Monday, 7 March 2016

தேசப்பற்றோடு இந்துவெறி...

சினிமா நாயகர்கள் மக்கள் மனதில் எப்படி இடம் பிடிப்பார்கள் தெரியும்தானே?
அவர்கள் படம் தொடர்ச்சியாக வரும். மக்கள் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் அவர்கள் படம் வரும். வந்து கொண்டே இருக்கும். சினிமாவே பார்க்காதவர்கள் கூட போஸ்டரில் அந்நாயகனை பார்த்தே ஆக வேண்டும் என்ற அளவுக்கு பரப்புவார்கள்.
கொஞ்சம கொஞ்சமாக நாயகனின் உருவ டிசைன் மனதில் பதியும். இக்கட்டத்தில் நாயகன் ஏழைகளுக்கு அரிசி மூட்டை கொடுப்பார். அவர் ரசிகர்களுக்கு நல்லது செய்வார்.
மக்கள் நாயகனை வெறுப்பிலிருந்து வெறுப்பும் இல்லை அன்பும் இல்லை தளத்துக்கு நகர்த்துவார்கள். அப்போது ஏதாவது நல்ல கதையில் நல்ல இயக்குநர்கள் படத்தில் நாயகன் நடிக்க மிக மிக பிரபலமாகிவிடுவார். இதற்கு சிறந்த உதாரணம் எனக்குப் பிடித்த இளைய தளபதி.
இந்துத்துவவாதிகள் “இந்து வெறி” என்னும் நாயகனை இது மாதிரியே வளர்க்கிறார்கள்.
கொஞ்சம் கவனித்துப் பாருங்கள் புரியும்.
சென்னை ஐ.ஐ.டியில் பிரச்சனை செய்தார்கள். “இந்து வெறி”நாயகனை காட்டினார்கள்.
கடுமையாக அடித்து விரட்டப்பட்டார்கள்.
அடுத்து தொடர்ச்சியாக பா.ஜ.க அமைச்சர்கள், சுப்பிரமணியம் சுவாமி என்று ஓவ்வொருத்தரும் இந்த “இந்துவெறி” நாயகனை விடாமல் உயிர்ப்போடு வைத்திருக்கிறார்கள்.
அடுத்து ஜெ.என்.யூவில் வந்து கேவலமாக நடந்து கொண்டிருக்கின்றனர். அங்கேயும் “இந்துவெறி நாயகனை” இந்திய மக்களுக்கு அறிமுகப்படுத்துகின்றனர்.
இப்படி எவ்வளவுதான் மக்கள் நிராகரித்தாலும் நாயகனை வைத்து படம் எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். இதன் மூலம் மூன்று விதத்தில் நாயகனை மக்கள் மனதில் நிறுவுகிறார்கள்.
1.இந்து வெறியர்களுக்கு பிடிக்காததைச் செய்தால் இனி பிரச்சனை வரும். நமக்கு ஏன் வம்பு?.பேசாமல் இருக்கலாம் என்று சாமான்ய மக்களின் மனதில் ஆழமான பயத்தை உண்டு பண்ணி அதன் மூல இந்துவெறியை ஏதோ விதத்தில் எதிர்க்காமல் பார்த்துக் கொள்ளுதல்.
இதுவும் ஒரு மறைமுக இந்துவெறி நாயகனை நிறுவும் தன்மைதான்.
2.இந்துவெறியர்களின் சாமர்த்தியமான எளிய தர்க்க முறைகள். கிறிஸ்டியன இப்படி சொல்றியா? முஸ்லிம்ம நீ இப்படி சொல்றீயா? ஏன் எங்கள மட்டும்? என்பதான எளிய தர்க்க முறைகள்.
இந்த ”எளிய தர்க்க” இந்துவெறி அணுகுமுறையில்தான் நாட்டில் உள்ள இந்து மதத்தைச் சார்ந்த சாதரண மக்கள் வீழ்ந்து விடுகிறார்கள். “ஆமா அவன் சொல்றதும் சரிதான?” என்று தவறாய் யோசிக்க வைக்கப்படுகிறார்கள்.
தனிப்பட்ட முறையில் மிக மிக நல்லவர்களாக இருக்கும் பலரும் இந்துவெறி ஆதரவளராக போய்விடுவது இந்த தந்திரத்தின் விளைவாகத்தான்.
