Thursday, 13 December 2012

கதை போல ஒன்று - 62


திருமணத்திற்கு முன் மனைவியை அடிப்பது பற்றி உங்கள் கருத்து என்னவாய் இருந்தது?

வாசிக்கும் பழக்கம் இருந்ததால் பெண்களை சக உயிராய் மதிக்க வேண்டும் என்று தெரிந்து வைத்திருந்தேன்.

மனைவியை மட்டுமல்ல, எந்த பெண்ணையுமே கை நீட்டி அடிக்க கூடாது என்று னைத்திருந்தேன்.பெண்ணை என்ன பெண்ணை எந்த உயிரையுமே அடிக்ககூடாது என்றிருந்தேன்.

திருமணத்திற்கு பிறகு மனைவியை அடித்தீர்களா?

ஆம். அடித்தேன். மனதில் நான் உருவாக்கி வைத்திருக்கும் கோட்பாடுகள் “நான்” அல்ல என்று உணர்ந்து கொண்டேன்.

நான் என்பது வேறு எதுவோ. அந்த நானை எனக்கு தெரியாமலே பலரும் உருவாக்கியிருக்கிறார்கள் என்றும் புரிந்தது.

சம்பவத்தை சொன்னால் கதை மாதிரி கொண்டு போவதற்கு வசதியாக இருக்கும்?

திருமணமாகி கூடி குலாவி கொஞ்சி சலித்து களைக்கும் போது குழந்தை பிறந்தது.

குழந்தைக்காக மகிழ்ச்சி, குழந்தையின் துன்பத்தை போக்க இருவரின் குழு முயற்சி போன்றவற்றில் இணைந்திருந்தோம்.

காதல் இல்லாமல் எல்லாம் இல்லை.

சில விடுமுறை மதிய வேளையில் அணைத்து கொண்டே இருவரும் காதலில் பினாத்தி கொண்டே இருப்போம்.

சூரிய உதய அஸ்தமனமாய் வாழ்க்கை சீராக போய் கொண்டிருந்தது.

குழந்தைக்கு எட்டு மாதம் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆபிஸ் விட்டு வரும்போது தூங்கி கொண்டிருக்கிறாள் கட்டிலில்.

எனக்கோ ஆபிஸில் வேலை பளுவால் சரியான பசி.

பசியின் வீச்சு கூர்மையான கத்தியை விட மேலானது என்பதையெல்லாம் சொல்ல வேண்டுமா என்ன?

வீட்டிற்கு வந்து சோறு போடு! என்று மனைவியடம் சொல்ல அமைதியாய் இருந்தாள்.

இன்னொரு முறை வலியுறுத்த ’முடியாது’ என்று மறுத்துவிட்டாள்.

சரி என்று நானே சமையல் கட்டுக்கு சென்று சாதம் போட பார்த்தேன்.சட்டியில் ஒற்றை சோற்றுப்பருக்கை இல்லை.

ஏதோ நடந்திருப்பது புரிந்தது.

மறுபடி மனைவிடம் வந்து விசாரித்தால், என் அம்மாவிடம் ஏதோ சண்டையாம்.

அம்மா திட்டியிருக்கிறார்கள்.பதிலுக்கு இவளும். பதிலுக்கும் அம்மாவும்.

அம்மா மனத்தாங்கலில் கோவிலுக்கு போய்விட்டார்கள்.

இவள் அழுது கொண்டே இருக்கிறாள்.

நான் கேட்க கேட்க சரியாகவும் சொல்லவில்லை காரணத்தை.

அம்மா வந்தார்கள்.

நான் உச்ச ஸ்தாயில் கத்துகிறேன். என்னதான் நினைச்சிட்டு இருக்கீங்க? சும்மா அவள போட்டு டார்ச்சர் செய்துகிட்டு”

இப்போது அம்மா முகத்தில் கண்ணீர் வடிகிறது.

வயிற்று பசியோ எதையாவது சாப்பிடு அப்புறம் சண்டைபோடு என்கிறது.

உடனே மனைவி எழுந்து சாதம் வைக்க போக நான் சோபாவில் உட்கார்ந்தேன் தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு.

உட்காரபோகவும் “வீல்” என்றொரு சத்தம் கேட்டது.

குழந்தைதான் அழுகிறாள்.

பதறி வீட்டில் உள்ள எல்லோரும் ஒடிப்போய் பார்க்கிறோம்.

கட்டிலில் இருந்து உருண்டு கீழே விழுந்து விட்டாள் .

அப்போது முதன் முதலாக வாழ்க்கையில் நான் நடுங்கினேன்.

ஒடிப்போய் அவளை அணைத்து பார்த்தால் பெரிய அடி ஒன்றுமில்லை. பயத்தில் அழுதிருக்கிறாள்.

”யாரு கட்டில்ல கிடத்தும் போது தலையணைய சைடுல வைக்காம போனது”

மனைவி கொதித்து போய்

“ஏன் நீங்க வரும் போது பாத்துகிட்டுதான இருந்தீங்க. நீங்க பில்லோவ வைச்சிருக்க வேண்டியதுதான”

“அவள தூங்க கிடத்தும்போது நீதான இருந்த. அது உன் ரெஸ்பான்ஸிபிலிட்டி நாய”

“நாய கீயன்னு சொன்னீங்கன்னா. இந்த கத்திய எடுத்து குத்திகிட்டு செத்துருவேன் என்று டைனிங் டேபிளில் இருந்து ஒரு கத்தியை எடுத்து ஆவேசமாக காட்டினாள்” மனைவி.

வெறி வந்தது.முகமெல்லாம் ரத்தம் பரவி துடித்து போயிற்று.

இடது கையால வீசி அடித்தேன்.

அவள் கன்னத்தில் அறை ஒங்கி விழுந்தது. வலது கையினால் அடிப்பதை கண்டிரோல் செய்யலாம் ஆனால் இடது கையால் அடித்தால் அடியின் வலி அதிகம் என்று உணர்ந்தேன்.

மனைவிக்கு அதிர்ச்சி.

அம்மா தலையில் அடித்து “சில லோக்கல் பேமிலியில் நடக்கிறமாதிரி நடக்குறானே” என்று என்னை திட்டுகிறார்.

மனைவி அழுதாள்.விக்கி விக்கி அழுதாள்.

முடியை கலைத்து போட்டு அழுதாள்.

ஒடிப்போய் ரூம் கதவை சாத்திக்கொண்டாள்.

என கை வலித்து கொண்டே இருந்தது.

கொஞ்ச நேரத்தில் மனைவி கதவை திறந்ததும் சட்டையை போட்டுக்கொண்டு வெளியே சென்று விட்டேன்.

நான் படித்த புத்தகங்களும், கருத்துக்களும் என்னை சுற்றி சுற்றி ஆடின பாடின.

இதோ நான் அடித்து விட்டேன்.

வலிமையான என் உடலால் வலிமை குறைந்த ஒரு உடலை காயப்படுத்திவிட்டேன். மனதையும்.

உடல் அரசியல்.

எந்த காரணமும் சொல்ல முடியாத தவறை செய்து விட்டேன்.

ஒருமணி நேரம் முடிந்து வீட்டிற்கு வரும் போது சோற்றை போட்டு காத்திருந்தாள் மனைவி.

என்னிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.இப்படித்தான் நான் மனைவியை அடித்தேன்.

சரி தவறை உணர்ந்துவிட்டீர்கள்.இனிமேலும் மனைவியை அடிப்பீர்களா?

அடிப்பேன் என்றுதான் நினைக்கிறேன்.

எப்படி சொல்கிறீர்கள்?

தெரியவில்லை. ஆனால் அடிப்பேன்.

வேறு எதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

ஆம்! மனைவியை அடித்த அன்று இரவு அவளை உறவுக்கு அழைத்தேன்.

முதலில் கோபத்தில் மறுத்தவள் பின் ஒப்புக்கொண்டார்.

ஒரு உடலுறவு எப்போது நடக்கும்.

அளவிற்கு அதிகமான காதலினால், அல்லது காமத்தினால், அல்லது இரண்டும் கலந்ததினால்.

அல்லது பணத்திற்காக.

ஆனால் எங்களுக்குள் நடந்தது ஒரு சடங்காக.

அது நடக்கவில்லை என்றால் இனி எப்போதுமே வாழ்க்கையில் சேர மாட்டோம் என்பது மாதிரியான பயம் எங்கள் ஆழ்மனதில் இருந்தது.

நீ இப்போது எனக்கு பிடித்தமானவனாக இல்லாமல் இருக்கலாம்.ஆனால் உன்னை நான் இழக்கவிரும்பவில்லை என்று பரஸ்பரம் உறுதிபடுத்துவதற்காக உறவு கொள்ள விரும்பினோம் போல.

அதற்காக கலந்துவிட்டோம்.

அதுமாதிரியான மோசமான சூழ்நிலை யாருக்குமே வரக்கூடாது என்றுதான் சொல்லுவேன்.

கலந்து முடிந்ததும், அடுத்த ஐந்து நிமிடத்தில் மனைவி கேவி கேவி அழுதாள்.

அந்த அழுகையை கேட்டு பைத்தியமானேன்.

எங்காவது ஒடி போய்விடலாமா அல்லது செத்து விடலாமா என்று தோண்றியது உண்மை.

இப்போது சொல்லும் போதே பைத்தியம் பிடிக்கும் போல் இருக்கிறது.

முடித்துக்கொள்வோம் நம் கேள்வி பதில் செக்ஷனை.

Wednesday, 12 December 2012

கதை போல் ஒன்று - 61


அதற்க்கு என்ன பெயர் என்றெல்லாம் தெரியாது.

நானும் தம்பியும் அதை பட்டாம் பூச்சி புழு என்றே சொல்லுவோம்.

நாகர்கோவில் நகரத்தின் முக்கியமான ஜங்சன் வேப்பமூடு ஜங்சன். அதிலிருந்து இடது பக்கம் திரும்பினால் செட்டிகுளம் ஜங்சன்.

அதில் இருந்து நேரே கார்மல் ஸ்கூல் ரோட்டை பிடித்து போனால் ராமன்புதூர் அல்லது கலுங்கு ஜங்சன்.அதில் இடது திரும்பி மறுபடி வலதெடுத்தால்”பார்க் ரோடு” வரும்.

இந்த பார்க் ரோட்டில் இருந்து நாகர்கோவில் முழு கிராமமாக மாறிவிடும்.

அந்த நகர கிராமத்தில்தான் எங்கள் வீடு.

வேப்பமரமும் புளியமரமும் பெரிய கிரவுண்டும் சொர்க்கம்.

சனி ஞாயிறு நானும் தம்பியும் சட்டையில்லாத உடம்பும், கொக்கி இல்லாத இழுத்து கட்டின டிரவுசருமாய் கையில் கம்பை வைத்துக்கொண்டு சுற்றித்திரிவோம்.

சும்மானாச்சும் கம்பைவைத்து எல்லா செடிகளையும் அடித்து கொண்டே போவோம்.

தட்டான் பூச்சிகளை பிடித்து கொன்று போடுவோம்.

எருக்கஞ்செடி மேல் தனி காதல் உண்டு.

அதன் இலையை பிய்த்து காம்பில் ஒழுகும் பாலை பொட்டு மாதிரி வைத்து உடனே அழித்து விடுவோம்.

ரொம்ப நேரம் இருந்தால் பொத்து விடுமாம்.

அது மாதிரி விளையாடும் போதெல்லாம் மஞ்சள் நிறத்தில் கறுப்புகோடுகளாய் பிரிக்கபட்ட புழுக்களை பார்ப்போம்.

அதுதான் ”பட்டாம் பூச்சி புழு” என்று தெரியாது சிறுவயது.

புழுவை பார்த்தால் தரையில் போட்டு நசுக்குவோம்.

உடம்பில் இருந்து பச்சை ரத்தம் வரும். “பச்சை ரத்த்த்த்ம்” என்று அழுத்தமாய் சொல்லி சிரிப்போம்.

அப்படி ஒரு புழுவை நசுக்க போகும் போது குரல் கேட்டது.

“பிள்ளைங்க என் பண்ணுறிய”

தெருவில் போன ஏதோ ஒரு பாட்டி. வசதியானவர் என்று அவர் கையில் வைத்திருந்த ஜிப் வைத்த அழகான பைபிளை பார்த்தவுடனே தெரிந்தது.

நானும் தம்பியும் அசடு வழிந்தோம்.

”ஐய்யே இந்த புழுவையா கொல்லுறிய. கொல்லக்கூடாது பிள்ளோ. அதுதான் பட்டாம்பூச்சியா பறக்குது.”

விழிவிரித்தோம்.

”இந்த புழுவ ஒரு கூட்டுக்குள்ள போட்டு தினமும் எருக்கம் எலையை போட்டி வளருங்கடே. கொஞ்ச நாள் பொறவைக்கு கூட்டுப்புழு வைக்கும்.அதுக்கம் பொறவைக்கு பட்டாம் பூச்சியா பறக்கும்ல.தயவு செய்து கொல்லதீய. பாவ காரியங்கள செய்யாதியில பிள்ளைங்களா”

சொல்லி போனார்.

அந்த ஏதோ ஒரு பாட்டி தெய்வமாய் தெரிந்தார்.
எவ்வளவு பெரிய விசயத்தை சொல்லி போயிருக்கிறார்.

பட்டர்பிளை தனியாத்தெரியும்.புழு தனியாத்தெரியும் ஆனா புழுதான் பட்டாம் பூச்சி என்று தெரியாது.

இரண்டு தொடர்பில்லாத விசயங்களுக்கிடையே தொடர்பை ஏற்படுத்து கருத்தாக்கங்கள் நல்ல இனிப்பை விட, இறைவனை விட, காம உச்சத்தை விட இன்பமானவை.

இரண்டு புழுக்களையும் வீட்டில் எடுத்து வந்தோம்.

எதில் போட்டு வளர்ப்பது?

தம்பி ஐடியா சொன்னான்” அப்பா கடையில் இருந்து எவரடி பெரிய பேட்டரி பெட்டி கொண்டு வருவாங்கல்லா நாம வெளையாடுறதுக்கு அதுக்குல்ல போடலாம்”
எவரடி அட்டை பெட்டியில் புழுக்களை போட்டோம்.

தம்பி பெட்டியின் குறுக்கே கயிறுகளை கட்டினான்.

