பார்சிக்களின் உணவான தன்சாக் (Dhansak) (தமிழ் உச்சரிப்பு சரியா என்று தெரியவில்லை) பற்றிப் படித்தேன்.அதன் ரெசிப்பி ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது.
நான் புரிந்து கொண்டதை எழுதுகிறேன்.ஆர்வமிருந்தால் தேடிப் பிடித்து தெர்ந்து கொள்ளுங்கள்.
அளவெல்லாம் அதிகம் சொல்ல மாட்டேன்.
துவரம் பருப்பு,கடலைப்பருப்பு, மைசூர் பருப்பு என்ற மூன்று வகைப் பருப்புகளை நீரில் ஊற வைக்கவும்.
இதில் கடலைபருப்பையும்,மைசூர் பருப்பையும் சம அளவில் எடுத்துக் கொள்ளவும்.துவரம் பருப்பை மட்டும் அதிகம் எடுத்துக் கொள்ளவும் ( அந்த இரண்டும் கால்டம்ளர் என்றால் துவரம் பருப்பு அரை டம்ளர்).
கத்திரிக்காய்,வெங்காயம்,உருளைக்கிழங்கு இந்த மூன்றையும் வெட்டி வைத்துக் கொள்ளவும்.
குக்கரில் பருப்புக்கலவைகளோடு சேர்த்து இந்த காய்கறிகளைப் போட்டு பட்டை லவங்கம் கிராம்பு அல்லது கறிமசால் சேர்த்து,கொஞ்சம் அதிகம் நீர் வேகவைக்கவும்.
நன்கு மசித்து கட்டியான சூப் பதத்தில் அவற்றை கொண்டு வரவேண்டும்.
சிக்கனை அல்லது மட்டனை தனியாக வேகவைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.வாசம் வந்ததும் அதில் சிக்கனைப் (அ) மட்டனை போட்டு வதக்கவும்.சிக்கன்(அ) மட்டன் கொஞ்சம் வதங்கியதும், அதில் பருப்புக் காய்கறி கலவையை ஊற்றவும்.சிக்கன் (அ) மட்டன்,பருப்புக் கலவை,வெங்காயம் இம்மூன்றும் வேகவேண்டும்.
பத்து பதினைந்து நிமிடம் வெந்து முடிந்ததாக் தன்சாக் (Dhansak) ரெடி.
சாதம்,சப்பாதி,நான்,பரோட்டோவுக்கு நல்லாயிருக்குமாம்.
இதற்கு வெங்காயம் வெள்ளரி தயிர் விட்ட கலவை தொட்டுக்கொள்ள வேண்டும்.
குறிப்பு: இது அறிமுகக் குறிப்பு மட்டுமே.பொதுவாக சிக்கனை (அ) மட்டனை பருப்போடு சேர்த்து யாரும் உண்பதில்லை ( முஸ்லிம்களைத் தவிர்த்து ) என்று நினைக்கிறேன்.அப்படி பருப்போடு சேர்த்து சாப்பிடும் செய்முறையைத் தேடிப் போகும் போது இதைக் கண்டு கொண்டேன்.
இன்னும் சரியாகத் தெரிந்து கொண்டு இதை செய்து பழகுவது நல்லது
No comments:
Post a Comment