3..இன்னொரு பக்கம் இந்து மத்தின் மீதான அளவில்லாத அறிவியல் கட்டுக்கதைகளை சொல்வதன் மூலம் “இந்துவெறி நாயகனை”நிறுவுவது.
சிதம்பரம் நடராஜர் கால் சுண்டு விரல்ல காந்த மத்திம ரேகையோட மையம் வருது. வட்டத்தின் சுற்றளவுல நடராஜர் கால்விரல் இருக்கு, சுற்றளவுல எப்படி மய்யம் வரும்? என்று கேட்டால் ஒடிவிடுவார்கள்.
அது அப்படி? இது இப்படி என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். எப்படியே இந்துவெறிநாயகன் மக்கள் மனதில் பதிந்தால் போதும். ஏழு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்து விமானம் ஒட்டினான் என்று பேப்பர் பிரசண்ட் செய்கிறார்கள்.
விநாயகரின் யானைத்தலையை பிளாஸ்டிக் சர்ஜரி என்று ஒரு விஞ்ஞானி சொல்கிறார். அது எப்படிங்க. ஒரு யானைத்தலை எவ்வளோ பெரிசா இருக்கும். அதஎப்படி ஒரு மனுசன் கழுத்துல பொருத்த முடியும். அப்படிப் பொருத்தினா மண்ட மட்டும்தான் இருக்கும்.உடம்பு கண்ணுக்கே தெரியாது. இது பற்றியெல்லாம் கேட்டால் சொல்ல மாட்டார்கள். ஆனால் இந்துவெறி நாயகனை முன்னிறுத்திக் கொண்டே இருப்பார்கள்.
சரி இப்போது இந்துவெறி நாயகன் நம் மனதில் நன்றாக படிந்துவிட்டான் என்று வைத்துக் கொள்வோம்.
அடுத்து அவனை ஹிட்டாக்க் வேண்டும். ஏதாவது நல்ல படத்தில் நடித்தால்தானே அவன் ஸ்டார் ஹீரோவாக முடியும்.
அதற்காக கொண்டுவந்த கான்செப்ட்தான் தேசநலன், தேசப்பற்று அனைத்தும்.
இந்துவெறியர்கள் அனைவரும் சொல்லி வைத்தாற் போல தேசப்பற்றுள்ளவர்களாக காட்டிக் கொள்வார்கள்.
இந்த தேசப்பற்று வெறி ஏத்தும் சூழ்நிலைதான் இன்னும் இவர்கள் நினைத்த மாதிரி அமையவில்லை. என்ன செய்ய என்று முழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
உதாரணமாக பாக்கிஸ்தானுடன் கார்க்கில் மாதிரி ஒரு போர் இப்போது வந்தால் மட்டும் போதும். இவர்களுடைய தேசப்பற்று டைரக்டர் ரெடி.
உள்துறை அமைச்சர் சொல்வார்
“நாட்டு மக்களே நாட்டின் நலன் கருதி. அவரவர் வீட்டில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து கும்பிட்டு வாருங்கள். அப்போதுதான் நாம் ஜெயிக்க முடியும். இந்துமதத்தை சேராதவர்களும் கூட இந்த வழிபாட்டை செய்ய வேண்டும்.நாட்டின் நலம் முக்கியமல்லவா? என்பார்.
உடனே தினமலர்,தினமணி,தினந்தந்தி, துக்ளக் மாதிரி ஊடகங்கள் மஞ்சள் பிள்ளையாரின் மகிமை பற்றி எழுதுவார்கள்.
தேசத்துக்காக இதை செய்யாவிட்டால் எப்படி ?என்பார்கள்.
அடுத்த இரண்டு நாட்களில் இடலாகுடிக்கு சென்று இரண்டு முஸ்லிம் வீட்டை போட்டோ எடுத்து “பாருங்கள் தேசத்துக்கு நன்மை செய்யும் மஞ்சள்பிள்ளையாரை வீட்டில் வைக்க மறுக்கும் முஸ்லிம் இவர்.
இவர் அப்துல் கலாம் மாதிரி நல்ல முஸ்லிம் இல்லை.
