Sunday, 29 July 2012

இந்த எழுத்தாளர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்...


தீராநதி இதழ் ஆரம்பித்த புதிர்தில் சுந்தரராமசாமி, வாசகர் கேள்விகளுக்கு பதில் சொல்லுவார்.

அதில் “வால்கா முதல் கங்கை முதல்” புத்தகத்தை பற்றி வாசகர் கேட்க, அதற்கு சு.ரா சுற்றி வளைத்து
இந்தியர்களுக்கு கருத்தை மிட்டாயாக்கி கொடுத்தால்தான் சாப்பிடுவார்கள் என்று வருத்தபட்டும்.
அமெரிக்காவில் வரும் “For Dummies" புத்தகமே படிக்க கஸ்டமாய் இருக்கும் என்றும் ”வால்கா முதல் கங்கை வரை” புத்தகம் சரியில்லை என்பது மாதிரி சொல்லியிருப்பார்.

முதன் முதலில் சு.ரா மேல் எரிச்சல் வந்தது. அது வரை சு.ரா சொன்ன எல்லாமும் உண்மை என்றே நினைப்பேன்.( பத்தாம் வகுப்புவரை பாலகுமாரன் எனக்கு அப்படி ). அன்று முதல் சு.ரா மேல் உள்ள விமர்சனம்தான் என்ன படிக்க ஆரம்பித்தேன்.

முதலி சாரு நிவேதிதா சு.ரா மேல் வைக்கும் விமர்சனம். சு.ரா ஒரு மத்தியதரமான எழுத்தாளர் என்று நிறைய சொல்லியிருப்பார். அது என்னை ரொம்ப ஈர்க்கவில்லை. ஆனால் “சு.ரா மேட்டிமைதனத்தில் உறையும் அற்பவாதம்” என்கிற கட்டுரை பிடித்திருந்தது.

அந்த கட்டுரையின் டிராபேக் என்னவென்றால் அதில் தெரியும் துவேசம். மற்றபடி அது நல்ல கட்டுரை.இப்படி சு.ரா மேல் ஒரு பேலன்ஸ் வந்தது.

ஒ.கே. அடுத்தது.

சாரு நிவேதிதா அருந்ததிராயின் ஆங்கிலத்தை விமர்சிக்கிறார். அருந்ததி தட்டையாய் எழுதிகிறார் என்கிறார். நான் பெரிய படிப்பாளி இல்லை என்றாலும் சாரு சொல்வது தவறு என்பது என்னளவில் பளிச்சென்று தெரிகிறது.

இவரின் ஆயிரக்கணக்கான வாசகர்களும் இப்படித்தானே நினைப்பார்கள். இப்போது வரை சாருவில் இருந்து தன்னை ஆரம்பிக்கிற வாசகன் சுந்தரராமசாமியின் அற்புத எழுத்துக்களை படிக்காமலேயே போய்விடுகிறானே ! ஜெ.ஜே சில குறிப்புகள் குப்பை என்று சொல்லி வா. மு கோமுவை சிலாகிக்கும் முட்டாள்களையும் சாரு போன்ற எழுத்தாளர்கள் அவர்களை அறியாமல் உருவாக்கி விடுகின்றனர்.

எஸ். ரா “காவல்கோட்டத்தை” ஆயிரம் பக்கம் அபத்தம் என்று அசால்ட்டாக சொல்லிவிடுகிறார். அதை படித்து நானும் முதலில் நம்பிவிட்டேன். பிற்பாடு அது பொய் என்று தெரிகிறது. அதற்கு சாருவேறு எஸ்.ரா வுக்கு சப்போர்ட்டு. ஏனென்றால் அப்போது சாருவும் எஸ்.ராவும் உயிர்மெய் குரூப்.( அப்போதெல்லாம் சாரு மனுக்ஷ்யபுத்திரனை அடிக்கடி சிலாகித்து எழுதுவார். இப்போது விட்டு விட்டார் ). பாஸ்கரதாஸ் நாள் குறிப்பை சாரு பால் கணக்கு புத்தகம் என்கிறார்.

அடுத்து மாமல்லன். மாமல்லனுடைய கட்டுரைகள் மேல் எனக்கு அலாதி காதல். ஆனால் அவர் சாருவின் நல்ல படைப்பான “எக்ஸைலை” வாசிக்கவே முடியவில்லை என்று சொல்ல ஏமாற்றம் வருகிறது. அது நல்லாயில்லை என்று சொன்னாலும் பரவாயில்லை. ஆனால் வாசிக்கவே இல்லை என்று சொன்னால் அது ஏன் என்று எனக்கு புரியவில்லை. என்னளவில் சாருவே வாசிப்பின்பத்தில் தமிழில் முதல் எழுத்தாளர் ( சுஜாதவையும் விட ). பிறகு ஏன் இந்த கமெண்ட் ? தெரியவில்லை.

