Tuesday, 2 October 2012

உபரி உழைப்பு...

டிராண்ஸ்போர்ட்டில் ஆறுமாதம் அப்பரண்டீஸ் வேலை செய்திருக்கிறேன்.

தொழிலாளி ஒருவரிடம் ( கம்யூனிஸ்ட் ஞானி அவர்) எனக்கு கம்யூனிசத்தின் மூலத்தை சொல்லுங்கள் என்று அரித்து கொண்டே இருப்பேன் என் பத்தொன்பது இருபது வயதில்.

அவர் என்னை சிறுவனாக நினைத்து மதிக்கவே மாட்டார். அவருக்கு வேண்டுமென்றே பல பணிவிடைகள் செய்வேன். ( ஒரு ஸீன் தான்). 

அவர் அதை வெறுப்பார். கடைசியில் அவர் எனக்கு ஒன்றே ஒன்று சொன்னார். 

“ஒரு பொ
ருளின் மதிப்பு எப்படி கூடுகிறது என்று யோசி. அது பத்து ரூபாய்க்கு வாங்கி இருபது ரூபாய்க்கு விற்பதால் அல்ல. அது அந்த பொருளை உற்பத்தி செய்யும் தொழிலாளி தன் சம்பளத்துக்கு கொடுக்கும் உழைப்பை விட உபரியாக இழைப்பதால் வருவது “ இத மட்டும் நீ திரும்ப திரும்ப யோசி அப்புறம் அது பத்தின புக்குகள படி என்றார்.

எனக்கு அதை யோசிக்க யோசிக்க பல விசயம் புரிந்தது மாதிரி இருக்கும்.

புரியாதது மாதிரியும் இருக்கும்.

ஆனால் அவரை இப்போதும் வணங்குகிறேன் எனக்கு ஏதோ ஒன்றை யோசிக்க சொல்லி தந்ததற்கு. :))

No comments:

Post a Comment