புழுக்கள் உண்டு கழித்து இருந்தால் போதுமா அதற்கு பொழுது போக்கு வேண்டாமா.

காற்று போவதற்கு பெட்டியில் நிறைய ஒட்டை போட்டோம்.

நல்ல எருக்கம் இலைகளாக பறித்து அதை சிறுதுண்டுகளாய் வெட்டி இரையாய் போட்டோம்.

அப்புறம் பெட்டியை லேசாக திறந்து புழுவையே பார்த்துக்கொண்டிருப்போம்.

அது தன் உடலை குறுக்கி நீட்டி “பெரில்ஸ்டாட்டிக்: அசைவு கொடுக்கும் போது ஆச்சர்யமாய் இருக்கும்.

தினமும் கறுப்பு சிறு உருண்டையாய் எச்சம் போடும். அதை சுத்தம் செய்வதற்கு எனக்கும் தம்பிக்கும் செல்ல சண்டை வரும்.

அந்த புழு எங்கள் நினைவில் தங்கிவிட்டது. காலையில் புழுபற்றிய ஞாபகங்கள். தூங்கும்போதும் புழுபற்றிய ஞாபகங்கள்.

எட்டு நாட்கள் கழித்து புழு தன்னுடைய உடலை உள்ளே குறுக்கி, வெளியே கூட்டை கட்டி கொண்டது.

அது கூட்டுப்புழுவாய ஆகிப்போனது.

பெட்டியை பார்த்தால் புழு இல்லாமல் ஒரு சிறு இளநீல பளபள கூடு இருந்தால் எப்படி இருக்கும்.

என்ன மர்மம் இது.

தம்பி அந்த கூட்டு புழுவை தொடப்போனான். நான் கையை தட்டினேன்.

பொறுத்தோம்.

அடுத்த இரண்டு வாரம் கழித்து காலை எட்டு மணி வெயில் சுள்ளென்று முகத்தில் அடிக்கும் போது தம்பி என்னை எழுப்பினான். “விஜய் உனக்கு ஒண்ணு காட்டப்போறேன்”

சொன்ன உடன் விளங்கிற்று சட்டென்று எழுந்து கொண்டேன்.பெட்டியை நோக்கி ஒடினேன்.

பின்னால் தம்பி வாயை பொத்தி சிரித்துக்கொண்டே வந்தான்.

பெட்டியை மெல்ல கொஞ்சமாய் திறந்து பார்த்தேன்.உள்ளே படபடவென்று சிறகடித்து பறந்து கொண்டிருந்தது ஆரஞ்சும் கறுப்பும் கலந்த நாங்கள் கொல்ல போன, ஏதோ ஒரு ”பைபிள் பாட்டியால்” காப்பாற்றப்பட்ட , பச்சை கலர் ரத்தம் உடைய பட்டாம் பூச்சி புழு, இப்போது பட்டர்ஃபிளையாக.

எனக்கு தம்பிக்கும் சிலிர்த்தது, தோளில் கைகளை போட்டுக்கொண்டோம்.

என்னாலோ அல்லது தம்பியாலோ அந்த சம்பவத்திற்கு பிறகு ,தேவையில்லாமல் எந்த பூச்சிகளையும் கொல்லமுடியாது என்றே தோண்றிற்று.

பெட்டியை திறந்து விட எங்களிடம் சொல்லாமல் கொள்ளாமல் பறந்து போனது அந்த “தேனஸ் ஜெனுசியா” என்ற பட்டாம்பூச்சி.

போட்டி

என்னை அமெரிக்கா போக சொல்லி கம்பெனி திடீரென்று கேட்டதும் ஏனோ எனக்கு இஸ்டமில்லை.

இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

வேண்டா வெறுப்பாக தலையை ஆட்டினேன்.

நான், என்னுடன் வேலை பார்க்கும் நண்பர், தோழி மூவரும் வீசா இண்டர்வியூக்காக சென்றோம்.

இண்டர்வியூ நெருங்க நெருங்க வீசா கிடைத்துவிட வேண்டும். அமெரிக்கா சென்று விட வேண்டும் என்று தோண்றுகிறது.

அடுத்த ஐந்து நிமிடத்தில் தீராத இச்சையாகி கடவுளை பிரார்த்திக்க தொடங்குகிறேன்.

சொல்ல வருவது என்னவென்றால் போட்டி என்று வந்து விட்டால், நமக்கு அதில் ஜெயிக்கும் ஆர்வம் வந்து விடுகிறது.

நண்பனை விட நாம், அவளைவிட நான் என்று தோண்றுகிறது.

நாலு சினிமா ஒன்றாய் ரிலீஸாகும் போது அந்த அந்த் ஸ்டார் ஹீரோக்களுக்கு எப்படி இருக்கும்?

லண்டனில்

லண்டன் ராயல் சொசைட்டி என்று ஒன்று உண்டு.

அதில் அவ்வப்போது கூட்டம் கூட்டி அறிவியல் கட்டுரைகளை படிப்பார்கள் விஞ்ஞானிகள்.

அதை சொசைட்டி மெம்பர்ஸ் மற்றும் பொதுமக்கள் அதை ஆவலுடன் கேட்பார்கள்.

நியூட்டன் தன்னுடைய கட்டுரையை வாசிக்கிறார்.

கட்டுரையின் பெயர் “New theory about light and colors". ஒளியும் வர்ணத்தையும் பற்றிய கட்டுரை.

”எல்லா நிற ஒளியும் ஒன்றாய் சேர்ந்தால் கிடைக்கும் ஒளி வெள்ளை ஒளி” என்று நியூட்டன் சொன்னதும் அனைவரும் சொக்கி போனார்கள்.

இத பாருப்பா பச்சை கலரு பெயிண்டு, சிகப்பு கலரு பெயிண்டு, மஞ்ச கலரு பெயிண்டு இப்படி எல்லா கலரையும் ஒண்ணா மிக்ஸ் பண்ணினா, கேவலாமான கலர்தான வரும் எப்படி வெள்ளை கலர் வரும் என்கிற ரீதியில் நியூட்டனிடம் கேள்வி கேட்டார்கள். நியூட்டன் அதை தெளிவாக விளக்கினார்.

நியூட்டன் கட்டுரையை வாசிக்கும் போது, அவருக்கு இணையான மற்ற கண்டுபிடிப்புகளை விளக்கும் கட்டுரைகளை யார் யார் வாசித்தார்கள் என்று பாருங்கள்.

- காற்று வெளிமண்டல அழுத்தத்தின் மீது சந்திரனின் ஈர்ப்பு என்ன விளைவை ஏற்படுத்துகிறது என்று வேலிஸ் (wallis) என்ற விஞ்ஞானி வாசிக்கிறார்.

-கார்னிலோ (Cornelio) என்னும் இத்தாலிய விஞ்ஞானி , டாரண்டுலா என்னும் ராட்சத சிலந்திகளின் கடியின் விளைவை பற்றி விளக்கு கட்டுரை வாசிக்கிறார்.

-ஃப்ளம்ஸ்டீட் (Flamsteed) ஜூப்பிட்டரை சுற்றி வரும் சந்திரன்களை பற்றிய கட்டுரையை விளக்குகிறார்.

-இன்னொரு ஜெர்மன் மருத்துவர், வெட்டு காயங்களின் தன்மை பற்றிய கட்டுரையை விளக்குகிறார்.

இதில் பாருங்கள்.ஒன்று கூட மொக்கை டாப்பிக் கிடையாது

எல்லாமே நல்ல முக்கியமான டாப்பிக்தான்.

ஆனாலும் நியூட்டனின் ”ஒளியும் வர்ணத்தையும்” கட்டுரைதான் எல்லாராலும் பேசப்பட்டது.

ஏனென்றால் நியூட்டன் எடுத்து கொண்ட களம் முற்றிலும் புதுமையானது.

நியூட்டனின் கட்டுரையினால் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட விஞ்ஞானிகளுக்கு எப்படி இருந்திருக்கும்.

உழைப்பது மனித முன்னேற்றத்திக்குதான்.

இருப்பினும் அங்கீராகத்துக்காக ஏங்குவது இயல்புதானே.

கற்பனை செய்து பாருங்கள்.

கல்யாண வீட்டில் பணக்கார சொந்தம் வரும் போது கண்டுகொள்ளபடாமல் விடப்படும் ஏழை சொந்தங்கள் மாதிரி.

பெண்ணின் பிரச்சனை

பொதுவா பெண்களை அசால்ட் செய்வது போன்ற வார்த்தைகளை ஆண்கள் சர்வ சாதரணமாக உபயோகிக்கின்றனர்.

அந்த வார்த்தையை உள்ளார்ந்து புரிந்து கொண்டிருக்கிறார்களா என்பது தெரியவில்லை.

நான் கூட அப்படித்தான் நினைத்து கொண்டிருந்தேன்.

பிற்பாடு ஆண்களால் அசால்ட் செய்யப்பட்ட பெண்களிடம் பேசின பிறகு என் மொத்த மனப்போக்க்கே மாறிவிட்டது.

-பத்தாம் வகுப்பு வரை வீட்டில் படிக்க வைப்பார்களா இல்லையா என்ற கஸ்டத்தில் உள்ள பெண், அதை
 முடித்து.ஐ.டி.ஐ யும் வீட்டில் கெஞ்சி கூத்தாடி படித்து. தன்னுடைய கம்மல் செயினை அடகு வைத்து ஆட்டோகேட் படித்து முடித்து , பத்து மைல் (கி.மீ அல்ல) பயணம் செய்து சிறு கம்பெனியில் வேலை பார்க்கிறார்

ஆயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளம்.

சின்ன கம்பெனி.ஏழு பேர்தான் வேலை பார்க்கிறார்கள்.

அவர் முதலாளி என்ன செய்வார் தெரியுமா?

பெண்ணின் கைகளை எடுத்து தன் கையில் வைத்து கொள்வாராம்.

வேறு எங்கும் தொட மாட்டாராம்.

கைகளை மட்டும் தான். எடுத்து தடவிக்கொண்டே இருப்பாராம்.

விரல்களை நீவுதல்.புறங்கையை தடவுவது என்று செய்து கொண்டே இருப்பாராம்.

அதை செய்யும் போது அவர் கண்களை பார்க்க கொதித்து விடுமாம் அந்த பெண்ணிற்கு.

ஒன்றும் செய்ய முடியாது.

வீட்டில் சொன்னால் வேலைக்கு போகாதே என்பார்கள்.

முதலாளி வீட்டிற்கு அனுப்பி விட்டால். வாழ்க்கை பயமுறுத்துகிறது.

அந்த பெண்ணின் வீடே ஒரு ரூம்தான்.

ரூமை மரித்து சிறிய சமையல்கூடம்.

ஒருத்தர் குசு விட்டால் எல்லோருக்கும் நாறும் அந்த சிறிய அறையில், எப்போதும் டிவி அலறி கொண்டே இருக்கும்.

பார்க்கிறார்களோ இல்லையோ டிவி அலறும்.

தம்பி எப்போதும் வீட்டு வாசலில் நண்பர்களுடம் “த்தா கொங்ம்மா “ என்று சத்தமாக பேசிக்கொண்டிருப்பான்.

அப்பாவுக்கு குடிப்பழக்கம் எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.ஆனால் வேலை செய்வதை கடந்த பத்து வருடங்களாக விட்டு விட்டார்.

மூன்று வீட்டிற்கு சேர்த்து ஒரே கக்கூஸ். ஒரே பாத்ரூம்.

காலையில் எப்போதும் கக்கூஸ் பிஸியாக இருப்பதாலும். அதன் அசுத்தத்தாலும் இந்த பெண் போவதே இல்லை.

கம்பெனியில் வந்து,கம்பெனி டாய்லெட்டில் யாரும் அடிக்கடி போகாத மதியம் சமயத்தில்தான் போவாராம்.

இதை கவனித்த முதலாளி ”நீ ஏன் மத்தியானம் பாத்ரூமுக்கு போனா லேட்டாகுது “ என்று கேட்பாராம்.எப்படி இருந்திருக்கும் அந்த பெண்ணிற்கு.

ஒன்றும் சொல்ல முடியாது. ஏனென்றால் இவள் நிலமை அப்படி.

தொண்ணூறுகளில் “டிசைனிங் கம்பெனியே “ மிகக்குறைவு.

எந்த பெரிய கம்பெனி போனாலும் எக்பீரியன்ஸ் கேட்பார்கள். அது அவருக்கு இல்லை.

இந்த கம்பெனியில் இரண்டு வருடமாவது வேலை செய்து விட்டால் அப்புறம் முன்னேறிவிடலாம்.

அதற்குதான் முதலாளியின் தொந்தரவு அதிகமாய் இருக்கிறதே. எப்படி வேலை பார்ப்பது என்று பல நாள் தூக்கத்தை தொலைத்தாள்.

வேலை பார்க்கும் சக பெண்களிடம் சொல்லவும் பயம். அவ்ர்கள் முதலாளிக்கு வேண்டப்பட்டவர்களாக இருப்பார்களோ என்று .

அந்த பத்தொன்பதே ஆன .சிறுமி வயதை ஜஸ்ட் கிராஸ் செய்த பெண் யோசித்து கொண்டே இருக்கிறாள்.

சொல்லமுடியாத மன அழுத்தம் வருகிறது.

திடீரென்று இரவு முழித்தால் தூக்கமே வருவதில்லை.

இந்த இடத்தில் யோசித்து பாருங்கள்.

பத்தொன்பது வயதில் ஒரு ஆணுக்கு இந்த கவலை இருந்திருக்குமா?

அவனின் உலகத்தில் இது மாதிரியான பிரச்சனை வருமா?

கண் காது மூக்கு கை கால் குண்டி எல்லாம் ஒன்றுதான் ஆணுக்கும் பெண்ணுக்கும்.

இந்த பாழும் பாலுறுப்புகள்தான் இந்தியாவில் பெரிய பிரச்சனை.

கடலைமிட்டாயும் ஒன்பாத்ரூமும்

ரொம்ப அவசரமா ஒன் பாத்ரூம் வந்துச்சி.

கொஞ்சம் வேலை இருந்ததால அத முடிச்சிட்டு போகலாம்ன்னு வேலையை செய்து கொண்டிருந்தேன். 

