Friday, 7 August 2015

தீப்பிடித்தால் கிஸ் அடிங்க...

இன்று தி.நகர் சரவணா செல்வரத்தினம் கடையில் ஆண்கள் ரெடிமேட் சட்டை விற்கும் இடத்துக்கு சென்றிருந்தேன்.
எல்லாக் கடைகளிலும் ஆடித் தள்ளுபடிக்கு கூட்டம் இருக்கும்தான். நெருக்கடி இருக்கும்தான். ஆனால் கடைக்குள் மக்கள் நடக்கும் பாதை கொஞ்சமாவது தெளிவாக இருக்கும்.
ஆனால் சரவணாவிலோ, போத்தீஸிலோ அந்தப் பாதையிலேயே சில பொருட்களை வைத்திருக்கிறார்கள்.
ஒரு மனிதன் நிற்க நடக்க குறைந்தது இரண்ரை அடி பாதை வேண்டும். அது கூட பல இடங்களில் இல்லை.
அதில் ஒரு மூட்டையைத் தூக்கி வைத்திருக்கிறார்கள்.
திருவான்மியூர் எஸ் 2 விலும் அதே கதியே.
திடீரென்று கட்டிடடம் தீ பிடித்தால், மக்கள் தப்பித்து ஒடும் வாசலில் பைக்கை நிறுத்தி வைத்திருப்பார்கள்.
சென்னையில் இது மாதிரி நிறைய பொதுக் கட்டிடங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
இதையெல்லாம் சோதனை செய்ய ஏதுனா அதிகாரிகள் இருக்கிறார்களா என்று தெரியவில்லை.
பெரிய அளவில் விபத்து நடந்த பிறகுதான் பாடம் கற்றுக் கொள்வோம் என்று அடிக்கடி எனக்குத் தோன்றும்.
நான் என் மனைவியிடம் சொல்வேன்.
”இப்போ நாம படம் பாத்துட்டு இருக்கும் போது தியேட்டர்ல தீப் பிடிச்சிருது”
“ம்ம்ம்”
“நாம என்ன பண்ணனும்”
“என்ன பண்ணனும் தப்பிச்சி ஒடப்பாக்கனும்”
“அதுதான் இல்ல. நீ நான் நம்ம வாண்டு மூணு பேரும் முக்கோண வடிவத்துல உட்காரணும்”
“உட்கார்ந்து”
“நா உனக்கு ஒரு கிஸ்ஸு கொடுப்பேன். அந்த கிஸ்ஸ நீ வாண்டுக்கு கொடுக்கனும். வாண்டு எனக்கு கிஸ்ஸு கொடுப்பா. மறுபடி நான் உனக்கு கிஸ்ஸு கொடுப்பேன். இப்படி கிஸ்ஸு முக்கோண வடிவத்துல பிரயாணம் செய்யும். எப்படி எலக்டிரான் நிற்காம ஒடிச்சின்னா கரெண்ட் வருதோ.அது மாதிரி நம்ம கிஸ்ஸால அன்பு வரும்.”
“ம்ம்ம். அன்பு வந்து. அங்க தீப்பிடிக்கிதே.அதுல இருந்து எப்படி தப்பிக்க”
“தப்பிக்க முடியவே முடியாதுன்னுதான் நா சொல்றேன். நம்ம ஊர்ல இருக்கிற பில்டிங்கல தீப்பிடிச்சதுன்னா, தப்பிக்க நினைக்கிறவன்தான் முதல்ல சாவான். தப்பிக்காம இருக்கிறவன் பொறுமையா சாவான். நாம பொறுமையா போவோம். அதுவரைக்கு கிஸ்ஸு விளையாட்டு விளையோடுவோம்”
“கன்ஃபர்மா நீங்க ஒரு லூசுதான்” என்று என் மனைவி முடிப்பார்.
நம்ம நாட்டுல நிறைய பாதுகாப்பு விசயத்தப் பத்தி நினைச்சா பதட்டமா இருக்கும். தூங்கவே முடியாது.
அதுக்கு நம்மள நாமே மனப்பிறழ்வுக்கு உட்படுத்திக்கிட்டா மாதிரி மரத்துப் போனா நிம்மதியா இருக்கலாம்.
பின்குறிப்பு : அபசகுனமா நினைக்காதீங்க பேசாதீங்கன்னு மட்டும் அட்வைஸ் செய்துராதீங்க

No comments:

Post a Comment