2014 ஆண்டுக்கான மேன் புக்கர் பரிசு போட்டியில் தேர்வான முதல் கட்ட லிஸ்டை எடுத்து (13 நாவல்கள்) அதன் அடிப்படைக் கதையை பிரவுஸ் செய்து அதை மிகச் சுருக்கமாக எழுதினேன்.
இதில் ரொம்ப ரொம்ப சின்னதா எழுதியிருக்கிறேன் தமிழிலில்.
கதையில் தப்பு இருக்கலாம்.முதலிலேயே சொல்லிவிடுகிறேன்....
1.History of the Rain எழுதியவர் Niall Williams ஐரிஷ் எழுத்தாளர்
தன் தந்தையைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் கொள்ளும் ரூத் ஸ்வெயின் என்ற பத்தொன்பது வ்யதுப் பெண், தந்தையின் அந்தரங்க எழுத்துக் குறிப்புகளைப் படிக்கிறாள்.தன் மூதாதயரையைப் பற்றி அவர்கள் வாழ்க்கைமுறை எல்லாம் தெரிந்து கொள்கிறாள். அப்படித் தெரிந்து கொள்ளும் போது அது அவள் வாழ்க்கையைப் போல ஒரு வாழ்க்கையாய் இருக்கிறது.
2.How To Be Both எழுதியவர் Ali Smith ஸ்காட்லாந்து எழுத்தாளர்
1490 யில் வாழும் ஐரோப்பிய மறுமலர்ச்சி கால ஒவியர் பற்றி ஒரு பகுதியும். 1960 ஆம் ஆண்டு தன் அம்மாவை பறிகொடுத்த பெண்ணைப் பற்றி இன்னொரு பகுதியும் நாவலில் தனித்தனியே போகின்றன. குறிப்பிட்ட இடத்தில் இரண்டு கதைகளும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன.
3.J எழுதியவர் Howard Jacobson ஆங்கில எழுத்தாளர்
தங்கள் குடும்பங்களில் பின்புலம் வரலாறு அறியாத ஆணும் பெண்ணும் காதல்கொள்கின்றனர். ஏன் அவர்களிடம் அவ்வரலாறுகள் மறைக்கப்படுகின்றன.அவர்கள் காதலின் தன்மை பற்றி நாவல் அலசுகிறது.
4.Orfeo எழுதியவர் Richard Powers அமெரிக்க எழுத்தாளர்
எழுபது வயதான ”பீட்டர் எல்ஸ்” தன் நாய் மர்மமான முறையில் இறந்தது பற்றி போலீஸுக்கு சொல்ல, அதை விசாரிக்க வந்த போலீஸ் எல்ஸ் தன் பொழுது போக்கிற்காக வைத்திருக்கும் புதிய விநோதமான சாதனம் மேல் சந்தேகம் கொள்கிறது. இசையையும் டி.என்.ஏ அறிவியலையும் அடிப்படையாக கொண்ட நாவல்.
5.The Blazing World எழுதியவர் Siri Hustvedt அமெரிக்க எழுத்தாளர்
நியூயார்கைச் சேர்ந்த பெண் ஒவியர் தன்னுடைய படைப்புகள் விமர்சகர்கரால் தொடர்ச்சியாக நிராகரிக்கப்படுவதை கண்டு வேதனையடைகிறார்.பிரபலமான மூன்று சம கால ஆண் ஒவியர்கள் பெயரில் தன் ஒவியத்தை முன்நிறுத்துகிறார். அதன் விளைவுகள் பற்றிப் பேசும் நாவல் இது.