அவசரம் அதிகமாகவே சட்டென்று எழுந்து ஒட்டமும் நடையுமாய் போனேன்.

வழியில் ஒருவர் கையை பிடித்து ஒரு துண்டு கடலை மிட்டாயை கொடுத்தார்.

வாங்கமாட்டேன் என்றும் சொல்ல முடியாது.

அவர் ரொம்ப பாசக்காரர்.

அதனால் அதை வாங்கி கடித்து கொண்டே ரெஸ்ட் ரூமை நோக்கி போகிறேன்.

ரெஸ்ட் ரூமுக்குள் போவதற்குள் கடலை மிட்டாய காலியாகி விடும் என்ற மனக்கணக்குதான்.

ஆனால் பாருங்கள் நல்ல தரமான கடலைமிட்டாய் போலும்.

வேகமாக கடித்தும் காலியாகவில்லை.

கடைசி துண்டை வாயில் போட்டு மென்று தின்னும் போது ரெஸ்ட் ரூம் கதவை அடைந்து விட்டேன்.

இப்போது வாயில் போட்ட துண்டை மென்று தின்று கொண்டே சிறுநீர் கழிக்க முடியாது.

அது அசிங்கம் அருவெருப்பு.

அதனால் கதவின் பக்கதிலேயே இருந்து மென்று கொண்டு இருந்தேன்.

நண்பன் வெளியே வந்தான் “மச்சி என்னடா இப்படி ரெஸ்ட் ரும்ல இருந்து திங்கிற “ என்று நக்கலினான்.

அவரவர் அப்பா அவரவருக்கு ஒரு நாவல்

இன்று காலையில் கட்டிலில் நான் படுத்திருக்க, மனைவி அருகில் இருக்க மீரா வர்க்ஷினி துள்ளி துள்ளி விளையாடி தனக்கு தெரிந்த ரைம்ஸ், கதை இன்னும் பலவற்றை அடித்து விட்டு கொண்டிருக்க அதை ஊக்கபடுத்தி கேட்டு கொண்டிருந்தோம். 

என் கைகளை தலையில் வைத்து நான் படுத்திருந்த போஸ் திடீரென்று ஏதோ ஒன்றை சொல்லிற்று.

ஆமா இல்ல. அப்பா மாதிரியே படுத்திருக்கிறோம். 

அப்பாவையே இமிட்டேட் செய்திருக்கிறோம்.

இது பெரிய கண்டுபிடி
ப்பும் இல்லை.

ஆனா எனக்கு இன்னைக்குதான் இதை உணர முடிந்தது.

அப்பா எதைத்தான் சொல்லிதரவில்லை.

அப்பாவிடம் கேட்ட எல்லா கேள்விக்கும் பதில் வரும்.

மூணாங்கிளாஸ் படிக்கும் போது பஞ்சதந்திர கதைகள் படித்து “கொங்கை” என்றால் என்ன ? என்று கேட்டேன். கொங்கை என்றால் பெண்களின் மார்பகம் என்று பொருள்.

அந்த ஒரு கேள்விக்குதான் அப்பா பதில் சொல்லவில்லை.அதை பிற்பாடு நான் தெரிந்து கொண்டது தனி கதை.

கணிதம் சொல்லிதந்தார். விஞ்ஞானம் சொல்லித்தந்தார்.

எரிமலை பற்றி பல தகவல்கள் சொல்வார். நட்சத்திரத்தை பார்த்து பல விஞ்ஞான கதைகள்.

மில்டன் எப்படி தன் ”பாரடைஸ் லாஸ்ட்” எழுதினார்.

ஆஸ்கார் வைல்ட்க்கும் டிக்கிசினரி ஜான்சனுக்கும் உள்ள நட்பு,

பைரனின் “ஒல்டு புல்” இப்படி பல.

மகாபாரதம் ராமயாணத்தை அப்பா ராகம் போட்டு படிக்க கேட்க அருமையானதாக இருக்கும். எல்லா கிளைக்கதைகளையும் சொல்வார்.

எல்லாம் அந்த கட்டிலில் படுத்த படியே. நாங்கள் சுத்தி உட்கார்ந்திருப்போம்.

அந்த தருணம் எங்களுகெல்லாம் சொர்க்கம்.

”பீக்ஷ்ம சபதம்” அப்பாவுக்கு பிடித்த ஒன்று.

அஸ்ட வசுக்கள்’ காமதேனுவை திருடியதால் வந்த சாபத்தினால்தான் பூலோகத்தில் சந்துனு கங்கைக்கு மகனாக பிறக்கிறார்கள்.

கங்கையால் கொல்லபடுகிறார்கள். அதில் கடைசியாக பிழைத்ததே ’பீக்ஷ்மர்’ என்று அப்பா சொல்லும்போது செம சூப்பரா இருக்கும்.

அப்பா சிறுவயதிலேயே “ல” பதம் போட்டு வளர்ந்தவர். அதாவது ‘எல, வால, அத எடுல போன்று சொல்வது. ஆனால் எங்களை எல்லோரையும் “ட” பதத்திலேயே அழைப்பார். ”அத எடுடா”. “ஏண்டா” இப்படி பண்ற? இது மாதிரியான அழைப்புகள்.

இதன் பின்னாடி இருக்கும் சூட்சமம் எனக்கு புரிந்தே இருக்கிறது ரொம்ப யோசித்தால்.

இதனிடையில் அப்பாவின் வாழ்க்கை மிக கடினமானது.காலையில் ஆறுமணி ஏழுமணிக்கு கடை திறந்தால் நைட் மினிமம் பதினோரு மணி ஆகும்.

மளிகை கடை என்றால் தூசி,தும்மல் என்பது எல்லோரும் அறிந்ததே.

இதை எல்லாம் தாண்டி அப்பாவுக்கு உரையாடுதல் மேல் ஆர்வம் அதிகம்.

உரையாடுதலின் கண்ணியத்தை அப்பாவிடம் இருந்தே கற்றேன்.பிற்பாடு சுந்தர ராமசாமியிடமும் கற்றிருக்கிறேன் அவர் எழுத்தை படித்து.

’மாஜிக் தந்திரங்கள்’ என்றொரு புக் அப்பா வாங்கினார்.

அதை படித்து ஏதோ அட்டையெல்லாம் வாங்கி வந்து இரண்டு மூன்று மாஜிக்குகள் செய்தும் காட்டினார்.

எனக்கு எழுத்து கூட்டி படிக்கும் வழக்கம் வந்ததில் இருந்து அப்பா கடைவிட்டு வீட்டுக்கு வந்து சாப்பிடும் போது பேப்பரை எடுத்து தினமும் ஒரு பத்தி படிக்க சொல்வார். சத்தமாக. சதாம் ஹூசைன் ஜார்ஜ் புக்ஷ் எல்லாம் எனக்கு பழக்கமானது அப்படித்தான்.

சிறுவயதில் இருந்தே புத்தகம் படிக்க பழக்கியது அப்பாவேதான்.

பீக்ஷ்மர் கதை துரோணர் கதை, ஈசாப் நீதிக்கதை என்று வீடு முழுவதும் புத்தகமாய் அதிரடிப்பார்.

பிற்பாடு என் வாசிப்பினால் அப்பாவை விட்டு விலக ஆரம்பித்தேன்.

பாலகுமாரனை நான் அதிகம் வாசிப்பது அப்பாவுக்கு பிடிக்கவில்லை.ஒக்ஷோ படிப்பதையும் திட்டுவார். அந்த “தாடிக்காரனுங்க” பின்னாடி போயிராதடா என்று கிண்டல் செய்வார்.

இதற்கிடையில் நான் வாசிப்பை தீவிரபடுத்தி இருந்தேன் “லெனின் வாழ்க்கை வரலாறு” ரஸ்யன் புக்ஸில் வரும் புரியவே புரியாத கம்யூனிஸ் புக்குகள். ( இப்போது எனக்கு புரிவதில்லை. வாத்தியார் வேணும்)

குடும்பத்தை பெருங்கஸ்டம் தாக்கி எல்லோரும் சென்னை வந்தோம்.

என்னிடம் உள்ள பைசாவில் சிறு சிறுக சேமித்து. நூற்றி என்பது ரூபாய் சேர்த்தேன்.

வீட்டில் தி.ஜானகிராமனின் “மோகமுள்” வாங்க போவதாய் அறிவித்தேன்.

எல்லோருக்கும் பெரிய அதிர்ச்சி.

சாப்பாட்டு கஸ்டத்தில் இருந்தே ஒரு மாதம் முன் தான் மீண்டிருக்கோம்.

அண்ணன் பலமாய் திட்டினான். நான் அண்ணனிடம் சண்டை போட்டேன். “மோகமுள்” வாங்கத்தான் செய்வேன் என்றேன். பெரிய சண்டை ஆகிவிட்டது.

திடீரென்று அப்பா புகுந்து “இவ்வளவு சொன்ன பிறகும் நீ கேக்கலன்னா பிற்பாடு லைஃப்ல எந்த விசயத்திலும் அப்பா கிட்ட அலோசனை கேட்க கூடாது “ என்றார்
ஆவேசமாக.

நான் “கேட்கமாட்டேன்” என்று ஒத்தை வார்த்தையில் சொன்னேன்.

மனதளவில் படுகாயமடைந்து விட்டார்.

நான் வாழ்க்கையில் சொன்ன மிக அருவருப்பான வார்த்தை அதுதான்.

மறுநாளில் இருந்து நானும் அப்பாவும் பேசவில்லை.

இறுக்கமாய் இருந்தது வீடு.

இவ்வளவு நடந்தும் நான் “மோகமுள்” வாங்கினேன் (உலகமே அழிந்தால் எனக்கு என்ன?).

ஆனால் படிக்க முடியவில்லை.

அப்பாவின் அந்த சுருங்கின முகமே என்னை வருத்தியது.

இப்படியே மூன்று நாள் போனது.

நாலவது நாள் அப்பா தன் ஆஸ்தான கட்டிலில் படுத்து கொண்டு என்னை கூப்பிட்டார்.நான் தயங்கியே போனேன். “அந்த புக்க எடுத்துட்டு வாப்பா” என்றார்.

துள்ளி குதித்து எடுத்து வந்தேன்.

புக்கை கையால் நீவி கொண்டே ஜானகிராமன் பற்றி கேட்டார். நான் “மரப்பசு” பற்றி பத்து நிமிடம் சொன்னேன்.

ஆர்வமாய் கேட்டார்.

பின் மோகமுள் பத்தி கொஞ்சம் பேசி “நல்ல புக்குப்பா. படி “ என்று சிரித்தபடியே சொன்னதும் நிம்மதி வந்தது.

அதற்கப்புறம்தான் என்னால் மோகமுள்ளை படிக்க முடிந்தது.

அதன் பிறகு நான் எந்த புத்தகம் வாங்கினாலும் அப்பா எதுவும் சொல்வதில்லை.

இப்போதும் அந்த புக்கை பார்த்தால் அந்த நெகிழ்ச்சியான சம்பவம் நினைவுக்கு வரும்.

இன்று கட்டிலில் நான் படுத்து இருக்கும் போது அதே அப்பாவாய் நான் ஆகிவிட்ட உணர்வு.

அப்பா எனக்கு கொடுத்தவற்றில் பத்து சதவிகிதம் என் மகளுக்கு கொடுக்க முடியுமா என்று பெரிய சந்தேகம்தான்.

அப்பா மாதிரியான மேனரிசம் எனக்கு வந்தது பற்றி ஒருமாதிரியாய் இருந்தது.

சட்டென்று எழுந்து கண்ணாடியை பார்த்தேன்.

நல்லவேளை என்முகம்தான் இருந்தது. அப்பா முகம் அங்கில்லை.

அவரவர் அப்பா அவரவருக்கு ஒரு நாவல்

இன்று காலையில் கட்டிலில் நான் படுத்திருக்க, மனைவி அருகில் இருக்க மீரா வர்க்ஷினி துள்ளி துள்ளி விளையாடி தனக்கு தெரிந்த ரைம்ஸ், கதை இன்னும் பலவற்றை அடித்து விட்டு கொண்டிருக்க அதை ஊக்கபடுத்தி கேட்டு கொண்டிருந்தோம். 

என் கைகளை தலையில் வைத்து நான் படுத்திருந்த போஸ் திடீரென்று ஏதோ ஒன்றை சொல்லிற்று.

ஆமா இல்ல. அப்பா மாதிரியே படுத்திருக்கிறோம். 

அப்பாவையே இமிட்டேட் செய்திருக்கிறோம்.

இது பெரிய கண்டுபிடி
ப்பும் இல்லை.

ஆனா எனக்கு இன்னைக்குதான் இதை உணர முடிந்தது.

அப்பா எதைத்தான் சொல்லிதரவில்லை.

அப்பாவிடம் கேட்ட எல்லா கேள்விக்கும் பதில் வரும்.

மூணாங்கிளாஸ் படிக்கும் போது பஞ்சதந்திர கதைகள் படித்து “கொங்கை” என்றால் என்ன ? என்று கேட்டேன். கொங்கை என்றால் பெண்களின் மார்பகம் என்று பொருள்.

அந்த ஒரு கேள்விக்குதான் அப்பா பதில் சொல்லவில்லை.அதை பிற்பாடு நான் தெரிந்து கொண்டது தனி கதை.

கணிதம் சொல்லிதந்தார். விஞ்ஞானம் சொல்லித்தந்தார்.

எரிமலை பற்றி பல தகவல்கள் சொல்வார். நட்சத்திரத்தை பார்த்து பல விஞ்ஞான கதைகள்.

மில்டன் எப்படி தன் ”பாரடைஸ் லாஸ்ட்” எழுதினார்.

ஆஸ்கார் வைல்ட்க்கும் டிக்கிசினரி ஜான்சனுக்கும் உள்ள நட்பு,

பைரனின் “ஒல்டு புல்” இப்படி பல.

மகாபாரதம் ராமயாணத்தை அப்பா ராகம் போட்டு படிக்க கேட்க அருமையானதாக இருக்கும். எல்லா கிளைக்கதைகளையும் சொல்வார்.

எல்லாம் அந்த கட்டிலில் படுத்த படியே. நாங்கள் சுத்தி உட்கார்ந்திருப்போம்.

அந்த தருணம் எங்களுகெல்லாம் சொர்க்கம்.