ஜாதி மைய்யத்தை தூண்டிய வைதீக மதத்தின் ஊற்றுக் கண்ணாக வெங்கடாஜலபதி இருந்தாலும் அவரை கும்பிட்டார் நல்ல முஸ்லிம் அப்துல் கலாம்.
ஆனால் இந்த முஸ்லிமோ ஒரே ஒரு மஞ்சள் பிள்ளையார் வைக்கவில்லை.நாட்டுப் பற்றில்லாவதர்கள் இவர்கள் என்பார்கள்.
மறுநாள் பிரதமரிடம் இருந்து அறிவிப்பு வரும். “நான் மதச்சார்ப்பில்லாதவன். ஆனாலும் போர் முடியும் வரை நாட்டின் முன்னேற்றத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு அனைவரும் மஞ்சள் பிள்ளையாரை வைத்து வழிபட வேண்டும். இல்லையென்றால் சட்டம் உங்கள் மேல் பாயும்” என்பார்.
பிள்ளையாரை தேசத்தின் பெயரால் எல்லா வீட்டுக்கும் கொண்டு போயாகிவிட்டதா?
அடுத்த வருடம் விநாயகர் சதூர்த்தி வரும்.அதற்கு முன்னரே தினமலர் செய்தி வெளியிடும். “விநாயகர் சதூர்த்தி இந்திய மக்கள் அனைவரும் கொண்டாடும் பண்டிகையாகும்.தேசப்ற்றை பறைசாற்றும் இப்பண்டிகையில் முஸ்லிம்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது.
கலந்து கொள்ளாத முஸ்லிம்களை தண்டிக்கும் யோசனை அறவே இல்லை என்று பிரதமர் சொல்லி இருப்பது அவர் பெருந்தன்மையை காட்டுகிறது.
இந்து சகோதரர்கள் பொறுமை காக்க வேண்டும். என்று எழுதி வைக்கும்..
இப்படியாக தேசப்பற்றையும் ”இந்து வெறி நாயகனை”யும் கோர்த்துவிட்டு இந்து வெறி நாயகனை ஒரு சூப்பர் ஸ்டாராக ஆக்கவேண்டும் என்பதுதான் இவர்கள் குறிக்கோள்.
இது மாதிரி தீய கொள்கைகள் சூப்பர்ஸ்டாராக விடாமல்தான் மாணவர்கள் கூட்டம் போட்டு பேசிகொண்டிருக்கிறார்க்கள்.
தங்களால் முடிந்தவரை சிறுசிறு குழுக்களாக ஏதோ செய்து கொண்டிருக்கிறார்கள்.
இதெல்லாம் புரியாமல் மாங்கொட்டை சாரு நிவேதிதா விகடனில் ஒரு கேள்வி பதிலில் சொல்கிறார்
“ஆங் அது வந்து மன்மோகன் சிங்க விட மோடி நல்லாப் பண்ணுவாருன்னு நினைச்சேன்.ஆனா மோடி சொதப்புறார்” என்கிறார்.
ஒரு எழுத்தாளனின் அரசியல் நுண்ணுணர்வு எவ்வளவு கேவலமாக இருக்கிறது பாருங்கள்.
இந்தியா ஒரு வகுப்பறை மாதிரியும் அதில் மோடி ஒரு கிளாஸ் லீடர் என்பது மாதிரியும்தான் இந்த 62 வயதுவரையிலும் அவர் பெற்ற அரசியல் ஞானத்தில் தெரிந்து வைத்திருக்கிறார்.
மோடிக்குப் பின்னால் இருக்கும் சித்த்தாந்தம் என்ன? அதன் கொடுமை என்ன? எதுவும் தெரியாது.
சாரு ஒரு ”டம்பி டிப்பி” என்றாலும் கூட ஏன் சாருவை இங்கே இழுத்தேன் என்றால்
தமிழகத்தில் உள்ள வெகுஜன எழுத்தாளர்களின் அரசியல் சமூகப் பார்வை இவ்வளவுதான் என்று சொல்ல வருகிறேன்.

1 comment:

  1. If modi succeeded in his aim India's future will be in trouble as we have lots of example abt the problems faced by a country wen it chose religious color. Pakistan Afghanistan etc...

    ReplyDelete