Friday 13 July 2012

பாஸிட்டுவா பேசுங்க...

ஏழாம் வகுப்பு படிக்கும் போது திருச்செந்தூரில் மாமாவின் மரக்கடையில், ஒரு கிளி ஜோசியரிடம் எனக்கு ஜோசியம் பார்த்தார் மாமா . 

விளையாட்டுக்குதான்.

கிளி எடுத்து தந்த சீட்டை ஜோசியர் பிரிக்க, எனக்கு வந்த படம் அய்யப்பன்.

கிளி ஜோசியர் சொன்னார் “தம்பிக்கு வந்திருக்கிறது அய்யப்பன். அப்படின்னா என்ன அர்த்தம்ன்னா , தம்பி தலையில கருங்கல்லை தூக்கி போட்டாலும் கல்லுதான் ரெண்டா உடையுமே தவிர, தம்பி ஜம்முன்னு இருப்பார்.

அப்போதே மூடநம்பிக்கையை எதிர்த்து ( நாகர்கோவில் பாஸ்டர் ஜான் பிரகாக்ஷின் “ மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் “ மந்திரமா ? தந்திரமா?” ”பேயா? நோயா?” போன்ற அற்புதங்கள்) பல புத்தகங்கள் படித்திருந்தாலும் அவர் வார்த்தை எனக்கு ஒரு “கிக்” காகவே இருந்தது. 

இப்போது வரையிலும் எனக்கு என்ன பிரச்சனை வந்தாலும் அந்த கிளி ஜோசியரின் குரலில் “ தம்பி தலையில கருங்கல்லை தூக்கி போட்டாலும் கல்லுதான் ரெண்டா உடையுமே தவிர, தம்பி ஜம்முன்னு இருப்பார் “ என்ற வசனம்தான் நினைவுக்கு வரும்.

உற்சாகமாய் இருக்கும்.

எப்போதும் சிறுவர்களிடத்தில் பாஸிட்டுவாகவே பேசுவீர்களாக... :))

1 comment:

  1. விஜய் என் வீட்டில் நடந்த சம்பவம். என் சகோதரி 11 ஆம் வகுப்பு படிக்கும்போது அவளுக்கு லேசாக தோளுக்கு பின்னல் முதுகு பக்கத்தில் சிறு வலி ஏற்பட்டது. அது சிறிது சிரிதாக வளர்ந்து தோளில் தொடங்கி, உள்ளங் கை வரை வீங்கி, கையி தூக்கவும் வும் முடியாமல், எந்த வேலையும் செய்ய முடித்யாமல் குறிப்பாக பஸ்ஸில் பள்ளிக்கு செல்ல முடியாமல் போனது. காலாண்டு தேர்வு எழுத முடியாமல் பாதிக்கபட்டாள்.. டாக்டரிடம் சென்று எக்ஸ் ரே எடுத்து பார்த்தல், எந்த கோளாறும் இல்லை என்கிறார்கள். எந்த மருந்து மாத்திரையும் வெலை செய்யவில்லை. அரையாண்டு தேர்வும் எழுத முடியவில்லை. பின்னர் எங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும், யாரோ சொன்னதை கேட்டு, ஒரு முஸ்லிம் சகோதரர் மந்திரிபவரிடம் சென்றோம். அவர் கையை பார்த்து, " இந்த பெண் திருஷ்டி கழிப்பை தாண்டி விட்டாள். அதனால் தன் இப்படி ஆனது என்று கூறினார். எங்களுக்கு நம்புவத இல்லையா என்று புரியாத பொது, வேறு வழி இல்லாமல் அவர் கொடுத்த எண்ணையை வாங்கி வைத்துகொண்டோம்.அவர் என சகோதரியின் கையை மந்தரித்து தோளுக்கு கீழே , முட்டிக்கு மேல் ஒரு தயது கட்டினர். வலி அதற்கு கீழே இறங்கியது, அதற்கு மேலே வலியே இல்லை. அடுத்த வாரம், மந்திரித்து மணிக்கட்டு வரை ஒரு தயது கட்டினர், அதற்கு மேல் வலி இல்லை. பின்னர் அன்று இரவு உள்ளங்கயிளிருந்து சி வர ஆரம்பித்தது. அவளது தாங்க முடியாத வலியை என்னால் இப்போதும் மறக்க முடியாது. அடுத்த ஒரு வாரத்தில் வலி காணமல் போனது.............. நம்புவீர்களா???

    ReplyDelete