”மோசஸ் அது என்னதுடே” .
அது என்னது என்று ஆராயும் முன்னரே மோசஸ் அதை எடுத்து தன் பையில் போட்டு விட்டான்.
எங்க ஸ்கூலுக்கும் கே.ஜே ஆஸ்பிட்டலுக்கும் பின்பக்க மதில் ஒன்றுதான்.ஆஸ்பிட்டலின் கழிவைகளை சில சம்யம் எங்கள் ஸ்கூல் காம்பவுண்டில் கொட்டிவிடுவார்கள்.
ஆஸ்பிட்டல்காரர்களும் ஸ்கூல்காரர்களும் ஒரே கடவுளை வணங்குவதால் அதை கண்டு கொள்வதில்லை என்றெல்லாம் ஸ்கூலில் டீச்சர்கள் பேசிக்கொண்டார்கள்.
நானும் மோசஸ் ஸ்டாலினும் சாயங்காலம் மதிலில் ஒண்ணுக்கடிக்க போகும் போதுதான், அதை பார்த்து அப்படி கேட்டேன்.
பின் மோசஸிடம் கெஞ்சி, அது என்னதுடே என்னதுடேன்னு கேட்க, அவன் காட்டியது பிரமிப்பாக இருந்தது.
மூன்று டிஸ்போஸபில் சிரின்ஞ் என்ற ஊசிகள்.
எனக்கு ஒன்று கேட்டேன் தரவில்லை.
ஐந்தாம் வகுப்பில் மோசஸ் மேல் முதல் பொறாமை அந்த பழைய சிரின்ஜால்தான்.
தினமும் ஸ்கூல் முடிவில், மூன்று சிரிஞ்ஜிலும் நீர் இழுத்து , விரலால் அமுக்கி பீச்சியடிப்பான்.
ஒரு தடவை நானும் விளையாடுகிறேன் என்றால் தரமாட்டான். கெஞ்சி கெஞ்சி அவமானமாய் இருக்கும்.
வெள்ளை ஐஸ்கட்டியின் ஒரத்தில் கருப்புதிராட்சை உள்ள ஐஸ் வாங்கி கொடுத்த பிறகுதான் ஒரே ஒருநாள் விளையாட கொடுத்தான்.
இரவில் தூங்கும் போது பேய் பயம் தெரியாமல் இருக்க “லவ்” வை பற்றியும், பகலில் “லவ்” போன்ற அசிங்கத்தை மறக்க பேயை பற்றியும் நினைக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவனான எனக்கு, எப்போதும் மோசஸ் ஸ்டாலினின் மூன்று சிரிஞ் பற்றியே நினைப்பு வந்து தொல்லை கொடுக்க, இளைத்தேன்.
அதில் ஒன்றையாவது எனக்கு சொந்தமாக்கிவிட வேண்டும் என்ற வெறியின் வீரியம் அடர்த்தியாய் இருந்தது.
குற்றாலம் மணிமுத்தாறு பாபநாசம் டூர் போகும்போது மோசஸ் என்னிடம் மாட்டினான்.
தனக்கு செலவுக்கு கொடுத்திருந்த காசை குற்றாலத்திலேயே ஐஸ்கிரீம் ஆப்பிள் என்று காலி செய்தவன், மணிமுத்தாரில் என்னிடம் கேட்க, ஐந்து ரூபாய் கடனாய் கொடுத்தேன் ,மூன்று நாட்களுக்குள் ருபாயை திரும்ப தந்து விடும் நிபந்தனையோடு.
மூன்று நாட்கள் முடிய, மோசஸ் காசை தரவில்லை. எச்சரிக்கை செய்தேன். “மோசஸ் பாருடே நீ குருசு போட்டு முத்தியிருக்க. காச கொடுத்திரு “.
குருசு போட்டு முத்துவது என்றால், சத்தியம் செய்பவன் தன் விரலால் , சத்தியம் வாங்குபவன் கையில் சிலுவை போட்டு அதை தன் கையால் தொட்டு முத்தம் கொடுக்க வேண்டும்.
மோசஸ் கெஞ்ச, இரண்டு நாள் டைம் கொடுத்தேன்.
அப்போதும் தரவில்லை. மோசஸ் கண்முன்னாலே அவன் பையிலிருந்து மூன்று சிரிஞ்சை எடுத்து கொள்ள மோசஸ் திகைத்தான்.
காசு கொடுப்பதாகவும். சிரிஞ்ஜை எடுக்க வேண்டாம் என்று கெஞ்ச கல்லுளிமங்கனாய் நான்.
“சரிடே ஊசிய வைச்சுக்க. ஆனா பத்திரம் .காசு கொடுத்துட்டு வாங்கிக்கிறேன். சிரிஞ்சி உடஞ்சா நீ செத்தடே “ என்று சொல்லி போனான்.
