Tuesday, 2 October 2012

Fractals தெரியுமா?

Fractions நம்ம எல்லோருக்கும் தெரியும். 1/2 , 4/5 என்று சிறுவயதிலே கரைத்து குடித்து ஜீரணித்திருப்போம்.

ஆனால்

Fractals தெரியுமா?

ஒரு கட்டம் வரைந்து கொள்ளுங்கள். 

அந்த கட்டத்துக்குள் அது மாதிரியான சிறிய கட்டம் வரையவும்.அதுனுள்ளே இன்னும் சிறியது வரையவும்.

இப்போது நீங்கள் ஒரு Fractals செய்திருக்கிறீர்கள்.

அதாவது ஒரு வடிவத்தை மாதிரியே டிசைன் உள்ள பல வடிவங்கள் இருப்பது.

ஆனால் தாய் வடிவத்தை விட ஒன்றுக்கொன்று சிறிதாக போய் கொண்டே இருக்க வேண்டும்.

அல்லது பெரியதாக போய் கொண்டே இருக்க வேண்டும்.

புரிவதில் சிரமம் இருக்கிறதா?

மரக்கிளைகள் Fractals க்கு ஒரு எடுத்துகாட்டு. ஒரு கிளை மாதிரியே ஆன சிறு கிளைகள். அந்த சிறு கிளைகள் மாதிரியே ஆன சிறு சிறு கிளைகள்.

வடிவம் ஒன்று. ஆனால் Scale வெவ்வேறு.

மலை ஏறுபவர்கள் ஒன்றை கண்டுபிடித்தார்கள்.

பெரிய மலையின் வடிவம் அதில் இருக்கும் சிறிய சிறிய பகுதிகளின் வடிவமாகவே இருக்கிறது என்று.

ஒரு மலையை ஏறும் முன்னால் அதன் சிறிய பகுதியின் Geometry ஐ ஆராய்ந்தால் மலை ஏறுவதற்க்கு வசதியாக இருக்குமாம்.

இது மாதிரி Fractals ஆல் நிறைய பிராக்டிக்கல் லாபமும் இருக்கிறது.

அடுத்த முறை யாரையாவது ”அட்டென்சன் சீக்” பண்ண நினைத்தால் ( நண்பனையோ, காதலியோ, மனைவியையோ, யெல்லோ லைன் தோழிகளையோ ) நினைத்தால் உடனே கேளுங்கள் .

உனக்கு Fraction தெரியும். ஆனால் Fractals தெரியுமா என்று.

செமையா வொர்க்கவுட் ஆகும் :)

No comments:

Post a Comment