Tuesday 2 October 2012

படாத இடத்தில் பட்டு...ஐய்யோ நினைக்கவே பயமாய் இருந்தது.

விநாயகர் சதூர்த்தி ஸீசன் ஆதலால் எங்கும் விழாக்கோலம்.

தடபுடல். 

கோயில் சாமி கச்சேரி இளம் ஆண்கள் பெண்கள் ஸ்டேஜில் ஆட்டம் பாட்டம்.

நான் ரசித்தபடியே தெருமுனைக்கு வருகிறேன்.

பெரிய துர்கை சிங்கத்தில் அமர்ந்துள்ளதை சிறு எலக்டிரிக் விளக்குகலால் செய்திருக்கின்றனர். 

அதை பார்த்ததும் இரண்டு விசயம் நினைவுக்கு வந்தது .

முதலாவது அம்மா சிறுவயதில் அடிக்கடி பாடும்
“ஜய ஜய தேவி துர்க்கா தேவி சரணம் “ என்ற பாடலும் “ரக்ச ரக்ச ஜெகன் மாதா. சர்வ சக்தி ஜெய துர்க்கா” என்ற கம்பீரமான பாடலும்.

கேட்கும்போதே சிலிர்க்கும்.

இரண்டாவது விசயம் அந்த எலக்டிரிக் சிறுவிளக்குகள் சாமியை செய்வது பற்றின நாவல் “வன்னிமரத்தாலி”
பற்றினது.

எழுதியது பாலகுமாரன்.

பிரம்பு முடையும் கணவனும் மனைவியும் கோயில் காண்டிராக்குட்டுகாக முதன் முதலில் எப்படி “பெரிய கட் அவுட் சாமியை” பிரம்பால் செய்கிறார்கள் என்பது பற்றிய நுணுக்கங்களை பாலகுமாரன் அழகாக எழுதியிருப்பார்.

படித்து முடிக்கும் போது மனம் ஆரோக்கியத்தால் விம்மும்.

ஆம்.

பாலகுமாரனின் நல்ல நாவலை படிக்கும் போது மனம் முழுவதும் தன்னம்பிக்கையாலும் ஆராக்கியத்தாலும் திளைக்கும். மறுபடி அந்த நாவலை படிக்க வேண்டும் போல இருந்தது.

அட! இந்த எலக்டிரிக் துர்க்கை எவ்வளவு கலர்புல்லாக இருப்பதோடு இல்லாமல், கலர்ஃபுல்லான நினைவுகளை கூட மலர்த்துகிறாரே.

சரி நேரமாகி விட்டது என்று வீட்டிற்கு வரும் போது, கொஞ்சம் ஆள் இல்லாத தெருவில், லைட்டும் சரியா எரியாத தெருவில் எனக்கு எதிரே வருகிறார் நடுத்தர வயதுடைய ஒருவர்.

லுங்கி அணிந்திருக்கிறார்.

ஒரு கையை வீசியும் ஒரு கையை கீழே இறுக்க தொங்க விட்டும் நடந்து வருகிறார்.

என்னடா ஒரு கைக்கு என்னாச்சு என்கிற ஆர்வத்தில் பக்கத்தில் நான்கடி தூரத்தில் வரும் போதுதான் கூர்ந்து பார்த்ததில் தெரிகிறது, அவர் கையில் ஒரு சவுக்கு கம்பத்தை எடுத்து வருகிறார்.

இருட்டில் சவுக்கு கம்பம் தெரியவில்லை.

நான் மட்டும் வேகமாக நடந்திருந்தால் சவுக்கு கம்பம் என் கால் முட்டியை பெயர்த்திருக்கும். அல்லது படாத இடத்தில் பட்டு...ஐய்யோ நினைக்கவே பயமாய் இருந்தது.

அவர் எந்து குற்ற உணர்வும் இல்லாமல் சவுக்கு கம்பத்தை இருட்டில் பிடித்த படியே போகிறார்.

அதற்கப்புறம் எவன் கால் முட்டி பெயர்ந்து ரத்தமாய் ஒழுகிச்சோ தெரியல.

நம்ம ஆள்களுக்கு சேஃப்டின்னா என்னன்னே தெரியமாட்டேங்குதுப்பா...

No comments:

Post a Comment