Tuesday 2 October 2012

சண்டை நல்லதா ?

இன்று பஸ்ஸில் ஒரு இளம் கண்டெக்டருக்கும், இளம் பெண்ணுக்கும் சண்டை நடந்தது.

இளம்பெண் கூட்டம் இல்லாத பஸ்ஸில் முன்பக்கம் ஏறினார். கண்டெக்டர் தனக்கான சீட்டில் ஜம்மென்று உட்கார்ந்திருந்தார்.

இளம்பெண் காசை நீட்டி கண்டெக்டர் வருவார் என்று காத்திருக்க. கண்டெக்டர் போகாமால் பெண்ணை இங்கு வா என்று ஒருமையில் விளிக்க, அந்த பெண் கடுப்பாகி நீங்கள் இங்கே வரவும் அதுதான் ரூல்ஸ் என்று பேசவும். கண்டெக்டர் வர முடியாது
 போ என்றார்.

அந்த பெண்ணும் நானும் எடுக்க முடியாது என்று கையில் காசை வைத்தபடியே பயணம் செய்தார்.

இதில் ஞாயம் அந்த பெண் பக்கம்தான் இருக்கிறது.

ஆனால் கண்டெக்டரிடம் சண்டை பேசிய பிறகு அந்த பெண்ணால் நிம்மதியாக பயணம் செய்ய முடியவில்லை.

ஒரு ரெஸ்ட்லெஸ்னஸ். பதட்டம். சைடு வாக்கில் திரும்பி பார்த்தபடியே இருக்கிறார்.

கண்டெக்டருக்கும் பதட்டம்தான். ஞாயப்படி அவர்தான் போய் டிக்கெட் கொடுக்க வேண்டும்.கொடுக்காமல் இருக்கிறோமே. அதோ ஒரு பெண் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்கிறாளே.

பஸ்ஸில் எல்லோரும் பார்க்கிறார்களே என்று.

கண்டெக்டர் வரச்சொன்னதும் அந்த பெண் பகக்த்தில் போய் டிக்கெட் எடுத்து, நிம்மதியாக பாட்டு கேட்டு கொண்டு அந்த பயணத்தை அனுபவித்திருக்கலாம்.

கண்டக்டரும் சட்டென்று முன்னால் போய் டிக்கட்டை கொடுத்து விட்டு அந்த காலி பஸ்ஸின் காற்றை அனுபவித்திருக்கலாம்.

பாழாய் போன ஈகோ இருக்கிறதல்லவா. சின்ன விசயத்திற்கும் சண்டை போட சொல்கிறது.

ஒருவர் தி.நகர் ஜவுளிகடை லிஃப்ட் மேன் தன்னை கையை காட்டி பேசினதுக்காக, புரட்சிக்காரன் ரேஞ்சுக்கு உருமி கொண்டிருந்தார்.

அவரே ஒரு கவர்மெண்ட் ஆபீஸில் நவதுவாரத்தையும் பொத்தி கிடப்பார்.

நான் குவைத்தில் இருக்கும்போது அறை நண்பர் ஒருவர் எப்போதும் தன் தாய்மாமாவை திட்டி கொண்டே இருப்பார்.

காலையில், டீ குடிக்கும் போது, க்ஷாப்பிங் போகும் போது இந்த “பாரஸ்ட் கம்ஃப்” படத்தில் நாயகனின் நண்பன் இறால் மீனை பற்றி பேசிக்கொண்டே இருப்பானே அது மாதிரி.

கொளத்தூரில் இருக்கும் போது பிரவுசிங் போனேன்.

வழியில் டங்கெண்று மிகக்கடுமையாக என் மீது ஒருவர் மோதினார்.

திரும்பி அனிச்சையாய் முறைத்தேன்.

அட தெரியாமல் முறைத்துவிட்டேன் என்று வருந்தினேன். அவர் பார்க்க “தூள்” பசுபதி மாதிரி இருக்கிறார்.

