Friday, 19 April 2013

கதை போல ஒன்று - 87



பீச்சில், காட்டன் க்ஷாலில் தலைகளை நுழைத்து முத்தமிட்டுக்கொண்டோம்.புருவத்தில் மூக்கில் எல்லாம் முத்தமிட்டேன்.

கழுத்தும் தோளும் சேரும் இடத்தில் முத்தமிடும்போது கூச்சத்தால் தள்ளிவிட்டாள்.

விலகிவிட்டேன்.

“நமக்குள்ள என்ன ரிலேக்ஷன்”

“நாம ஃபிரண்ட்ஸ்” என்றேன்.

“எப்படி இப்படி கூச்சமில்லாம பேசுற.உண்மையில நாம ஃபிரண்ட்ஸ்தானா”

“ஆமா.முதல்லேயே நான் சொல்லிட்டேன்ல.நாம ஃபிரண்ட்ஸ்தான் அப்படின்னு”

“பிரண்ட்ஸ்னா கழுத்தில கிஸ் பண்ணுவானாடா”

“இதப்பாரு அதெல்லாம் தெரியாது.கமிட் ஆகுறதெல்லாம் எனக்கு செட்டாகாது.அத உன்கிட்டவே சொல்லியிருக்கேன்.நீயும் அப்படி சொல்லித்தான் நாம இப்படி இது மாதிரி இருக்கோம்.இப்ப வந்து திடீருன்னு அதுமாதிரி எதாவது கமிட்டாகிடாத.மனசுல அப்படி தோணிச்சினாலும் சொல்லிரு ஃப்ளீஸ்”

“ச்சே சும்மா கலாய்ச்சேன்.நாம் பிரண்ட்ஸாவே இருப்போம்” தோளில் கையைப்போட்டு இறுக்கிக்கொண்டாள்.

மெத்து மெத்தென்ற சாய்கை கிளர்ச்சியூட்ட,அடுத்து தயாராகும் போது பூக்கூடையில் மல்லிகைப்பூவை எடுத்து அந்தப்பெண் நடந்து வந்தாள்.பயம் வந்தது.

ஒருமணி நேரம் முன்னால்தான் சுண்டல் விற்கும் பையன் இதுமாதிரி வந்து தொல்லை செய்தான்.எவ்வளவு சொன்னாலும் போகவே இல்லை.

சுமதிதான் கண்ணைச்சிமிட்டி அந்தப்பையனிடம் ஆரம்பித்தாள் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில்.

“டோண்டு யூ ஹவ் மேனர்ஸ்.யூ ஆர் ஸ்பாயிலிங் அவர் பிரைவேஸி ஸ்டுபிட்”

சுண்டல் பையனுக்கு “ஸ்டுபிட்” என்ற வார்த்தை புரிந்திருக்கும் போல.

“யக்கா திட்டுறியா.வேணாம்.என் கிட்ட வெச்சுக்காத”

சுமதி விடவில்லை.

“வாட் யூ வில் டு.யூ ஆர் எ கிட் ஹூ ஃபர்க்ட் டு பிஹேவ் லைக்தட்”
சுண்டல் பையன் முகம் சிவந்தது

இப்போ நான் குறுக்கே புகுந்தேன்.

“ஏம்பா.ஏன் தம்பிய திட்ற.அவன் சின்னப்பையன்.அவன் என்ன கேட்டான்.சுண்டல் வேணுமான்னு கேட்டான்.வேண்டாம்னா சொல்லிரு.அதுக்கு இப்படி இங்கீலீசுல கத்தினா.எனக்கே பிடிக்கல எந்திரிச்சி போயிரவா”

அவள் கத்தினாள்.

“போ.இஃப் யூ வாண்ட் டு கோ ,கெட் லாஸ்ட்”

பைனிடம் திரும்பி”நீ போப்பா கொஞ்சம் டென்சனாயிருக்காங்க”

“யக்கா இந்த அண்ணன் அன்பா சொன்னதால போறேன்.ஆனா நீ இது மாதிரி இங்கிலீக்ஷ்ல இன்னொருதடவ கத்தின நடக்கிறதே வேறக்கா” கத்தி இடத்தை காலி செய்தான்.

அது முடித்து கொஞ்சம் ஜாலியாய் இருக்கலாம் என்றால் மறுபடி பூ விற்கும் பெண்.

நெருங்கி காலை மடக்கி அமர்ந்து கொண்டாள்,இளம் வயதில் கல்யாணம் ஆனப்பெண்.

