Wednesday, 12 December 2012

அயர்லாந்து உருளைக்கிழங்கு பஞ்சம்

அயர்லாந்தில் 1845 ஆண்டுகளில் ஏற்பட்ட உருளைக்கிழங்கு பஞ்சம் பற்றி படித்தேன்.

இண்டர்நெட் இருப்பது எவ்வளவு பெரிய வசதி.

வடஅமரிக்காவின் கட்டுமானத்தில் அயர்லாந்து கூலித்தொழிலாளர்கள் பங்குதான் அதிகமாம்.

கூட்டம் கூட்டமாய் பஞ்சம் பிழைக்க போயிருக்கிறார்கள்.

அதுவும் 1845 களில் வந்த உருளைக்கிழங்கு பஞ்சத்திற்கு அப்புறம் வட அமெரிக்க புலம் பெயரல் அதிகமாய் இருந்ததாம்.

அந்த் பஞ்சம் வந்ததிற்கு காரணம் காற்றில் மூலம் பரவக்கூடிய ஒரு பூஞ்சைக்காளான்தான்(phytophtora infestans).

அந்த பூஞ்சைகாளான் அயர்லாந்தில் கிடையவே கிடையாதாம்.

அப்போ எங்கே இருந்து வந்தது.

அது வட அமரிக்காவில் இருந்து அயர்லாந்திற்கு வரும் சரக்கு கப்பல்களில் இருந்து அயர்லாந்திற்கு வந்து ,பல லட்சம் மக்களை கொல்லக்கூடிய பஞ்சத்தை ஏற்படுத்தியதாம்.

காரலேசனை கவனியுங்கள்.

பூஞ்சை காளான் வந்தது அமெரிக்காவில் இருந்து.

அதன் விளைவால் அதே அமரிக்காவின் இன்ஃப்ரா ஸ்டிரச்சர்கள் வளர்கின்றன.

அப்படியென்றால் அந்த பூஞ்சைகாளான் அயர்லாந்துவாசிகளுக்கு வில்லன்.

வடஅமெரிக்காவுக்கு ஹீரோ. இப்படி யோசித்தால் துன்பத்தை பார்த்து குதர்க்கமாக யோசிப்பவன் என்று சொல்லி கில்லி தொலைத்து விடமாட்டீர்களே.

இந்த் விசயத்தில் நான் படித்த இன்னொரு வித்தியாசமான செய்தி, உருளைக்கிழங்கு பஞ்சம் வந்து மக்கள் எல்லாம் செத்து கொண்டிருக்கும் போது,

உருளைக்கிழங்கு தாவரம் அழுகிப்போக என்ன காரணம் என்று பலகாரணங்களை எண்ணி மக்கள் குழம்பும் வேளையில்,

பல மக்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரயில் வண்டிகளினால் ஏற்படும் Static Electricity ( அதுக்கு என்னங்க தமிழில் ) தான் காரணம் என்று சீரியஸாக நம்பினார்களாம்.

ஒருவிளைவிற்கு காரணம் இருக்கிறது என்று சிந்திக்கும் போதே அங்கே பகுத்தறிவும் அறிவியலும் வந்து விடுகிறது.

இது சின்ன வயசுல எங்க டியூசன் சார் சொன்னகதை

தண்ணீரில் இருந்து கரண்ட் எடுக்கும் ”ஹைட்ரோ எலக்டிரிக் பிளாண்டுகள்” வரும் போது சில விவசாயிகள் சொன்னார்களாம்.
“யல தண்ணில உள்ள கரண்ட் சத்த எடுத்துட்டா எப்படில பயிரு வளரும். அது மண்ணோடு மண்ணாதாம்ல போவும்”.

No comments:

Post a Comment