ஜெயமோகன் நகுலனை பற்றி எழுதிய கட்டுரைகளை க்ஷேர் ஆட்டோவில் போகும் போது படித்து மன உளைச்சல் அடைந்தேன். நகுலனை அவர் திறமைக்கு அதிகமாக நாம் போற்றுகிறோமாம். அவர் எழுத்து மத்திய தரமானாதுதானாம். ஆனால் பூமணி, நாஞ்சில் நாடன் எல்லோரும் சூப்பராம்.

வி.எஸ் நெய்பால் பற்றி ஒருவர் கேட்டதற்கு, வி.எஸ் நெய்பால் எழுத்து சுவாரஸ்யமானது ஆனால் கருத்து துவேசமானது. இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று வி.எஸ் நெய்பாலை பற்றி தவறான கருத்தை தன் வாசகர்களுக்கு தூவுகிறார்.அது போல் அருந்ததிராய் விசயத்திலும்.

இவர்கள் கருத்தையெல்லாம் பார்க்கும் போது இலக்கிய உலகில் அடியடுத்து வைக்கும் வாசகன் கவனமாக இருக்க வேண்டும் என்றே சொல்வேன்.

என்னுடைய கருத்து என்னவென்றால், எழுத்தாளர் ஒரு படைப்பை புகழும் போது அதை எடுத்து கொள்ளலாம்.

ஆனால் படைப்பை விமர்சிக்கும் போது அல்லது இகழும்போது அதை அப்படியே எடுத்துகொள்ளாதீர்கள்.

எழுத்தாளர் அப்படி சொல்வத்ற்கு பல பேராமீட்டர்ஸ் இருக்கிறது.

அவர் சொந்த விருப்பு வெறுப்பு, அவர் இருக்கும்  வட்டம் அல்லது பதிப்பகம் ( காலச்சுவடு வெஸ் உயிர்மெய் ) மாதிரி, அவரின் அன்றைய மூட், அன்று நடக்கும் இலக்கிய அரசியல் ( உதாரணம் சாருவுக்கு மனுஸ்சுக்கும் ஒவ்வோமை நடந்த புதிதில், மனுஸ் அண்ணா நூலகத்தை மாற்றுவதை கண்டித்திருந்த போது, சாரு நிவேத்திதா அதை கிண்டல் செய்கிறார் ) என்று பல விசயம் உள்ளது. எழுத்தாளர்கள் இண்டெலக்ட் என்பதால் கருத்தை உருவாக்கி அதை சப்போர்ட் செய்யும் கலை அறிந்தவர்கள்.

வாசகர்களாகிய நாம் விழிப்போடு இருக்க வேண்டியது அவசியம்.

நீங்களே முன்கருத்தின்றி படைப்பை படிப்பதே புத்திசாலித்தனம்.

சுரா சொல்வதால் நா பார்த்தசாரதியையும்
சாரு சொல்வதால் சுந்தர ராமசாமியையும்
ஜெயமோகன் சொல்வதால் சாருவையும்
மாமல்லன் சொல்வதால் ஜெயமோகனையும்
வினவு சொல்வதால் சுஜாதவையும்
கீழாய் நினைக்க வேண்டாம்.
உனக்கான அன்னபறவைத்தனத்தை
நீயே தீர்மானம் செய்....

8 comments:

  1. முன் கருத்து எழுவதை எவ்வாறு தடுப்பது

    ReplyDelete
  2. இதுபற்றி ஜெயமோகன் தெளிவாக எழுதியிருக்கிறார். அதாவது, ஆதரித்தோ அல்லது நிராகரித்தோ ஒரு படைப்பை பற்றி கருத்தாக்கங்கள் வந்து கொண்டே இருக்கேவேண்டும். விவாதம் இன்றி இருப்பதுதான் அழிவு. அதுபோல விமர்சனம் எழுதி ஒரு நாவலை, சக எழுத்தாளர் காரணத்துடன் நிராகரிப்பதால் அந்த நாவலே அழிந்துவிடாது. விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட இலக்கியமே கிடையாது. மற்றபடி உங்கள் கட்டுரை அருமை.

    இன்னொன்று, உள்நோக்கத்துடன் எழுதப்பட்ட விமர்சனத்தை மீறி பொதுவாசகன் நாவலை படித்துவிட்டு, நாவல் பிடித்திருந்தால் விமர்சகனை நிராகரிப்பான் இல்லையா?

