மகள் பிறந்த புதிதில் அவள் உடம்புக்கு எதாவது வந்தால் அண்ணனுக்கோ நண்பர்களுக்கோ போன் போடுவேன்.
”இந்த இந்த மாதிரி உடம்பு சரியில்ல.என்ன பண்றது” என்பேன்.
அவர்கள் “நாலு வருசம் முன்னாடி என் குழந்தை சின்ன வயசா இருக்கும் போதும் இதேப் பிரச்சனை வந்துச்சி.ஆனா எப்படி பிரச்சனைய சமாளிச்சேன்னு மறந்து போச்சு” என்பார்கள்.
எனக்குத் தோன்றும் .”ஏன் நம்ம ஆட்களுக்கு ஒரு விசயத்தை Record பண்ணுவது தெரியவில்லை” என்று .
ஒரு விசயத்தை பதிந்து வைத்துக் கொள்ளுதல் என்பது நல்ல பழக்கம்.பொதுவாக நாம் இதை அலட்சியப் படுத்திவிடுவோம்.இப்போது என்னிடம் யாராவது குழந்தை பற்றிக் கேட்டால் நானும் அண்ணன் சொன்ன பதிலையே சொல்வேன்.ஏனெனில் நானும் ரெக்கார்ட் செய்யவில்லை :)
ஆனால் அறிவியல் சிந்தனையை வளர்க்க வேண்டுமானால் குழந்தைகளுக்கு Record செய்வதை சொல்லிக்கொடுக்க வேண்டும்.
Record செய்தால் என்ன கிடைக்கும் ?
Record செய்தால் Data கிடைக்கும்.
Data வை வைத்து என்ன செய்யலாம்?
Data வை வைத்து Analyse செய்யலாம்
Analyse செய்வதால் என்ன நன்மை?
Analyse செய்வதால் நிருபிக்கபட்ட நம்பகத்தனமான உண்மையை நோக்கி பயணம் செய்யலாம்.
அறிவியலுக்கு அடிப்படையே பதிவதுதான்.செம்மையாக பதிவது.பதிவதை நம்புவது. பதிவதினால் நன்மை கிடைக்கும் என்று நம்பிப் பதிவது.
ஒரு வருடத்தில் எத்தனை முறை ஜலதோஷம் வந்திருக்கிறது என்று கேட்டால் துல்லியமாக நம்மால் சொல்ல முடியுமா?
முடியாது.
என்னைப் பொருத்தவரை ஒரு மனிதனுக்கு மூன்று தீவிர ஜலதோஷமும்.மூன்று தீவிரம் குறைந்த ஜலதோஷமும் ஏற்படும் என்பேன்.( என் யூகம்தான்.அறிவியல் உண்மையா என்று தெரியாது).
பெரும்பான்மையான மனிதர்களுக்கு இப்படித்தான் வரும்.மாம்பழம்,எலுமிச்சைப்பழம், மழைநீரில் குளிப்பது, தலைக்கு குளிப்பது என்று எதைத் தவிர்த்தாலும் இவை வந்தே தீரும்.
நமக்கு வருடத்தில் எத்தனை முறை ஜலதோஷம் வருகிறது, எந்த தேதிகளில், அதன் வீரியம் என்ன என்று சின்ன டைரியில் குறித்து வைத்துக் கொண்டால், ஐந்து வருடத்தின் Data நம் உடலைப் பற்றிய உண்மையை துல்லியமாக தெரிவித்து விடும்.
ஆனால் நாம் அதைச் செய்ய மாட்டோம். காமா சோமாவென்று பொதுவாக ஒன்றை நம்பிக் கொண்டிருப்போம்.
Record செய்யும் போது அதன் தகவலை வைத்து பல்வேறு ஆராய்ச்சியில் நம்மை அறியாம ஈடுபட ஆரம்பிப்போம்.
