இந்திய அரசு 2006 ஆம் ஆண்டு பேராசிரியர் Sukhadeo Thorat தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கிறது.
கமிட்டியின் நோக்கம் All India Institute of Medical Science என்ற AIIMS கல்வி சாலைகளில், தலித் மாணவர்கள் மேல் காட்டப்படும் பாகுபாட்டையும் துவேசத்தையும் ஆராய்வதுதான்.
அது அப்படி ஆராய்ந்து கீழ்கண்ட பரிந்துரைகளைச் செய்கிறது.
நான் படித்த அளவில், புரிந்து கொண்ட அளவில் கொடுக்கிறேன்.
முழுமையாக படிக்க முதல் கமெண்டில் இருக்கும் லின்கைச் சொடுக்கிப் படித்துக் கொள்ளுங்கள்.
Thorat கமிட்டியின் பரிந்துரை வருமாறு...
1.ஆங்கில மொழியை நன்றாக கையாளும்படியான அறிவைக் கொடுக்கும் ஸ்பெஷல் புரோகிராம்களை தலித் மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும். இது பற்றி மாணவர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.
2.மூன்றில் இருபங்கு தலித் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்ற மாணவர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை தங்களுக்கு கொடுக்கவில்லை. தங்களை கண்டுகொள்வதில்லை என்கிறார்கள். இதை சரி செய்ய ஆசிரியர்களும் மாணவர்களும் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்த நிர்வாகம் வழி செய்ய வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையோ, தகவல் பரிமாற்றத்தையோ முறைப்படியாக பதிந்து நிர்வாகம் செய்ய வேண்டும்.
3.பெரும்பான்மையான தலித் மாணவர்கள் தேர்வில் தங்களை ஆசிரியர்கள் வேண்டுமென்றே ஒதுக்குவதாக சொல்கிறார்கள். ஆசிரியர்கள் 50 பர்சண்ட் மதிப்பெண்களை Internal லில் கொடுப்பதால், அதில் ஜாதி பார்த்து தங்களை ஒதுக்குவதாக நினைக்கிறார்கள். இதைப் போக்க அனைவரும் கண்காணிக்ககூடிய, தெளிவான தேர்வுமுறையை நிர்வாகம் பின்பற்ற வேண்டும். Objective முறை கேள்விகளைக் அதிகம் கேட்கலாம்.ஆனால் மருத்துவப் படிப்பில் அப்படி கேட்பது முடியாது. இதனால் இதை எப்படி சரிசெய்ய முடியும் என்று நிர்வாகம் மாணவர்களோடு ஆலோசிக்க வேண்டும். தலித் மாணவர்களுக்கு நம்பிக்கை வரும்படியான தேர்வுச் சூழ்நிலையை ஏற்படுத்தித் தரவேண்டிய பொறுப்பு நிர்வாகத்துக்கு இருக்கிறது.
4.Class representative களாக செயல்படும் மாணவர்கள் ஜாதி பாகுப்பாடைக் காட்டுவதாக கமிட்டி உணர்கிறது. தலித் மாணவர்கள் குறைவாக இருப்பதால் அவர்கள் பிரச்சனையை அவர்கள் சரிவரக் கண்டுகொள்வதில்லை. இதற்கு தலித் மாணவர்கள் சார்பில் ஒரு பிரதிநிதியை ஒவ்வொரு வகுப்புக்கும் வைக்கலாம். மேலும் Class representative வின் பணிகள், அவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற திட்டவட்டமான வரைமுறைகளை சொல்லிக் கொடுக்கலாம். இந்த சட்டத்தை நிர்வாகம்தான் செய்ய வேண்டும்.
5.ஹாஸ்டலில் தலித் மாணவர்களை ஒதுக்குகிறார்கள். கலை நிகழ்ச்சிகளில் பெரும்பாலான தலித் மாணவர்கள் பார்வையாளராகத்தான் கலந்து கொள்கிறார்கள். இடஒதுக்கீட்டை ஏற்றுக் கொள்ளாத தலித் அலலத மாணவர்கள் என்று ஒரு குழு உருவாகி, அவர்கள் தலித் மாணவர்களை மிக மோசமாக ஹாஸ்டலில் நடத்தியிருக்கிறார்கள். இதற்கு ஆதாரம் இருக்கிறது. இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறது என்பதையே எய்ம்ஸ் நிர்வாகம் உணர்ந்ததாகத் தெரியவில்லை. அவர்கள் இதை சரிய முயற்சி செய்ய வேண்டும்,
- ஆசிரியர்கள், ஊழியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என்றொரு கூட்டுக்குழு ஏற்படுத்தி, அக்குழுவின் மூலம்
தலித் மாணவர்களின் பிரச்சனையை உடனுக்குடன் விவாதித்து திர்வு காணவேண்டும்.