“பூ வேணுமாக்கா”

க்ஷாலுக்குள் தலையை பதித்து முகமே பார்க்காமல் கிடந்தோம்.
இப்போ பூப்பெண் சுமதி கையை தொட்டாள்.”யக்கா பூ வேணுமா”
இதுமாதிரியான தொல்லைகளில் தப்பிக்க குரலைக்காட்டக்கூடாது.
சுமதி கைகளைக்காட்டி போ போ என்று செய்கைகாட்டினாள்.

பூப்பெண் போகவில்லை.

“கொஞ்சமா வாங்கிக்க.அண்ணா நீதான் வாங்கிக்கொடேன்”

“இல்ல வேணாம்”

“இல்ல நீ வாங்கிக்குடு.அக்காவுக்கு வெச்சா அழகா இருக்கும்.இதப்பாரு புதுப்பூவுதான்.பழசெல்லாம் இல்லை.”
பூவை எடுத்துக்காட்டினாள்.

நாங்கள் ,கவனமாக பூவை தொடவே இல்லை.

“யம்மா போம்மா எனக்கு பூவைக்கிறபழக்கமே கிடையாது” சுமதி கத்தினாள்

“வாங்கிக்கொடுண்ணா.நாளைகே ஹஸெபண்ட்,வைஃப் ஆக போறீங்க.”

“நீ தேவையில்லாம பேசுற.போம்மா.” கையை வீசினேன்.

“ண்ணா போன்னா போறேன்.கையெல்லாம் வீசாத.நம்ம் ஊர் ஆளுங்க பக்கத்துலதான்.பூதான் வாங்கிக்கயேன்.”

சுமதியைப் பார்த்தேன். தலைக்கு குளித்து முடியை விரித்து விட்டிருக்கிறாள்.சுடியின் பின் பக்கம் அகல முதுகை காட்டி இருக்கிறாள்.வெயில் அவள் மேல் பட்டு தகிக்கிறாள்.உட்கார்ந்திருக்கும் போது பிதுங்கும் கால்களின் திரட்சி,சுடிதாரைப்பிதுங்கி தெரியும் செல்ல தொப்பை.இவளை ரசிக்க,அனுபவிக்க தடையாய் இருப்பது என்ன?

இதோ இந்த பூ விற்கும் பெண்ணும் அவள் கூடையில் இருக்கும் பூக்களும்தான்.தடுக்கும் எல்லா கதவுகளை உடைக்கும் மோகம் முளைவிட்டிருந்தது என்னுள்.

“சரி ஒருமுழம் எவ்வளவு”

கேட்டுமுடியவில்லை.நான்கு முழங்கள் மேலிருந்து கீழாக முழங்கையில் சரசரவென்று அளந்து கொண்டிருக்கும்போதே கத்தினேன்.

“ஏம்மா நான் முழம் எவ்வளவுன்னுதான் கேட்டேன்.நீ நாலுமுழம் அளக்கிற”

அப்போதும் கேட்க்கவில்லை.அளந்து என் மடியில் வைத்தாள்.
“நான் வாங்கமாட்டேன்”

”இல்லண்ணா நீ வாங்கிட்ட நாலு முழம் காசு குடு.அய்ய அக்காவுக்கு வாங்கித்தான் கொடேன்.

“நீ போறியா இல்லையா.அடி வேணுமா”

“பூவுக்கு காசு கொடு போறேன்”

“அதெப்படி நாந்தான் பூவே வாங்கவே இல்லையே. விலைதான விசாரிச்சேன்”

அது பற்றிக்கவலையே இல்லாமல்,காசை எடு என்பது மாதிரி நின்று கொண்டிருந்தாள்.

என்னையோ சுமதியின் வனப்பு தகித்துகொண்டிருந்தது.

பணிந்தேன்

”வெலை எவ்வளோ”

“நாலுமுழம் முப்பது ரூபா.”

“முப்பது ரூபாவா.நல்ல ஏமாத்துறம்மா நீ”
பதிலில்லை.

வேறு வழியில்லாமல் பணத்தைக்கொடுத்தேன்.

இவ்வளவு நடந்து கொண்டிருக்கிறது, சுமதி எதுவுமே பேசவில்லை.
முட்டியில் கைகளை வைத்துக்கொண்டு,முகத்தை அதன்மேல் வைத்துக்கொண்டு அந்தப்பூவையே மோனமாய் பார்த்துகொண்டிருந்தாள்.