ஆனந்தமாய் வீட்டில் நான்கு நாட்கள் சிரிஞ்யை வைத்து விளையாடினேன்.
ராபின் புளூ நீலத்தை கரைத்து சிரிஞ்சி வைத்து பீச்சியடித்தேன். கீரைசெடிகளுக்கு சிரிஞ்ச் மூலமாகவே தண்ணீர் கிடைத்தது.
நானும் சிரிஞ்சியுமாய் சுருங்கி போனது என் உலகம்.
காசு கொடுக்க முடியாததால் மோசஸ் என்னிடம் பேசுவதை நிறுத்தி கொண்டான்.
“சிரிஞ் பத்திரம்டே “ இந்த இரண்டு சொல்லை சொல்லும் போது மோசஸின் குரலில் தெரியும் நடுக்கம் பாவமாய்த்தான் இருக்கும்.
ஆனால் சிரிஞ் கொடுக்கும் இன்பத்தின் முன் நியாமாவது தர்மமமாவது.
நாள் வந்தது.
மோசஸ் காலையிலே நக்கலாக அன்று பார்த்து கொண்டிருந்தான். இளிப்பாகவே பகடியாகவே பார்த்தான்.அவன் தன்னம்பிக்கை சுத்தமாக பிடிக்கவில்லை எனக்கு.
சாயங்காலம் வந்தது.
“விஜய் வாடே “
“என்னடே”
“சீரின்சு கொடுடே”
“நீ காச எடு மக்கா “
“அதெல்லாம் கொண்டு வந்திருக்கேன் நீ எடு என் மூணு சிரிஞ்சையும்”
அமைதியாக இருக்க, மோசஸ் என் பையில் இருக்கும் சிரிஞ்சிகளை எடுக்க போக, முந்தி நான் எடுத்து வைத்து கொண்டேன்.
மோசஸ் குரல் கம்மி குழறி ஆவேசமானான்.
“குடுல சிரிஞ்ச” கையை விரித்து காட்டினான். அதில் ஐந்து ஒரு ரூபாய் நாணயம் பளபளத்தது.
இப்போது அதை நான் வாங்கி கொண்டு என் பிரிய சிரின்ஞ்களை அவனிடம் கொடுத்து விட வேண்டும்.
என்னால் எப்படி முடியும் ?வேறு வழியே இல்லையா ? மனதில் கூவினேன்.
இப்போ மோச்ஸ் என் பக்கத்தில் வந்து என்னிடம் சிரிஞ்சை பிடுங்க வர, கையை தட்டி முறைத்தேன்.
“இந்த ஐஞ்சு ரூவாவ நீ குடுக்க லேட்டாயிட்டுல்லா அதனால நீயே வைச்சுக்க. நான் சிரிஞ்ச தரமாட்டேன்”
“உன்ன விடமாட்டேன் ராஸ்கல் “ என்று பாய்ந்தான் மோசஸ்.
என் கைகள் மூன்று சிரிஞ்சையும் இறுக்க பற்றி கொண்டிருந்தது. மோசஸ் கொடுத்த அடி வலியையும் அவமானத்தையும் கொடுக்க, அதற்கும் மேலும் சிரிஞ்சையும் பிடிங்கி விடுவான் என்று தோண்ற ஒடினேன்.
துரத்தினான்.
கிரவுண்டில் தனியே நின்று மூன்று சிரிஞ்சிகளையும் தரையில் போட்டு மோசஸ் கண்முன்னாலயே க்ஷூவால் மிதித்து அரைத்தேன்.
”டுடுக்டிக்டிட் “ என்று சிரிஞ்சிகள் பொடியாவதை மோசஸ் அதிர்ச்சியோடு பார்த்தான்.
அதை ஒடி வந்து எடுத்து, சரியாகி விடாதா என்று பதறினான். முடியாது என்று தெரிந்து அழுதான்.
அழுது கொண்டே என் பக்கத்தில் வந்து “ நான் தான் காசு கொண்டு வந்திருக்கேன் லாடே. பின்ன நீ சிரிஞ்ச கொடுக்க வேண்டியதுதான” என்று சொல்லி கத்தி அழுதான்.
சட்டென்று கையிலிருந்த ஐந்து ஒரு ருபாய் நாண்யங்களையும் என் முகத்தில் ஒங்கி விசினான்.
திரும்பி பார்க்காமல் நடக்க ஆரம்பித்தான்.
வீசப்பட்ட ஐந்து ரூபாய் நாண்யங்கள் முகத்தின் புருவம் பின் உள்ள எலும்பு பகுதியில் கொடுத்த வலியும் , மனதில் இருக்கும் இருண்ட புள்ளிகள் பற்றிய குற்ற உணர்வு கொடுத்த வலியும், மோசஸ் ஸ்டாலினுக்கு நான் செய்த துரோகத்தின் வலியைவிட மிகச்சிறியதாகவே இப்பவும் படுகிறது.

No comments:
Post a Comment