Friday, 7 August 2015

கிண்டர் ஜாய் காட்டு பால்பேதம்.

”வரும் போது கிண்டர் ஜாய் வாங்கிட்டு வாங்கப்பா” என்ற உத்தரவைப் பணிந்து 35 ரூபாய் கொடுத்து ஒரு கிண்டர் ஜாய் வாங்கி வந்தேன்.
வாங்கி வந்து மகளிடம் கொடுத்து விட்டு, சாப்பிட உட்கார்ந்தேன். பின் மண்டையில் அவள் வந்து தட்டினாள்.
“கேர்ள்ஸுக்கு பிங்க கலர் கிண்டர் ஜாய் இருக்கும் அதுதான் வாங்கனும்ன்னு தெரியாதா?” என்று அதட்டினாள்.
அப்போதுதான் எனக்கு விஷயம் தெரியும். பெண் குழந்தைகளுக்கு பிங்க் கலர் கிண்டர் ஜாயாம். ஆண் குழந்தைகளுக்கு புளூ கலர் கிண்டர் ஜாயாம்.
அவளுக்கு வாங்கிய ஆண் கிண்டர் ஜாயில் வில் அம்பு மாதிரி ஒரு விளையாட்டு இருந்தது. மறுநாள் ஒரு பிங்க கலர் கிண்டர் ஜாய் வாங்கினேன். அதில் வளையல் இருந்தது.
கோபம் வந்தது.
சாக்லேட்டிலே உங்கள் discrimination விளையாட்டை விளையாட ஆரம்பித்து விட்டீர்களா அற்பர்களே? என்று எரிச்சலாயிருந்தது.
கிண்டர் ஜாய் சொல்ல வருவது என்னவென்றால்....
பிங்க் கலர் கிண்டர் ஜாய் சாப்பிடுபவர்களுக்கு பெண்ணுறுப்பு இருக்கும்.
புளூ கலர் கிண்டர் ஜாய் சாப்பிடுபவர்களுக்கு ஆணுறுப்பு இருக்கும்.
பிங்க் கலர் கிண்டர் ஜாய் சாப்பிடுபவர்கள் நளினமானவர்கள்.
புளு கலர் கிண்டர் ஜாய் சாப்பிடுபவர்கள் வீரமானவர்கள்.
பிங்க கலர் கிண்டர் ஜாய் சாப்பிடுபவர்களின் புனிதமான சுத்தமான யோனிக்கு, அவர்கள் குடும்பத்தில் உள்ள புளூ கலர் கிண்டர் ஜாய் சாப்பிடுபவர்கள் பொறுப்பு.
அவர்கள் பிங்க கலர் கிண்டர் சாப்பிடுபவர்களின் யோனியை பாதுகாத்து இன்னொரு புளு கலர் கிண்டர் ஜாய் சாப்பிடுபவரிடம் ஒப்படைப்பார்கள்.
இப்படி பாதுகாத்து ஒப்படைப்பதால் அந்த புளு கலர் கிண்டர் ஜாய் சாப்பிடுபவர்களுக்கு, பிங்க கலர் கிண்டர் ஜாய் சாப்பிடுபவர்கள் அடிமைகள்.
இப்படி பல செய்திகளை கிண்டர் ஜாய் சொல்லாமல் சொல்கிறது.
நான் என்ன சொல்ல வருகிறேன் வாங்க வேண்டும் என்று நினைத்தால் ,
பெண் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் பிங்க கலர் கிண்டர் ஜாயே வாங்காதீர்கள்.
புளுக் கலர் கிண்டர் ஜாயே நீங்களும் வாங்குங்கள்.
உங்கள் குழந்தைக்கு இது ஒரு ஒதுக்குதல் உத்தி என்பதை சும்மா சொல்லிக் கொடுங்கள்.
அதற்கு இரண்டு வயது ஆனாலும் சரி, ஒன்றரை வயதானாலும் சரி, இது ஆணாதிக்கம் என்று சொல்லிக் கொடுங்கள்.
இப்படி குழந்தைகளுக்கு பெரிய பெரிய டேர்மகளை திணிக்கலாமா என்று கேட்டால் திணிக்கலாம் என்றுதான் சொல்வேன்.
நூறுத் திருக்குறளை அர்த்தம் புரியாமல் மனப்பாடம் பண்ண வைக்கிறோம். நிறைய சமஸ்கிருத சுலோகங்களை மனப்பாடம் செய்ய வைக்கிறோம்.
அதெல்லாம் குழந்தை மனதுக்கு ஏற்றதா? கிரகிக்க கூடியதா என்ன?
அப்படித்தான் ஆணாதிக்கம் பற்றிய விழிப்புணர்ச்சியும்.
அடுத்த தலைமுறை பெண் குழந்தையாவது
“என் அண்ணன் என்னை தூக்கிப் போட்டு அடிக்கும். நான் அழுவேன். ஆனா அன்னைக்கு சாயங்காலமே ஐஸ்கிரீம் வாங்கித் தரும். நான் அதை மானங்கெட்டுப் போய் மொச்சக் மொச்சக் என்று தின்பேன்” என்று சொல்லாமல் வளரவேண்டும்

No comments:

Post a Comment