பூ விற்பவள் போனதும்,சுமதி மேல் பாய்ந்தேன்.என்னிடம் எதுவுமே கேட்காமல் படரும் கைகள்.

காமம் செய்து கொண்டிருக்கும் போது அந்த நாலு முழம் பூ என்னை என் ஏமாந்த இளிச்சவாய்தனத்தை காட்டி சிரிப்பதைப்போல் இருந்தது.

“ஒரு நிமிக்ஷம் இரு” என்று சொல்லி, என் முன்னால் இருந்த கடல்மணலை கைகளால் ஒரளவுக்கு தோண்டினேன்.

சுமதி கத்தினாள்.

“ஹேய் என்ன செய்ற”

“இரு இத அடக்க பண்ணிட்டு வந்துர்ரேன்.நீ வைக்க மாட்டல்ல”

“நான் வெக்க மாட்டேந்தான்.அதுக்காக என்னப்பண்ணபோற”

“போ பிள்ள” என்று அந்த கடல்மணல் குழியில் பூ எல்லா முழங்களையும் போட்டு புதைத்தேன்”

சுமதி பூக்கள் புதையுண்ட இடத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

இவள் இப்படி முறைத்துப்பார்க்கிறாள். ஏன் ஈஸியா எடுத்துக்கமாட்டேன்கிறேன்” என்று குழம்பினேன்.

போன வாரம் க்ஷேர் ஆட்டோவில் பிராயணம் செய்யும் போது.என் தலைக்கு பக்கத்தில் இருக்கும் விரல் மஞ்சள் பல்பு என் நிழலை ஆட்டோவின் எதிர்பக்க உடம்பில் பதிக்க,அந்த நிழல்மேல் சாய்ந்து என்னைப்பார்த்து கண்சிமிட்டிய சுமதி நினைவுக்கு வந்தாள்”

செண்டிமெண்டாய் இருப்பதைப்பார்த்தால் பயமாய் இருந்தது.என்னுடன் பிணைத்துக்கொள்வாளோ ?

நீதான் வேண்டுமென்று,கமிட் ஆகிவிடுமோ.?

ஃஃபிரண்ட்ஸ் ஃபிரண்ட்ஸ் என்று பழகினதெல்லாம் போய் காதல் அது இது என்று சொல்லி கல்யாணம் செய்துகொள்வாளோ.

போலீஸில் கம்ளையின் செய்வாளோ?.அல்லது வீட்டின் முன்னால் உண்ணாவிரதம் இருந்தாலும் இருக்கலாம்.

சட்டென்று தலையை உதறிக்கொண்டேன்.

சேச்ச சுமதிகிட்ட முதல்ல தெளிவாய் சொல்லித்தான் பழகினோம்.அவள் அது மாதிரியெல்லாம் செய்ய மாட்டாள்.ஆணும் பெண்ணும் நட்பாய் கொஞ்சம் உடலையும் பகிர்ந்துகொண்டால் என்ன தப்பு.சுமதிக்கும் இந்த கோட்பாட்டில் உடன்பாடிருக்கிறது என்று அவளே சொல்லியிருக்காளே.

சமாதனமடைந்து சுமதியை நெருங்கினேன்.

பூவை புதைத்த இடத்தை பார்த்துக்கொண்டிருந்தவள்.சட்டென்று விசித்து விசித்து அழ ஆரம்பித்தாள்.

“என்னாச்சு சுமதி”

“இல்ல மொத மொதல்ல வாங்கித்தந்த மல்லிகையை இப்படி சமாதி மாதிரி புதைச்சிட்டீங்களே.அதப்பார்த்து தாங்கல, தோளில் சாய்ந்து இறுக்கப்பிடித்து குலுங்கினாற்போல அழுதாள்.

கழட்டியும் விட வேண்டும்,அது அவளுக்கும் தெரியக்கூடாது.நாசுக்காய் நடக்க வேண்டும்.அதற்கான சூத்திரத்தை மனம் பின்னிக்கொண்டே இருக்க சுமதி என்னைப்பிடித்து அழுதுகொண்டே இருந்தாள்.

இவளை எப்படி கழட்டிவிடுவது என்று மிகத்தீவிரமாக யோசித்துகொண்டிருந்தேன்.

இதெல்லாம் எனக்கு சரிபட்டு வராது.

1 comment:

  1. காமம் அத்தனை வேலிகளையும் வரையரைகளையும் உடைத்து நொறுக்கவல்லது என்பதாலேயே அது பலரால் விரும்பப்படுகிறது - திருட்டு மாங்காயின் ருசி…!

    ReplyDelete