    ReplyDelete
  3. சாருவின் நாவல்கள் ரஜினிபடம் மாதிரி. ரசிப்பவர்கள் அதை பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாக்கி விடுவார்கள். திட்டுறவங்களும் திட்டிகிட்டே படிப்பாங்க.

    எக்சைல் நாவலைப்பற்றி மாமல்லன் சொன்னது படு அபத்தம். அவரு அந்தக்காலத்து தியாகராஜ பாகவதர் ரசிகரை போல. இப்பவர்ற எந்த எழுத்தும் அவருக்கு குப்பைதான்.

    ReplyDelete
    Replies
    1. Selvakumar Ganesan கடைசியா அவர் புகழ்ந்தது “கேப்டன்” என்கிற சோபா சக்தி சிறுகதைதான்னு நினைக்கிறேன். கோபி கிருஸ்னன் பிடிக்கவில்லைன்னு சொன்னது எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது.

      Delete
  4. நீங்கள் சொல்வதும் சரிதான், நாம் அடிமைகளாக மாறி நம்மைக் கவர்ந்தவர் சொல்வதே வேதம் எனும் நிலைக்கு தள்ளப்படும் போதுதான், ஒருவரை படிக்காமலேயே புறக்கணிக்கும் சூழ்நிலை தோன்றும். மற்றபடி அதையும் ஒரு விமர்சனமாக ஏற்றுக்கொண்டால் பிரச்சினையே இல்லை. இதேபோல், நமக்குப் பிடித்தது எல்லாம், பிறருக்கும் பிடிக்கத்தான் வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. மேலும் இலக்கிய உலகில் இப்போதல்ல, கம்பர்-ஒட்டக்கூத்தர் அல்லது அதற்க்கும் பல்லாயிரம் வருடம் முன்பிருந்துக் கூட சூழ்ச்சியும், காழ்புணர்ச்சியும் உண்டு. சுஜாதாவுக்கு சாருவை(எழுத்தை) பிடிக்கவே பிடிக்காது என்று சாருவே கூறுகிறார். ஆனால் நீங்கள் சுஜாதாவை விட சாரு எழுத்து பிடிக்கும் என்கிறீர்கள், இதுபோலத்தான் எங்கும் பல இனிய முரண்கள் நிரம்பிய உலகமிது, வித விதமமான முரண்களை சந்திக்க, சந்திக்க நமக்கு நல்ல அனுபவமும், அதனால் சிறந்த பலன்களும் கிட்டும். என்ஜாய்.

    ReplyDelete
    Replies
    1. Raja Rajendran ஒரு ஒவர் ஆல் வியூ கொடுக்க முயற்சி செய்தேன். இலக்கியத்தில் சார்புநிலை தவிர்க்கவே முடியாதுதான். அதை வெளிபடுத்தம் தன்மை பற்றிய பொறுப்பு பெரிய எழுத்தாளர்களுக்கு அவசியம் என்பதுதான் சொல்ல வந்தேன்

      Delete
  5. //ஆனால் பூமணி, நாஞ்சில் நாடன் எல்லோரும் சூப்பராம்.//

    உங்களை அறியாமலே நகுலனை தாழ்த்தியதால் நீங்கள் இவர்களை மட்டம் தட்டுகிறிர்களா பாஸ்... இல்லை இவர்கள் இருவரிடமும் உங்களின் மதிப்பீடு அவ்வளவுதானா...

    சாரு வட்ட சந்திப்பு முடிந்து ஒருவருடன் திரும்பிக்கொண்டிருந்தேன். அவர் சாருவையும் சிலாகிக்கிறார். பூமணியின் அஞ்ஞாடியையும் சிலாகிக்கிறார்...

    சாரு சொன்னார் என்பதற்காகவோ ஜெமோ சொன்னார் என்பதற்காகவோ வாசிப்பு பிரியர்கள் அது சாரு, ஜெமோ அதிதீவிர விசிரிகளாக இருந்தாலும் வாசிக்காமலிருக்கிறார்கள்
    என்பதெல்லாம் இல்லை. வாசிக்கிறார்கள். ஆனால் கருத்தை மட்டும் சாரு, ஜெமோவை பிரதிபலிப்பதாக இருக்கலாம்...

    ReplyDelete
    Replies
    1. ”வில்லனின் விநோதங்கள்” நான் பூமணியையும் நாஞ்சிலையும் மதிக்கவே செய்கிறேன். இருவர் படைப்புகளும் பிடித்தமானவையே. ஆனால் ஜெ.மோ நகுலனை தாழ்த்தி அவர்களை புகழ்வதில் உள்குத்து இருப்பதாக் நினைத்தேன்.

      Delete