Tuesday, 2 October 2012

ஒரே வரியில் முடிந்த கடிதம்

பதின் வயது முடியும் வரை அவனுக்கு வங்கிகள் என்றாலே பயம்.( எல்லா கவர்மெண்ட் ஆபீஸும் பயம்தான்).

பள்ளி படிப்பை முடித்து சென்னை வந்த புதிதில் அண்ணன் அவனுக்கு ஒரு விநோதமான அசைணமெண்ட் கொடுத்தான்.

அம்பது ரூபாய் மதிப்புள்ள டிடி (Demand draft) ஒன்றை கேன்சல் செய்வதுதான் அது. 

அவனுக்கு அவன் அண்ணன் சொன்ன வேலையை செய்ய சுத்தமாக பிடிக்கவில்லை.

இருப்பினும் வீட்டில் வெட்டியாக இருந்ததால் போனேன். டிடி செக்சனில் க
ேட்டேன்.

ரொம்ப நேர இழுத்தடிப்புக்கு பிறகு மேனேஜருக்கு ஒரு கடிதம் எழுத சொன்னார்கள்.

அதில் டிடியை இணைக்க சொன்னார்கள்.

செய்தேன்.

அதை கிளார்க் மேனேஜர் ரூமிற்கு கொண்டு போனார்.

அரை மணி நேரம் கழித்து மேனேஜர் கூப்பிடுகிறார் என்று சொல்ல அவன் பதட்டமானான்.

உள்ளே மேனேஜரும் அவனும் மட்டும்.

“தம்பி ஏன் டிடியை கேன்சல் பண்ற”

“தெரியல அண்ணன் செய்ய சொன்னார்.செய்றேன்”

“சரி நீ பேப்பர். புக்கெல்லாம் வாசிப்பியா”

“கொஞ்சம் கொஞ்சம் படிப்பேன் சார்”

“கத புக்கு”

“கொஞ்சம் இண்டிரஸ்ட்டு உண்டு”

“யாரெல்லாம் படிச்சிருக்க”

“சுந்தரராமசாமி, ஜானகிராமன், பாலகுமாரன் இது மாதிரி சார்”

“ஜெயகாந்தன் படிச்சதில்லையா. அவர படி. அவருதான் இலக்கியத்துல டாப்.கருத்துக்கள தைரியமாவும் பளிச்சுன்னும் சொல்லுவார்.அவர படிக்காம கண்ட ஆள்களையும் படிக்கிறியே”

அவன் ஜெயகாந்தன் பேரை தெரியாமல் சொல்லாமல் விட்டுவிட்டான். ஜெயகாந்தனின் ”பாரிஸுக்கு போ” ( அவர்களிடத்தும் பக்திக்கு இசை உண்டு சர்ச் மியூசிக் மாதிரி. ஆனால் நம் மாதிரி இசையே பக்திக்காகத்தான் என்று அலட்டுவதில்லை) அவனுக்கு பிடித்த நாவல் என்று அவரிடம் சொல்லாத குற்றத்திற்காக அவர் பேச்சை கேட்க வேண்டியதாயிற்று.

மேனேஜரே தொடர்ந்தார். “இந்த லட்டர நீதான் எழுதினியாப்பா”

”ஆமா சார்”

”அதுக்குதான் கூப்பிட்டேன்.இந்த லட்டர் எழுதினவர் முகத்த பார்க்கனுமே என்று. இத பார்த்தியா இந்த லட்டர ஒரே செண்டன்ஸ்ல எழுதி முடிச்சிருக்க. அது ரொம்ப கஸ்டம்.அதான் கூப்பிட்டேன். நல்லா எழுதியிருக்க.”

அவனும் எட்டி அவர் டேபிளில் இருக்கும் அவன் எழுதிய லட்டரை பார்த்தான்.

”அட ஆமா நாம அறிஞர் அண்ணா மாதிரி ஒரு பேரா ஒரு செண்டன்ஸ்ல முடிச்சிட்டோமே “. ஆச்சர்யபட்டான்.

மேனேஜர் ”கிராமர் மிஸ்டேக் இருக்கு ஆனா வாக்கிய அமைப்பு அழகா இருக்கு “ என்று சொல்லி எழுந்து கையழுத்து போட்டு. தன் கையால் அவன் முதுகை செல்லமாக ரெண்டு மொத்து மொத்தினார்.

அவன் நாய்குட்டியாக அவரின் பாராட்டு மொத்துகளை ஏற்று கொண்டான்.

ஒரு டோக்கன் கொடுத்தார்கள்.

அவன்முறை வரும் போது கேசியர் அம்பது ரூபாய்க்கு இருபது ரூபாய் கமிசன் எடுத்து முப்பது ரூபாய் கொடுத்தார்.

முப்பது ரூபாயை எடுத்து பாக்கெட்டில் வைத்தான்.

மேனேஜர் அவனை புகழ்ந்தது போதையாய் இருந்தது.

மனசெல்லாம் பூரித்து இருந்தது.

வீட்டுக்கு வந்ததும் அதை சொல்லி சொல்லி நினைத்து நினைத்து மகிழ்ந்தான்.

அங்கீராத்தின் அளவு எவ்வளவு சின்னதானாலும் அது எல்லோருக்கும் பிடித்தே இருக்கிறது.

1 comment:

  1. // பதின் வயது முடியும் வரை அவனுக்கு //
    // வெட்டியாக இருந்ததால் போனேன்.// :D :D :D

    //அங்கீராத்தின் அளவு எவ்வளவு சின்னதானாலும் அது எல்லோருக்கும் பிடித்தே இருக்கிறது.//

    yes yes yes. அப்படி என்ன எழுதியிருந்தீங்கன்னு சொன்னால் நாங்களும் இலக்கியவாதியாக ஆக முயற்சி செய்வோம் இல்லையா. ;)

    ReplyDelete