”பீக்ஷ்ம சபதம்” அப்பாவுக்கு பிடித்த ஒன்று.

அஸ்ட வசுக்கள்’ காமதேனுவை திருடியதால் வந்த சாபத்தினால்தான் பூலோகத்தில் சந்துனு கங்கைக்கு மகனாக பிறக்கிறார்கள்.

கங்கையால் கொல்லபடுகிறார்கள். அதில் கடைசியாக பிழைத்ததே ’பீக்ஷ்மர்’ என்று அப்பா சொல்லும்போது செம சூப்பரா இருக்கும்.

அப்பா சிறுவயதிலேயே “ல” பதம் போட்டு வளர்ந்தவர். அதாவது ‘எல, வால, அத எடுல போன்று சொல்வது. ஆனால் எங்களை எல்லோரையும் “ட” பதத்திலேயே அழைப்பார். ”அத எடுடா”. “ஏண்டா” இப்படி பண்ற? இது மாதிரியான அழைப்புகள்.

இதன் பின்னாடி இருக்கும் சூட்சமம் எனக்கு புரிந்தே இருக்கிறது ரொம்ப யோசித்தால்.

இதனிடையில் அப்பாவின் வாழ்க்கை மிக கடினமானது.காலையில் ஆறுமணி ஏழுமணிக்கு கடை திறந்தால் நைட் மினிமம் பதினோரு மணி ஆகும்.

மளிகை கடை என்றால் தூசி,தும்மல் என்பது எல்லோரும் அறிந்ததே.

இதை எல்லாம் தாண்டி அப்பாவுக்கு உரையாடுதல் மேல் ஆர்வம் அதிகம்.

உரையாடுதலின் கண்ணியத்தை அப்பாவிடம் இருந்தே கற்றேன்.பிற்பாடு சுந்தர ராமசாமியிடமும் கற்றிருக்கிறேன் அவர் எழுத்தை படித்து.

’மாஜிக் தந்திரங்கள்’ என்றொரு புக் அப்பா வாங்கினார்.

அதை படித்து ஏதோ அட்டையெல்லாம் வாங்கி வந்து இரண்டு மூன்று மாஜிக்குகள் செய்தும் காட்டினார்.

எனக்கு எழுத்து கூட்டி படிக்கும் வழக்கம் வந்ததில் இருந்து அப்பா கடைவிட்டு வீட்டுக்கு வந்து சாப்பிடும் போது பேப்பரை எடுத்து தினமும் ஒரு பத்தி படிக்க சொல்வார். சத்தமாக. சதாம் ஹூசைன் ஜார்ஜ் புக்ஷ் எல்லாம் எனக்கு பழக்கமானது அப்படித்தான்.

சிறுவயதில் இருந்தே புத்தகம் படிக்க பழக்கியது அப்பாவேதான்.

பீக்ஷ்மர் கதை துரோணர் கதை, ஈசாப் நீதிக்கதை என்று வீடு முழுவதும் புத்தகமாய் அதிரடிப்பார்.

பிற்பாடு என் வாசிப்பினால் அப்பாவை விட்டு விலக ஆரம்பித்தேன்.

பாலகுமாரனை நான் அதிகம் வாசிப்பது அப்பாவுக்கு பிடிக்கவில்லை.ஒக்ஷோ படிப்பதையும் திட்டுவார். அந்த “தாடிக்காரனுங்க” பின்னாடி போயிராதடா என்று கிண்டல் செய்வார்.

இதற்கிடையில் நான் வாசிப்பை தீவிரபடுத்தி இருந்தேன் “லெனின் வாழ்க்கை வரலாறு” ரஸ்யன் புக்ஸில் வரும் புரியவே புரியாத கம்யூனிஸ் புக்குகள். ( இப்போது எனக்கு புரிவதில்லை. வாத்தியார் வேணும்)

குடும்பத்தை பெருங்கஸ்டம் தாக்கி எல்லோரும் சென்னை வந்தோம்.

என்னிடம் உள்ள பைசாவில் சிறு சிறுக சேமித்து. நூற்றி என்பது ரூபாய் சேர்த்தேன்.

வீட்டில் தி.ஜானகிராமனின் “மோகமுள்” வாங்க போவதாய் அறிவித்தேன்.

எல்லோருக்கும் பெரிய அதிர்ச்சி.

சாப்பாட்டு கஸ்டத்தில் இருந்தே ஒரு மாதம் முன் தான் மீண்டிருக்கோம்.

அண்ணன் பலமாய் திட்டினான். நான் அண்ணனிடம் சண்டை போட்டேன். “மோகமுள்” வாங்கத்தான் செய்வேன் என்றேன். பெரிய சண்டை ஆகிவிட்டது.

திடீரென்று அப்பா புகுந்து “இவ்வளவு சொன்ன பிறகும் நீ கேக்கலன்னா பிற்பாடு லைஃப்ல எந்த விசயத்திலும் அப்பா கிட்ட அலோசனை கேட்க கூடாது “ என்றார்
ஆவேசமாக.

நான் “கேட்கமாட்டேன்” என்று ஒத்தை வார்த்தையில் சொன்னேன்.

மனதளவில் படுகாயமடைந்து விட்டார்.

நான் வாழ்க்கையில் சொன்ன மிக அருவருப்பான வார்த்தை அதுதான்.

மறுநாளில் இருந்து நானும் அப்பாவும் பேசவில்லை.

இறுக்கமாய் இருந்தது வீடு.

இவ்வளவு நடந்தும் நான் “மோகமுள்” வாங்கினேன் (உலகமே அழிந்தால் எனக்கு என்ன?).

ஆனால் படிக்க முடியவில்லை.

அப்பாவின் அந்த சுருங்கின முகமே என்னை வருத்தியது.

இப்படியே மூன்று நாள் போனது.

நாலவது நாள் அப்பா தன் ஆஸ்தான கட்டிலில் படுத்து கொண்டு என்னை கூப்பிட்டார்.நான் தயங்கியே போனேன். “அந்த புக்க எடுத்துட்டு வாப்பா” என்றார்.

துள்ளி குதித்து எடுத்து வந்தேன்.

புக்கை கையால் நீவி கொண்டே ஜானகிராமன் பற்றி கேட்டார். நான் “மரப்பசு” பற்றி பத்து நிமிடம் சொன்னேன்.

ஆர்வமாய் கேட்டார்.

பின் மோகமுள் பத்தி கொஞ்சம் பேசி “நல்ல புக்குப்பா. படி “ என்று சிரித்தபடியே சொன்னதும் நிம்மதி வந்தது.

அதற்கப்புறம்தான் என்னால் மோகமுள்ளை படிக்க முடிந்தது.

அதன் பிறகு நான் எந்த புத்தகம் வாங்கினாலும் அப்பா எதுவும் சொல்வதில்லை.

இப்போதும் அந்த புக்கை பார்த்தால் அந்த நெகிழ்ச்சியான சம்பவம் நினைவுக்கு வரும்.

இன்று கட்டிலில் நான் படுத்து இருக்கும் போது அதே அப்பாவாய் நான் ஆகிவிட்ட உணர்வு.

அப்பா எனக்கு கொடுத்தவற்றில் பத்து சதவிகிதம் என் மகளுக்கு கொடுக்க முடியுமா என்று பெரிய சந்தேகம்தான்.

அப்பா மாதிரியான மேனரிசம் எனக்கு வந்தது பற்றி ஒருமாதிரியாய் இருந்தது.

சட்டென்று எழுந்து கண்ணாடியை பார்த்தேன்.

நல்லவேளை என்முகம்தான் இருந்தது. அப்பா முகம் அங்கில்லை.

துரியன் பழம்

துரியன் பழம் நம்ம எல்லோருக்கும் தெரிந்த பழம்.

அது குழந்தை வேண்டுபவர்கள் மருந்தாய் சாப்பிடுவார்கள் என்பதுதான் துரியனை பற்றி நாம் அறிந்தது.

அன்று பழக்கடையில் பார்த்தேன்.

ஒரு புட்பால் சைசில் முள் முள்ளாக பலாப்பழம் போல் இருந்தது.விசாரித்த போது ஒரு கிலோ எண்ணூறு ரூபாயாம். 

பழம் முழுவதும் இரண்டாயிரத்து அறுநூறு ரூபாய் வரும் என்றார்.

துரியன் பழத்தின் வாசம் அல்லது நாற்றம்தான் உலகிலேயே அதிக அளவு வீச்சு உடையதாய் சொல்ல படுகிறது.

துரியன் ’டிராபிக்கல் பாரஸ்ட்’ எனப்படும் மழைக்காடுகளில் அதிகம் வளரும் தன்மையுடையதாம்.

மிருகங்களில் தற்போது உலகை ஆள்வது மனிதர்கள்.

பல கோடி வருடம் முன்னர் டைனோசர்கள் ஆண்டது.

அது போல தாவரங்களிலும் உண்டாம்.

ஜிம்னோஸ்பெர்ம்ஸ் எனப்படும் பூக்காமல் காய்க்கும் ( நம்ம சவுக்கு மரம் ஒரு ஜிம்னோஸ்பெர்ம்ங்க) தாவரம்தான் டைனோசர் காலத்தில் அதிகம் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது.

அதில் இருந்து தோண்றியதே இப்போது உலகை ஆளும் தாவர வகையான ஆன்ஜியோஸ்பெர்ம்ஸ். அதாவது பூ பூத்து காய்க்கும் தாவரம் ( இதுக்கு உதாரணம் கேட்ட தலையிலே போடுவேன் டியர்ஸ்).

இந்த ஜிம்னோஸ்பெர்ம்ஸ்க்கும் ஆன்ஜியோஸ்பெர்ம்ஸ்க்கும் நடுவில் இருந்து இரண்டு தாவரவகைக்கும் பாலம் அமைத்து கொடுத்தது இந்த துரியன் மரவகைகள் தானாம்.

இதை எட்வர் கார்னர் என்னும் இங்கிலாந்து விஞ்ஞானி ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்.

அவர் சொல்றதுதான் உண்மை அப்படின்னு இல்லை.

அது ஒரு தியரி.

அந்த தியரி அடிப்படையில் துரியன் மரங்கள் மிகப்பெரிய முக்கியத்துவம் பெறுகிறதுதானே...

இத நான் படிச்சது எதுலன்னு கேட்கிறீங்களா?

கேளுங்க. அப்பதான ஸீன் போட முடியும்.

கிறிஸ்டோபர் லாயிட் எழுதிய 100 Species that changed the world.

அப்படிங்கிற புத்தகத்துல படிச்சேன்.

நம் ரசனையை யார்தான் தீர்மானிக்கிறார்கள்.

ஐந்தாம் வகுப்பு முழுவருட லீவில் நானும் அப்பாவும் பேசிக்கொண்டிருக்கிறோம்.

வீட்டில் யாருமில்லை.

இரவு எட்டரை மணி.”எட்டர மணிக்கு நாகர்கோவில் ரேடியோ ஸ்டேசன்ல பாட்டு போடுவானே.ரேடியோவை எடுத்துட்டு வாப்பா” என்றார் அப்பா.

ரேடியோ கம் டேப் ரெக்கார்டரை எடுத்து வந்தேன்.

ஸ்டேசனை டியூன் செய்தால் அன்று பழைய பாட்டு.

பழைய பாட்டா என்று சலித்து ஒடப்போன என்னை பிடித்து கட்டிலில் உட்கார வைத்து “அப்பாக்காக கேளேன்” என்று உட்கார வைத்துவிட்டார்.

முதல் பாட்டு “தங்கத்திலே ஒரு குறையென்றாலும் தரத்தினில் குறைவதுண்டோ” என்ற பாட்டு.

பொறுமையாய் கேட்க ஏதோ ஈர்த்து.

அடுத்த பாட்டு “ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது”.

அடுத்த பாட்டு “மலர்ந்தும் மலராத பாதி மலர் போல” அந்த பாசமலர் பாட்டில்தான் வாழ்க்கையில் பழைய பாட்டை திரும்பி பார்க்கிறேன்.

பத்து வயதான எனக்கு பழைய பாட்டின் மேல் ஆசை வருகிறது.அதன் இனிமையை பிடித்து விட்டேன்.

அன்று அப்பா என்னை இழுத்து பிடித்து கேட்க வைக்காவிட்டால் எந்த வயதில் பழைய பாட்டு பிடித்திருக்கும் என்று சொல்ல முடியாது.

நம் ரசனையை தீர்மானிப்பது யார்?

கண்டிப்பாக நாம் மட்டும் அல்ல.

பெற்றோர்கள்,ஆசியர்கள்,நண்பர்கள்,உணர்வுகள்,உடல்நிலை இன்னும் பல. (காமம் முக்கிய பங்கு வகிக்கும் ரசனையில்)

ஒரு தடவை 23 சி பஸ்ஸில் பெசண்ட் நகரில் இருந்து புரசைவாக்கம் போகும் போது, பக்கத்து சீட்டில் ஒருவர் நண்பரானார்.

அவரும் புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் உடையவர்.

அவர் நந்தனத்தில் இறங்கும் முன் திரும்ப திரும்ப சொன்னார்.

என்ன சொன்னார்

” பாஸ் ‘வால்காவில் இருந்து கங்கா” வரை புக்க கண்டிப்பா படிங்க.அது ஒரு அற்புதமான புத்தகம்.

இறங்க போகும் போது கூட சொன்னார்.

மனதில் பதிந்தது.

அதே பஸ் ஹிக்கின் பாதம்ஸ் பக்கத்தில் நிற்கும் போது இறங்கி “வால்கா முதல் கங்கா வரை” புத்தகத்தை வாங்கி படித்தேன்.

வாழ்க்கையில் என் சிந்ததனை ஓட்டத்தையே மாற்றி போட்ட புத்தகம் அது.

நம் இதிகாசங்கள் புனிதங்கள் எல்லாவற்றையும் இகழாமல் ஆனால் தர்க்க பூர்வமாக ஆராயும் நூல் அது.

நினைத்து பாருங்கள்.

அந்த புத்தகம் என் கையில் இருப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்னால் வரை அது பற்றி என்னவென்றே எனக்கு தெரியாது.

யாரோ ஒருவர் என் பக்கத்தில் அமர்ந்து சொல்கிறார்.