அவர் தப்பை செய்து விட்டு என்னை நோக்கி வேகமாக முஸ்டியை உயர்த்தி வேகமாக வர, நான் அவர் கைகளை கெட்டியாக பிடித்து கொண்டேன்.

அப்புறம் நான் பேசியதை இப்போது நினைத்தாலும் கூச்சமாய் இருக்கிறது “ அண்ணா ஃப்ளீஸ் மன்னிச்சிகோங்க அண்ணா “ எப்படி இருக்கிறது பாருங்கள் கதை.

தப்பு செய்தது அவன்.

ஆனால் மன்னிப்பு கேட்டது நான். அது எனக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியது.

இரண்டாவது சம்பவம்.

கொளத்தூரில் இருந்து திருமங்கலத்திற்கு அப்போது க்ஷேர் ஆட்டோவில் ஏழு ரூபாய் பணம்.

லூகாஸ் பாலம் கட்டிட வேலை நடந்ததால் மிகுந்த நெருக்கடி இருக்கும்.

அதனால் நான் பயணம் செய்த ஆட்டோ டிரைவர் செந்தில்நகர் இறக்கம் இறங்கி , வில்லிவாக்கம் வழி வந்து புது ஆவடி ரோடு பிடித்து சிக்னலை கடந்து திருமங்கலம் வந்தார்.

வர வர அவர் பக்கத்தில் அணைத்து உட்கார்ந்திருந்த என்னிடம் பல கதை பேசினார்.

திருமங்கலம் வந்தவுடன் பத்து ரூபாயை நீட்டினேன்.
மீதி சில்லரை மூன்று ரூபாயை எதிர்பார்த்து.

அவர் எதுவும் சொல்லாமல் ஆட்டோவை எடுக்கவே ஆட்டோவை தட்டினேன் பின்னால். ஆட்டோ நின்றது. வாக்குவாதம் வந்தது.

ஆட்டோ டிரைவர் நேரடியாக என் பிறப்பை சந்தேகித்து கெட்ட வார்த்தைகளை போட்டார். அவர் சுற்றி வந்ததால் பத்து ரூபாயாம.

எனக்கு மூன்று ரூபாய் மேட்டரே இல்லை. ஆனால் அவர் நடந்து கொண்டு விதம் வெறியாக்கியது.

என்னுடைய பையை தரையில் வைத்து விட்டு இன்று சண்டை வந்தால் இவன் என்ன அடித்தாலும் இவன் முகத்தை கடித்தே துப்பி விட வேண்டும் என்று பகக்த்தில் போனேன்.

என் ஆவேசத்தை பார்த்து ஆட்டோ உள்ளே இருந்தவர்களும் கொஞ்சம் பயமானார்கள்.அவ்வள்வு கோபம் என் முகத்தில்.

சட்டென்று அந்த ஆட்டோ டிரைவரை பார்த்து சொன்னேன் “மூன்று ரூபாய் எக்ஸ்டிரா வாங்கிற இல்ல. உன் பொண்டாட்டிய அனுப்பு. என்று கத்தினேன் (உணமையாகவே) .

என்னிடம் இருந்து ஆட்டோகாரர் இதை எதிர்பார்க்கவே இல்லை.

அவர் முன்னுக்குபின் பைத்தியம் மாதிரி பேசினார். அவருக்கு வார்த்தையே வரவில்லை. பத்து ருபாயை வெளியே வீசிவிட்டு போனார்.

நான் எடுத்து பத்திர படுத்தினேன் அந்த ரூபாயை.
அதற்கப்புரம் அந்த சட்டென்று சுருங்கிய ஆட்டோ டிரைவர் முகம் எனக்கு மிகுந்த வேதனையை கொடுத்தது.

பல நாள் பல மாதம் அதை நினைத்து நினைத்து என் வார்த்தைகளுக்காக அந்த ஆட்டோ டிரைவரிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டிருப்பேன்.

ஆக அந்த தூள் பசுபதியிடம் மன்னிப்பு கேட்டதுதான் சிறந்த செயல் என்று என்னளவில் படுகிறது.

