Monday 30 March 2015

போராட்டச் சிதைப்பாளர்கள்...

நல்ல போராட்டத்தை யார் யார் எல்லாம் சிதைப்பார்கள் என்றால்
-போராட்டம் நடத்துபவரின் கட்சி அரசியல் எதிரிகள்.
-போராட்டம் நடத்துபவரின் கருத்துக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டவர்கள்.
-போராட்டம் நடத்தும் தலைவரோடு தனிப்பட்ட பிரச்சனை இருக்கலாம்.அதனால் தலைவனை எதிர்ப்பதற்காகவே போராட்டத்தை கிண்டல் செய்பவர்கள்.
-மேலோட்டமான தகவலைத் தெரிந்து கொண்டவர்கள்.அதற்கு மேலாக தெரிந்து கொள்ள விரும்பாதவர்கள்.
-போராட்டத்தின் எஸன்ஸை, போராட்டத்தின் மையத்தை உணராதவர்கள் Percept செய்யாதவர்கள்.
-வித்தியாசமாக பேசி கைத்தட்டு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.
-போராட்டத்தை அதிகப்படியான அறிவோடு அணுகிச் சிதைக்கும் அறிவு சீவிகள்.
-ஆழ்மனதில் ஒரு சார்பாக நின்று, வெளியே நடுநிலை போல நடிக்கும் நல்லவர்கள்
-போராட்டத்தை நம்புவார்கள் ஆனால் அப்போராட்டத்தினால் மாற்றம் நிகழ்ந்து விடாது என்று நம்பும் அவநம்பிக்கையாளர்கள்.
-போராட்டம் நடக்கிறது என்ற அடிப்படை செய்தி கூட தெரியாமல் இருப்பவர்கள்.
-இந்தப் போராட்டம் எல்லாம் தேவையில்லை.மாற்றம் மெல்ல மெல்ல அதுவாக நிகழும் என்று நினைப்பவர்கள்.
-இது மாதிரிப் போராட்டத்தை அன்னைக்கு அவர் அப்படி அழகாகப் போராடினார்.இன்னைக்கு இவர் அப்படி போராடவில்லை என்று போலி அக்கறையோடு முதலைக் கண்ணீர் வடிப்பவர்கள்.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்... 

No comments:

Post a Comment