Wednesday 12 December 2012

போட்டி

என்னை அமெரிக்கா போக சொல்லி கம்பெனி திடீரென்று கேட்டதும் ஏனோ எனக்கு இஸ்டமில்லை.

இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

வேண்டா வெறுப்பாக தலையை ஆட்டினேன்.

நான், என்னுடன் வேலை பார்க்கும் நண்பர், தோழி மூவரும் வீசா இண்டர்வியூக்காக சென்றோம்.

இண்டர்வியூ நெருங்க நெருங்க வீசா கிடைத்துவிட வேண்டும். அமெரிக்கா சென்று விட வேண்டும் என்று தோண்றுகிறது.

அடுத்த ஐந்து நிமிடத்தில் தீராத இச்சையாகி கடவுளை பிரார்த்திக்க தொடங்குகிறேன்.

சொல்ல வருவது என்னவென்றால் போட்டி என்று வந்து விட்டால், நமக்கு அதில் ஜெயிக்கும் ஆர்வம் வந்து விடுகிறது.

நண்பனை விட நாம், அவளைவிட நான் என்று தோண்றுகிறது.

நாலு சினிமா ஒன்றாய் ரிலீஸாகும் போது அந்த அந்த் ஸ்டார் ஹீரோக்களுக்கு எப்படி இருக்கும்?

லண்டனில்

லண்டன் ராயல் சொசைட்டி என்று ஒன்று உண்டு.

அதில் அவ்வப்போது கூட்டம் கூட்டி அறிவியல் கட்டுரைகளை படிப்பார்கள் விஞ்ஞானிகள்.

அதை சொசைட்டி மெம்பர்ஸ் மற்றும் பொதுமக்கள் அதை ஆவலுடன் கேட்பார்கள்.

நியூட்டன் தன்னுடைய கட்டுரையை வாசிக்கிறார்.

கட்டுரையின் பெயர் “New theory about light and colors". ஒளியும் வர்ணத்தையும் பற்றிய கட்டுரை.

”எல்லா நிற ஒளியும் ஒன்றாய் சேர்ந்தால் கிடைக்கும் ஒளி வெள்ளை ஒளி” என்று நியூட்டன் சொன்னதும் அனைவரும் சொக்கி போனார்கள்.

இத பாருப்பா பச்சை கலரு பெயிண்டு, சிகப்பு கலரு பெயிண்டு, மஞ்ச கலரு பெயிண்டு இப்படி எல்லா கலரையும் ஒண்ணா மிக்ஸ் பண்ணினா, கேவலாமான கலர்தான வரும் எப்படி வெள்ளை கலர் வரும் என்கிற ரீதியில் நியூட்டனிடம் கேள்வி கேட்டார்கள். நியூட்டன் அதை தெளிவாக விளக்கினார்.

நியூட்டன் கட்டுரையை வாசிக்கும் போது, அவருக்கு இணையான மற்ற கண்டுபிடிப்புகளை விளக்கும் கட்டுரைகளை யார் யார் வாசித்தார்கள் என்று பாருங்கள்.

- காற்று வெளிமண்டல அழுத்தத்தின் மீது சந்திரனின் ஈர்ப்பு என்ன விளைவை ஏற்படுத்துகிறது என்று வேலிஸ் (wallis) என்ற விஞ்ஞானி வாசிக்கிறார்.

-கார்னிலோ (Cornelio) என்னும் இத்தாலிய விஞ்ஞானி , டாரண்டுலா என்னும் ராட்சத சிலந்திகளின் கடியின் விளைவை பற்றி விளக்கு கட்டுரை வாசிக்கிறார்.

-ஃப்ளம்ஸ்டீட் (Flamsteed) ஜூப்பிட்டரை சுற்றி வரும் சந்திரன்களை பற்றிய கட்டுரையை விளக்குகிறார்.

-இன்னொரு ஜெர்மன் மருத்துவர், வெட்டு காயங்களின் தன்மை பற்றிய கட்டுரையை விளக்குகிறார்.

இதில் பாருங்கள்.ஒன்று கூட மொக்கை டாப்பிக் கிடையாது

எல்லாமே நல்ல முக்கியமான டாப்பிக்தான்.

ஆனாலும் நியூட்டனின் ”ஒளியும் வர்ணத்தையும்” கட்டுரைதான் எல்லாராலும் பேசப்பட்டது.

ஏனென்றால் நியூட்டன் எடுத்து கொண்ட களம் முற்றிலும் புதுமையானது.

நியூட்டனின் கட்டுரையினால் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட விஞ்ஞானிகளுக்கு எப்படி இருந்திருக்கும்.

உழைப்பது மனித முன்னேற்றத்திக்குதான்.

இருப்பினும் அங்கீராகத்துக்காக ஏங்குவது இயல்புதானே.

கற்பனை செய்து பாருங்கள்.

கல்யாண வீட்டில் பணக்கார சொந்தம் வரும் போது கண்டுகொள்ளபடாமல் விடப்படும் ஏழை சொந்தங்கள் மாதிரி.

2 comments:

  1. அங்கீகாரம் எப்போதும் நம்மை அடுத்த அடியை எடுத்து வைக்க உதவும்... கண்டுகொள்ளாமல் விடப்படும்போதும் நம் இருப்பை நிரூபிக்க இடைவிடாமல் உழைத்துக்கொண்டே இருந்தோமானால் கண்டிப்பாக கண்டுகொள்ளப்படுவோம்...
    அறியாத செய்திகள் அறிந்தேன் நன்றி...

    ReplyDelete
  2. நன்றி எழில். உங்கள் கமெண்ட் ஊக்கம் கொடுக்கிறது.கருத்துக்களை எதிர்ப்பார்க்கிறேன்...

    ReplyDelete