6.The Bone Clocks எழுதியவர் David Mitchell ஆங்கில எழுத்தாளர்
பதினைந்து வயதில் வீட்டை விட்டு ஒடிப்போகும் ஹோலி என்னும் பெண்ணின் வாழ்க்கையி்ல் நடக்கும் அடுத்த அறுபது வருடங்கள்தான் நாவல்
7.The Narrow Road to the Deep North எழுதியவர் Richard Flanagan
ஆஸ்திரிலேலிய எழுத்தாளர் ( தாஸ்மானியா)
இரண்டாம் உலகப்போரில் சந்தர்ப்பவசத்தால் ஜப்பானியர்களிடம் கைதியாக மாட்டிக்கொள்ளும் ஆஸ்த்திரேலிய டாக்டர் கதாப்பாத்திரம் பற்றி விவரிக்கும் நாவல்.பலர் உயிரைக் குடித்த பர்மா ரயில் பாதை கட்டுமானப் பணிகள் கொடுமை பற்றிய விவரிப்புகளும் உண்டு.
8.The Lives of Others எழுதியவர் Neel Mukherjee இந்திய எழுத்தாளர்
கல்கத்தா மத்திய தர மக்களின் வாழ்க்கையை விவரிக்கும் நாவல்.
9.The Dog எழுதியவர் Joseph O'Neill ஐரிஷ் எழுத்தாளர்
தன் காதலியை இழந்த வக்கீல் ஒருவர், தன் நண்பனின் சிபாரிசில் துபாயில் இருக்கும் கோடீஸ்வர குடும்பத்தின் ஆலோசகராக வேலைக்கு செல்கிறார்.
அங்கே அவர் சந்திக்கும் அனுபவங்களை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார் நாவலாசிரியர்.
10.The Wake எழுதியவர் Paul Kingsnorth ஆங்கில எழுத்தாளர்
1066 யில் ஆங்கிலோ சாக்சன்களை வீழ்த்தினர் நார்மண்டிகள். வில்லியம் டியூக் திறமையாக அந்தப் போரை வழிநடத்தினார். அதை ”பேட்டில் ஆஃப் ஹேஸ்ட்டிங்ஸ்” என்பார்கள். அதை பின்புலமாக கொண்ட நாவல்.
11.Us எழுதியவர் David Nicholls ஆங்கில எழுத்தாளர்
தன்னை வேறாக பார்க்கும் மகனிடத்து எப்படி அன்பால் நெருங்குவது தவிக்கும் அப்பாவைப் பற்றியதும், தன் மனைவியிடம் எப்படி இன்னும் அன்பாய் பழகுவது என்று ஆர்வமாகும் கணவனைப் பற்றிய கதையாகும். அன்பு பாசம் என்று விவரிக்கும் நாவல்
12.To Rise Again at a Decent Hour எழுதியவர் Joshua Ferris
அமெரிக்க எழுத்தாளர்
பால் ரூர்கே என்ற கதாப்பாத்திரத்துக்கு இந்த உலகைப் பிடித்திருக்கிறது.ஆனால் அதில் எப்படி வாழ்வது என்று தெரியவில்லை. வாழ்க்கையை எதிர் எதிர் துருவங்களில் வைத்து விட்டவனாக முரண்பாடாக வாழ்கிறான்.அவனைப் பற்றிய கதை.
13.We Are All Completely Beside Ourselves எழுதியவர் Karen Joy Fowler
அமெரிக்க எழுத்தாளர்
சிறுவயதில் கலகலப்பாக இருக்கும் ரோஸ்மேரி குக் என்ற கதாபாத்திரம் பெரியவளானதும் அதிகமான அமைதியை கொண்டிருக்கிறாள். அவள் ஏன் தன்னை மவுனத்தில் திணித்து வைத்திருக்கிறாள் என்பதை பற்றிய கதை.
செப்டம்பர் 9 ஆம் தேதி இந்த 13 லிஸ்ட் ஆறாகும்.
அக்டோபர் 14 ஆம் தேதி மேன் புக்கர் பரிசுப் பெற்றவரை அறிவிப்பார்கள்.
நாம ஃபாலோ அப் செய்வோமே...

No comments:
Post a Comment