Friday, 7 August 2015

இதையெல்லாம் அப்துல் கலாம் செய்திருந்தால், பேசியிருந்தால்

ஒருவேளை இதையெல்லாம் அப்துல் கலாம் செய்திருந்தால், பேசியிருந்தால்
-அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும். இதை இப்போது அர்ச்சகராக இருக்கும் சாதியினர் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும்.
-மாட்டுகறி என்பது ஒரு உணவு. அதை உண்பதை குறை சொல்பவர்கள் முட்டாள்கள்.
- இளவரசன்,கோகுல்ராஜ் போன்றவர்களின் மரணம் வேதனையளிக்கிறது. ஜாதி இந்துக்களின், கட்சிகளின் ஜாதி வெறி அகல வேண்டும். அவர்கள் தாழ்த்தப்பட்ட ஜாதிக்குள் பெண் கொடுத்து பெண் எடுக்க வேண்டும்.
-மக்கள், சாமியார்கள் செய்யும் சித்து வேலைகளில் மூடநம்பிக்கைகளில் இருந்து வெளிவர வேண்டும்.
-புர்க்கா போடுவதை கொண்டாடுவதை பெண்ணடிமைத்தனமாகத்தான் பார்க்கிறேன். முஸ்லிம் பெண்கள் இதை கைவிட வேண்டும்.
-கண்மூடித்தனமாக எந்த ஆராய்ச்சியும் இல்லாமல் மதத்தை ஆதரிப்பதை இளைஞர்கள் விட வேண்டும். அது இந்துவாக இருந்தாலும் சரி இஸ்லாமியனாக இருந்தாலும் சரி.
-தென் தமிழ்நாட்டில் மக்களின் உணர்வுகளை நயமாக சுரண்டி கிறிஸ்தவ மதத்தை பரப்பும் அமைப்புகள் எல்லாம் அதை கைவிட வேண்டும்.
தன்னுடைய அறிவியல் உழைப்போடு, அரசியல்வாதியாக அப்துல் கலாம் மேலே உள்ள மாதிரியெல்லாம் பேசியிருந்தால் அவர் இறுதி ஊர்வலத்துக்கு ஐந்து பேர் கூட போயிருக்க மாட்டார்கள்.
இந்திய சமூகத்துக்கு நல்லவனாக ஒருவன் இருந்தால் மட்டும் பிடிக்காது, அவர்களுடைய ”மெயின் பாயிண்டில்” கைவைக்காத சிக்கல் இல்லாத நல்லவனாக இருக்க வேண்டும்.
அவர்களுக்குதான் மரியாதை மாலை சிலை நெகிழ்ச்சி அழுகை அத்தனையும்.

No comments:

Post a Comment