Wednesday, 3 October 2012

தமிழாவது தாத்தாவாவது

அன்னைக்கு எனக்கு தமிழ் மேல ரொம்ப பற்று அதிகமா இருந்துச்சு. 

தமிழுக்காக எதாவது பண்ணனும்ன்னு தோணிச்சு.

கம்பெனியில் ஜெராக்ஸ் எடுக்க போற இடத்துல எத்தனை ஜெராக்ஸ்ன்னு போட்டு டிப்பார்ட்மெண்ட் எல்லாம் எழுதனும் ஒரு லெட்ஜர்ல. 

நான் தமிலில் விஜயபாஸ்கர் என்று எழுதி PIPING DEPT என்று போடுவதற்கு “குழாயியல் துறை” என்று எழுதி தமிலேயே கையெழுத்து போட்டு வந்தேன்.

டீ கொண்டு வரும் பையன் கம்பெனியில் சாயங்காலம் கைய
ெழுத்து வாங்குவான் .

அதிலும் தமிழிலேயே கையெழுத்து போட்டேன்.

அதன் பிறகு கம்பெனியை விட்டு வெளியே வந்ததும் ஏ.டி.எம் யில் பணம் எடுக்கும் போது ஆங்கில மொழியை தேர்ந்தெடுக்கிறீர்களா? அல்லது தமிழை தேர்ந்தெடுக்கிறீர்களா? என்று ஏ.டி.எம் மெசின் கேட்டது.

கவனமாக ஆங்கிலம் என்பதை தேர்ந்தெடுத்தேன்.

தமிழாவது தாத்தாவாவது.... 

No comments:

Post a Comment