Tuesday 2 October 2012

அடையார் டிப்போவும் நானும் ...

இப்போதெல்லாம் அடிக்கடி அடையார் டிப்போவை பார்க்கிறேன்.

ஆறு மாதம் அப்பரண்டிஸில் கடைசி ஒரு மாதம் அடையார் டிப்போவில் வேலை செய்தேன்.

அந்த ஒரு மாதத்தில் பெற்ற அனுபவம் செமத்தியானது.

பஸ்ஸுக்கு பிரஸ் போட்டிருக்கிறேன்.
ஒரு அடி நீளமுள்ள ஒரு சாண் நீட்டிகொண்டிருக்கும் பிரக்ஷ்சை வைத்து பஸ்ஸின் தரையை துடைக்க வேண்டும்.

அங்கே காக்கி டிரஸ்ஸை போட்டு விட்டால் எல்லோரும் ஒன்றுதான். நான் ‘மாணவன்” சார் ! என்று தப்பி
க்க முடியாது.

பஸ்ஸை சுத்தமாக துடைத்திருக்கிறேன்.

எல்லா கெட்ட வார்த்தைகளாலும் ஏச்சு பேச்சு வாங்கி இருக்கிறேன்.

தொழிலாளர்களில் ஆழ்ந்த அன்பை பெற்றிருக்கிறேன்.

லெட்ஜர் லெட்ஜராக டீசல் கணக்கு கூட்டி இருக்கிறேன்.

கார்பன் பேப்பர் குத்தி எழுத தெரியாமல் ஒருவரிடம் உதவி கேட்க அவர் எல்லோர் முன்னாடியும் கத்தி அவமானபடுத்தியதை இப்போது நினைத்தாலும் கலவையான உணர்வு வருகிறது.

சம்பளம் கொடுப்பதற்கு உதவி செய்த்திருக்கிறேன்( கோணியில் கட்டு கட்டாக பணத்தை தூக்கி வந்திருக்கிறேன்) சில விநோத காதலை பார்த்திருக்கிறேன்.

அப்போது தினமலருக்கு போக்குவரத்துக்கும் முட்டிகிச்சாகையால் உயர் அதிகாரிகள் தினமும் என்னை தினமலர் வாங்கி வர சொல்வார்கள்.

சில சமயம் இரண்டு மூன்று பேருக்கு சேர்த்து வாசித்தும் காட்டியிருக்கிறேன்.

ஒரு அதிகாரிக்கு எல்.ஐ.சி யில் பணம் கட்ட் போயிருக்கிறேன்.

இன்னொரு அதிகாரிக்கு தூதுவளை மிட்டாய் வாங்க பல கடைகள் அலைந்திருக்கிறேன்.

பஸ் சட்டர் தைக்கும் அந்தோணி அண்ணனுக்கு உதவியாளாய் இருந்திருக்கிறேன்.

அங்கு வேலை பார்த்ததில் ஒரு விசயத்தை அறிந்திருக்கிறேன். உடல் உழைப்பால் ஏற்படும் பசி.

கொஞ்ச நேரம் வேலை செய்தாலே வயிறு கப கப வென பசிக்க ஆரம்பித்து விடும். வாழ்க்கையில் ஆரோக்கியமான பசியை பத்தொன்பது வயதில் தெரிந்து கொண்டேன்.

அந்த நாளில்தான் டீயை ரசித்து குடித்திருக்கிறேன்.

மதிய உணவில் கீரையை வழித்து இலையை நக்கியிருக்கிறேன்.

முருங்கைக்காய் கிரக்ஷர் மெசினில் பொட்டது போல் என் வாயில் அரைபடும்.

இரவு தூக்கம் இனிமையாய் வரும்.

இப்போது யோசித்து பார்த்தால் அந்த அனுபவங்களுக்கு கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று தோண்றுகிறது.

தினமும் அடையார் டிப்போவை பார்க்கிறேன்.

ஒயிட் காலர் கணவானாக,ஃபார்மல் டிரஸ் ஆளாக தினமும் அடையார் டிப்போவை பார்க்கிறேன்.

No comments:

Post a Comment