நான் வாங்குகிறேன்.அந்த புத்தகம் என்னுடைய மொத்த யோசித்தலையே தடம் திருப்புகிறது.

நம் ரசனையை தீர்மானிப்பது யார்?

டில்லி 6 வரும் “மோலா மோலா” பாட்டை திரும்ப திரும்ப கேட்கிறேன். காலை நடை பயிலும் போது கூட கேட்கிறேன் என்று எழுத்தாளர் சாரு நிவேதிதா எழுதியிருப்பதை படித்து, உடனே டவுன்லோடு செய்த்து கேட்டால் அற்புதமான பாடல்.

சுகம்.

இப்போதும் அடிக்கடி கேட்கும் அந்த பாடல்.இது போன்று சாரு எவ்வளவு பாடல்களை சொல்லி தந்திருப்பார்.

நான்சி ஆஜ்ரமை அவர் சொல்லித்தானே எல்லோரும் கேட்டோம்.

கலையும் இலக்கியமும் ஆர்வமாய் இருந்தால் எங்கிருந்து வரும். எப்படி நம்மை தாக்கும் என்று சொல்ல முடியாது.நாம் விழிப்போடு இருப்பதே முக்கியம்.

பிளஸ் ஒன் முழுவருட லீவில் திருச்செந்தூர் செல்லும் போது, ஒரு அழகிய இரவில் மொட்டை மாடியில் அண்ணன் அக்கா மாமன் மகன் மகள்கள் எல்லோரும் சேர்ந்து சீட்டு விளையாடுகிறார்கள்.

எனக்கு சீட்டு விளையாடத்தெரியாது( பூராணை பார்த்தால் வரும் பயம் அருவருப்பு சீட்டு விளையாட்டை பார்த்தாலும் எனக்கு வருகிறது).

அதனால் மெல்ல அவர்களிடம் இருந்து நழுவி என் மாமாவின் அறைக்கு வருகிறேன்.

அவர் ரூம் முழுவதும் புத்தகமாக இருக்கும்.பெரிய வாசிப்பாளர்.

அப்படியே ஒரு கண்களால் ஒரு ரவுண்ட் அடிக்கிறேன்.

பாலகுமாரன் நாவல் எல்லாம் பலமுறை படித்துவிட்டேன்.

அப்போது கொஞ்சம் பழைய புத்தகமாய் ஒரு புத்தகம் என்னை ஈர்க்கிறது.எடுத்து பார்க்கிறேன்.

“மரப்பசு” நாவல் ஜானகிராமன் எழுதியது.

முதலில் என்னால் படிக்கவே முடிய வில்லை.

பின் கொஞ்சம் கொஞ்சமாக படித்து அடுத்த மூன்று மாததிற்கு மரப்பசு மட்டுமே படித்தேன்.

தாகத்தோடு இருந்தால் நீரை எங்கிருந்தாவது கடவுள் அனுப்புகிறாரோ என்னவோ?

முதன் முதலில் என்னை உலக திரைப்படம் பார்க்க வைத்த பரிசல் சிவ செந்தில்நாதனை எப்படி பார்த்தேன் என்று சொல்கிறேன்.

அன்று காலையில் காலச்சுவடு படித்து கொண்டிருந்தேன்.

அதில் ஒரு கட்டம் கட்டி இடலோ கல்வினோ சிறுகதைகள் என்று பரிசல் பதிப்பகம் சார்பாக விளம்பரம் கொடுத்திருந்தது.

ஆபீஸ் போகும் வழியில் ஏதோ என்னை ஊந்த அப்படியே பரிசல் விலாசிற்கு சென்று விட்டேன்.

அது பரிசல் சிவ செந்தில்நாதனுடைய வீடு.

புத்தக்ங்கள் நிறைய இருந்தன.

இடாலோ கல்வினோ புத்தகத்தை வாங்கிவிட்டு பரிசல் சிவ செந்தில்நாதனிடம் பவ்யமாக பேசிக்கொண்டிருந்தேன்.

எனக்கு கொஞ்சம் இலக்கியம் தெரிந்திருக்கிறது என்று நினைத்தாரோ என்னவோ என்னை மறுநாள் “சில்ரன்ஸ் ஆஃப் ஹெவன்” படம் போடுகிறோம்.வந்து பாருங்கள் என்று அழைத்தார்.

அந்த படம்தான் நான் பார்த்த முதல் உலகத்திரைப்படம்.

எது என்னை ஆபீஸ் போகாமல் பரிசல் சிவ செந்தில்நாதனை பார்க்க வைத்தது.

எது மறுநாளே உலகத்திரைப்படம் பற்றிய அறிவை கொடுத்தது.அனுபவத்தை கொடுத்தது.ஆச்சர்யம்தான்.

நம் ரசனையை யார் தீர்மானிக்கிறார்கள்.

வடபழனி பழைய புத்தககடையில் எதேட்ச்சையாக என் கண்ணில் பட்டவர் “ மார்வின் ஹாரிஸ்” என்ற மானுடவியலாலர் அவருடைய “கேனிபால்ஸ் அண்டு கிங்ஸ்” என்ற புத்தகம் மூலமாக.அதை வாங்குவதா வேண்டாமா என்று குழம்பினேன்.

அந்த கேனிபால்ஸ் ( நரமாமிசம் சாப்பிடுபவர்கள்) என்ற வார்த்தை ஈர்த்ததால் வாங்கினேன்.

அதிலிருந்து இரண்டு வருடத்தில் அவரின் பெரும்பான்மையான புத்தகத்தை படித்து விட்டேன்.

மார்வின் ஹாரிஸ் மூலம் டெஸ்மொண்ட் மோரிஸ் படித்தேன்.

மானுடவியல் மேல் காதல் உண்டாயிற்று. தேடல் வந்தாயிற்று.

என்னுடைய தோழி பதினாறு வருடமாக அரசுதுறையில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.

திடீரென்று உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால், இரண்டு வருடமாக வேலைக்கு போகமுடியவில்லை.

படுத்த படுக்கைதான் பெரும்பான்மையான நேரம்.

வேலையை ராஜினாமா செய்து விட்டார்.

மன அழுத்தம்.

கடவுளுக்கு கருணையின் அர்த்தம் தெரியாதோ என்று கடவுளையே சந்தேகிக்க தொடங்கினார் தோழி.

ஒரு நாள் தோழியின் பிள்ளைகள் ஒவியம் வரைந்து கொண்டிருக்க, தோழியும் நாமும் சும்மா டிரை பண்ணலாம் என்று வரைந்து பார்க்க, ஒவியம் அழகாக வந்திருக்கிறது.

அதைவிட அதை வரையும் போது உடல் உயிர் எல்லாம் அதுனுள்ளே கரைந்து போவதை உணர்கிறார்.

முறைப்படி ஒவியம் பயின்று ,அற்புதமான ஒவியர் ஆகிறார்.

இவ்வளவு வருடமும் அவருடைய ஓவிய ரசனை எங்கிருந்தது.

எப்படி அவர் ரசனையை முடிவாக கண்டுபிடிக்கிறார்.

நம் ரசனையை யார்தான் தீர்மானிக்கிறார்கள்.

சிலிர்த்துதான் போகிறது இது பற்றி சிந்தித்தால்.

ஏ.ஆர் முருகதாஸ் டெக்னிக்

ஏ.ஆர் முருகதாஸ் சில விசயங்களை தன் எல்லா படங்களிலும் கையாள்கிறார்.

அது ரசிக்க கூடியதாகவே இருக்கிறது.

அவர் படத்தின் முதல் பலம் செண்டிமெண்ட். 

அந்த செண்டிமெண்ட் காட்சிகளின் வசனங்கள்.

தீனாவில் அஜீத தன் தங்கையை பற்றி அம்மாவிடம் சொல்லும்போது “தங்கச்சிக்கு எல்லாமே கிடைக்குனும்மா” என்பார்.

நெகிழ்ச்சியாய் இருக்கும்.

கஜினி படத்தில் அசின் பெண்களை கடத்தும் வில்லனிடம் “இப்பத்தான் நாங்க சமையல்கட்ட விட்டு வெளிய வந்திருக்கோம்.மறுபடியும் அங்கேயே அனுப்பிராத “ என்று சொல்லும் காட்சியில் மயிர் கூச்சரிந்தது எனக்கு.

துப்பாக்கியில் தேசத்துரோகம் செய்யும் பாதுகாப்பு அதிகாரியிடம் விஜய் சொல்கிறார்.

“நான் ராணுவத்துல வேலை பார்க்கிறேன்.

பார்டர்ல செல்வராஜ் (?) ங்கிற புதுக்கோட்டை பையன பாக்கிஸ்தான் ராணுவம் புடிச்சிட்டு போய்ட்டாங்க.

அவன் கண்ண நோண்டி அனுப்பினாங்க.

அவன் பின்பக்கம் வழியே பீர் பாட்டில் இல்ல அத நுழைச்சு கொன்னானுங்க.

அவன் உடம்ப வீட்டுல கொடுக்க போன போது அவன் அம்மா கதறுனாங்க.

அப்பா அலறுனாரு.

ஆனா பாரு! அடுத்த பதினாலாவது நாள் அந்த செல்வராஜ்ஜின் தம்பி ராணுவத்துல வந்து சேர்ந்துட்டான்.”

இந்த வசனம் கேட்கும் போது வரும் உணர்வை என்ன சொல்ல “போலி நெகிழ்த்துதலா” என்ன மண்ணாங்கட்டியோ எனக்கு நல்லாயிருந்தது.

அடுத்து முருகதாஸ் கையாளும் விசயம் படம் பார்ப்பவர்களை ஏதோ ரொம்ப சிக்கலான விசயத்தை, பல அடுக்குகள் கொண்ட கான்சப்டை பார்ப்பது மாதிரி நம்ப வைப்பது.

ரமணாவில் விஜய்காந்தை யூகிசேது டிரேஸ் பண்ணுவது,

கஜினியில் சூர்யாவை கண்டுபிடிப்பது,

துப்பாக்கியில் விஜய் ஒரு விளையாட்டு மாதிரி தன் டீமை வைத்து தீவிரவாதிகளை போட்டுதள்ளுவது போன்ற காட்சிகள்.

மூன்றாவதாக முருகதாஸின் பிரம்மாஸ்திரமாக நான் பார்ப்பது ஹீரோயிக்கான ஸீனை அவர் சொல்லும் விதம்.

பாட்சாவில் ரஜினி “உள்ளே போ” என்று தம்பியை பார்த்து கோபப்படுவது ஹீரோயிக் சீனின் உச்சகட்டம் எனலாம்.

கிளேடியேட்டரில் ரஸல் குரோவ் தன் முகமுடியை கழற்றி “நான் தான் மேக்சிமஸ்” என்று சொல்லும் போது நம் மனதும் ஹீரோயிக் இன்பத்தால் துள்ளும்.

லகான் படத்தில் அமீர்கானுக்கு கடைசி ஒரு பந்து கிடைக்கும்.

சிக்ஸர் அடிக்க வேண்டும்.

அப்போது பவுலர் பந்து போடும் போது ஸ்லோ மோசனில் அமீர்கான் ஒவ்வொன்றாய் யோசிப்பார்.

அவமானம்,உழைப்பு எல்லாவற்றையும் நினைத்து பேட்டை வைத்து பந்தை ஒங்கி சிக்சர் அடிக்கும்போது என்னால் கண்ணீரை கட்டுபடுத்த முடியவில்லை.

அப்புறம் தனியே யோசித்தால் அடப்பாவி என்னடா இப்படி உணர்ச்சிவசப்படுறோம் என்று வெட்கமாயிருக்கும்.

அதுதான் ஹீரோயிக் காட்சிகளின் வலிமை.

நம்மை உள்ளே இழுத்து செல்வது.

அதை முருகதாஸ் அநாசியமாக செய்கிறார்.

தீனாவில் அஜீத அருவாளை எடுத்து காட்டும் அந்த க்ஷாப்பிங் மால் காட்சிக்காகவே படத்தை மூன்று முறை பார்த்தேன்.

ரமணா விஜயகாந்த் ரூமை பூட்டிகொண்டு எல்லோரையும் பெஞ்ச் கட்டையால் அடிப்பது,

கஜினியின் கிளைமேக்ஸ் பைட்

துப்பாக்கியில் தீவிரவாதிகள் விஜய் தங்கையை கொல்ல கத்தியை எடுக்கும் போது, அங்கு சத்தம் கேட்கிறது.

என்னவென்று பார்த்தால் அங்கு விஜய் வளர்க்கும் நாய் குரைத்து கொண்டு நிற்கிறது.

அதன் பின்னர் விஜய் வருவது ஹீரோயிக்காக இருக்கிறது.

சில டைரக்டர்களின் கிளீக்ஷே( ஒரே பாணி) எரிச்சலூட்டும் எனக்கு.

இயக்குனர் சங்கரின் கிளீக்ஷேக்கள் எனக்கு பிடிக்கவே பிடிக்காது.

”அந்தியன்” எல்லாம் என்னால் அதனாலே எனக்கு பிடிக்கவில்லை.

கவுதம் மேனன் கிளீக்ஷே பிடிக்கும்.

மற்றொரு இயக்குனர் முருகதாஸ்.

இங்கிலாந்தில் குழந்தை தொழிலாளர்கள்

பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொழிற்புரட்சி இங்கிலாந்தில் ஆரம்பிக்கிறது.

உற்பத்தி செய்வது என்னும் கலையை மனிதன் கண்டுபிடிக்கிறான். 

பணமுடையவர்கள் உழைப்பை உறிஞ்சுகிறார்கள்.

குழந்தை தொழிலாளர்கள் அதிகமாகின்றனர்.

இங்கிலாந்து அரசு குழந்தை தொழிலாளர் அமைப்பு பற்றி விசாரிக்க பார்லிமெண்டரி கமிக்ஷனை அமைக்கிறது. 

சுரங்கத்தில் வேலை பார்க்கும் சிறுவர் சிறுமியர்களை விசாரிக்கிறது.

ஆண்டு 1833.

அதில் ஒரு குழந்தையின் பதில்கள் இது.

இதில் குழந்தை என்றுதான் தெரிகிறது.

அது ஆணா பெண்ணா என்று சொல்லப்படவில்லை.

பேட்டியை எடுத்தவர் பெயர் எலன் ஹூட்டன்.

