Tuesday, 2 October 2012

கதை போல ஒன்று - 52

க்ஷேர் ஆட்டோவில் அறிமுகமான தோழி ரொம்பவும் நல்லா பேச நட்பு வளர்ந்தது.

பெரிய அழகி இல்லாவிட்டாலும் ஒ.கே தான் அவள்.

ஆர்.சி கிறிஸ்டியன். 

ஆங்கிலத்தில்தான் பேசுவாள்.

நான் வற்புறுத்தி தழிமிழில் பேச வைத்தேன். 

தன் சகோதிரியின் மகள் மேல் அளவற்ற பாசம் வைத்திருப்பவள்.

என் சிஸ்டர் டாட்டருக்கு இது வாங்கிட்டு போறேன்

என் சிஸ்டர் டாட்டர் என் கூடத்தான் தூங்குவாள்

என் சிஸ்டர் டாட்டர் இன்னைக்கு எனக்கு ஆபீஸ் போறதுக்கு முன்னாடி முத்தம் கொடுத்தா

நான் விழி விரித்து அப்படியா , ஆகா சூப்பர் என்று கேட்பேன்.( இந்த கட்டம் முக்கியம். இயற்கையை ரசிப்பவனாக, குழந்தைகளை ரசிப்பவனாக காட்டி கொள்ள வேண்டும்)

கொஞ்ச நாளா பார்க்க வில்லை. அப்புறம் பார்க்கும் போது

”சிஸ்டர் டாட்டருக்கு வைரஸ் ஃபீவர். நேத்துதான் சுகாமாச்சு” என்றாள்.

”உங்க அக்கா குழந்தைக்கு உங்க அக்கா பார்பாங்கல்ல. நீங்க ஏன் லீவு போட்டீங்க.” கேட்டேன்.

அவள் சிரித்தாள்.

“ஏன் சிரிக்கிறீங்க”

“இல்ல அது என் அக்கா இல்ல. என் தங்கச்சி. நான் தான் அக்கா. சிஸ்டர் டாட்டர்ன்னு சொன்னவுடன அக்கான்னு நினைச்சிட்டீங்களா’

அதிர்ச்சியாய் இருந்தது.

“அப்போ உங்களுக்கு கல்யாணம்”

“ரெண்டு வருசம் முன்னால ஆச்சு”

“லவ் மேரேஜ்ஜா அரேஞ்சுடு மேரேஜ்ஜா”

“லவ் தான் ரெண்டு பேரு வீட்ல சண்டை போட்டுட்டு கல்யாணம் செய்ஞ்சு டில்லி போய்ட்டோம்.அங்க எங்களுக்குள்ள செட் ஆகல பிரிஞ்சி வந்துட்டோம்”

“ஏன் என்னாச்சு”

”சின்ன சண்ட வந்தாலும் என்ன ரொம்ப அடிச்சாரு. அதான்.” சிரித்தாள்.

பாவமாயிருந்தது. மனம் கொஞ்சம் கனத்தது.

ஆனால் நான் ரொம்ப்வும் ஆறுதல் அப்படியெல்லாம் போகவில்லை( இந்த இடத்தில் கமிட் ஆனால் வேறு மாதிரி போய்விடும். கவனம் வேண்டும்)

அப்புறம் இரண்டு மாதம் வெளிநாடு போய் திரும்பினேன்.

அவள் திருமங்கலம் பஸ்ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தாள்.

பரவசமாய் “ஹாய் கிறிஸ்டினா” என்றேன்.

‘ஹாய்” சுரத்தே இல்லை.

என்னிடம் சரியாகவே பேசவில்லை.

என்னை பர்பஸாக அவாய்ட் செய்வது தெரிந்தது. நான் அசடியடியே பின் நகர்ந்து
“ஒ.கே பாய்” என்றேன்.

தலையசைத்து அனுப்பி வைத்தாள்.

பஸ்ஸ்டாப்பின் இன்னொரு ஒரத்தில் நிற்க, என் பின்னால் நின்ற நாற்பது வயதான ஆள் அவளிடம் போய் ரொம்பவும் நெருக்கமாய்
அவளிடம் சிரித்து பேசிகொண்டிருந்தார்.

நான் அவளிடம் பேசம் போதும் என்னை பார்த்து அவளின் சொந்தக்காரன் என்று பயந்து வராமல் இருந்திருக்கிறார்.

எரிச்சலாய் இருந்தது.

அவர் தைரியமாக வந்து பேசினால் நான் ஒதுங்கி கொண்டிருப்பேன்.

குள்ள நரி மாதிரி பின்னால் நிற்பாராம்.

என்னை அவாய்ட் செய்வாளாம்.

அப்புறம் அந்த பரதேசி போய் பேசுமாம்.

அவர்கள் சிரித்து நிறைய பஸ்களை விட்டு விடுவது பார்த்தால் குளோஸ் ஆனா மாதிரிதான் இருக்கிறது.

நீ டிரை பண்ணியிருக்கலாம் என்று என்னுடைய சாத்தான் உரக்க கெக்கலித்தது.

அவள் உடம்பை விடு. அது கிடக்கட்டும். ஆனால் அந்த மென்மையான மனது அந்த ஆளிடம் சிக்கி சின்னா பின்னமாகி விடக்கூடாது என்று என்னுடைய புனிதம் பிரார்த்தித்தது .

1 comment:

  1. நல்லாருக்கு சார்

    ReplyDelete