Monday 7 March 2016

பார்த்து பேசவும்...

இருபத்திமூன்றாம் புலிக்கேசியில் ஒரு காவலாளி
“மன்னா நான் பிள்ளைக் குட்டிகள் பெற்றவன் மன்னா” என்பார்.
அதை அந்த அமைச்சர் “மன்னாஇவன் பிள்ளைக் குட்டி பெற்று ஆண்மையில் சிறந்தவன் என்ற கர்வத்தில் பேசுகிறான் மன்னா” என்று போட்டுக் கொடுப்பார்.
சில சமயம் நாம் சாதரணமாக பேசும் சில டயலாக்குகள் கூட பிரச்சனையை உண்டு பண்ணி விடும்.
கல்யாணமான புதிதில் மனைவிக்கு சுரிதார் செலக்ட் செய்வதில் மிகுந்த ஆர்வமாய் இருப்பேன்.
அத்தனை வருடங்கள் பெண்களைப் பார்த்து இந்த டிரஸ் நல்லாயிருக்கும் என்று எனக்கு தோன்றிய ரசனையெல்லாம் சேர்த்து என்ஜாய் செய்து செலக்ட் செய்வேன்.
மனைவியும் அதை அனுமதித்திருந்தார்.
வழக்கமாக புரசைவாக்கத்தில் ஒன்றிரண்டு சிறிய கடைகளில் எடுப்போம்.கிட்டத்தட்ட கலரை முன்முடிவு செய்துவிட்டே போவதால் எளிதாக முடிந்துவிடும்.
ஒருநாள் திநகரில் ஏதோ ஒரு ஜவுளி கடலுக்குச் சென்று விட்டோம். அங்கே பிடித்தது பிரச்சனை.
ரகம் ரகமாக பல வெரைட்டிகள் கிடப்பதால் எதை எடுப்பது என்று தெரியவில்லை. மனைவி அவரே தேர்ந்தெடுப்பதாய் களத்தில் குதித்தார்.
இதைப் பார்த்தார். அதைப் பார்த்தார். நானும் கூட சேர்ந்து பார்த்தேன். பார்த்தேன் பார்த்தேன் பார்த்துக் கொண்டே இருந்தேன்.
டிரஸ் எடுத்த பாடில்லை. சோர்வாக ஆரம்பித்தேன். குறிப்பிட்ட கட்டத்தில் எரிச்சலானேன். எந்த உடல்மொழியும் காட்டாமல் மூன்றாம் மனிதனாய் மனைவி தேர்ந்தெடுப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன்.
“நீங்க எதுவும் பாக்க மாட்டேங்கிறீங்க”
“ம்ம்ம் பாக்குறேனே”
“இல்ல இண்டிரஸ்டே இல்லையே”
“யப்பா கால் எல்லாம் வலிக்குது. நா அந்தப் பக்கம் உக்காந்திருக்கேன். நீ என்ன டிரஸ் வேணுமின்னாலும் எடு. பில் நா பே பண்ணிர்ரேன்” என்று எரிச்சலில் சொன்னேன்.
“என்ன சொன்னீங்க”
“நா ஒண்ணும் சொல்லலியே.நீ ஏன் இவ்ளோ லேட் ஆக்குறன்னு கேட்டேன்”
“நீங்க பே பண்ணுவீங்களா. நீங்கதான் எடுத்துத் தர்றீங்கன்னு திமிரா?”
“இல்ல நா அப்படி சொல்ல வரல”
“அப்படிதான் சொல்றீங்க. நா பே பண்ணிருவேன்னா என்ன அர்த்தம். அதானே அர்த்தம். எனக்கு அப்ப்டி ஒரு டிரஸ்ஸே வேண்டாம்”
“தயவு செய்து கத்தாத. நா தப்பான அர்த்ததுல சொல்லன்னு உனக்கே தெரியும். ஏன் இப்படி படுத்துற. அந்த பொண்ணுங்க நம்மளையே பாக்குதுங்க பாரு”
“நீங்க நா பே பண்ணிர்ரேன்னு கத்தும்போதுதான் அவுங்க முதல்ல பாத்தாங்க. உங்களுக்கு அவ்வளவு கர்வமா? எனக்கு வேண்டாம்”
நான் பத்து பதினைந்து நிமிடம் கெஞ்சி கூத்தாடி சமாதானப்படுத்தி வேர்த்து,குரல் நடுங்கி டிரஸை எடுக்க வைத்தேன்.
அப்படியே மொத்தமாக சரணடைந்த பிறகு மன்னிப்பு கிடைத்தது.
அதன் பிறகு அந்த “நா பே பண்ணிர்ரேன்ங்கிற” வாக்கியத்த எடுக்கவே மாட்டேன்.
ஆகவே புதிதாய் திருமணம் செய்து கொண்ட நண்பர்களே
சரிவர புரிந்துணர்வு வரும் வரையில் உங்கள் லைஃப் பார்டனர்
வடிவேலு மற்றும் அந்த அமைச்சரின் கலவையாகக் எப்போது வேண்டுமானாலும் திடீர் திடீரென்று மாறலாம்.
கவனமாக பேசிப் பழகுங்கள்.

No comments:

Post a Comment