அதுதான் விஞ்ஞான சமூகத்தின் வித்து.
இந்த ரெக்கார்டிங்கை ஒழுங்காக செய்தால் மூடநம்பிக்கை சார்ந்த பல கருத்துக்களை எளிதில் ஒழிக்கலாம்.அது தனி டாப்பிக் என்பதால் அதை விட்டுவிடலாம்.
ஒரே ஒரு அறிவியல்பூர்வமான அணுகுமுறையை மட்டும் பார்க்கலாம்.
Cricket பூச்சியை தமிழில் எப்படி சொல்வது? துள்ளுப் புட்டான் என்போம் நாங்கள்.
பாச்சான் என்பார்கள் சிலர்.
அந்தக் கிரிக்கட் பூச்சி இரவானால் கிரீ கிரீ கிரீ என்று கத்தும்.அதை ஆங்கிலத்தில் chirp என்பார்கள்.அப்படி கத்தும் வேகத்துக்கும் காற்றின் வெப்பத்துக்கும் சம்பந்தம் இருக்கிறது என்றார் Dolbear.
அதன் அடிப்படையில் Dolbear's law என்றொரு விதிமுறையை உருவாக்கினார்.
ஃபாரன்ஹீட் வெப்ப அளவில் வெப்பம் அதிகமானால் அதிக கிரீ கிரீயும், கம்மியானால் கொஞ்சம் கிரீ கிரீயும் கேட்கிறது என்றார் அவர்.
டால்பீர் அதற்கு ஒரு ஃபார்முலாவைக் கொடுக்கிறார்.அதுவருமாறு.
C = 4 x t - 160
இதில்
-C என்பது ஒரு நிமிடத்தில் கிரிக்கட் பூச்சி கொடுக்கும் கிரீ கிரீ யின் எண் மதிப்பு ஆகும்.
-t என்பது ஃபாரன்ஹீட் வெப்ப அளவு ஆகும்.
(32 டிகிரி ஃபாரன்ஹீட் என்பது 0 டிகிரி செல்சியஸ் ஆகும்.)
50 டிகிரி ஃபாரன்ஹீட்டில் கிரிக்கட் பூச்சி நிமிடத்துக்கு எத்தனை கிரீ கிரீ என்று கத்தும் ?
C = 4 x 50 - 160 = 40
அப்படியானால் ஐம்பது டிகிரி ஃபாரன்ஹீட்டில்( பத்து டிகிரி செல்சியசில்) நிமிடத்துக்கு நாற்பது கிரீ கிரீ கேட்கும்.
60 டிகிரி ஃபாரன்ஹீட்டில் இது அதிகமாயிருக்கும்.
C = 4 x 60 - 160 = 80 கிரீ கிரீ ஒலியை நிமிடத்துக்கு கிரிக்கட் பூச்சி கொடுக்கும்.
இந்த விதி தோராயமாக எல்லா வகை கிரிக்கட் பூச்சிகளுக்கும் பொருந்தும்.
டால்பீர் இந்த விதியை எப்படி கண்டுபிடித்திருப்பார்.? எளிய ரெக்கார்டிங் மூலமாகத்தான்.
-ஒரு கடிகாரத்தை வைத்து நிமிடத்துக்கு எத்தனை கிரீ கிரீ என்று பார்த்திருப்பார்.
-அடுத்து ஒரு தெர்மாமீட்டரை வைத்து வெப்ப அளவை குறித்து வைத்திருப்பார்.
கிடைத்த தகவல்களை ஆராய்ந்தால் இந்த எளிய விதி கிடைத்துவிடும்.
அந்த விதியை இன்னும் சோதித்தால் அங்கே ஒரு உண்மை நிருபிக்கப்படுகிறது.
ஆகவே Record செய்வது எனப்து விஞ்ஞானத்தின் அடிப்படை என்பதை
சொல்ல விரும்புகிறேன்

No comments:
Post a Comment