தலித் மாணவர்களின் பிரச்சனையை உடனுக்குடன் விவாதித்து திர்வு காணவேண்டும்.
- எய்ம்ஸ் நிர்வாகத்தை அடக்கப்படும் தலித் மாணவர்கள் சுதந்திரமான இயங்கும்படியான ஒட்டுமொத்தமான இணக்கமான சூழலை ஏற்படுத்துபடியாக கமிட்டி கேட்டுக் கொள்கிறது.
- எய்ம்ஸ் Equal Opportunity Office என்றொரு அலுவலகம் ஏற்படுத்தி தலித் மாணவர்களின் பிரச்சனையை அவ்வப்போது பேசியும், நடவடிக்கை எடுத்தும் சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும்.
- கலை நிகழ்ச்சிகளை நடத்தும் முக்கிய பொறுப்புகளில் தலித் மாணவர்களை நிர்வாகம் நியமிக்க வேண்டும்.
- முறையான இடஒதுக்கீட்டின் படி ஆசிரியர் தேர்வு நடக்கிறதா என்பதை எய்ம்ஸ் நிச்சயம் செய்து கொள்ள வேண்டும். அப்படி இல்லையென்றால் அதைச் சரி செய்ய வேண்டும்.
- இந்திய மருத்துவத்துறை எய்ம்ஸ் இவற்றையெல்லாம் சரியாக செய்கிறதா என்று கண்கானிக்க வேண்டும்.
இந்த Thorat கமிட்டி பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முத்துகிருஷ்ணன் தன் முகநூல் சுவரில் சொல்லியிருக்கிறார்.
இந்த கமிட்டியின் அறிக்கையை முழுவதும் படித்துப் பார்க்கும்படி நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
ஜாதி பேசாமல் குழந்தைகளை வளர்க்கிறேன் என்று பெரும்பான்மையான பெற்றோர்கள், ஜாதியை எதிர்க்க வைக்காமல், சமூகநீதி உணர்வில்லாமல் குழந்தைகளை வளர்த்துவிடுகிறார்கள்.
அக்குழந்தைகள் வளர்ந்து கல்லூரிக்குச் செல்லும் போது அடக்கட்ட சமூகத்தில் இருந்து வரும் சக நண்பர்களை இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வந்தவன் கிண்டல் செய்து ஒதுக்குகின்றன. பிரச்சனை செய்கின்றன.
பெற்றோர்கள் நினைத்தால் இது போன்ற பிரச்சனைகளை பாதி இல்லாமல் செய்துவிடலாம் என்றே சொல்வேன்.
இந்தப் பதிவின் நோக்கம் Thorat கமிட்டியை தமிழில் பலருக்கும் சுருக்கமாக அறிமுகப்படுத்துவது மூலம், கல்லூரியில் தலித் மாணவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளத்தான்.
முழுமையான அறிக்கை முதல் கமெண்டில். என் பதிவில் ஒன்றிரண்டு விடுதல்களோ, புரியாமையோ இருக்கலாம்.
இப்போது ஒரு பெரிய கல்வி நிறுவனங்களில் படிக்கும் தலித் மாணவர்களை மற்றவர்கள் எப்படியெல்லாம் வசதியில்லாமல் செய்கிறார்கள் என்பது பற்றிய விரிவான பார்வையும், சுரணையும் நமக்குக் கிடைக்கிறது.
இனிமேல் இந்த பார்வையையும், சுரணையும் அடுத்தவருக்கு பிரச்சாரம் செய்ய வேண்டும்.
உங்கள் மனைவிக்கோ, கணவனுக்கோ, குழந்தைக்கோ, பக்கத்துவீட்டுகாரருக்கோ, ஆசிரியருக்கோ, சொந்தபந்தங்களுக்கோ இது பற்றி பக்குவமாக எடுத்துச் சொல்லுங்கள்.
இந்த Thorat கமிட்டி அறிக்கை அடிப்படையில் சொல்லும் போது உங்களுக்கு ஒரு கோர்வை கிடைத்துவிடும். அவர்களும் அதைப் புரிந்து கொள்வார்கள்.
சின்ன சின்னப் பிரச்சாரங்களை நம்புங்கள். அது நல்ல பலனைக் கொடுக்கும். நான் அதை எப்போதும் செய்வேன்.
No comments:
Post a Comment