மொழிபெயர்த்திருக்கிறேன் முடிந்தவரை.

உன் வயதென்ன?
ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி வந்தால் பத்து வயதென்று நினைக்கிறேன்.

நீ எக்கள்ஸ் பேக்டரியில் (விகன் நகரம்) வேலைக்கு சேரும் போது வயதென்ன?
எட்டு வயது முடியவில்லை. ஒரு வருடத்திற்கும் மேலாக அங்கு வேலை செய்தேன்.

எக்கள்ஸ் பேக்டரியில் உன்னை யாராவது அடித்தார்களா?திட்டினார்களா?
ஆம்.

யார் உன்னை அப்படி திட்டினது? அடித்தது.
வில்லியம் சுவாண்டன்.

எதற்காக அப்படி செய்தார்?
வேலை செய்ய முடியாமல் சோர்ந்து போகும் போது.

எப்போதெல்லாம் உன்னை அடிப்பார்?
குறைந்தது வாரத்திற்கு இரண்டுமுறை.

எதை வைத்து அடிப்பார்?
அவர் கைகளினால்.

அவர் உன்ன ரொம்ப காயப்படுத்தினாரா?
இல்லை. ஆனால் தலையில் குட்டுவார். தலைதான் வீங்கி விட்டது.

வில்லியம் சுவாண்டன் உன்மேல் எதாவது கணமான பொருளை கட்டி போடுவாரா?
ஆம் என் மேல் கட்டி போடுவார்.

எதனால் கட்டி போடுவார்?
கயிற்றினால்.கயிற்றை எடுத்து என் கழுத்தில் சுற்றி, அப்படியே என் தோள்களையும் என் வயிற்றையும் சுற்றி அதை கட்டிவிடுவார்.

எதை கட்டுவார்? அது எவ்வளவு கணம் இருக்கும்?
கணம் எனக்கு தெரியாது. ஆனால் பெரிய இரும்பு கட்டிகள். இன்னும் இரண்டு இரும்புகட்டிகளை சேர்த்து கூட கட்டுவார் என் மீது.

முயற்சி செய் அந்த இரும்பு கட்டிகள் எவ்வளவு பெரிது?
இதோ நீங்கள் கையில் வைத்திருக்கு பெரிய புத்தகம் அளவிற்கு ( லார்ட்ஸ் ரிப்போர்ட் 1818 என்ற புத்தகம்)

அது கட்டியாய் இருக்குமா?
ஆம்.ரொம்ப தடிமனாய் இருக்கும்.

எந்த சமயத்தில் அப்படி கட்டி போடுவார்?
காலை உணவிற்கு அப்புறம்.

எவ்வளவு நேரம்?
அரைமணி நேரம் சராசரியாக.

நீ அப்படி கட்டி போட்டால் என்ன செய்வாய்?
அந்த கட்டிகளை தூக்கி கொண்டு அறையில் குறுக்கும் நெடுக்குமாய் அலைவேன்.

எதற்காக அப்படி கணமான பொருளை தூக்கி அலைகிறாய்?
நான் அப்படி நடக்க வற்புறுத்த படுவேன்.(வில்லியம் சுவாண்டன் வற்புறுத்துவார்)

உன்னை மாதிரி மற்ற குழந்தைகளையும் இவர்கள் இப்படி செய்வதை பார்த்திருக்கிறாயா?
ஆம்.

மற்ற குழந்தைகள் மேலும் கணபொருட்களை கட்டி போடுவார்களா?
ஆம்.சிலருக்கு கால்களில் கூட கட்டி போடுவார்கள் இரும்பு கட்டிகளை.

ஒன்றிற்கும் மேலான இரும்பு கட்டிகளையா?
ஆம பல கட்டிகளை.

எவ்வளவு நேரம் மற்ற குழந்தைகள் அதை தூக்கி நடப்பார்கள்?
ஒரு மணி நேரம்.

நான் கேட்கிற கேள்விக்கு சரியா பதில் சொல்லு? பொய் சொல்லாதே! நீ என்ன செய்தாய்? என்ன நடந்தது?
நான் பேக்டிரியை விட்டு ஒடிவிட்டேன். ஏனென்றால் அவர் என்னை கடுமையாக அடித்தார்.தாங்கமுடியவில்லை.

நீ எதையாவது திருடினாயா?
இல்லை.திருட வில்லை.

இதை நீ உன் அம்மாவிடம் சொன்னாயா?
சொன்னேன்.அம்மா எதுவும் பதில் சொல்லவில்லை.

அப்பாவிடம் சொன்னாயா?
எனக்கு அப்பா இல்லை.

The Mammoth book of How it happened in Britain.

Edited by Jon E.Lewis.

சூர்ய கடவுளும் மேனேஜ்மெண்டும்.

போன மாதம் ஒடிசி புத்தக கடைக்கு போய் வரும் போது செக்யூரிட்டி தன் பக்கத்தில் பல காப்பிகள் ஆங்கில மாத இதழ் வைத்திருந்தார்.

சும்மா புரட்டி பார்க்க, “இலவசம்தான்” என்றதும் அதை வாங்கி வந்து விட்டேன்.

வீட்டில் வைத்து மேலோட்டமாக புரட்ட நல்ல மேகசின் போலத்தான் தெரிந்தது.இதழின் பெயர்” கல்சரமா” (Culturama).

நிறைய வண்ணப்படங்கள் இருக்க ,சரி ஒருநாள் இத போட்டு தாக்கலாம் என்று தூக்கி போட்டுவிட்டேன்.

இன்று அலுவல
கம் விட்டு வரும் போது மனைவி அந்த புத்தகத்தை படித்து கொண்டிருந்தார்.

ஒரு கட்டுரையை எடுத்து கொடுத்து இது சுவாரஸ்யமாக இருக்கிறது நீங்கள் படித்து பாருங்கள் என்று சொல்ல படித்தேன்.

அதை பகிர்கிறேன்.

சரி இப்போது தேவ்தத் பட்நாயக் ( பட்நாயக் என்றால் ஜாதியா?) எழுதிய கட்டுரையை நான் உள்வாங்கி அதை எழுதுகிறேன் என்னை போல.

சூரியன் கடவுள் கண்டுபிடித்துவிட்டார் அந்த உண்மையை.

தொண்டையில் வலித்தது சூரியனுக்கு.

மனைவியின் துரோகத்தை தாங்கும் கணவன் யார்தான் இருக்கிறார்கள் மூவுலகிலும்.

எவ்வளவு முட்டாள் என்று நினைத்தால் ”சரண்யா” தன் பிம்பமான “சயாவை” வீட்டில் வைத்து விட்டு வெளியே போயிருப்பாள்.

”சயா” என்னும் இந்த பிம்பம் சரண்யா போல இருக்கலாம். கண், காது, கழுத்து, கால்கள் எல்லாமே சரண்யா போலவே இருக்கலாம்.

ஆனால் சரண்யா இல்லை.

தான் ஏமாற்றபட்டது பற்றி ஆக்ரோக்ஷமான சூரிய கடவுள், மாமனார் வீட்டி கதவை தட்டுகிறார்.

சூரிய மருமகனின் கோபப்பார்வையை பார்த்த மாமனாருக்கு பயம் பதட்டம் எல்லாம் தொற்றி கொண்டது.

தன் மகள் செய்தது தவறுதான் என்று மன்னிப்பு கேட்டார்.

சூரியனின் வெப்பத்தை நாள் முழுவதும் தாங்க முடியவில்லை என்பதால் மட்டுமே சரண்யா இப்படி செய்தாள் என்று விளக்கம் சொன்னார்.

சூரியன் அதிர்ந்தார்.

தான் பாதிக்கபட்டவன் என்று நினைத்து ஞாயம் கேட்க வந்தால் உண்மையில் பாதிக்கபட்டது தன் மனைவியே என்று உணர்கிறார்.

உலகே தன்னுடைய வெப்பத்தை கண்டு கருகும் போது, சரண்யாவின் உணர்ச்சியை புரிந்து கொள்ளாமல் விட்டோமே என்று வருந்துகிறார் சூரியன்.

சரண்யா (சூரியனின் மனைவி) இருந்து சூர்ய வெப்பத்தில் இருந்து தப்பி பசுமையான குளிர்ச்சியான புல்வெளியில் பெண் குதிரையாக இளைப்பாறுகிறார் என்று கேள்விப்பட்ட சூரியன் அங்கே போகிறார்.

மனைவியை குதிரையாக பார்த்தும் உடைகிறார்.

தன் மனைவியை இவ்வளவு நாள் தப்பாக புரிந்து கொண்டது பற்றி வருந்தி அவரும் ஒரு ஆண் குதிரையாக மாறி மனைவியை காதலிக்கிறார்.

வந்திருப்பது தன் கணவனே என்று தெரிந்த சரண்யா ஆனந்தமாக கணவனோடு கொஞ்சி குலவுகிறார்.

பின்னர் தனக்காக தன் கணவர் இறங்கி வந்தது பற்றி காதலால் கசிந்துருகி,தன்னால் கணவனின் வெப்பத்தை தாங்கி குடும்பம் நடத்த முடியும் என்று தேவதையாக மாறி சூரிய பகவான் கூடவே சென்று விடுகிறார்.

கணவனின் மனதில் இருக்கும் அன்பின் குளிர்ச்சி, கணவனின் தேகத்தில் வரும் வெப்பத்தில் இருந்து காப்பாற்றுகிறது.

இந்த கதையின் முதுகெலும்பு, பிரச்சனை செய்த மனைவியை கண்டிக்க வந்த சூரியன் உண்மையான பிரச்சனைக்கு காரணமே தான்தான் என்று உணர்வதுதான்.

நிஜ வாழ்க்கையிலும் நாம் பல இடங்களில் இதை பார்க்கலாம்.

பூர்ணசந்திரன் ஒரு நிறுவனத்தை நடத்துகிறார்.

அதற்கு ஒரு டீமை ( குழுவை) கட்டமைக்கிறார்.

டீம் பில்டிங் ( குழு உருவாக்கல்) என்பது சாதாரண காரியமில்லை.

தொழிலாளர்களிடம் நிறைய பேச வேண்டும்.

ஊக்கபடுத்த வேண்டும்.கண்டிக்க வேண்டும்.

சந்தேகத்தை தீர்க்க வேண்டும்.

உதவி செய்ய வேண்டும்.

பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

இப்படி பல.

பூர்ண சந்திரன் பிறக்கும் போதே அறிவாளியாய் பிறந்தவராதனால் இதை செவ்வனே செய்கிறார்.

நல்ல ரிசல்ட் கிடைக்கிறது.

இப்போது நிறுவனத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டியிருப்பதால் தன்னுடைய டீமுக்கு விஜய் என்றொரு மேனஜரை நியமிக்கிறார்.

ஆனால் பூர்ணசந்திரன் போனதும் அந்த டீமின் திறமை குறைகிறது.

இதை பூர்ணசந்திரனால் தாங்கமுடியவில்லை.

விஜய்யை திட்டுகிறார்.

விஜய் திறமையற்றவர் என்ற முடிவுக்கு வருகிறார்.

இந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு என்று மதுரை மீனாட்சியை வேண்டுகிறார்.

விபூதியை எடுத்து தன் நெற்றியில் பூசும் போது பூர்ணசந்திரனுக்கு “பளீரென்று” பிரச்சனையின் மூலம் புரிந்து விடுகிறது.

ஆம்.

உண்மையில் விஜய் குற்றவாளி இல்லை.

தான்தான் குற்றவாளி என்று பூர்ணசந்திரன் உணர்கிறார்.

ஒரு குழு, குழுத்தலைவன் வகுத்த நெறிகளைத்தான் பின்பற்ற ஆசை கொள்ள வேண்டும்.

பூர்ணசந்திரன் தலைவராய் இருக்கும் போது குழு நெறிகளைத்தான் முன்னிலை படுத்தியிருக்க வேண்டும்.

ஆனால் பூர்ண சந்திரன் தன்னை ஒரு ஹீரோவாக காட்டிகொள்ள அல்லது நல்ல மேனஜராக காட்டிகொள்ள குழுவை தன்பால் இழுத்திருக்கிறார்.

குழு பூர்ணசந்திரனுக்காக வேலை பார்த்திருக்கிறது. கம்பெனிக்காக இல்லை.

அதுதான் பிரச்சனையின் அடிநாதம்

கோபம் கொண்ட சூரியன் தன் மீதே தவறு என்று உணர்வது போல பூர்ணசந்திரன் தன் தவறை உணர்கிறார்.

விஜய்யுடன் சேர்ந்து குழுவின் கொள்கையை அழகாக வகுக்கிறார்.

அதை விஜய்யை விட்டே குழுவுக்கு போதிக்க சொல்கிறார்.

ஊக்கபடுத்த சொல்கிறார்.

விதிதான் முக்கியம். மனிதர்கள் அல்ல என்று எல்லோரும் உணர்ந்ததும் அந்த குழுவின் திறமை அதிகரிக்கிறது.

( அர்ஜூனா ரணதுங்கா போனாலும் கூட ஸ்ரீலங்கா கிரிக்கட்டில் நிமிர்ந்து நிற்க காரணம் ரணதுங்க அமைத்த தெள்ளதெளிவான குழு விதிதான்).

இதுதான் சூரியனின் கதை வாயிலாக தேவ்தத் பட்நாயக் சொல்ல வரும் கருத்து.

அந்த அர்ஜுன ரணதுங்க எல்லாம் நான் சேர்த்ததுங்க.

நீங்க பாதிக்கபட்டவருன்னு நினைச்சு புலம்பலாம் பிதற்றலாம், வருந்தலாம்.

கூர்ந்து பார்த்தால் நீங்களே கூட பிரச்சனையின் ஊற்றுகண்ணாய் இருக்கலாம்.

அதுதாங்க மெசேஜ்ஜூ...

ரிஸ்க எடுப்பதில்லை....

சிறுவயதில் இருந்தே தேவை இல்லாமல் ரிஸ்க எடுக்க மாட்டேன்.

சண்டை போட மாட்டேன். 

அதிலும் கண்ணாடி போட்ட பிறகு ரொம்ப சாதுவாகிவிட்டேன்.

விளையாட்டுக்கு கூட அடிக்க மாட்டேன்.

யாராவது என் சட்டை பாக்கெட்டில் சட்டென்று கையைவிட்டு பணம் எடுத்தால், பணத்துக்கு கவலைப்பட மாட்டேன். 

