உத்திரப்பிரதேச முதலமைச்சர்கள் பட்டியலைப் பார்த்தேன்.
அதில் 1980 யில் இருந்து உள்ள பட்டியலைக் கொடுக்கிறேன்.
A.1.குடியரசு தலைவர் ஆட்சி - 113 நாட்கள்
B.இந்திய தேசிய காங்கிரஸ் (9 வருடங்கள் 177 நாட்கள்)
2.வி.பி சிங் - 2 வருடங்கள் 39 நாட்கள்
3.ஸ்ரீபதி மிஸ்ரா - 2 வருடங்கள் 14 நாட்கள்
4.என்.டி திவாரி - 1 வருடம் 52 நாட்கள்
5.வீர் பகதூர் சிங் - 2 வருடங்கள் 274 நாட்கள்
6.என்.டி திவாரி - 1 வருடம் 163 நாட்கள்
3.ஸ்ரீபதி மிஸ்ரா - 2 வருடங்கள் 14 நாட்கள்
4.என்.டி திவாரி - 1 வருடம் 52 நாட்கள்
5.வீர் பகதூர் சிங் - 2 வருடங்கள் 274 நாட்கள்
6.என்.டி திவாரி - 1 வருடம் 163 நாட்கள்
C.ஜனதா தளம் (1 வருடம் 201 நாட்கள்)
7.முலாயம் சிங் யாதவ் - 1 வருடம் 201 நாட்கள்
7.முலாயம் சிங் யாதவ் - 1 வருடம் 201 நாட்கள்
D.பாரதீய ஜனதா (1 வருடம் 165 நாட்கள்)
8.கல்யாண் சிங் - 1 வருடம் 165 நாட்கள்
8.கல்யாண் சிங் - 1 வருடம் 165 நாட்கள்
E.9.குடியரசு தலைவர் ஆட்சி - 363 நாட்கள்
F.சமாஜ்வாடி (1 வருடம் 181 நாட்கள்)
10.முலாயம் சிங் யாதவ் - 1 வருடம் 181 நாட்கள்
10.முலாயம் சிங் யாதவ் - 1 வருடம் 181 நாட்கள்
G.பகுஜன் சமாஜ் (137 நாட்கள்)
11.மாயாவதி - 137 நாட்கள்
11.மாயாவதி - 137 நாட்கள்
H.பாரதீய ஜனதா (4 வருடங்கள் 169 நாட்கள்)
12. கல்யாண் சிங் - 2 வருடங்கள் 52 நாட்கள்
13. ராம்பிரகாஷ் குப்தா - 351 நாட்கள்
14. ராஜ்நாத் சிங் - 1 வருடம் 131 நாட்கள்
12. கல்யாண் சிங் - 2 வருடங்கள் 52 நாட்கள்
13. ராம்பிரகாஷ் குப்தா - 351 நாட்கள்
14. ராஜ்நாத் சிங் - 1 வருடம் 131 நாட்கள்
I.15.குடியரசு தலைவர் ஆட்சி - 56 நாட்கள்
J.பகுஜன் சமாஜ் (1 வருடம் 118 நாட்கள்)
16.மாயாவதி - 1 வருடம் 118 நாட்கள்
16.மாயாவதி - 1 வருடம் 118 நாட்கள்
K.சமாஜ்வாடி (3 வருடம் 257 நாட்கள்)
17.முலாயம் சிங் - 3 வருடங்கள் 257 நாட்கள்
17.முலாயம் சிங் - 3 வருடங்கள் 257 நாட்கள்
L.பகுஜன் சமாஜ் (4 வருடங்கள் 307 நாட்கள்)
18. மாயாவதி - 4 வருடங்கள் 307 நாட்கள்
18. மாயாவதி - 4 வருடங்கள் 307 நாட்கள்
M.சமாஜ்வாடி (4 வருடம் 364 நாட்கள்)
19.அகிலேஷ் யாதவ் - 4 வருடங்கல் 364 நாட்கள்
19.அகிலேஷ் யாதவ் - 4 வருடங்கல் 364 நாட்கள்
இதில் தேசியக் கட்சிகளின் கீழ் முதல்வர்கள் அடிக்கடி மாறியிருக்கிறார்கள்.
பிராந்தியக் கட்சியான சமாஜ்வாசி, பகுஜன் சமாஜ் கட்சிகளில் அப்படி மாறவில்லை.
தேசியக் கட்சிகளில் அப்படி அடிக்கடி முதல்வர்கள் அடிக்கடி மாறுவதை அதிகாரச் சண்டை என்று எடுத்துக் கொள்வதா? அல்லது அதிகாரப் பகிர்வு என்று எடுத்துக் கொள்வதா?
பிராந்தியக் கட்சிகளின் ஒற்றை முதல்வர்கள் பாணி என்பது நல்ல தைரியமான முடிவு எடுக்க வசதியாய் இருக்குமா? அல்லது பிராந்தியரீதியான் சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்குமா?
பா.ஜ.க 15 வருடங்கள் மூன்று நாட்கள் எந்தவிதமான அதிகாரத்தையும் பெற முடியாமல் அதன் பிறகு இப்போதுதான் பெற்றிருக்கிறது.
கடைசியாக மார்ச் 2002யில் ராஜ்நாத்சிங் முதல்வராக இருந்த பிறகு,
பகுஜன்- சமாஜ்வாடி- பகுஜன்- சமாஜ்வாடி என்று
’இரண்டு செட்’ ஆட்சிகள் நடந்துள்ளன.
’இரண்டு செட்’ ஆட்சிகள் நடந்துள்ளன.
ஆகவே இதை 15 வருடங்கள் ஏற்பட்ட சலிப்பின் காரணமாக விளைந்த ஒரு சுழற்சிமுறை ஒட்டளிப்பு என்றுதான் கொள்ளவேண்டியதிருக்கிறது.
ஆனால்
ஒருநிமிடம் நின்று யோசிக்க முடியாத நமக்கு
இது மோடியின் ஹீரோயிஸமாகத் தெரிகிறது.
கட்சிகளின் கொள்கைகள் தாண்டி
தங்கள் அன்றாடத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம், சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற விஷயங்களுக்காக மக்கள் அதிகம் கவலையாய் இருக்கின்றனர் என்று தெரிகிறது.
மக்களை எப்போதும் அடிப்படைத் தேவைக்கான தாகத்தில் வைத்திருந்து,
அதிகம் சிந்திக்கவிடாமல்,
அவர்களை ’ஒரு சுழற்சி முறை சக்கரத்தின்’ முக்கிய பொறியாக மாற்றி,
ஒட்டுக்களைப் பெற்று,
அதிகாரத்தை சுழற்சி முறையில் ரசிப்பதுதான் இந்திய அரசியல்வாதிகளின் தந்திரமாகத் தெரிகிறது.
“வேறு வழியில்லை. இவனுக்காவது ஒட்டுப்போட்டுப் பாப்போம்” என்று ஒரு அப்பாவி இந்தியனை முட்டுச் சந்தில் நிறுத்தும்,
போலித்தனமான சிஸ்டமாக இருக்கிறது இந்திய ஜனநாயகம்.
No comments:
Post a Comment