அப்பா மேல் சரியான கோபம் விஜய்க்கு.
இப்படி இருந்தால் தெருவில் பிச்சைதான் எடுக்கனும் என்பது போன்ற வசனங்கள் அவனுள் எழுந்தது.
மேல் மாடியில் வீட்டு வாடகைக்கு வரும் விசாகபட்டினத்து குடுமபத்திற்கு ஏழாயிரம் ரூபாய் வாடகையை பேசியது விஜய்தான்.
அவர்கள் எவ்வளவோ சொல்லியும் ஏழா

யிரம் வாடகை கொடுத்தால்தான் வீடு என்று கறாராய் சொல்லி விட்டான்.
ஆனால் அவர்களோ அப்பாவிடம் நைசாக பேசி ஐநூறு ரூபாய் குறைத்துவிட்டார்கள்.
அப்பா ஏன் இப்படி பேக்காக இருக்கிறார்.
எப்போதுமா பரிதாபடுவது.
வாடகையை குறைக்கும்போது என்னிடம் கேட்டிருக்க வேண்டாமா?
அப்பா உள்ளே நுழைந்தார். விஜய் ஆவேசத்தில் கத்தினான்.
“ஏம்பா வாடகைய கொறைச்சீங்க.நீங்க பொழைக்கவே மாட்டீங்க.மெண்டலா நீங்க”
அந்த ”மெண்டலா நீங்க” என்ற வார்த்தை அம்மாவின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
அப்பாவே ஒரு நிமிடம் அசந்து விட்டார்.
பொறுமையாக “அதனால என்னப்பா ஐநூறு ரூபாதான. நாமளும் பல இடத்துல வாடகைக்கு இருந்து கஸ்டபட்டுதான் இந்த வீட்ட கட்டுனோம்.
பாவமா இருந்துச்சு அதான்அப்பா சொன்னேன். உன்கிட்ட வார்த்தை சொல்லி இருக்கனும். அது தப்புதான் “ என்றார்.
விஜய் கோவத்தில் கையில் இருந்த புக்கை தரையில் வீசி வெளியே போய்விட்டான்.
அப்பா அதற்கும் அலட்டி கொள்ளவில்லை சாப்பிட்டு டிவி பார்த்து தூங்கிவிட்டார்.
அதில் மேட்டரை பாருங்கள் அந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் கழித்து விஜய் பத்தாயிரத்து ஐநூறு ரூபாய் கொடுத்து வாங்கிய சாம்சங் மொபைலை பஸ்ஸில் அலேக்காக திருடு கொடுத்து விட்டு, அதுபத்தின ஒரு சுரணை உணர்வும் குற்ற உணர்வும் இல்லாமல், தன் அப்பாவை திட்டி கொண்டே இருக்கிறான் வாடகையை குறைத்து வாங்கியதற்காக.
அப்பாவும் அவன் திட்டுவதை கேட்காறாரே ஒழிய, விஜய்யின் தொலைந்து போன மொபைலை பத்தி ஒருவார்த்தை கூட கேட்பதில்லை.

No comments:
Post a Comment