ஆனால் அந்த டிஸ்கஸ்டிங் செயலுக்கு எரிச்சலாவேன்.

ஒடும் பஸ்ஸில் இறங்க மாட்டேன்.

தேவை இல்லாத வயரை தொடமாட்டேன்.

காலில் செருப்பு போட்டுத்தான் அயர்ன் செய்வேன்.

சிக்னலை குறுக்காக கடக்க மாட்டேன்.
சுரங்கபாதையைத்தான் உபயோகிப்பேன்.

போலீஸ் முன்னால் வேறு ஆள்களிடம் கூட இறைந்து பேசமாட்டேன்.

நின்று கொண்டிருக்கும் டெம்போ வண்டியை கடக்கும் போது, எப்போது வேண்டுமானாலும் டெம்போவின் கதவை யாராவது திறந்து முகம் அடிவாங்கலாம் என்ற கவனத்திலே இருப்பேன்.

மழை நேரத்தில் பஸ்ஸில் ஆட்டோவில் போகையில் தண்ணீரை கிழித்து கொண்டு வாகனம் போகும் போது, வாயையை கையால் பொத்தி கொள்வேன்.

அந்த மழை நீர் உதட்டில் பட்டால் எனக்கு பிடிக்காது.

பேண்ட் சர்டோடு யூரின் போகும் போது பேண்டை முட்டி வரை உயர்த்தி விட்டு கொள்வேன்.

பேண்ட் கால் நுனியில் நனைந்து அன்று முழுவதும் சிறிய எரிச்சலை கொடுப்பது கூட பிடிக்காது.

நாசூக்கு.டி.டி.ஆர் வந்து டிக்கட்டை செக் செய்யும் வரை நிம்மதியாக தூங்க முடியாது.

சினிமா தியேட்டரில் படம் போடுவதற்கு ஐந்து நிமிடத்துக்கு முன்னர் டிக்கட்டை சோதித்து பார்த்து கொள்வேன்.

அப்போதுதான் நிம்மதி.

பணம் எடுத்த பிறகு,ஏ.டி.எம் கார்டை எடுத்தேனா இல்லையா என்று மூன்றுதடவை வாசலிலேயே இருந்து சோதிப்பேன்.

பூட்டை பல முறை இழுப்பேன்.

காஸ் மூடியிருக்கிறதா என்று ரெகுலேட்டரை சைக்கோ சேஃப்டியாக சோதிப்பேன்.

வாழ்க்கையையே ரெஸ்ட் லெஸ்ஸா வாழ்கிறோமோ என்று சந்தேகம் வரும்.

படிக்கட்டில் மொபைலில் மெசேஜ் படித்து கொண்டே இறங்கும்போது, படிதவறி கால் வைத்து கீழே விழுந்தேன்.

எழுந்திருக்கவே முடியவில்லை.

செம வலி.

அப்புறம் படிகளை சுத்தம் செய்யும் பெண் வந்து தூக்கிவிட்டார்.

அன்றிலிருந்து ஹேண்ட் ரயிலை பிடித்துதான் எந்த படிகளையும் ஏறுகிறேன் இறங்குகிறேன்.

என்ன இந்த பத்தி இப்படி நீண்டு கொண்டே போகிறது.

சோகமாகவோ ஜாலியாகவோ அல்லது மெல்லிய உணர்வாகவோ ஒரு பன்சோடுதானே முடிக்க வேண்டும்.

ஒருமுறை (அப்போ நான் பேச்சுலர்) அம்மாவழி குடும்பங்கள் எல்லாம் சேர்ந்து ஈ.ஸி.ஆரில் ரிசார்ட்டுக்கு போனோம்.

அங்கே நீச்சல் குளத்தில் எல்லோரும் குளித்தோம்.

நான் பொதுவாக நல்ல பாடி பில்டர் எல்லாம் இல்லை.உடம்பு தொள தொளவென்று ”கிண்டி வைச்ச அல்வா” மாதிரிதான் இருக்கும்.

அதனால்தானோ என்னவோ சிறுவயதில் இருந்தே சட்டையில்லாமல் இருப்பதில்லை.

எப்போதும் சட்டையோடு இருப்பது ஒரு நாகரீகமாகவும் எனக்கு படும்.

ஆனால் அந்த இடத்தில் வழியில்லை.

நீச்சல் குளத்தில் ஜாலியாக குளித்தோம்.

எல்லோரும் நீச்சல் குளத்தில் தொப்பென்று குதித்தார்கள்.

நான் இரும்பு கம்பி படிகள் வழியே கவனமாக இறங்கினேன்.

மேலே ஏறும் போது எல்லோரும் ஒரு ஜம்ப் அடித்து பிருக்ஷ்டத்தை நீச்சல் குளக்கரை சிமெண்ட் கட்டில் வைத்து எழுந்து போனார்கள்.

தம்பி எனக்கு முன்னாடி அது மாதிரி போய்விட்டான்.

ஆனால் நானோ இரும்பு கம்பி படிகளை மிதித்து மிககவனமாக ஏறினேன்.

தம்பி என்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான்.

பக்கத்தில் வந்து என்னிடம் “உங்கிட்ட ஒன்னு சொல்லனும் விஜய்” என்றான்.

“என்னது சொல்லு”

“தப்பா எடுத்துக்காத விஜய்”

“மயிரு சொல்லித்தொலல”

“உன்ன பார்க்க”

“என்ன பார்க்க. என்னது சொல்லி தொலச்சுரு”

“இல்ல சட்ட போடாம, க்ஷார்ட்ஸ் போட்டுட்டு, கொழ கொழ உடம்போட நீ ஸ்விம்மிங் பூல் படில ஏறி வரும் போது” அடக்க முடியாமல் சிரித்தான் தம்பி.
எனக்கோ கடுப்பு.

“செண்டன்ஸ முடிச்சிருல கடுப்பாயிருவேன்.

“இல்ல விஜய் அப்படி நீ ஏறிவரும் போது, எனக்கு சாட்சாத் “அக்னி நட்சத்திரம் நிரோக்ஷா” ஒரு பூங்காவனம் பாட்டுல வருவாங்கல்ல அது மாதிரி இருந்துச்சு என்று பீறிட்டு சிரித்தான்.

நானும் சிரித்தேன்.

சிலவற்றை நினைத்தாலே சிரிப்பும் வெட்கமும் வருமே.

அதில் அவன் பேசிய அந்த டயலாக்கும் ஒன்று.

உடைத்த கடலை மேஜிக்...

ஆறு உடைத்த கடலைகளை எடுத்து கொள்ளுங்கள். (நினைவில் கொள்க உருண்டையை இரண்டாய் வெட்டின வடிவத்தில் இருக்கும்)

உங்கள் முன்னாடி இருப்பவர் இளித்த வாயரா என்று என்பதை கன்பர்ம் செய்த்து கொள்ளுங்கள்.

இப்போது ஆரம்பியுங்கள் உங்கள் மேஜிக்கை.

முதலில் ஒரு கடலையை வாயில் இரண்டாய் கடித்து அதில் ஒரு பாதியை வாய் உள்ளே வைத்து இன்னொரு பாதியை வெளியே வையுங்கள். 

வாய் உள்ளே இருக்கும் பொரிகடலையை சாப்பிடுவது மாதிரி பாவலா
 காட்டுங்கள்.

ஆனா சாப்பிடக்கூடாது ( அங்க வெச்சிருகேன் டெக்னிக்).

அடுத்த முழு கடலையை வாயில் போட்டு கடிப்பது மாதிரி பாவ்லா காட்டி முதல் கடலையின் பாதியை வெளியே எடுங்கள். ( அதுதான் இரண்டாவது கடலையின் பாதி என்று நம்ப வையுங்கள்)

இப்போது இரண்டாவது கடலை முழுதாய் உங்கள் வாயினுள் இருக்கிறது.

அடுத்து மூன்றாவது கடலையை கடிக்க வேண்டும்.

நான்காவது கடலையை கடிக்க கூடாது.( மூன்றாவது கடலையின் பாதியை எடுத்து நம்ப வைக்க வேண்டும்)

இப்படியே ஐந்தாவதுக்கும் ஆறாவதுக்கும் செய்யுங்கள்.

இப்போ சொல்லுங்க “ பாருடா பனங்கா மண்டையா! ஆறு கடலையும் உன் முன்னாலத்தான பாதி பாதியா கடிச்சேன். ஆனா இப்ப பாரு அப்படின்னு...

ஜங் மங் என்று மந்திரம் போடு வாயிலுள்ள மூன்று முழுகடலைகளையும் எடுத்து காட்டுங்கள்.

லைஃப்ஃபை என்ஜாய் பண்ணுங்கள்.

ஒடுங்க இப்பவே பொரிகடலை என்ற பொட்னலுபப்பு என்ற உடைத்த கடலையை எடுத்து பயிற்சி செய்யுங்கள்.

சில சமயம் ரொம்ப அப்பாவியா இருப்பேன்.

சில சமயம் ரொம்ப அப்பாவியா இருப்பேன்.

அதை சொன்னால் நம்புவீர்களா என்று தெரியாது.

எட்டு வருடம் முன் என்னுடைய ஆபீஸ் சீனியர் ஒருத்தர் புதுசா பைக் வாங்கியிருந்தார்.

அது பின்னால ஹெல்மெட் மாட்டுற கிளிப்ப மாட்டியிருந்தார்.

அது நிமிர்ந்து இருந்தது.

நான் நினைத்து விட்டேன் பைக்கின் அமைப்பே அப்படித்தான் என்று.

ஓவ்வொரு முறை பைக்கில் ஏறும் போது இறங்கும் போதும் அந்த நிமிர்ந்த கிளிப்பையும் தாண்டி காலை உயர்த்தி பைக் சீட்டில் உட்கார ரொம்ப கஸ்டபட்டேன்.

கடைசியாக நுங்கம்பாக்கம் அஞ்சப்பர் முன்னால் சாப்பிட இறங்கும் முன் கோவத்தில் கத்தியே விட்டேன்.

பாஸ் என்ன பாஸ்... லூசுத்துனமா இது இப்படி நீட்டிகிட்டு இருக்குது. கால தூக்கி போடுறதுக்குள்ள் வலி தாங்கல.

அவருக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. பின் புரிந்து கொண்டு

“அட அரைவேக்காடு பரதேசி! அது ஹெல்மெட் கிளிப்”டா , அது நிமிர்ந்திருந்தா அத இப்படி அமுக்கி வைக்கனும் .

என்று என் தலையில் தட்டினார்.

நாகர்கோவிலில் புதிதாய் திறந்த ஹைடக் ஜெராக்ஸ் கடையின் கண்ணாடி கதவு மூடி இருக்க, நான் அது திறந்திருக்கிறது என்று நினைத்து ”கணார்” என்று முட்டிய அவமானத்தை விட பெரிய அவமானமாய் இருந்தது.

நம்புறீங்களா! ஆனா சாமி சத்தியமா நடத்துச்சு...

இங்கிலாந்து தோற்கவில்லைதானே!

கிரிக்கெட் தெரிந்த அளவு கால்பந்து பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது.

ஆர்வமும் கிடையாது.

2006 ஆம் ஆண்டு உலககோப்பை கால்பந்து விளையாடும் போது இங்கிலாந்திற்கு சப்போர்ட் செய்தேன்.

கொஞ்சம் கொஞ்சமாக ஆர்வம் இருப்பது மாதிரி காட்டிக்கொண்டேன். நடித்தேன். 

ஆர்வம் வந்துவிட்டது. 

அப்புறம் இங்கிலாந்து ஜெயிக்க வேண்டும் என்று தீவிரமாக பிரார்த்திக்கும் அளவிற்கு மாறிவிட்டது.

குரூப் மேட்சில் தேறி இங்கிலாந்து காலிறுதிக்கு வந்தது.

காலிறுதியில் போர்சுக்கலை எதிர்த்து விளையாட வேண்டும்.

மேட்ச் பார்ப்பதற்காக ஆர்வமாய் இருக்கும் போது, அம்மா சொல்கிறார்.

“ எல அந்த பப்பாளி பழத்தை வெட்ட கூடாது. அப்பா வாங்கிட்டு வந்து நாளு நாளாச்சு”

“யம்மா பிறகு வெட்றேன் மேட்ச் பார்க்க போறேன் டிஸ்டர்ப் பண்ணாதீங்க”

சில வேலைகளை செய்யவே மாட்டோம் என்று தெரிந்தால் அதை அப்பா வீட்டில் இருக்கும் போது உரக்க சொல்லி செய்ய சொல்வது அம்மாவின் தந்திரம்.

“யல அந்த தண்ணி கேனை எடுத்து அதுல ஊத்த கூடாது”

“துணியல்லாம் கொஞ்சம் அயர் பண்ணினாஆபிஸுக்கு நல்லா நீட்டா போகாலம்லா கழுத”

நாங்கள் முடியாது என்று சொன்னால் அப்பா “டேய் அத செய்டா” என்று சொன்னால் பிரம்மாஸ்திரத்திற்கு கட்டுப்பட்ட அனுமன் போல் செய்வோம்.

பிரம்மாஸ்திரத்தை அனுமனால் மீறமுடியும்.

ஆனால் மீறமாட்டார்.

மீறினால் உலகின் நியதிகள் அனைத்தும் கேள்விக்குறிதாகும்.சட்டங்களின் சமநிலை குலைந்து விடும்.

நான் முனகி கொண்டே பப்பாளி பழங்களை வெட்ட கத்தியை எடுத்து தட்டை எடுத்து உட்கார்கிறேன்.

இரண்டு பப்பாளி பழங்கள்.

பப்பாளி மேல் கிராமத்து மனிதர்களுக்கு இருக்கும் ஆர்வம்தான் அப்பாவிடம் இருக்கிறது என்று நினைத்து கொண்டே தோலை சீவினேன்.

இங்கிலாந்து சுரத்தே இல்லாமல்தான் ஆடினார்கள்.

போர்ச்சுகலை தடுக்கவே அவர்களுக்கு நேரம் சரியாய் இருந்தது.

அவ்வப்போது டீவி ஸ்கிரீனில் இருந்து கண்களை எடுத்து பழத்தின் தோலை சீவுவதும்,உள்ளே உள்ள பகுதிகளை வழித்து போடுவதுமாய் இருந்தேன்.