சண்டை என்று வந்துவிட்டால் முழுவீச்சில் இறங்க வேண்டும். அப்படி இறங்கினால் நமக்குள்ள இழப்புகளை யோசிக்கும் போது இறங்காமலே ஒதுங்கிவிடலாம்.

உடனே காந்தி ரயிலில் எறியபட்ட போது ஒதுங்கியிருந்தால் உன்ற கதி என்ற கதி என்று கேட்காதீர்கள். அதற்கு பதில் என்னிடம் இல்லை.

கல்யாணம் ஆன புதிதில் 138 ஏ பிடித்து வடசென்னை காலடிபேட்டைக்கு விருந்திற்கு போவதற்காக மனைவியும் நானும் பஸ்ஸில் அமர்ந்திருக்கிறோம்.

எங்கள் சீட்டின் முன் சீட்டின் முதுகை சாய்க்கும் இடம் ரிப்பேராகி உட்காரும் சீட்டில் விழுந்து கிடந்தது.

அம்பேத்கார் காலேஜ் பஸ் ஸ்டாப்பில் கூட்டமாக பசங்கள் ( ஒல்லியா, மண்டையோடு படம் பட்டக்ஸில் இருக்கும் ஜீன்ஸ் போட்டு , நேர் வகிடு எடுத்து, ஹான்ஸ் சாப்பிட்டு , த்தா த்தா என்று சொல்வான்களே அவன்கள்தான் ) சட்டென்று அந்த முதுகை சாய்க்கும் சீட்டை ஒங்கி தட்டி போட்டான்கள் பாருங்கள்.

அதிலிருந்து வந்த கறுப்பு துகள் எல்லாம் நான் ஆசையாய் புரசைவாக்கம் சுடிதார் பார்க்கில் முதன் முதலில் வாங்கி கொடுத்த பிங்க் கலர் சுடிதாரில் ஒட்டி கொண்டன.

செம கோபம் வந்தது ,அந்த காட்டான் கதிரேசன்கள் மன்னிப்பு கூட கேட்கவில்லை.

மனைவி திட்ட போனாள். நான் அவள் கையை இருக்க அமுக்கி சாந்தம் காக்க வேண்டினேன்.

பஸ்ஸில் இருந்து இறங்கிய பிறகு ”நீங்கள்லாம் ஆம்பிளையா” என்று திட்டினாள். நான் சிரித்து வைத்தேன்.

பெண்கள் அப்படித்தான் உசுப்பேத்துவார்கள். நாம் தான் உணர்ச்சிவசப்படக்கூடாது.

மானை தேடி போன அண்ணன் இன்னும் திரும்பவில்லை. நீ போய் பாரு என்றாள் சீதை.

இல்லை அண்ணன் எக்காரணத்தை கொண்டும் உங்களை விட்டு வரக்கூடாதென்று சொல்லிருக்கிறார் என்று இலட்சுமணன் பதில் சொல்ல. ஒ அப்படியா மேட்டர். உன் அண்ணன் சாகட்டும் என்னை அடையலாம் என்று பாத்தியா என்று சீதை உசுப்பேத்ததான் இலக்குவன் ராமனை தேடி போனான்.

பெண்கள் உசுப்பேத்துவதை எல்லாம் காதிலே போடக்கூடாதென்று மனைவிக்கு சொன்னேன்.

எல்லாதுக்கும் கதை சொல்றது சில சமயம் பிடிச்சிருக்கு.

பல சமயம் மொக்கையாகவும் இருக்கு என்றாள் மனைவி.

சும்மா சின்ன விசயத்துக்கும் டென்சன் ஆகி போவதை விட அப்படியே இன்நோர் செய்தால் நிம்மதியாய் இருக்கலாம்தானே .

இந்த ஸ்டேட்டஸை எப்படி முடிக்க என்று தெரியவில்லை.

அதனால் முடித்து கொள்கிறேன்.

No comments:

Post a Comment