உமர் பாரூக்கும் சங்கரனும் டியுசன் முடிந்ததும் வெளியே சாப்பிடலாமா என்றார்கள்.சரி என்றதும் மங்களா தெரு இறக்கம் முடிந்து இடது பக்கம் திரும்பி, வடசேரி பஸ் ஸ்டாண்ட் போகும் ரோட்டின் முகப்பில் ஒரு கடை இருந்தது அங்கு இழுத்து சென்றனர்.

அது குடிசை வேயப்பட்ட சிறு கடை. உள்ளே கோணல் பெஞ்சுகள்.தரை கூட சாணி மெழுகின தரைதான்.பெர்க்மாண்ஸ் ”பயப்பட மாட்டேன்!நான் பயப்பட மாட்டேன்.இயேசு என்னோடு இருப்பதனால்” என்று சத்தமாக இசையில் மன்றாடி கொண்டிருக்கிறார்( பிற்காலத்தில் நான் பெர்க்மாண்ஸயின் தீவிர ரசிகன்).

குண்டாக லுங்கி கட்டி கொண்டு வழுக்கையும் அரைகுரை தாடியுமாய் ஒருவர் வந்தார். சங்கரன் சகஜமாக “ அண்ணே மூணு கப்பு. நிறைய கொழுப்பு இருக்கட்டும், பையன் புதுசு “ என்று என் தோளை தட்டினான்.
மூன்று கப்புகள் கொதிக்க கொதிக்க சூப் வந்தது.( மாட்டு கறி சூப்). தொட்டு கொள்ள அவித்த முட்டையை ரெண்டாய் வெட்டி மிளகு போட்டு சிறப்பு செய்திருந்தனர்.

மாட்டி கறியை தெரிந்து நான் சாப்பிட மாட்டேன்.
வேறு வழியில்லை சாப்பிடுவோம் என்று வாயில் வைத்தேன்.அருவெருப்பாய் இருந்தது.

இப்போது லுங்கி குண்டு மாமா என் தோளில் தட்டி “ லே பிள்ளெ, யல கொழுப்ப எடுத்து சாப்பிடுடே! என்றார். கொழுப்பை எடுத்து வாயில் போட்டேன். காலையில் இருந்து சாப்பிட்டது அனைத்தும் வெளியே வரும் போல இருந்தது, வெளியே ஓடிவிட்டேன். ஒடும் போது லுங்கி குண்டு மாமா மாமா என்னை திட்டினார் “ எல தப்ளையனால நீ, கொழுப்ப வேஸ்ட் பண்ணுரிய !”

அப்புறம் தான் தெரிந்தது அந்த கடையில் காலையில் மாடு வெட்டுவார்கள் என்றும். மிஞ்சினதை மாலையில் சூப் வைப்பார்கள்.

அதன் பிறகு பத்து வருடம் கழித்து வடபழனி பழைய புக் கடையில் “மார்வின் ஹாரிஸ்” அறிமுகமானார்.அவர் சொல்கிறார்.

உணவை அருவெருப்பு அடைந்ததால் சாப்பிடாமல் இருக்கிறீர்களா?

இல்லை

நீங்கள் சாப்பிடாததினால் , அதன் மீது அருவெருப்பு அடைகிறீர்களா ?