பின் சிறு துண்டாய் ஆக்க முயற்சிக்கையில் கத்தி கைவிரலில் வெட்டி விட்டது.

அப்புறம் என்ன டிராமாதான்.

கைகளை கழுவி.டெட்டால் போட்டு, பக்கத்து கடையில் பேண்ட் எய்டு போடும் போது இரண்டு பேரும் ஒரு கோலும் போடவில்லை.

பெனால்டி கார்னர். சஸ்பண்ஸ்.

அதிலும் போர்ச்சுகல் மூன்று கோல்கள்போட, இங்கிலாந்து ஒரு கோல்தான் (?) போட்டது.

எனக்கோ மிகுந்த மனவருத்தம்.புலம்பி கொண்டே இருந்தேன்.

நான் சர்வர ஆத்மார்த்தமாக சப்போர்ட் செய்யாத பாவத்தினால்தான் இங்கிலாந்து தோற்றுவிட்டது என்று நம்பினேன்.

யார் என்னை சப்போர் செய்ய தடை செய்தது என்ற அடுத்த கேள்விக்கு பப்பாளி பழமும், அதை வெட்ட சொல்லி வற்புறுத்திய அம்மாவும்தான் என்ற பதில் கிடைக்க கொதித்து போனேன்.

அம்மாவை விட எளிதான் டார்ஜெட் ஒரு பிள்ளைக்கு வேறு எங்காவது கிடைக்குமா?

”எல்லாம் உங்களலாலதான்.சனியன் மாதிரி பழம் வெட்டு பழம் வெட்டு வந்து நின்னீங்கல்லா.பிறகு இங்கிலாந்து தோக்கத்தான செய்யும்.இந்த பழம் சாப்பிடலன்னா என்னம்மா நடக்கும். செத்துருவோமா? ஏன் இப்படி ஸீன் போடுறீங்க.ச்சே எரிச்சலா வருது..எங்க டீம் தோத்ததுக்கே நீங்கதான் காரணம்”

அம்மா என்னை எந்த உணர்வில்லாமல் பார்த்து புன்முறுவல் பூத்து கொண்டே இருப்பார்.

அது இன்னும் டென்சனாக்கும்.

கோவத்தை பப்பாளி பழம் சாப்பிடாமல் இருப்பதில் வெளிப்படுத்தி தூங்கப்போனேன்.

ஒருநாள் கழித்து பி.பி.சி ஸ்போர்ட்ஸ் வலைதளத்தில் இங்கிலாந்தின் தோல்வி கவலையில் இருந்து மீள்வதற்கு என்ன செய்யலாம் என்ற கட்டுரை வந்திரந்தது.

அதற்கு கமெண்ட்ஸ் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக சொல்லியிருந்தார்கள்.

அதில் ஒருவர் சொன்னதை படித்து கெக்கே பிக்கே என்று சிரித்தேன்.

அது பின்வருமாறு.

“இங்கிலாந்து காலிறுதியில் தோற்ற துன்பத்தில் இருந்து வெளியே வர என்ன செய்ய வேண்டும் என்றால், எல்லோரிடமும் போய் இங்கிலாந்து காலிறுதில் ஜெயித்து விட்டது என்று அடித்து சொல்லுங்கள்.

அதற்கு அவர்கள் சொல்லும் பதிலை கேட்காதீர்கள்.

காதுகளை பொத்தி கொண்டு
ஃப்ளா ஃப்ளா ஃப்ளா என்று சத்தமாக சொல்லி விட்டு ஒடி வந்து விடுங்கள்.

நம்மை பொறுத்தவரை நம் இங்கிலாந்து ஜெயித்த இங்கிலாந்தாகவே இருக்கும் :).

எனக்கு அந்த கமெண்ட் பிடித்திருந்தது.

அதில் ஒரு மறைதத்துவம் இருப்பதாக தோண்றியது.

2006 இல் இருந்து பத்து வருடங்கள் முன்னால் 1996 யில் ஈடன் கார்டனில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நடந்த அரையிறுதி கிரிக்கெட் போட்டியில், இந்தியா படு கேவலாமாக தோற்றது.

ரசிகர்கள் மேட்சை நடத்தவிடவில்லை.

இலங்கை வென்றது என்று அறிவிக்கபட்டது.

அப்போது களத்தில் இருந்த வினோத் காம்ளி இந்திய தோல்விக்காக அழுதுகொண்டே போனார்.

நானும் அழுதேன்.

ஒன்றுமே முடியவில்லை.

ஒருவாரம் துக்கமாய் இருந்தது.

இந்த ”ஃப்ளா ஃப்ளா ஃப்ளா கேட்கமாட்டேன் கேட்கமாட்டேன் கேட்கமாட்டேன்” ஐடியா அன்றே தெரிந்திருந்தால் ஒருதுளி கண்ணீர் சிந்தியிருக்க மாட்டேனே!

அநியாயமா உணர்ச்சிவசப்பட்டுட்டேனே!

விளையாட்டுகளின் மேல் இருந்த அதீதம் மட்டுப்பட்டு அன்று தெளிந்திருந்தேன், ஒரு சாதரண கிண்டல் கமெண்ட் மூலமாக.

பல சமயம் நம்முள்,

எங்கிருந்தோ வரும் ஒளி பரவித்தான் விடுகிறது விழிப்பை உணர்த்தி.

பெரிய மகிழ்ச்சியும் கவனமும்...

அன்று எனக்கு மகிழ்ச்சியான நாள்.அப்பா “ஐயர் தி கிரேட்” என்ற மலையாளபடம் கூட்டி போவதாய் சொல்லியிருந்தார்.

இரவு கடை அடைத்ததும் செகண்ட் க்ஷோதான் போவோம்.

காலையில் இருந்தே சினிமா பார்க்கும் ஆர்வத்தில் ஜாலியாக இருந்தேன்.

கடை அடைக்கும் நேரமும் வந்தது. 

கடைக்கு க்ஷட்டர் எல்லாம் கிடையாது.

பலகைதான்.ஒவ்வொரு பலகையாய் எடுத்து வைத்து கையால் தள்ள வேண்டும்.

பலகை போடும் நேரமெல்லாம் அப்பா என்னை பக்கத்தில் விட மாட்டார்.தள்ளிப்போ என்பார்.

அன்று அப்பாவின் நண்பர் வந்திருந்ததால் பேசிக்கொண்டே பலகை போட்டார் பாருங்கள். நான் என் அழகிய நான்கு தளிர் விரல்களை பலகை வரும் இடத்தில் வைத்திருந்தேன் பாருங்கள்.

நான்கும் பலகைகளுக்கு இடையில் சிக்கியது.

வலியால் துடித்து அழுகிறேன்.

அப்பா சட்டென்றும் பலகை எடுத்து கைகளை பார்த்தால் நான்கு விரல்களும் லட்சுமி வெடி மாதிரி வீங்கியிருந்தது.

படம் பார்க்க வேண்டாம் என்பதையும் ஏற்கவில்லை.
பார்த்தே ஆக வேண்டும் என்றேன்.

ஆனால் அன்று சினிமா பார்க்கவே முடியவில்லை.வலியால் அழுதுகொண்டே இருந்தேன்.

பாயிண்ட் என்னனென்னா பெரிய ஜாலிகளை சின்ன சின்ன கவனமின்மையால் இழந்து போவதின் தன்மை.

அம்மா தன் சொந்த தங்கை கல்யாணத்திற்கு நிறைய பிளான் செய்து விட்டு, கல்யாணத்திற்கு முந்தின நாள் பெரிய அரிசி அளக்கும் உழக்கை காலில் போட்டுவிட்டாராம்.

அப்புறம் கல்யாண மகிழ்ச்சியே போய்விட்டதாம்.

லோயர் மிடில் கிளாஸ் ஆசிரியை ஒருவர் ஸ்கூலில் கிறிஸ்த்துமஸ் கொண்டாட்டங்களுக்காக திட்டமிட்டு காசு சேர்த்து ஒரு பட்டுபுடவை வாங்குகிறார்.

கிறிஸ்த்துமஸ் அலங்காரங்கத்திற்காக கலர் பேப்பர்களை மடியில் வைத்து வெட்டும் போது பட்டு புடவையையும் சேர்த்து வெட்டி விடுகிறார்.

அவ்வளவுதான் பெரிய மகிழ்ச்சி சிறிய கவனமின்மையால் காணாமல் போகிறது.

கல்யாணம் ஆன புதிதில் ஹனிமூன் ஏற்பாடுகளில் ரொம்ப ஆர்வமாகி மூன்று நாட்களாக சுத்தமா தூங்கவே இல்லை.

அம்மா எச்சரித்து கொண்டே இருந்தார்”விஜய் நீ சரியா தூங்கலன்னா உனக்கு காய்ச்சல் வரும்” என்று.

அது காதில் ஏறவே இல்லை. சரியாக கொடைக்கானலில் கால் வைத்த உடன் காய்ச்சலும் சளியும் பிடித்து கொண்டது.

சம்சாரம் அது மின்சாரம் படத்தில் சந்திரசேகரும் மாதுரியும் அன்னியோன்யமாக இருப்பதற்கு ஹோட்டலில் ரூம் எடுப்பார்கள். சந்திரசேகருக்கு அம்மை போட்டு விடுமே அது போல ஆகிவிட்டது என் கதை.

ஹனிமூன் போய்விட்டு ,முக்கால் வாசி நேரம் ரூமில் சுருண்டு படுத்து வாந்தி எடுத்து கிடந்தேன்.

மனைவிதான் பாவம். சின்ன கவனகுறைவு மகிழ்ச்சியை கெடுத்தே விடுகிறது.

என்னுடன் வேலை பார்ப்பவர் குடகு மலையை ( கூர்க்) பார்க்க ஆசையாய் இருந்தார்.

கம்பெனியில் எல்லோரும் மைசூர் வரை டிரயின் புக் செய்திருந்தோம்.

இவர் டிரயினில் போக போல அப்படி என்ஜாய் பண்ணனும் இப்படி என்ஜாய் பண்ணனும் என்று சொல்லி கொண்டே வந்தார்.

கடைசியில் இரவு தூங்கும்போது டிரயின் ஜன்னல் க்ஷட்டரை மூடத்தெரியாமல் மூட முயற்சி செய்து அது நேரே வந்து அவர் பெருவிரலை பதம் பார்த்தது.

கண்ணீர் விட்டு அழுதார்.

அதோடு டிரிப் முடியும் வரை பெருவிரலை பிடித்து கொண்டே இருந்தார்.

கவனம் பெரிய ஜாலியை இன்னும் ஜாலியாக ஆக்குகிறது.

இந்தியா ஆஸ்திரேலியா டூர் போனால் அதை திருவிழா மாதிரி கொண்டாடுவேன்.

அதிகாலையில் எழுந்து டீ போட்டு குடித்து கொண்டு காத்திருப்பேன் இன்பத்திற்காக.

அன்று ஏதோ ஒண்டே மேட்சுக்காக காத்திருந்தேன்.

அதில் பாருங்கள் டாஸ் போடும் போது ஒண்ணுக்கு வந்தது.

சீக்கிரம் போய்விட்டு யார் பேட்டிங் என்று பார்க்கும் ஆர்வத்தில் பாத்ரூமில் துள்ளி குதித்து இறங்கினேனா.

அப்படியே கால் சறுக்கி அங்குள்ள சிமெண்ட் மேடையில் என் இடது காதோடு தலை “ணங்” என்று அடித்தது.

அப்படியே படுத்திருந்தேன்.கத்த முடியாது.

கத்தினால் தூங்கிகொண்டிருந்த மனைவி அய்யோ அம்மா என்று பதறுவார்.

விடியல் ஐந்து மணிக்கு அது ஒவர் ஸீனாகி விடும்.

அதனால் பாத்ரூம் தரையில் அப்படியே மல்லாகக்க ஐந்து நிமிடம் படுத்திருந்தேன் அந்த தண்ணீருக்குள்.

அம்மா அம்மா என்று அம்மாவை கூப்பிட்டு மெலிதாய் அழுதேன்.

அப்புறம் சிறு குழந்தை மாதிரி தவழ்ந்து தவழ்ந்து வெளியே வந்து தட்டு தடுமாறி தரையில் படுத்து விட்டேன்.

கிரிக்கெட் பார்க்கவா முடியும்.

கண்டிப்பா சின்ன விசயங்கள் மேல கவனமாத்தான் இருக்கனும் போல இருக்கு.

சிறுவயதில் திருச்செந்தூர் சூரசம்ஹாரம் பார்க்க எங்கள் குடும்பம், அத்தை ( அப்பாவின் தங்கை குடும்பம்) எல்லோரும் சேர்ந்து திருச்செந்தூருக்கு போயிருந்தோம்.

கூட்டமென்றால் ஆவேசமான கூட்டம்.மிகமகிழ்ச்சியாக அனுபவித்து கொண்டிருந்தோம்.

திடீரென்று அத்தை தன் பையனை ( என் வயதிருக்கும்) காணவில்லை என்றார்.

பதட்டம் வந்தது.

அப்பா சித்தப்பா எல்லோரும் தேடினார்கள்.கிடைக்கவில்லை.அத்தை என் பையனை கடல் தூக்கி போய்விட்டது என்று கடலை நோக்கி மணலை அள்ளி போட்டு பைத்தியம் போல் அழுதார்.

உடம்பெல்லாம் நடுங்கியது.

கடைசியில் பையன் ஒரு பலூன்காரன் பின்னாடி பலூனை பார்த்து கொண்டிருந்திருக்கிறான்.

அத்தை கவனக்குறைவாக பக்தி மோகத்தில் அவனை கவனிக்காமல் கூட்டத்தில் விட்டிருக்கிறார்.

அவன் கிடைத்ததும் மகிழ்ச்சிதான்.

ஆனால் பழைய உற்சாகம் இல்லை.

அப்பா சோர்ந்து விட்டார் மனதளவில்.

சீக்கிரம் சூரசம்ஹார விழாவில் இருந்து வெளியே வந்து நாகர்கோவிலுக்கு பஸ் ஏறினோம்.

சின்ன சின்ன கவனம், மகிழ்ச்சியான பொழுதுகளை இன்னும் மகிழ்ச்சியாக்குகிறது.