Wednesday 12 December 2012

எழுத்தாளர்களுக்கு விமர்சகர்களை விட ...

தமிழ் எழுத்தாளர்களுக்கு அல்லது எழுத்தாளர்களுக்கு விமர்சகர்களை விட நல்ல புரோமட்டர்கள் தேவை என்று நினைக்கிறேன்.

புரோமட்டர்கள் என்பது போன்ற பதம் இருக்கிறதா என்று தெரியவில்லை? 

நான் சொல்ல வரும் அர்த்தம் என்னவென்றால் எழுத்தாளர்களின் எழுத்தின் ஜீவனை மற்றவர்கள் அறியும் படி எளிமையான கவர்ச்சியான கட்டுரைகள் மூலமாக கொடுப்பது புரோமட்டர்கள் வேலை.

அதை ஜால்ரா அடிப்பது என்று போன்றும் அமைய கூடாது. 

மாமல்லனின் 
கோப மொழியால் அவர் சொல்ல வரும் நல்ல கருத்துக்களைவெறுக்க கூடாது என்று ஒருவர் சொன்னால் அவர் நல்ல புரோமட்டர்.

ஏனெனில் அவர் மாமல்லனை எப்படி அணுக வேண்டும் என்று சொல்லி கொடுக்கிறார்.

சாரு நிவேதிதா எழுத்தின் பலம் அவர் வெளிப்படை. தனிமனிதனின் நிம்மதிக்கான தவிப்பு.

ஜெயமோகனின் எழுத்தின் பலம் அவர் விழிப்பு, யோசிப்பு.

எஸ்.ராவின் பலம் அவர் வியத்தலின் அழகு,

சிவகாமியின் எழுத்தின் அழகு அவருடைய நேர்மையான சுயவிசாரணை.

சுந்தர ராமசாமியின் பலம் அவர் மொழி ஆளுமை.

ஜானகிராமனின் அழகு அவர் மனதை படிக்கும் லாவகம்,

ஆதவன், இந்திரா பார்த்தசாரதியின் அழகு அவர்களின் பிராய்ட் அணுகுமுறை,

ரமணி சந்திரனின் அழகு குடும்பத்தை சொல்லும் எளிமையான பாங்கு,

கல்கியின் எழுத்து நடை,

இவ்வாறு ஒவ்வொரு எழுத்தாளர்களின் பலத்தை மட்டும் அவர்களின் எழுத்துக்களில் இருந்து எடுத்துகாட்டோடு ஒருவர் எழுதினால் அவர் புரமோட்டர்.( நான் அப்படி சொல்கிறேன்).

அவர்கள்தான் இலக்கியத்திற்கு அத்தியாவசியத் தேவை.

விக்கிரமாதித்யன் பற்றி எனக்கு தெரியும்.

ஆனால் அவருடைய கவிதையை வாங்கி படிக்க வேண்டும் என்ற தோண்றவே இல்லை.

இன்று ஜோவ்ராம் சுந்தர் அவர்கள் விக்கிரமாதித்யன் கவிதைகளில் தனக்கு பிடித்தை வரிசையாக போட, அதை படிக்க படிக்க எழுதிய கவிஞர் மேல் ஆர்வம் வருகிறது.

அவருடைய எழுத்துக்களை படிக்கும் தாகம் வருகிறது.

இதுதான் புரமோட் பண்ணுவது.

இதுதான் இப்போதைக்கு தமிழுக்கு தேவையான ஒன்று.

No comments:

Post a Comment