Friday 7 August 2015

திருப்பாணாழ்வார்...

திருப்பாணாழ்வார் கதைப்படி பாணர் குலத்தில் பிறந்த திருப்பாணாழ்வாருக்கு திருவரங்கக் கோவிலில் நுழைய, தாழ்ந்த குலம் என்ற கற்பிதத்தின் பேரில் அனுமதி இல்லை.
ஆனால் இவரோ திருவரங்கனை உருகி பாடி வருகிறார்.
அப்போது லோகசாரங்கர் அரங்கனைப் போற்ற கோவிலுக்கு போய் கொண்டிருக்கிறார். வழியில் நின்று மெய்மறந்து பாடிக் கொண்டிருக்கும் திருப்பாணாழ்வாரை விலக்கும் விதமாகவோ அழைக்கும் விதமாகவோ கல்லைத் தூக்கி எறிகிறார். கல் பட்டு ரத்தம் கொட்டுகிறது.
அன்று லோகசாரங்கர் கனவில் வந்த பெருமாள் முகத்தில் ரத்தம் வடியக் காட்சி கொடுத்து “திருப்பாணாழ்வார் என் பக்தன். அவன் மேல் ஏன் கல்லை எறிந்தாய். நீ செய்தமைக்கு பிராய்சித்தமாக அவனை உன் தோளில் வைத்து என்னருகில் அழைத்து வா” என்று சொல்ல
அது போல லோகசாரங்கர் திருப்பாணாழ்வாரை தூக்கிச் சென்று அரங்கன் அருகில் விட, அரங்கனை அருகில் பார்த்த திருப்பாணாழ்வார் அரங்கனின் ஒவ்வொரு அங்கமாய் பத்து பாடல்களை புகழ்ந்து பாடிவிட்டு, அரங்கனோடவே கலந்து விடுகிறார்.
இக்கதையை முன்னிட்டு எனக்கு சில கேள்விகள் கருத்துக்கள்.
-திருமால் ஒரே ஒரு தாழ்த்தப்பட்ட பக்தனின் ரத்ததிற்கே இவ்வளவு ரியாக்ட் செய்திருக்கிறாரே, அப்படியானால் கோடிக்கணக்கான பக்தர்கள் இது மாதிரி ஆலயத்துக்குள் செல்ல முடியாமல் அழுதிருப்பார்களே அவர்கள் உணர்வுகளுக்கு எல்லாம் ரியாக்ட் செய்யவில்லையே ஏன்?
-திருமாலே இப்படி தாழ்த்தபட்டவர்களின் ஆலய பிரவேசத்தை வலியுறுத்தின பிறகு அதை திருமால் வழி வந்த வைஷ்ணவர்களும், திருமாலின் சொந்தக்காரர்களான சிவன் வழி வந்த சைவர்களும், முருக பக்தர்ளும் பின்பற்றினார்களா? திருமாலே உங்கள் அனைவருக்கும் மெசேஜ்ஜை தெளிவாக சொல்லிவிட்டார். அப்புறமும் ஏன் தாழ்த்தபட்டவர்களை கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுத்தீர்கள் இந்துக்களே.
-புறவயமாக திருப்பாணாழ்வார் லோகசாரங்கர் தோளில் அமர்ந்து கோவிலுக்குள் செல்கிறார்.அதற்குப் பின் வெளிவரவில்லை. அப்படியே அரங்கனோடு கலந்து விட்டார் என்று சொல்கிறார்கள். இந்த இடத்தில் எனக்கு பெருத்த சந்தேகம் வருகிறது. தாழ்த்தப்பட்ட ஒருவன் கோவிலுக்குள் சென்று திரும்பினால் அதுவே மற்ற தாழ்த்தபட்டவர்களுக்கு ஊக்கமாக இருக்கும். அவர் என்ன செய்வார் அருகில் இருந்து பார்த்தேன் அரங்கன் இப்படி அழகாயிருந்தார். அப்படி அழகாயிருந்தார் என்று வெளியே வந்து சொல்லி மற்றவர்களின் ஆசையைத் தூண்ட மாட்டாரா? இதனால் வைதீகர்களுக்குப் பிரச்சனை அல்லவா?
-திருப்பாணாழ்வார் உள்ளே அரங்கனை பற்றி பரவசமாய் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்.
பத்து பாடல்கள் பாடி முடிக்கும் போது ணங்கென்று என்று உலோகமும் எலும்பும் மோதும் ஒசை கேட்கிறது.
இருட்டாகிறது.
-அடுத்த அரைமணி நேரம் மற்ற வேலைகள் நடக்கிறது.
- கோவிலுக்கு வெளியே வந்த லோகசாரங்கர் அழுதுக் கொண்டே அறிவிக்கிறார் “ திருபாணாழ்வார் அரங்கனோடு இரண்டறக் கலந்துவிட்டார். எங்களுக்கு எல்லாம் கொடுக்காத பாக்கியத்தை அரங்கன் திருபாணாழ்வாருக்கு கொடுத்து விட்டார் (ணங்ங்ங்ங்).
எனக்கு என்று இம்மோட்சம் கிடைக்குமோ (ணங்ங்ங்ங்). திருப்பாணாழ்வார் பாடிய ப்த்துப் பாடல்களும் என்று அரங்கனின் புகழ் சொல்லும்.
-இப்போது தாழ்த்தபட்டவர்களுக்கு மகிழ்ச்சி.நம்ம ஆள்கள்ல ஒருத்தர் ஐ.ஐ.டி எண்டிரன்ஸ் எக்ஸாம் எழுதி பாஸாகிற மாதிரி எழுதி அரங்கன் பக்கத்துல போயிட்டார். நம்ம ஆள் ரத்தம் பார்த்து அரங்கன் பதட்டமாயிட்டாருல்லா. இன்னையில இருந்து அவரு நம்ம சாமியும்தான். கோவிலுக்கு தேவையான எல்லா எடுபுடி வேலையையும் நாம இனி மனசார செய்யனும். நம்ம அடிமைத்தனத்த இன்னும் கூட்டனும்.
-ஒரே ஒரு தாழ்தப்பட்ட இளைஞன் லோகசாரங்கரிடம் சென்று கேட்டிருப்பான் “ ஐயா எனக்கும் அரங்கனை பார்க்க வேண்டும்.ஆசையா இருக்கு”
அதற்கு லோகசாரங்கர் சொல்லியிருப்பார் “ ஏன் பார்க்க முடியாது. அரங்கன் அனைவருக்குமானவன். அரங்கனுன்னு உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று யாரும் கிடையாது. நீயும் திருப்பாணாழ்வாரைப் போல பக்தி செலுத்து, அரங்கன் வந்து என் கனவில் சொல்லட்டும். தாராளமா நா உன்னக் கூட்டிட்டுப் போய் அரங்கனை காட்டுகிறேன்”
-இதைக் கேட்ட தாழ்த்தப்பட்ட இளைஞன் நம்பிக்கையோடு போய்விடுகிறான். அப்போது லோகசாரங்கரின் நண்பர் கேட்டியிருப்பார்.” ஏன் அவனை உசுப்பேத்தி விடுகிறாய்”
“வரட்டும் வரட்டும் பாதிலேயே போயிருவான் இவன் மாதிரி அரைகுறை ஆர்வங்கள்.அப்படி கோவிலுக்குள் நுழைய வேண்டியது வந்தாலும் அரங்கனோடு இரண்டறக் கலக்கத்தான் போகிறான்”
-ண்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்.....

No comments:

Post a Comment