ரொம்ப பிரச்சனையில்லை. மனசு அளவுல கும்பகர்ணன் ராவணன அதிகம ஆதரிக்கல. அதனால பிரச்சனை கம்மி
விபீஷணன் - ரொம்ப உபயோகம். அண்ணன எதுத்து ராமன் கிட்டவே வந்துட்டான்.
இந்திரஜித் - ரொம்ப பிரச்சனை. கடுமையா சண்ட போடுவான்.
அப்ப
இந்த மூணு பேரும் 'With respect to' ராவணன் எப்படியெல்லாம் எப்படியெல்லாம் மாறி மாறி வர்றாங்க.
அதே மூணு பேரு 'With respect to' ராமன் எப்படியெல்லாம் மாறி மாறி வர்றாங்க.
இதுதான் 'With respect to' வோட அர்த்தம்.
இந்த லாஜிக் பத்தி யோசி...
பிற்காலத்தில் கேல்குலஸ் கற்றுக் கொள்ள இது உபயோகமாயிருக்கலாம்

No comments:

Post a Comment